Pages

Tuesday, September 29, 2015

Bhogale je duhkha - Asha Bhosle

News is to hand that Asha Bhonslet's second son just passed away at Scotland fighting cancer for the last five years.

LATAJI'S BIRTHDAY CELEBRATIONS STAND CANCELLED.

U HEAR ASHA SINGING . LYRIC BY SURESH BHAT.
COMPOSER IS HER SON .

Thursday, September 24, 2015

Dayananda Saraswati: The profound journey of compassion


To me ,
 his journey continues for ever and ever and ever and ever......
eternally.....
his voice will be heard by all mankind
ever and ever
and ever 

Sunday, September 20, 2015

மன்மதன் என்றாலே...........

எச்சரிக்கை: இது ஒரு ஜாலி பதிவு.  ரேடிங் : UA 

CONCEPTS SELDOM DIE

எனச் சொல்வது வழக்கம்.


மனிதர்கள் பிறப்பர் வாழ்வர் மரிப்ப்ர்
ஆயினும் சமூக
மனித  மனதிலே பதிந்துவிட்ட சில பல
கான்ச்செப்ட்
 ( கூகுள் மொழி பெயர்ப்பு கருத்து   தமிழில் சரியான வார்த்தை யாராச்சும் சொல்லுங்கப்பா)
மறைவதில்லை. மறந்துபோவதில்லை. யாரும் மறுப்பதும் இல்லை.

அத்தகைய ஒரு கன்செப்ட் இந்த மன்மத ரதி 
  திருப்பரங்குன்றம் கோவிலிலே மன்மத ரதி சிற்பம். 
(நன்றி: ப்ளிக்கர் )

அன்று முதல் இன்று வரை மன்மதன் ரதி கான்செப்ட்
அழிவில்லாதது.
ஆனந்தம் தரவல்லது.
இணையில்லாதது.
ஈடில்லா இன்பம் .
ஃ  வரைக்கும் போலாம்.

ஆனால், மன்மதன் வசப்பட்டவங்களுக்கு பொறுமை இருக்காது. ஒரு அம்பைப் போட்டு, காரியத்தை முடிச்சுப்பாங்க.
(சிவன் மேலே போட்ட அம்பைத் தான் நான் சொன்னேன். )
நன்றி; கூகிள் சிந்தாலா. பெயிண்டிங்.
இலக்கியத்திலும் சரி, இன்னிசையிலும் சரி,
இனிமையாகப் பொழுதைக் கழிக்க உதவும் சினிமாக்களும் சரி.

மன்மதன் தொடர்ந்து இருக்கிறான். இளசுகளை  டிஸ்டர்ப் பண்ணிக்கொண்டே  இருக்கிறான்.

அவனை வெறும் ஒரு அழகா  கள்ளழகா  என்று ஒரு இரண்டு சொல்லில் மட்டும் சொல்லிவிட முடியாது. ஏன் என்றால்,மன்மதன்  என்பது ஒரு பர்சநாலடி. ஒரு இமேஜ்.


சிருங்காரம் என்று சொல்லை மன்மதன் இருக்கும் இடத்தில் சொல்ல முடியுமா ?  ஊஹும்.
காதல் முதல் காமம் வரை .
0 லேந்து இன்பினிட்டி வரை. ஒரு ஸ்கேல் இருந்தா,
அதில் மன்மதன் எந்த புள்ளி லே இருப்பான்?
ஒவ்வொருவரும் தனது மன நிலைக்கு ஏற்ப, இந்த மன்மதன் கன்செப்ட் ஐ
தனக்குப் புரிந்த அளவுக்கே பதில் சொல்வார்கள்.
மன்மதன் இப்படித்தான் என்றும் சொல்ல முடியாது.
காலத்துக்குத் தகுந்தாற்போல அவன் தோற்றமும், பேச்சும், ஆட்டமும் பாட்டமும்.
இதோ:
பழைய நூற்றாண்டின் மத்தியிலே
மன்மதன் எப்படி எங்கே இருக்கிறான் என்று பார்த்தேன்.

மன்மத லீலையைக் கண்டார் உண்டோ ? பாடுவது எம்.கே.டி. படம் ஹரிதாஸ்.
பாடுவது ஆடுவதோடு சரி. அந்த மன்மதன் உட்கார்ந்தே இருக்கிறான் (ர் ) பாடுகிறார்.அப்பப்ப பழ ரசம் குடிக்கிறார். அவ்வளவே !! முதல்லே பாட்டு டான்ஸ் எல்லாம் முடியட்டும். அப்பறம் தான் மத்தது எல்லாம் என்ற காலம் போல இருக்கு !!  . இப்ப எல்லாம் ரிவர்ஸ் லே இருக்கு இல்லையா !!
 
அந்த காலத்துலே நாகை லே சிவகவி தியேட்டர் லே இந்தப் படம் வந்ததா 1978 லே நான் சந்திச்ச ஒரு 90 வயசு பாட்டி சொன்னார். கண் முன்னாடியே இன்னும் எம்.கே.டி நிக்கிறாராம். அந்தப் படத்தையும் பாட்டையும் கேட்டுட்டுத் தான் நான் உசிரை விடுவேன் என்றார்.  படத்தை பார்த்தாரா, பாட்டைக் கேட்டாரா, இல்லை இன்னும் இந்த பிளானெட் டிலேயே அந்தக் கனவிலேயே தான் இன்னமும் உயிரோட இருக்காரா என்று தெரியவில்லை. 

  

C

(பல நேரத்திலே மனசுலே பதிஞ்சு போன உரு என்ன செய்தாலும் நீங்காது நிற்கும்.
லைப் லே மறக்கவேண்டியது மறக்காது. மறக்க கூடாதது மறந்து போயிடும். 
நம்முடைய இந்த பிரைன் பிகேவியர் நமக்கே ஒரு புரிபடாத ஒன்றாகும். )

வருடங்கள் கழிகின்றன.
அதே  கான்செப்ட் ஐ வைத்து படம் எடுக்கிறார்கள்.
 மன்மதன் நாற்பது ஐம்பது வருஷம் கழித்து வரும்போது
எப்படி இருக்கிறான் எந்தெந்த உணர்வுகளை தோற்றுவிக்கிறான் !!

இந்த மன்மதன் பாருங்கள்.
குதிரை சவாரி, கார் சவாரி
அதிசயம் கமல் உட்கார்ந்தால் எல்லாமே பின்னால் போகிறது !!

மன்மதன் மனசுக்குள்ளே உட்கார்ந்தால்
இன்னா இன்னா நடக்குமோ !!

இதை கமல் ஓல்டு மூவி என்று போட்டு இருக்கிறார்கள் யூ ட்யூபிலே
கமலைப் பார்த்தால் யங்காத்தானே இருக்கு !

கே. பாலச்சந்தர் பார்த்த மன்மதன்.
படம்: மன்மத லீலை.1976 ல் வந்த படம் என நினைக்கிறேன்.




இது மன்மத பாணம் . பானம் அல்ல.
பாணம் என்றால் அம்பு.
ரிவர்ஸ் டெக்னாலஜியில் எடுத்ததாம்.
மன்மதனில் என்ன ரிவர்ஸ் டெக்னாலஜி
சுப்பு தாத்தாவுக்குத் தெரியாம??  !!!!
அது தான்  பார்த்தேன்.
அப்பாதுரை சார் மாதிரி ஆர்தொடாக்ஸ் பீபிள் தயவு செய்து கண்ணை மூடிக்கொள்ளவும்.

இன்னும் ஐம்பது வருஷம் கழிகிறது.
21ம் நூற்றாண்டின் துவக்கத்தில்,
இந்த மன்மதன் கன்செப்ட் உருவே மாறிவிட்டது பாருங்கள்.
அந்த மன்மதன் வந்தே விட்டான்.
வந்தவன் சும்மாவா இருப்பான் ?

இப்ப எல்லாம்
மன்மதன்
என்றாலே
வேகம்
அசுர வேகம்.




எங்க இது போவப் போவதோ ????

எது எப்படியோ
இந்த மன்மதன் கன்செப்ட் க்கு முடிவில்லை.
அழிவில்லை.

எ கண்டின்யூட் ஜர்னி


Tuesday, September 15, 2015

காற்றோடு வந்த கீதம்

காற்றோடு வந்த கீதம்




காற்றுடன் கலந்த கீதம்



காற்றோடு மறைந்த கீதம்.

இனிய இசையின் இன்னொரு பெயர் எம். எஸ். அம்மா.
நாங்கள் மறந்தாலும்
நா மகள் மறக்க இயலாள்.


காற்று எங்களுடன் இப்புவியில் இருக்கும் வரை 
உங்கள் கீதமும் எங்களுடன் வரும்.


வலை நண்பர் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள் வலை யில் இருந்து எம்.எஸ்.அம்மாவின் படங்கள் 
உதயமான கருத்துக்கள் தோன்றிய பாடல்கள்.
நன்றி. 



Friday, September 11, 2015

எங்களுக்கு எங்க மனசை

எங்களுக்கு எங்க மனசை 
எதிர்த்து நிற்க  வரம் அளி 
என் எதிரியை நான் வெல்லுமுன்னே  
என்னை வெல்ல வரமளி.  
 

உயர்வு தாழ்வு உணர்வு யாவும் வெளியே ஓடி  மறையட்டும். 
உண்மை நண்பர் தவறிழைப்பின் உடன் மனம் மன்னிக்கட்டும். என் 
வழியிலே புகல் உறவெதுவும்  வராதிருக்கட்டும் 
உண்மையே சுவாசமாக நெஞ்சு  நிறையட்டும்
   
இடர் வரினும் இயன்ற அறம் தொடர்ந்து செய்வோமே   
சுடர் ஒளியில் அற வழியில் என்றும் நடப்போமே 
நெஞ்சிலே உறுதி என்னும் நிலை நிறுத்துவோம். 
தீய கண்டு அஞ்சி ஓடும் எண்ணம் மறப்போம்

எவரை வெல்லு முன்னே நாம் 
நம்மை வெல்லுவோம். 
 
பாடலைப் பாடுபவர்: வாணி ஜெயராம் அவர்கள். 
படம் : குட்டி. GUDDI.  

  
 

 हम को मन की शक्ति देना, मन विजय करे
दूसरों की जय से पहले, खुद को जय करे  भेदभाव अपने दिल से साफ़ कर सके
दोस्तों से भूल हो तो माफ़ कर सके
झूठ से बचे रहे, सच का दम भरे
दूसरों की जय से पहले, खुद को जय करे
 
 मुश्किलें पड़े तो हम पे इतना कर्म कर
साथ दे तो धर्म का, चले तो धर्म कर
खुद पे हौसला रहे, बदी से ना डरे
दूसरों की जय से पहले, खुद को जय करे
 

Saturday, September 5, 2015

கிருஷ்ணக் கவிநயா

ஹாப்பி பர்த்டே டு யூ கண்ணா

கோகுலத்திற்கு  நாம் ஒரு நாள்.
விசிட் பண்ணி, கண்ணனுக்கு ஹாப்பி பெர்த் டே சொல்லணும் அப்படின்னு புறப்பட்டேன்.

எங்க புறப்பட்டீக..என்று குறுக்க வந்த தர்ம பத்தினியிடம்

இந்த பாரு, இத்தனை வருசத்துலே வருசா வருசா கிருஷ்ணன் பொம்மையை வச்சு வெண்ணை, பாயசம், வடை , எல்லாம் செஞ்சு நம்மவே சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்.

ஆமாம்.

ஒரு வருஷமாவது அந்த த்வாரகைக்கு சென்று அந்த கருமை நிறக்கண்ணா உனைக் காணாத கண் இல்லையே என்று பாடி அவனுக்கு


ஹாப்பி பர்த்டே டு யூ கண்ணா
சொல்லவேண்டாமோ என்று அவளைப்பார்த்தேன்.

போயிட்டு வாங்க என்று சட் னு உத்தரவு கொடுத்தாள் என்  பத்தினித் தங்கம்.

எல்லாத்தையும் பத்திரமா பாத்துக்க,  அஞ்சு நாள் லே திரும்பி வந்துடறேன். என்று கிளம்பினேன்.
 இந்தாங்க..என்று அழைத்தாள் இவள்.
 என்னது போகிறபோது நடுவிலே எதோ பேசுகிறாளே என்று அவள் முகத்தைக் கவனித்தபோது,
"திரும்பி வரும்போது, துவரம்பருப்பு , இதயம் நல்லெண்ணெய் ......" என்று இழுத்தாள்.
"நான் என்ன குசேலன் மாதிரி யா கிருஷ்ணனை பார்க்கபோறேன். நீ வேணும்னு நினைக்கிறத ஒரு செல் போட்டு அம்பிகா ஸ்டோர்ஸ் லே வாங்கிக்கயே.. டோர் டெலிவெரி இல்லையா.."

"நேத்திக்கு மகா பாரதம் பாத்தீகளா...யமுனை வெள்ளத்திலே ஓடுது. குழ்ந்தை அப்ப தான் புறந்த குழ்ந்தை மேலே மழைத் துளி விழ, ஆதி சேஷன் வந்து குடை மாதிரி வர்றாரே... அதுவும் அந்தக்காலத்துலேந்து டோர் டெலிவர் இருக்குன்னு தெரியுது.."  என்றவள்,

அது சரி, இந்த த்வாரகை, உடுப்பி, குருவாயூர் எல்லாம் ஆன் லைன்லே பார்க்ககூடாதா :"  என்று என்னை முறைக்க,

"அம்மா தாயே .. இந்த தடவை மட்டும் பொறுத்துக்கோ . அஞ்சு நாள், அஞ்சே நாள்லே ஓடி வந்துடறேன்" அப்படின்னு வீட்டை விட்டு ஓடாத குறையா நடந்தேன்.

த்வாரகா சலோ...கிருஷ்ண காந்ஹா கோ தேகோ என்று மனசு ஒரு பக்கம் அடித்துக்கொள்கிறது.

மனசை அந்த மாயக்கண்ணன் பக்கம் திருப்ப, அந்த பாட்டை என் ஐ பாட லே டவுன் லோட் பண்ண துவங்கினால்,

அந்த கோவர்த்தன கிரிதாரி மாயக்கண்ணன் அல்லவா !!
அதனால் தானோ என்னவோ என்னதான் முயன்றும் அவனை இங்கே சிறைப்படுத்த முடியவில்லை.
அவனைப் பார்க்க கேட்க நீங்கள் தான் இங்கே போகவேண்டும்.

உடுப்பி சென்று கிருஷ்ண தர்சனம் செய்யப்போனால் நடுவிலே ஆர்ட் ஆப் லிவிங் நித்ய பிரக்ஞ்சா தடுத்து நிறுத்தி, நான் பாடுவதை நீங்கள் கேட்டு உங்கள் வலையில் போடவேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்.






பங்களூர் சாரி சாரி, பெங்களூரு இப்ப அந்த ஊர் பேரு, அங்கன பஸ் புடிச்சு உடுப்பி போலாம் அப்படின்னு எத்தனை நேரம் தான் காத்துக்கினே இருக்க முடியும் ?

டூரிஸ்ட் பஸ் ஒன்னு, கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெசல் ,குருவாயூர் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பும் என்று கன்னடத்தில் மாட்லாடியத்தை கேட்டேன். சரி, குருவாயூர் தான் போவோமே, என்று கிளம்பினேன்.

தர்சனம் சூப்பர். பாஞ்சஜன்யம் சாப்பாடும் நன்றாக இருந்தது. அங்கே சித்ரா பாட்டு ஒன்னு கேட்டேன் பாருங்க...ஹார்ட்டை சில்லுன்னு செய்யுது.

குருவாயூர் தரிசனம் முடிச்சுட்டு, கோவைக்கு பஸ் புடிச்சு வந்தா ,
அந்த பஸ் லேயும் கண்ணன் பாட்டு தான்.

பக்கத்து சீட் லே ஒரு சின்னஞ்சிறு கண்ணன் தூங்குகிறான் பாருங்க.




அப்ப தான் நினைவுக்கு வருது, ம்யூசிக் அகடமி லே யோ வேறு எங்கனவோ ஸ்ரேயா கோஷால் வந்து பாடப்போறதா ..

அவங்க பாடுவதே இல்லை. அவங்க குரலே கண்ணனின் குழல் .



ரொம்ப டயர்டா போய், வீட்டுக்குள்ளே நுழைஞ்சேன்.
வூட்டுக்காரி சொல்றா:
நீங்க உலகம் முழுக்க சுத்தி பார்க்க போன கண்ணன்
நம்ம மனசுக்குள்ளேயே இருக்கான்.
அவனை நமக்குள்ளே தேடனும்ங்க.
அது தான் கண்ணன் காட்டும் வழி.

அகத்துக்கு எஜமானி சொன்னால் அப்பீல் உண்டோ !!.

எல்லோருக்கும் எங்கள் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

Thursday, September 3, 2015

காசு மாலை வேண்டாம் கருகமணியும் வேண்டாம்





 ஒரு ஐம்பது வருசத்துக்கு முன் என நினைக்கிறேன். தேவ் ஆனந்த் நடித்த படம்.  
திருச்சியில் கெயிட்டி தியேட்டரில் பார்த்த நினைவு. 
+Durai A 
அப்பாதுரை சார் தனது வலைப் பதிவில் என்னைப் பற்றி பாடல் ஒன்று எழுதியிருக்கிறார். 


அதைப் படித்தபின் இந்தப் பாடல் நினைவுக்கு ஏன் வந்தது ? புரியவில்லை.

பாடலின் மொழி பெயர்ப்பு :
********************************************************************
***********************************************************
*************************************************************8
காசு மாலை வேண்டாம் கருகமணியும் வேண்டாம்
கருமை நிறத்தானே நின் காலின் தூசி போதும்.
கரையும் காணவேண்டும் , நின் காலின் காட்சி வேண்டும்-நின் 
கருந்துளசி இதழில்  என் இதயம் ஈர்க்க வேண்டும்.

மோகம் மனதை முட்ட, லோபம் எனை ஆட்ட,

மோதி மோதி  சீறும் அந்த  நாகங்கள் சீண்ட
வேக வேகமாக விடம்  மனதில் உறையுமுன்னே
போகவேண்டும் நானும் ராமனடி காண 
உடல்  உயிரும் வேண்டாம்  ராம நாமம்  போதும்.
நான் இறக்க வேண்டும். என்னில் 
நான் இறக்க வேண்டும்.
ஹே ராமா .


நீர் வற்றிப்போச்சு, மண லும் காஞ்சுபோச்சு.

வெள்ளம் சொன்ன சேதி உண்மையாகிப் போச்சே. 
உள்ளம் விரிச்ச வலை மாயம் விளங்கிப் போச்சு.
செல்வதெங்கே இப்ப ? ராமனடி காண  ?
போவதெங்கே இப்போ
பூவுலகை விட்டு . 


கொண்டு வந்ததெதை ? எடுத்துப்போவதற்கு ?
மொண்டு செல்ல என்ன நின் புதையலிருந்து
கண்ட தெல்லாம் நேர்மை அப்  புதையல் சொல்லுமுண்மை.
!!
அந்தி நேரமிது பட்சி  பறந்து போகும்  நேரம்.
உந்தி விந்தி  நானும் வீடு  செல்வேன்.  

(வார்த்தைக்கு வார்த்தை அல்ல, மையக் கருத்து மட்டுமே மொழிபெயர்ப்பு    செய்திருக்கிறேன்.​)



****************************

ना मैं धन चाहूँ, ना रतन चाहूँ 
तेरे चरणों की धूल मिल जाए, तो मैं तर जाऊँ 
शाम तर जाऊँ, हे राम तर जाऊँ 

मोह मन मोहे लोभ ललचाए
कैसे कैसे ये नाग लहराए
इस से पहले की दिल उधर जाए
मैं तो मर जाऊँ, क्यों ना मर जाऊँ 

लाए क्या थे जो ले के जाना है
नेक दिल ही तेरा खज़ाना है
सांझ होते ही पंछी आ जाए
अब तो घर जाऊँ, अपने घर जाऊँ 

थम गया पानी, जम गई काई 
बहती नदियाँ ही साफ़ कहलाई 
मेरे दिलने ही जाल फैलाए 
अब किधर जाऊँ, मैं किधर जाऊँ 
*********************


Na Main Dhan Chaahuun, Na Ratan Chaahuun
Tere Charanon Ki Dhuul Mil Jaaye
To Main Tar Jaauun, Haan Main Tar Jaauun
He Raam Tar Jaauun
Moh Man Mohe, Lobh Lalachaaye
Kaise Kaise Ye Naag Laharaaye
Isase Pahale Ki Man Udhar Jaaye
MainN To Mar Jaauun, Haan Main Mar Jaauun
He Raam Mar Jaauun
Tham Gayaa Paanii, Jam Gayii Kaayii
Bahatii Nadiyaa Hii Saaf Kahalaayii
Mere Dil Ne Hii Jaal Phailaaye
Ab Kidhar Jaaun, Main Kidhar Jaauun - 2
Ab Kidhar Jaaun, Main Kidhar Jaauun
Laaye Kyaa The Jo Leke Jaanaa Hai
Nek Dil Hii Teraa Khazaanaa Hai
Shaam Hote Hi Panchi Aa Jaaye
Ab To Ghar Jaaun Apane Ghar Jaaun
Ab To Ghar Jaaun Apane Ghar Jaauun.

.