கிறுக்குபவர்களுக்கு இது ஒரு இடம். அதாவது சொல்லப்போனால் இந்த வலை யெல்லமே ஒரு ரஃப் புக் மாதிரி.
எதை வேணாலும் எழுதலாம், அதற்கும் சில சமயம் மதிப்பும் இருக்கும் பொல்லாப்பும் இருக்கும்.
என்று எழுதியிருக்கிறார் ஆர்.வி.எஸ். என்னும் வலை நண்பர்.
கிறுக்குபவர்களுக்கு என்று வலையைச் சொல்ல முடியாது . என்று நான் திட்ட வட்டமாகச் சொன்னேன்.
ஏன் என்று தன் புருவங்களைத் தூக்கினார்.
இது கிறுக்குகளின் இடம் என்று சொன்னேன்.
அவரால் மறுத்துப்பேசவும் முடியாது. ஒத்துக்கொள்ளவும் முடியாது
நல்லாதான் அனலைஸ் பண்ணி இருக்காரு.
அதுக்கும் உடனேயே அவர் சொல்றாப்போலேயே
அடடா !! அருமை !! என்று அஞ்சு பத்து பின்னூட்டங்கள்
.
யோசிச்சு பார்த்தேன்.
உலகமே கிறுக்குபவர்களுக்காகத்தான் இருக்கிறது என்று தோன்றியது.
கிறுக்குகளுக்காகவும் இருக்கிறது.
கிறுக்குகள் பலரை அந்தந்த கால கட்டத்தில் கிறுக்குகள் என்று சமூகம் ஒதுக்கி வைத்தாலும்
பிற்காலத்தில் அவர்களை அடடா !! இவர்களைப்போன்ற பிலாசபர் கிடையாது என்றது.
புதிய மத ஸ்தாபகர் யாருமே அவரவர்களுடைய கால கட்டத்தில் ஒரு சிலரைத் தவிர
போற்றப்பட்டதாகத் தெரியவில்லை.
பல இடங்களில் கிறுக்குபவர்களுக்கும் கிறுக்குகளுக்கும் மதிப்பும் கௌரவமும்
மரியாதையும் செல்வாக்க்கும் தகுதிக்கும் மீறிய புகழும் பணமும் ஆதரவும்
கிடைக்கிறது.
பிரபல கார்ட்டூனிஸ்டுகளை ஒரு பக்கம் பார்த்தால் கிறுக்கத்தான் செய்கிறார்கள். அந்தக்
கிறுக்கல்களிலே சுருக்கமாக ஒரு சங்கதியை உலகத்தோருக்கு உணர்த்துகிறார்கள்.
பிரபல நகைச்சுவை நடிகர்கள் கோமாளித்தனமாக பல செய்கிறார்கள். அது வழியாகத்தான்
இவ்வுலகத்தோருக்கு நேரடியாகச் சொல்ல இயலாததை சொல்கிறார்கள்.
கிறுக்குபவர்களும் கிறுக்கர்களும் உலகிற்கு இன்றியமையாதவர்கள் என்றே நினைக்கிறேன்.
இன்று நான் பார்த்த படமும் ஒரு நடிகரின் சுய புராணமும் இங்கே.
Courtesy: www.arvindsdad.blogspot.in
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முழு நீள நகைச்சுவை நாடகத்தினை - க்ரேசி மோகன் நாடகத்தினை பார்க்க முடிந்தது. மிக்க நன்றி.
ReplyDelete