திரு ஆதிரை சிவபாலன் அவர்களின் இட்டிருந்த வீடியோ இது. சாரமதி ராகத்தில் இழையும் குரல் யாரது என்று தெரியவில்லை. வழக்கமான மிருதங்கம், கடம், கஞ்சிரா ஆகியவைகள் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக டிரம்ஸ் இடம் பெற்று இருக்கிறது. புதுமையாக இருக்கிறது. கர்நாடிக் ப்யுஷன் என்று தலைப்பில் இது வெளியாகி இருக்கிறது. பாடியவருக்கு எனது ஆசிகள்.
இதே கீர்தனைதனை பிரியா சகோதரிகள் பாட கேட்போமா !
எல்லாமே சங்கீதம் தான் !!