தாமோதர மாதம் பிறந்தது.
கார்த்திகை மாதத்தில் வீடுகள் தோறும் தீபங்கள்.
அந்த மாதம் பௌர்ணமி அன்றே முதல் பிறப்பதாக ஐதீகம்.
இஸ்கான் கோவில்களில் , கௌட சம்பிரதாய வைஷ்ணவர்கள் விமரிசையாக கார்முகில் கண்ணனை உபாசிக்கும் மாதம் இது.
தினம் ஒரு நெய் விளக்கு ஏற்றி கண்ணனை பூஜிக்கும் மாதம் இதுவாகும்.
எத்தனை எத்தனை நீளக்கயிற்றினாலும் கட்ட முடியாத கண்ணன்
தானாக தனது அன்னை யசோதையின் அன்புக்குக் கட்டுப்பட்ட கதை
நேற்று இஸ்கான் நடத்திய தாமோதர மாத சிறப்பு விழாவில் கேட்கக் கேட்க
வாழ்க்கையின் உண்மைப் பொருள் அன்பில் தான் அடங்கியுள்ளது என்பதை
அறிவுறுத்தவே
கண்ணன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
என்றும் மனதில் தோன்றியது.
நம்மிடம் அன்பு செலுத்துவோரிடம் நாமும் அன்பாக இருப்பது உலக இயல்பு.
நம்மிடம் வம்பு செய்வோரிடம் ??
ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது.
அது போல் ஒரு சூழ்நிலை ஏற்படும் சமயத்தில்,
கண்ணன் சொல்கிறான்.
தருமத்தைச் செய். அதர்மத்தை அழிப்பதில் துணையாக இரு.
அதுதான் உன் கருமம் .
என்கிறார்கள்
ஹரே கிருஷ்ணா ஹரே ராமா இயக்கத்தைச் சார்ந்த
கௌட மடத் துறவிகளும் அவர்களது சீடர்களும்.
காணொளியுடன் விளக்கம் சிறப்பு! கண்ணனைக் கொண்டாடுவோம் கார்த்திகையில்!
ReplyDelete