Picture Courtesy:
http://www.emirates247.com
ஆஹா !! வீட்டு வைத்தியம் by Srihari என்று ஒரு புஸ்தகம் இருக்கா ?
இன்னிக்கு திருமதி + Valli narasimhan வல்லி நரசிம்மன் அவர்கள் பதிவிலே படித்தேன். இது மாதிரி ஒரு புஸ்தகம் இருக்கு அப்படின்னு. எனக்காக அதைக்கொஞ்சம் படித்து சொல்லுங்களேன்.
வறட்டு இருமல் சரியாக 30.ஜனவரி 2013 இரவு 9.32 க்கு ஆரம்பித்தது.
ஸோர் த்ரோட் ஆக ஆரம்பித்தது ஒரு கட் த்ரோட் ராஸ்கலாக இன்னமும் தொடர்ந்து என்னை விஜய் டிவி serial கருத்தம்மா வரும் ராஜம்மா வில்லி மாதிரி என்னை துன்புறுத்துகிறது.
லொக்...லொக்....லொக்...
எல்லாவித காஃப் சிரப்புகள், ஆன்டி ஹிஸ்டமின் மாத்திரைகள் , இரண்டு பிரபல ஸ்பெஷலிஸ்ட் கன்சல்டேஷன் எல்லாருமே இது வெறும் வறட்டு இருமல் தான் கபம் இல்லை.லங்க்ஸ் க்லீயர் ஆக இருக்கிறது.
சரியாக போயிடும் என்று சொல்லி இன்று இருபது நாட்கள் ஆகிறது. பர்ஸ் க்ளியர் ஆகிவிட்டது. லங்க்ஸ் க்ளியர் ஆகவில்லை.
லொக்..லொக்....
வென்னிர் லே, மஞ்சள் பொடி, மிளகு பொடி, பனங்கல் கண்டு போட்டு ஒரு தடவை.
ஓமவல்லி, ஆடுதொடாஇலை, கண்டங்கத்திரி இலைய் பொடி பண்ணி, தேன் கலந்து.
திராட்சையோட இரண்டு துளசி இலை. ஒரு நாளைக்கு நாலு தடவை.
துளசி, சுக்கு, மிளகு, ஜீரகம், கண்டந்திப்பிலி, தேன், சித்தரைத்தை எல்லாம் கலந்து
சித்ரவதை செய்யும் ஒரு சூரணம். , சாப்பிட்டபின்.
மிளகு குழம்பு என் மாட்டுப்பொண் உங்களுக்காகன்னு கொண்டு வந்தேன்பா அப்படின்னு தோஹாவிலேந்து கொண்டு வந்ததை தினம் காலையிலும் ராத்திரியிலும் சுடற சாதத்தோட மிளகு அப்பளம், ஜீரக லேகியம் இத்யாதி.
இதைத் தவிர கோட்டக்கல் ஆரிய வைத்த்ய சாலா டாக்டர் கொடுத்த
தாளீசாதி சூரணம், வடகம் ,சீதோபலாதி,zandu company கதிராதி குடிகம், ஸ்ரீஹரி க்ராந்தி லேகியம், ச்யவன ப்ராசம்,
தூங்கும்பொழுது இருமல் ச்ரமப்படுத்தரதேன்னு, நன்னா தூங்கிட்டா, இருமாது அப்படின்னு சொல்லி, வசம்பு இழைச்சு மஞ்சள் பொடி, மிளகு பொடி போடி போட்டு பால் தர்றா ஆத்து ராக்ஷஸி.
ஊஹூம். போவேன்னா அப்படிங்கறது.
எதிர்த்த மருந்து கடை கொடுத்த செரி காஃப், ஹிமாலயா ஹனிடஸ் , காஃப்லெட
ஹால்ஸ், விக்ஸ், வாடர்பரீஸ் காம்பவுன்ட் . பாட்டில் பாடிலா காலியாரது....
எதுவும் ப்ரயோஜனப்படல்லை. லொக்...லொக்....
என்னோட நண்பர் இதே காலனி ஆன்மீகத்திலே கரை கடந்தவர் அவர்கிட்ட போயி இது மாதிரி இருக்கே ஏதாவது தெய்வ குத்தம் இருக்குமோ என்று பேச துவங்கினேன். என்ன இருந்தாலும் மேஷ ராசிக்கு இது கண்ட சனி . படுத்தத்தான் செய்யும். இவர் என்ன சொல்கிறார் பார்ப்போம் என்று தொலைபேசினேன்.
சனிக்கிழமை சப்தமி முடிஞ்சு அஷ்டமி ஆரம்பிச்சுடுது. அஷ்டமி லே ஒரு வியாதி ஆரம்பிசுடுதுன்னா என்று ஆரம்பிக்கும்போதே வயத்தைக் கலக்கியது. ஒரு வாரா சமாளிச்சுண்டு என்ன ஆகும் என்று அழாமல் கேட்டேன்.
இதுக்கு போய் அழுவாளா ? வயசாயிடுத்து இல்லையோ. எல்லாம் வரும் போகும்.
கவலை பட வேண்டாம். அஷ்டமி தான் இருந்தாலும் திருவோணம் நக்ஷத்திரம் இல்லையா. பெருமாள் நக்ஷத்திரம். கவலை படாதேங்கோ. பெருமாள் பாத்துப்பார். என்றார்
ஆண்டவா, அனந்த பத்மனாபா, என்ன செய்யறது அப்படின்னு தவிச்சுண்டு இருக்கிற போது சரியான சமயத்துலே ஆபத் பாந்தவ, அனாத ரக்ஷகராக வந்திருக்கிறீர்கள்.
வீட்டு வைத்தியத்திலே வறட்டு இருமலுக்கு, லொக்...லொக்... ஸ்ரீ ஹரி என்ன சொல்லியிருக்கிறார் ?
எங்க அம்மாவுக்கும் ரொம்ப புடிச்ச புஸ்தகம்.
( ஆம் முழுக்க தேடிப்பாத்துட்டேன். எங்க வச்சுட்டு போயிருக்கான்னு தெரியல்ல. சொல்லாமலேயே மேலே போயிட்டார். அங்கே நான் போகும்போது தான் கேட்க வேண்டும்.)
நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்.
மற்றபடி,
உபய குசலோபரி.
சுப்பு தாத்தா.