
நான் ரசித்துப்படிக்கும் வலைப்பதிவுகள்
ஆயிரமாயிரம் வலைப்பதிவுகள் தமிழில் இப்போது !!
வியக்கும் வண்ணம் உள்ள இவ் வலைப்பதிவுகளில்
நேர்த்தியான நேர்மையான கருத்துக்கள் பல
நேராகச் சொல்லப்படுகின்றன.
தமிழ் வலை உலகம் இன்று, சினிமா, அரசியல், மற்ற வகை
பொழுது போக்கு அம்சங்கள் மட்டுமன்றி, அறம், ஆன்மீகம், இலக்கணம்,
இன்னிசை,
இலக்கியம், பொருளாதாரம், வணிகம், கணினி, பங்கு வணிகம்,
நாட்டியல், வேதியல், வானியல், சொல்லியல் ஆகிய தலைப்புகளில்
அமைந்துள்ளது பெருமைப்படத் தக்கதாக உள்ளது.
இந்த வலைப்பதிவில் நான் படித்த ரசித்த பெருமைப்பட்ட வலைப்பதிவுகளைப்
பற்றி குறிப்பிடலாமென இருக்கிறேன்.
இது ஒரு தினசரி குறிப்பேடு போல் மட்டும் அமையாமல், ஒரு குறிப்பிட்ட
பொருள் பற்றி அறியவேண்டுவோர் அணுகவேண்டிய இடம் என்ன என்பதையும்
முடிந்தவரை தெரியப்படுத்தும் என நம்புகிறேன்.
படிக்கும் பதிவுகளில் புதுமையாகவும் எளிமையாகவும் படிப்போர் ரசிக்கும்படியாக
இன்னும் ஒருமுறை இந்த பதிவுக்கு வருவோம் வரவேண்டும் என்ற எண்ணத்தினை
உண்டாக்கும் ஒரு பதிவின் சிறப்புகளை வாரம் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து அதற்குரிய
அங்கீகாரத்தினையும் பாராட்டுதல்களையும் வழங்கிடலாம் என இருக்கிறேன்.
எல்லா மொழிப் படைப்புகளும் இதில் அடங்கும் என்றாலும் தாய்மொழி தமிழுக்கு
முதலிடம் தரப்படும் என்பதும் கருத்தில் கொண்டு இச்சிறப்பு கணிப்பு வலைதனைத்
துவங்குகிறேன்.
உங்கள் வீட்டிற்கு நான் வரவேண்டுமா ?
எனக்கு விலாசம் அடங்கிய
ஒரு வரவேற்பு இதழ் மட்டும் பின்னூட்டமாகத்தாருங்கள்.
நான் ஓடோடி வந்து உங்கள் பதிவினைப் பெருமையுடன் படிப்பேன்.
எனது கணிப்பில் உங்களது பதிவின் கருத்துக்கள் ஆழமானவை, எளிமையானவை,
இனிமையானவை என கருதும் பட்சத்தில் உங்கள் பதிவு "அவசியம் படியுங்கள், ரசியுங்கள்" எனும் தலைப்புக்கீழ் அமையும்.
"அவசியம் படியுங்கள்" என்பதிலும் உங்கள் பதிவு விலாசத்தைத் தருவேன்.
இது நல்ல முயற்சி. வரவேற்கிறேன்.
ReplyDeleteவிவரமாகவும், ஆழமாகவும் சிந்திக்க, விவரிக்க தெரிந்தவர்கள் குறைவு தான். உங்கள் பணி இனிதே அமைய வாழ்த்துக்கள்!
hearty welcome to naughty blog
ReplyDeletehaasya-rasam.blogspot.com
வயதிலும், அனுபவத்திலும், அறிவிலும் சிறந்த உங்களைப் போன்றோரிட்ம குட்டுப் பட்டால் நல்லதுதான். வாருங்கள் வந்து குட்டுங்கள்
ReplyDelete