Pages

Tuesday, December 30, 2014

இந்த ரோசா படுத்தும் பாட்டை என்னதான் சொல்ல !!

இந்த ரோசாப்பூ  சோகத்திலும்
பங்கு பெறுகிறதே !!!
முதலில்
பிரிட்டன் கிராமத்து  இசை.
காதரின் ரட்ஜ்.

Britten Folk Songs. Kathryn Rudge -
Mezzo Soprano


அடுத்து,
ராசாவே உன்னை நம்பி, இந்த
ரோசாப்பூ...
raasave unnai nambi
intha rosaappoo




பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண் மூடாதாம்.

இதுவும் சோகமோ ??





சோகம் போதும்.
ரோசா மையமா வச்சு
இன்னொரு பாடல்.


ரோசப்பூவாம் உன் கண்களை நான் பார்த்தேன்
ருசியாய் ஒரு கோப்பை மது அருந்தினேனா
தெரியவில்லை. மதி இழந்தேன்.

ராஜேஷ் கண்ணா
முகமது ரபி குரலில்.


Thursday, December 11, 2014

கண்ணுடையவன்

படமும் பின் வரும் வாசகங்களும் நான் இன்று படித்தது. 
 
 நன்றி: தமிழ் இந்து நாளிதழ். 


கண்ணுடையவன்

(இன்றைய தமிழ் இந்து பேப்பரில் படித்தது.) 

 

“கடவுள் எங்கும் இருக்கிறாரே?

 எல்லாம் கடவுள்தானே?

 ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?” என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.

கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?

கவனி!

அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.

இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. ‘‘தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்” என்பது முன்னோர் கொள்கை.

உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று.

 நீ, நான் முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை -

 எல்லோரும் ஒரே உயிர். 

அந்த உயிரே தெய்வம். 

ஸ ஏகஹ . தஸ்ய வாசகஹ பிரணவ 

என்னும் ப்ரும்மஸூத்ர வாக்யத்தை எப்படி எனக்குப்புரியும்படி
அந்தக்காலத்துலேயே எழுதிவெச்சுட்டு போயிருக்காரு பாரதி.

வியப்பா இருக்குல்லே !!!