Sunday, June 21, 2009
இது அப்பாக்கள் தினம்
Picture Courtesy: google.
உலகின் பல்வேறு நாடுகளில் இது அப்பாவைப் போற்றும் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
வழக்கமாக ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறு அன்று கொண்டாடப்படும் இந்த தினத்தன்று குழந்தைகள், தத்தம் அப்பாக்களுக்கு வெவ்வெறு பரிசுகளைக் கொடுத்து மகிழ்வர்.
எந்த ஒரு குழந்தையையும் கேட்டுப்பாருங்கள்: யாருடா உன் ஹீரோ ?
உடனே வரும் பதில் ( நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு ) என்னோட அப்பாதான்.
ஏண்டா அப்படி சொல்றே !
எங்க அப்பாவுக்குத் தான் எல்லாம் தெரியும் ...
நீ என்னவாடா ஆவணும்னு விரும்பறே !!
எங்க அப்பா மாதிரி நானும் ஒரு கம்ப்யூடர் எஞ்சினியர் ஆவேன்.
அண்மையில் ஒரு வாசகம் படித்தேன். " நீ உன் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அப்படி நீ இன்று வாழ்ந்து காட்டு "
ஏன் எனின், எந்தக்குழந்தைக்கும் அவனது அப்பா தான் ஒரு ரோல் மாடல். ஒவ்வொரு அப்பாவும் இன்று ஆகவே தன்னைத் தானே எடை போட்டுக்கொள்ளவேண்டிய நாள். பரிசு வாங்கிக்கொண்டால் போதுமா ? அதற்குத் தகுதி இருக்கிறதா, இல்லையென்றால் அதை வளர்த்துக்கொள்கிறோமா ? நாட்டின் எதிர்காலம் நம் குழந்தைகளில் கையில்தான் என பலர் மேடைகளில் சொல்லுகிறார்கள். அது உண்மையாகுமா இல்லையா என்பது அப்பாக்கள் கையில் தான் இருக்கிறது. அதை மனப்பூர்வமாக ஆதரிக்கும் அம்மாக்கள் கையில்தான் இருக்கிறது.
அப்பாக்கள் தினம் பிறந்த கதை இங்கே: http://www.holidays.net/father/story.htm
அப்பாவைப்பற்றிய சில பொன்மொழிகள். ( பழ மொழிகள் ! )
He didn't tell me how to live; he lived, and let me watch him do it. ~Clarence Budington
"My father used to play with my brother and me in the yard. Mother would come out and say, "You're tearing up the grass." "We're not raising grass," Dad would reply. "We're raising boys." ~Harmon Killebrew
One father is more than a hundred Schoolemasters. ~George Herbert
Father ! - to God himself we cannot give a holier name. ~William Wordsworth
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !
உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!