Pages

Sunday, June 1, 2008

அன்பின் பூரண நிலை. தத்துவம். எல்லாமே.

<
அன்பு என்ற ஒரு சொல்லுக்குத்தான் எத்தனை பொருள் !
அன்பு என்ற ஒரு சொல்லில்தான் எத்தனை வலிவு !
அன்பு என்ற ஒரு சொல்லில் தான் எத்தனை இனிமை !
அன்பு என்ற ஒரு சொல்லில் அடங்கியுள்ள மானுட நேயம் தான் என்னே !

அன்பினை ஒரு சொல் சொல்லி வர்ணிக்கவும் இயலுமோ ?
பாசம், நேசம், வாத்சல்யம், பரிவு, நட்பு, காதல், தோழமை,தியாகம், பக்தி, அடிமை (சரணாகதி), அருள் என வாழ் நாளில் ஒவ்வொரு கால கட்டத்திலும் அன்பிற்கு பல்வேறு பெயர்
சூட்டுகிறோம். வாழ்க்கையில் எதுவுமே ஒரு பரிமாற்றத்தின் அடிப்படையாகத்தான்
இருக்கும் நிலையில், அன்பு ஒன்று தான் எதையுமே எதிர்பாராது உயர்ந்து நிற்கும்.

தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பாசம்
மனைவி தன் கணவனிடம் கொண்ட காதல்
ஒருவன் தன் தோழனுக்காக செய்யும் தியாகம்
பற்று ஒழிந்த நிலையில் தன்னையே தன் இறைவனிடம் அர்ப்பிக்கும் பக்தனது சரணாகதி

இவற்றில் எதுவுமே எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதாய் இருப்பின் அவை அன்பு
ஆகிடுமோ ?

ஐம்புலன்களினால் உணரப்படும் அன்பினை ஒருவர் வர்ணிக்கிறார். அந்த அன்பினை
அதிசயம் என்கிறார்.
அன்பாயிருக்க கத்துக்கணும் என்கிறார் இவர்.
http://kavinaya.blogspot.com/2008/05/blog-post_27.html
இன்னொருவர் ஐம்புலன்களையும் அடக்கி தன்னுள்ளே இறைவனைக் காணுகையில்
ஏற்படும் ஏக்கத்தினை வர்ணிக்கிறார்.
http://jeevagv.blogspot.com/2008/05/blog-post_30.html
உலகாயதமாக இருக்கும் நிலையில் மனித நேயம் அன்பு அதிசயம் .
உலகத்தைத் துறந்த நிலையில் ஈசனைத் தன்னுள் காண விழையும் ஏக்கம்
அன்பின் பூரண நிலை. தத்துவம். எல்லாமே.

Let us congratulate both.

3 comments:

  1. அன்பென்னு மோர்சொல் அகிலப் பொதுமறை
    இன்குறட்கிஃ தொன்றே இணை!

    ReplyDelete
  2. என் வலைப்பூவில் தங்கள் முதல் வருகைக்குப் பின் தங்கள் தளம் வந்தேன். வகை வகையான வலைப்பூக்கள் வரிசை கண்டேன். எதைப் பாராட்ட எனத் திகைத்துத் திரும்பினேன். இன்று ஆயில்யன் திண்ணையில், அய்யா நீங்கள் அமர்ந்து திண்ணையைப் பற்றி சொன்னதெல்லாம் ரசித்தேன். தங்களின் 'ரசித்துப் படிக்கும் வலைப் பதிவுககள்' என் போன்ற புதிய பதிவாளர்களுக்கு வழிகாட்டியாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கயல்விழி சொன்னது போல தாங்களும் திண்ணை பற்றிப் பதிவிடலாமே! இது எங்களின் வேண்டுகோள். நன்றி!

    ReplyDelete
  3. இப்போதுதான் இதை பார்த்தேன் ஐயா! அன்பைக் குறித்து நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை. மிக்க நன்றி!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!