Pages

Sunday, October 28, 2012

ஹை பிளட் பிரஷர் கண்ட்ரோல் பண்ணுவதற்கு இந்த ராகத்தைப் பாடுங்க

ஹை பிளட் பிரஷர் கண்ட்ரோல் பண்ணுவதற்கு இந்த ராகத்தைப் பாடுங்க இல்லேன்னா கேளுங்க என்று சொல்கிறார்கள்

ராகம் ரொம்ப சுகமாகத் தான் இருக்கிறது.  ராகம் போபாலி .
ஐயம் இல்லை
ஆனாலும்,
ஐயம் இருக்கிறது இந்த ராகத்தை பாடினால் அல்லது கேட்டால் போதுமா ?
டாக்டர் கொடுத்த மருந்தை நிறுத்தி விடலாமோ ?
துளசி அம்மா பக்கத்திலே இருந்தால் கேட்கலாம் என்றால் அவங்க நயு ஜீ போயிட்டாங்க

Blood Pressure  க்காக மருந்து

 டாக்டர் ஜெயச்சந்திரன் எம். டி. கார்டியாலஜிஸ்ட் கொடுத்தது.  நானும்
சும்மா சொல்லகூடாது பதினைந்து வருசமா சாப்பிட்டு கொண்டு இருப்பது
கார்லாக் காலை லே அம்லோடபைன் நைட்லே .     சாப்பிட வேண்டுமா ? இல்லை , பாட்டை மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தால் போதுமா ?

 இன்று கேட்டேன்  

ஞாயிறு ஆயிற்றே. டிஸ்டர்ப் பண்ணுவது சரியா? தெரியவில்லை  என்றாலும் கேட்டேன்.

என்ன சூரி என்ன விஷயம் என்றார் மூடிலே தான் இருக்கார் .கேட்டேன்.

இந்த பாட்டை மத்தியானமா கேளுங்க ... மருந்தை காலையிலும் இரவிலும் தானே சாப்பிடச் சொல்லி இருக்கிறேன். பாட்டு   கேட்கும்போது மருந்து சாப்பிடவேண்டாம் என்று சொல்கிறார்.









2 comments:

  1. பொதுவாகவே இசைமனித மனதை நன்றாக வைத்திருக்கிறது.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!