Pages

Sunday, May 10, 2015

அம்மா !!

இன்னிக்கு அம்மாக்கள் தினம்  தெரிந்த உடன்

அம்மாவுக்கு இன்னிக்கு ஒரு பரிசு  கொடுப்போம்

ஓடி வந்து
இங்கே வந்து பார்த்தேன்.


ஜானகி அப்படிங்கற பேருலே
மூணு பேரு இருக்கிறார்கள் .

இவர்களிலே
யார் என் அம்மா ?
தெரியல்லையே !!

அம்மா !!



"லவா..." என்றொரு குரல் கேட்டுத் திரும்பினேன்.
என் அன்னை குரல் போல் அல்லவா இருக்கிறது !!

ஒருவருமே இல்லை.

பிரமையோ !!

புவி உள்ளிருந்து வந்ததோ !!

மாதா ச பார்வதி தேவி. பிதா தேவோ மகேச்வரஹ
பாந்தவா சிவ பக்தாஸ்ச ஸ்வதேசம் புவனத்ரயம். 


எல்லோருமே என் அன்னை தான். 

(இதை சுட்டி என்ன அன்னைக்கு என்ன பரிசு என்று பாருங்கள் என்றேன். ​)





Saturday, May 2, 2015

இளசுகளின் பிதற்றல்கள்

இளசுகளின் பிதற்றல்கள்
இருப்பினும் அதில் என்ன
அற்புதங்கள் !!!

படம்   ஆஷிக் 2
 இசை : மிதுன்
 பாடுபவர்: அரிஜித் சிங்.

முதல் முறை இந்த பாட்டை கேட்கையில் அவ்வளவா ஈர்க்காது .
ஒரு சில தடவைகள் கெட்டுவிட்டாலோ நெஞ்சை விட்டு அகலாது.

ட்யூன் அதாவது மெலடி அதாவது இசை
மனதுக்கு இசைவு தந்தபோதிலும்
இந்த பாடலுக்குள்ளே நெஞ்சை ஈர்க்கும் கருத்து ஏதேனும் உளதா

வெறும்
இளசுகளின் பிதற்றல் போன்று தோன்றுகிறது.

இருந்தாலும்
இருபதுகளின் சிந்தனைகள் பற்றி
எழுபதுகள் என்ன சொல்ல முடியும் !!

பாட்டு கருத்து இதுவே:



நீ இலாது என் உயிரும் இல்லை
நீ இலா இவ்வாழ்வும் என்ன ?

நினைப் பிரிந்து நான் வாழ்வேன் எனின்
எனைப் பிரிந்தே நான் இருப்பேனோ ?

நீ ஒருத்தியே இருப்பதால்
நீயே என் உலகு என்பேன்.
உயிர் என்பேன். வாழ்வு என்பேன்.
உள்ளத்தே உறைந்துள்ள  அமைதி என்பேன்.
உணரும் வலியும்  நீயே என்பேன்.
உள்ளத்தில் உறைந்த காதலி நீயே.

நமது உறவு தான் என்னே
ஒரு கணம் கூட விலகி இருக்காத
உறவு தான் என்னே!
ஒவ்வொரு  உனக்கென வாழும்
ஒவ்வொரு கணமும் உனதே உனதே !!



உனக்காக வாழ்ந்தேன் நான்.
உனக்கே என என்னையும் தந்தேன். 
 உன் காதல்  ஒன்றே தான் என்னையும் காத்து 
 என்னுள் இருந்த வலியெல்லாம் நீர்த்தது.


Hum tere bin ab reh nahin sakte
Tere bina kyaa vajood meraa
Kyonki tum hi ho
Ab tum hi ho
Zindagi, ab tum hi ho
Chain bhi, meraa dard bhi
Meri aashiqui ab tum hi ho

Tujh se judaa gar ho jaayenge
To khud se hi ho jaayenge judaa


Teraa meraa rishtaa hai kaisaa
Ik pal door gawaaraa nahi
Tere liye har roz hain jeete
Tujh ko diyaa meraa waqt sabhi
Koi lamhaa meraa naa ho tere binaa
Har saans pe naam teraa


Tere liye hi jiyaa main
Khud ko jo yoon de diya hai
Teri wafaa ne mujh ko sambhaalaa
Saare ghamon ko dil se nikaala
Tere saath mera hai naseeb juDaa
Tujhe paa ke adhoora naa raha

வள வளா ன்னு சத்தம் போடாம, படத்தை போடுங்க....
இந்தபக்கம் கோவை ஆவி, அந்தப்பக்கம் அப்பாஜி சத்தம் போடுவது கேட்கிறது. 
சுப்பு தாத்தா த்யேட்டர் லே 
விசில் சத்தம் தாங்க முடியல்ல.
போட்டுட்டேன். 
நீங்க பாருங்க..
கடைசிலே அந்த பொண்ணு பாடும்போது 
ஹார்ட் வெடிச்சு மௌத் 
ஆகிவிட்டீங்க அப்படின்னா 
தாத்தா பொறுப்பில்ல.
  • என்ன இந்த பாட்டிலே அத்தனை மோகம் ?
  • என்று தானே கேட்கிறீர்கள் ?
  • சுப்பு தாத்தா நேற்று தான் இந்த பாட்டை கீ போர்டிலே கற்றுக் கொண்டார்.
  • எங்கேன்னு தானே கேட்கிறீக...
Beethoven Music School,
Vanchinathan Street , Alwar thirunagar, Valasaravakkam
key board Master
+Music Director Jaikeey

(near Kalyani Mahal)