Pages

Monday, May 12, 2008

தோன்றியதை எழுதுகிறேன்.

இந்த வலைப்பதிவு துவக்கத்தில் நான் குறிப்பிட்டது " வலைப்பதிவாளர்களின் அதிசய வளர்ச்சி, அவர்தம்
முயற்சி, எழுதவேண்டும் என்ற ஆவல், தமக்குத் தெரிந்தவற்றை சமுதாயத்தின் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற உந்தல்" எல்லாமே.

அடுப்பங்கரை முதல் ஆன்மீகம் வரை, இசையில் துவங்கி ஈசன் வரை இவர்தம் கவனிப்பும் கணிப்பும்
ஒரு பக்கம் பாராட்டத்தகுந்ததாக இருப்பினும், இன்னொரு கோணத்தில், இவர்கள் எல்லோருமே
சில சில குழுக்களில் ஒரு குறிப்பிட்ட வட்டங்களில் மட்டுமே செயல் படுகின்றனர் என்றுமே தோன்றுகிறது.
கடந்த ஒரு ஆறு மாதங்களில் நான் பார்த்த, படித்த வலைப்பதிவுகள் எல்லாமே ஏறத்தாழ இவ்வகைதனைச்
சார்ந்தவையாகவே இருக்கின்றன. ஒரு பதிவுக்கு 100 பின்னூட்டங்கள், முன்மொழிகள், அல்லது விமர்சனங்கள், வருவதாக இருப்பினும், அதில் ஒரே நபர் பல முறை வருவதையும், ஒவ்வொரு முறையும் அவருக்கு பதிவாளர் பதில் எழுதுவதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், எந்த ஒரு பதிவுக்கும் அதிக பட்சமாக ஒரு 25 நபர்களுக்கு மேல் வருகை தருவதில்லை எனவே தோன்றுகிறது. MOST OFTEN MUTUALLY APPRECIATIVE OF ONE ANOTHER, WHATEVER BE THE CONTENT OF THE BLOG. MOST TIMES, THEY JUST MARK THEIR PRESENCE AND GO AWAY. THE WORLD IS SO FAST, YOU KNOW. இந்த நிலை ஏன் என எல்லா பதிவாளர்களும் சிந்திக்கவேண்டும். So there is not much to say about NUMBER OF VISITORS so long as the material published does not attract a new audience.
மாறாக, நல்ல புதிய கருத்துக்களைச் செவ்வனே எடுத்துச்சொல்லும் திறமை வாய்ந்த சில பதிவாளர்கள் தமது பதிவுகளை யாரும் படிப்பதில்லையே என்ற ஒரு ஏமாற்றத்தில், சோகத்தில் பதிவு எழுதுவதைத் தவிர்த்து விடுகின்றனர். ஒருவரின் சிந்தனை ஓட்டங்கள் அவனிருக்கும் சமுதாய சிந்தனை ஓட்டங்களுக்கு முன்னிருக்கும் நிலையில் அவனைத் தொடரும் நபர்கள் அவனது கால கட்டத்தில் அதிகம் இருப்பதில்லை. சரித்திரத்தில் மிகவும் திறனும் வலிவும் கொண்ட எழுத்துக்களுக்கு contemporary readership value
இருந்ததா என்பது கேள்விக்குறியே. ஆகவே உங்கள் கருத்துக்களில் ஆழம் இருப்பதாக நீங்கள் உணரும்
பட்சத்தில் தொடர்ந்து எழுதுங்கள். தமது பதிவினை யாரும் படிக்க வரவில்லையே என வருத்தப்பட வேண்டாம்.
நெல்லில் உமி எது அரிசி எது என காலம் சொல்லும். கவலை வேண்டாம்.

அகல உழுவதிலும் ஆழ உழவேண்டும், எடுத்துக்கொண்ட பொரூளை விவரிப்பதோடு நிற்காமல், ஆராய முற்படவேண்டும், அப்பொருளில் மற்றோர் கருத்துக்களுடன் உரசிப்பார்த்துடன் நில்லாது தன்னையும் ஒரு சுய விமர்சனத்திற்கு உட்படுத்தித் தான் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதாரங்களையும் எடுத்துச் சொல்லும்போது தான் அறிவின் எல்லைகள் நீள்கின்றன.

ஒரு தனி மனிதனின் அறிவு வளர்ச்சியும் முதிர்ச்சியும் அவன் சார்ந்துள்ள சமூகத்தின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது. ஒரு பதிவு அழுத்தமாக ஒரு செய்திதனை விளக்கிச் சொல்கையில், அதுபோன்று நாமும் ஒரு கருத்தினைச் சொல்லவேண்டும் என்கிற எண்ணம் மற்ற பதிவாளர்களிடையே ஏற்படுகிறது.

ஆக, பதிவுகள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியில் ஒரு தூண்டுகோலாக அமைதல் அவசியம்.
பல தினசரி, வார, மாத இதழ்களைப் படிக்கிறோம், ரசிக்கிறோம் என்றாலும் அவற்றினில் மனதில் நிற்கும்படியான கருத்துக்கள், கட்டுரைகள் இருக்கும்போது தான் அவற்றினை த் தொடர்ந்து படிக்கிறோம்.
ஆகவே பதிவுகளும் passing clouds போலன்றி ஒரு சமுதாய அறிவு வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையவேண்டும்.

அண்மையில் நான் படித்த நானோ சயின்ஸ் எனும் பதிவு இவ்வகையில் என்னை மிகவும் ஈர்த்தது.


http://nonoscience.info/2008/05/08/cat-crossing-and-magnetoreception/

ஒரு பூனை குறுக்கே போனால் அதை கெட்ட சகுனம் என்று சொல்லி வீட்டுக்கு திரும்பி விடுகிறோம். இதை ஒரு மூட நம்பிக்கை என்று மட்டும் சொல்லி எள்ளி நகையாடாது, மேலும் இந்த நம்பிக்கையில் அறிவு பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக ஏதேனும் இருக்கிறதா என அலசி எடுத்திருக்கிறார் இந்த
பதிவாளர். Cat Crossing and Magnetoreception

உண்மையாகவே, வானியல் பற்றி எழுதும் ஜெயபரதன் பதிவுகளுக்குப் பின் நான் படிக்கும் ஒரு அர்த்தமுள்ள பதிவு இது.

Congratulations to the writer of nonoscience.

2 comments:

  1. சரியாக வலைப்பதிவுலகை அளந்து சொன்னீர், அனைத்தும் துல்லியம். அதோடு நல்ல அறிவுரைகளையும் முன் வைத்துள்ளீர்கள், நன்றிகள்!

    ReplyDelete
  2. வலைப்பதிவுகள் பற்றி அருமையான கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள்.

    //சில சில குழுக்களில் ஒரு குறிப்பிட்ட வட்டங்களில் மட்டுமே செயல் படுகின்றனர் என்றுமே தோன்றுகிறது.//

    இதற்கு இன்னொரு காரணம், ஒத்த அலைவரிசையும், விருப்பங்களும் என்று நினைக்கிறேன். அத்துடன் நேரமின்மையும் காரணமாக இருக்கலாம்.

    //சில பதிவாளர்கள் தமது பதிவுகளை யாரும் படிப்பதில்லையே என்ற ஒரு ஏமாற்றத்தில், சோகத்தில் பதிவு எழுதுவதைத் தவிர்த்து விடுகின்றனர்.//

    ஆரம்பத்தில் நானும் இப்படி சோர்ந்ததுண்டு. ஆனால் எழுதுவது பிறருக்காக மட்டும் இல்லை, எனக்காகவும்தான் என்று புரிந்து கொண்டேன்.

    //நெல்லில் உமி எது அரிசி எது என காலம் சொல்லும். கவலை வேண்டாம்.//

    உண்மை ஐயா!

    மிக்க நன்றி!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!