Pages

Saturday, February 23, 2008

Just an introspection

இந்த வலை உலகத்தில் நடைபெறுவதெல்லாம் என்ன என யோசித்தேன் !

கிட்டத்தட்ட எல்லாமே ! இந்த பதிவு உலகம் விசித்திரமானது. பற்பல வினோதங்களை உடையது.
இந்த வலைப்பதிவுகளை யார் வேண்டுமானாலும் துவங்கலாம்.
எதை வேண்டுமானாலும் எழுதலாம். இதில் இடம் பெறாத
உயர்திணை, அஃறிணைப் பொருட்கள் எதுவுமே இல்லை. இந்த வலை உலகத்தில்
எல்லா உணர்வுகளும் உணர்ச்சிகளும் காணப்படுகின்றன. ந‌வ‌ ர‌ச‌ங்க‌ளும் உண்டு.
விர‌ச‌ம்,
வீரம், கோபம், தாபம், மதம், மாத்ஸர்யம், அன்பு, அரவணைப்பு,வீராப்பு,
கருணை, காதல், கண்ணோட்டம் (தாட்சண்யம்),எக்காளம், ஏளனம், சங்கீதம், இங்கீதம். எல்லா விஷ‌ய‌ங்க‌ளும் அல‌ச‌ப்ப‌டுகின்ற‌ன். ம‌ருத்துவ‌ம், வானிய‌ல், புவி இய‌ல், க‌ணினி,
சரித்திரம், பூகோளம், மனோதத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், சார்ந்த தலைப்புகள்.
இதைத்தவிர என்னெல்லாம் ந‌ட‌க்கின்ற‌ன‌ ?
நகுதல், நையாண்டி செய்தல்,திட்டுதல், மிரட்டல்,கலாய்த்தல் (சீண்டுதல் அல்லது மறைமுகமாக கிண்டலடித்தல் என நினைக்கிறேன்.)காய்தல், உவத்தல், ஊறுகாய் போடுதல் (என்ன அர்த்தம் என்று புரியவில்லை! ) காப்பி அடித்தல்,கண்ணாமூச்சி காட்டுதல்,

ஜோதிடம்,பிராணிகள் வதைத்தடுப்பு, பிரியாணி செய்தல்,
கவிதை எழுதுதல், கவிதை மாதிரி கிறுக்குதல்,
ஆடு, மாடு,கழுதை மேய்த்தல், காக்காய் பிடித்தல்,
காலை வாருதல்,
பன்னி மேய்த்தல் ( நிஜமாக இதற்கொரு ஃப்ளாக் இருக்கிறது)
கும்மி அடித்தல், குப்பை கிளறுதல், திரித்தல், தீர்த்து வைத்தல், தின்னுதல்,தன் விளம்பரம் தானே தண்டோரா போடுதல், போட்டி வைத்தல், மார்க் போடுதல், நொந்து போதல், நோதல், பிறரை நோக வைத்தல், அழுதல்,மற்றவரை அழ வைத்தல்.
எல்லாம் செய்தபின் சோர்ந்து போய், சும்மா இருத்தல்.
இத்தனைக்கும் நடுவிலே அர்த்தமுள்ள, அதாவது மற்றவர்களுக்கு
உண்மையாகவே உருப்படியாக எடுத்துச்சொல்லும்படியாக நாலு நல்ல வலைகள், பதிவுகள் இருக்கத்தான் செய்கின்றன.
பல பொய்களுக்கிடையே நிஜம் சில சமயங்களில் நடு நாயகமாக இருக்கிறதும் உண்டல்லவா ?

வ‌லைப்ப‌திவுக‌ளை மேனேஜ் செய்ப‌வ‌ர்க‌ள் அண்மையில் இத்த‌னை (சுமார் 2000 கோடி டெரா பைட்ஸ்) வ‌லைக‌ளையும் ஒரே ஸ்ட்ரோக்கில் காலி ப‌ண்ணி புதுசா ஆர‌ம்பிக்க‌லாமா என்று கூட‌ எண்ண‌த்துவ‌ங்கியிருக்கிறார்க‌ள்.

எல்லாமே ஆண்ட‌வ‌ன் ப‌டைப்புதான்.
இருக்கும் 600 கோடி ம‌க்க‌ள் எல்லோருமே உப‌யோக‌மான‌வ‌ர்க‌ள்தானா ?

ந‌டுவில் சுப்பு ர‌த்தின‌ம் மாதிரி எத்த‌னை பேர் தேவையில்லாது பூமிக்கு பாரமாக இருக்கிறார்க‌ள் ? அது போல‌த்தான் வ‌லை உல‌க‌மும்.

No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!