Pages

Friday, June 19, 2015

அன்புள்ள அப்பா (2)

அந்த ராமசாமிக்கு ரொம்ப சந்தோஷம்.

தான் செய்யமுடியாததை தன் மகன் செய்து விட்டானே !!

என்ற பெருமிதம்
அவர் இதயமெங்கும் கொப்பளித்தது போலும் !!

ஆம்.
தனது வாழ்நாளெங்கும் ஒரு நடிகனாக வாழ்ந்தார். பெரும் பொருள் சேர்த்தார்.

ஆயினும் தனது மகனை தான் நினைத்தது போல் ஒரு எஞ்சினீர் ஆகவோ டாகடர் ஆகவோ
அவர் கனவு பலிக்கவில்லை.
காலம் அது போல அமையவில்லை.

ஒரு நாள் அந்த மகன் அவர் முன்னே வந்து நின்று:

அப்பா என்றான்.

என்னடா...

உனக்குத் தெரியாதா என்ன ?

என்னடா !! நீயும் தன்னை நடிகன்னு, ஊரை சுத்திக்கினு, ஒரு சான்ஸ் கூட கிடைக்காம திணறிக்கிட்டு இருக்கிறே... அது தான் எனக்குத் தெரியும்.

இல்லப்பா...

ஏன்ன நொள்ள்ப்பா...

நான் நடிச்ச படம் ,
அது சின்ன குறும்படம் தான், ஆனா அது ஆஸ்கார் லே விருது வாங்கி இருக்குன்னு
நியூஸ் வந்திருக்கு...

அவருக்கு இதயம் நின்று போனது போல் இருந்தது.

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி..இவன்  தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

மகனே என்று அவனை ஆரத் தழுவிக் கொண்டார்.

உனைப் பெற்றதற்கு என்ன தவம் செய்தேனோ !! என்று கண்ணீர் வடித்தார்.

அப்பா.. நீ தாம்பா எனக்கு எப்பவுமே ஹீரோ... அது சரியில்ல, என்னை அந்த படிப்பு , இந்த வேலை என்று அனுப்பிச்சா எப்படி ?

தப்பு தப்பு தான் .
ஆனா என்னை ஹீரோ ஹீரோ என்று சொல்லி
பெரிய வார்த்தை பேசாதே...
நான் சாதாரண நகைச்சுவை நடிகன் தான் ...
என்றார்.

சரிடா.ராமசாமி..
என்றான் ஆஸ்கார் விருது பெற்ற நடிகன்.

சொல்லிவிட்டு சிரிக்கிறான்.



 அன்புள்ள அப்பா (2)


அப்பாவை நினைந்து உருகச்செய்யும்
பத்து அற்புத
கணங்கள்.
Incredible
Moments
When
Dad
Yours and Mine
Saved the Day
for Us.

Do we remember them ???
!!!

Monday, June 8, 2015

த்விஜாவந்தி

இந்த த்விஜா வந்தி ராகம் என்ன பாடு படுத்துகிறது நமது மனசை !!
இதை முன்னமே என்னுடைய சங்கீத வலையான மூவி ராகாஸ் ப்ளாக் ல் நான் விவரித்து இருந்தாலும் ஐரோப்பியர்களும் இந்த ராகத்தைப் பாராட்டிப் புகழ்வதை நேற்று தான் கவனித்தேன்.

ஹரி காம்போஜி ராக ஜன்யமான இந்த ராகத்தில் பல அறிய பாடல்கள், கிருதிகள் இருக்கின்றன.

அகிலாண்டேஸ்வரி எனத்துவங்கும் முத்துச்வாமி தீக்ஷதரின் சாஹித்யம் எனக்கு 1977 முதலிலே இருந்தே பரிச்சயம்.

அந்த ராகத்தில் நம் மனதை பிழிந்து எடுக்கும்
 மகாராஜபுரம் சந்தானம்,
ஜேசுதாஸ்,.
எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்.

மற்றும்
 சாருலதாவின் வர்ணனை
எல்லாமே சுகம் சுகம்.
இந்த ராகத்தில் தில்லானா அசாத்தியம் .
அதையும் செய்து நம்மை அசத்தி இருக்கிறார் பால முரளி அவர்கள்.
பால முரளியின் தில்லானா இங்கே.
கர்நாடக சங்கீத இசை இலக்கண மேதை டி .என். சேஷகோபாலன் த்விஜாவந்தி ராகத்தை பாடும்போது நமது உனர்வுகள் எப்படி இருக்கிறது?



தமிழ் இசைப் பெரியார் எனப் புகழ் பெற்ற

பெரியசாமி தூரன் எழுதிய பாடல்.

எங்கு நான் செல்வேன் அய்யா...?


எங்கு நான் செல்வேன் அய்யா
நீர் தள்ளினால்…
எங்கு நான் செல்வேன் அய்யா?




திங்கள் வெண் பிஞ்சினை, செஞ்சடை தாங்கிடும்
சங்கரா அம்பிகை தாய் வளர் மேனியார்

எங்கு நான் செல்வேன் அய்யா



அஞ்சினோர் இடர் எல்லாம் அழிய ஓர் கையினால் 

அபயமே காட்டிடும் அருட்பெரும் அண்ணலே
நஞ்சினை உண்டுமே வான் உளோர் நலமுற
நாடிடும் வள்ளலே, நான்மறை நாதனே எங்கு நான் செல்வேன் அய்யா

by Bombay Jayashree



உலக நாயகன் படமான
விஸ்வரூபத்தில் :


உனைக் காணாத நான் இன்று நானில்லையே ..

பாடுவது கமலும் சங்கர் மகாதேவனும்



இத்தனை நளினமான ராகத்தை விட ஐரோப்பியருக்கும் மனம் வரவில்லை போலும்.
இதன் ஸ்பெர்ரி மார்ட்டின் என்னும் புகழ் பெற்ற இசை வல்லுநர் இந்த ராகத்திலே ஒரு பள்ளி இசை அமைத்து அதையும் தனது கல்லூரி மாணவர்களால் பாடி அவையினரை மகிழ்வித்து இருக்கிறார்.
western classical


த்விஜாவந்தி ராகத்தை ஈதன் சபாரி அவர்கள் தந்து இருக்கும் வித்தை.

விஸ்வரூபத்திற்கு பிறகு வந்த ரஜினி படத்திலும் த்விஜாவந்தியின் சாயல் ஸ்ரீனிவாஸ் அவர்களின் பாடலில் தெரிந்தது. அதனுடன் சாமா என்னும் இன்னொரு ராகத்தையும் கலந்து,
நம்ம கீதா அம்மா செய்கிற அவியல் மாதிரி பாடியிருந்தார்.

அதுவும் மணக்கிறது.