Pages

Sunday, June 28, 2009

அன்பு வேறு ! ஆசை வேறு !!

"ஆசை அறுமின்! ஆசை அறுமின். ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்" எனும் பாசுரத்தைப் படிக்காதோர் உண்டோ ?

ஒன்று செய்தால் இன்னொன்று கிடைக்கும் என்று எதிர்பார்த்து செய்வது ஆசையின் அடிப்படையில் அமையும் அன்பு.
இத்தகைய அன்பினால் ஏமாற்றங்கள்தான் தலை துக்குகின்றன. எதுவுமே வேண்டாம் உன் அருளே போதும் என இறையிடம்
அன்பு கொள்பவர் பக்தர். மற்றவர் யாவருமே வியாபாரிகளோ என்ற ஐயம் தான் வருகிறது. ஸ்ரீ முரளிதர் ஸ்வாமிகள் என்ன
சொல்கிறார் என்று பார்ப்போமா ?





நிர்வாகத்திறன் பெறுவதெப்படி என்பதற்கு இராமாயணத்திலிருந்து ஒரு எடுத்துக்காட்டு.

ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இங்கே சொல்கிறாரா ? இல்லை. இசைக்கிறார் .

Tuesday, June 23, 2009

அம்மா எனக்கொரு வரம் வேணும்






அம்மா எனக்கொரு வரம் வேணும் - மறுக்
காமல் நீ அதைத் தர வேணும் - உன்
னடியே கதி என வந்து விட்டேன்
நீதான் அடைக்கலம் தர வேணும்

கல்லால் உன்னைச் செய்தாலும் - உன்
கருணை ஒன்றும் குறைவதில்லை
மண்ணால் உன்னைச் செய்தாலும்
மாதா உன்னருள் மறைவதில்லை

பளிங்கால் உன்னைச் செய்தாலும் - உனைப்
பற்றிய வரைக்கை விடுவதில்லை
எப்படி உன்னைச் செய்தாலும்
என்அன்னை உன்அன்பில் மாற்றமில்லை

அதுபோல் எனக்குன் பொன்னடியில்
மாறா அன்பைத் தர வேணும்
எது வந்த போதிலும் கலங்காமல்
உனைப்பற் றிக்கொள்ளும் நிலை வேணும்
--கவிநயா



இந்தப்பதிவுக்குச் சென்ற நான் ஒரு பின்னூட்டம் இட்டேன்.
அது இதுவே.

// கல்லால் உன்னைச் செய்தாலும் - உன்
கருணை ஒன்றும் குறைவதில்லை //

என்றோ ஒரு நாள் கவிஞர் வாலி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
தங்கள் பாடலைப் படித்தபோது அது நினைவுக்கு வந்தது.

கோவிலுக்குச் சென்றாராம். கர்ப்பக்கிருகத்திற்குள் நுழைந்தாராம்.
கல்லைப்பார்த்து கடவுளென்பாரைக் கூட்டம் கூட்டமாய்க் கண்டாராம்
என்ன இது ! விந்தையென நினைத்தாராம்.
கோவத்தில் கடவுளை நோக்கி ' நீ கல் ! " என்றிரைந்தாராம்.
கணத்திலே எதிரொலி " நீ கல் " எனக் கேட்டதாம்.

அவ்வொரு வார்த்தையில் அவ்வுரு தோன்றிடவே
மெய் சிலிர்க்க, உடல் வியர்க்க‌
நாக்குழற நவின்றாராம் தம் சுற்றத்தாரிடம்.
" நான் சொன்ன 'கல்' பெயர்ச்சொல்.
அவன் சொன்ன ' கல்' வினைச்சொல். "

ஆம்.
கல்லாதவனுக்கு அவன் கல் .
கற்றவனுக்கோ அவன் கடல்
பாற்கடல்.

Sunday, June 21, 2009

இது அப்பாக்கள் தினம்


Picture Courtesy: google.

உலகின் பல்வேறு நாடுகளில் இது அப்பாவைப் போற்றும் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
வழக்கமாக ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறு அன்று கொண்டாடப்படும் இந்த தினத்தன்று குழந்தைகள், தத்தம் அப்பாக்களுக்கு வெவ்வெறு பரிசுகளைக் கொடுத்து மகிழ்வர்.
எந்த ஒரு குழந்தையையும் கேட்டுப்பாருங்கள்: யாருடா உன் ஹீரோ ?
உட‌னே வ‌ரும் ப‌தில் ( நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு ) என்னோட‌ அப்பாதான்.
ஏண்டா அப்ப‌டி சொல்றே !
எங்க‌ அப்பாவுக்குத் தான் எல்லாம் தெரியும் ...
நீ என்ன‌வாடா ஆவ‌ணும்னு விரும்ப‌றே !!
எங்க‌ அப்பா மாதிரி நானும் ஒரு க‌ம்ப்யூட‌ர் எஞ்சினிய‌ர் ஆவேன்.
அண்மையில் ஒரு வாச‌க‌ம் ப‌டித்தேன். " நீ உன் குழ‌ந்தைக‌ள் எதிர்காலத்தில் எப்ப‌டி இருக்க‌வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அப்ப‌டி நீ இன்று வாழ்ந்து காட்டு "
ஏன் எனின், எந்த‌க்குழந்தை‌க்கும் அவ‌னது அப்பா தான் ஒரு ரோல் மாட‌ல். ஒவ்வொரு அப்பாவும் இன்று ஆக‌வே த‌ன்னைத் தானே எடை போட்டுக்கொள்ள‌வேண்டிய‌ நாள். ப‌ரிசு வாங்கிக்கொண்டால் போதுமா ? அத‌ற்குத் த‌குதி இருக்கிற‌தா, இல்லையென்றால் அதை வ‌ள‌ர்த்துக்கொள்கிறோமா ? நாட்டின் எதிர்கால‌ம் ந‌ம் குழ‌ந்தைக‌ளில் கையில்தான் என‌ ப‌ல‌ர் மேடைக‌ளில் சொல்லுகிறார்க‌ள். அது உண்மையாகுமா இல்லையா என்பது அப்பாக்கள் கையில் தான் இருக்கிறது. அதை மனப்பூர்வமாக ஆதரிக்கும் அம்மாக்கள் கையில்தான் இருக்கிறது.

அப்பாக்க‌ள் தின‌ம் பிற‌ந்த‌ க‌தை இங்கே:http://www.holidays.net/father/story.htm


அப்பாவைப்ப‌ற்றிய‌ சில‌ பொன்மொழிக‌ள். ( ப‌ழ‌ மொழிக‌ள் ! )


He didn't tell me how to live; he lived, and let me watch him do it. ~Clarence Budington

"My father used to play with my brother and me in the yard. Mother would come out and say, "You're tearing up the grass." "We're not raising grass," Dad would reply. "We're raising boys." ~Harmon Killebrew

One father is more than a hundred Schoolemasters. ~George Herbert

Father ! - to God himself we cannot give a holier name. ~William Wordsworth






































.

Friday, June 19, 2009

அது என்ன முப்பத்து இரண்டு ?

அது என்ன முப்பத்து இரண்டு ?

என்னையும் பொருட்டாக மதித்து அன்புடன் ஆட்டத்தில் சேர்த்துக்கிட்ட மேடம் கவிநயாஅவர்களுக்கு நன்றி!

உண்மையிலேயே சொல்லப்போனால், மேடம் கவிநயா திரு குமரனால்
அழைக்கப்பட்ட பொழுதே எனக்கு ஒரு பொறி தட்டியது. (ஹன்ச் என்பார்களே ! ).

நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் நேரம் வந்துவிட்டதோ என !
மேடம் கவி நயாவின் எண்ணங்களிலே இந்த தாத்தா இருப்பது அவர்கள் எந்நேரமும் வணங்கும் அன்னையின் அருளே.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

எனக்கு பெயர் வைத்தது எனது தாத்தா ரத்தின சுப்பிரமணியம்.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குள் அவருக்கு மூன்று பேரன்/பேத்திகள் பிறந்தனராம். (அவருக்கு 10 மகன்/மகள்கள்) (அய்யய்யோ !!!! அந்தக்காலத்தில் அது மினிமமாம்.)
அவரது பெயரைத்தான் வைத்தாக வேண்டும் என எல்லோரும் அடம் பிடித்தார்களாம்.
அதனால், அவர் எனக்கு சுப்பு ரத்தினம் என்றும் பெண் குழந்தைக்கு நாக ரத்தினம் என்று
பெயர் வைத்துக்கொண்டே இருக்கும்பொழுது, கோவில் மணி அடிக்க, மூன்றாவது குழந்தைக்கு மணி ரத்தினம் என்று வைத்தாராம். இருப்பினும் எனது இந்தப்பெயர் விசேட தினங்களில் பிறருக்கு எனது வணக்கத்தைச் சொல்லி வணங்கும்பொழுது மட்டுமே பயன்படுகிறது.

ஓய்வுக்குப் பிறகு இப்பெயரைத்தான் எனது வலைகளில் பின்னூட்டங்களில் இடுகிறேன்.

எனக்கு பள்ளியில் பதிவான பெயர் சூரியநாராயணன். யாருமே என்னை முழுப்பெயர்
சொல்லி கூப்பிட்டதில்லை. டெல்லியில் ஒரு தடவை ஒரு ஃப்ரெஞ்சு நாட்டுக்காரர் என் பெயரை, என்ன பெயர் ? சூரியனாஅரையணா என்றார் !
என் அலுவலகத்தில் முதலில் என்னை சூரி என்றார்கள். பின் சூரி சார் என்றார்கள். பின் சார் என்று மட்டுமே நிலைத்தது.அது எனக்குப் பிடிக்கவில்லை. என்ன சார் மோர் ! எனது நெருங்கிய நண்பர்கள் மட்டும் சூரி என்று கூப்பிடுகிறார்கள்.

"பெயர் பிடிக்குமா ?"

பெயரில் என்ன இருக்கிறது ? ( What is in a name ? ! ) A rose is a rose even if called by some other name.) நான் அந்த கட்சி.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

என் அம்மா இறந்த பத்தாவது நாள் அந்த சடங்குகளின் நடுவே கதறி விட்டேன்.அம்மா அம்மாதான். மற்றவரெல்லாம் சும்மா. http://www.youtube.com/watch?v=9ITvPu75IyA

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எழுத்தில் இருவகை. ஒன்று கையெழுத்து. இன்னொன்று தலை எழுத்து. ஆண்டவன் இரண்டில் ஒன்றையாவது எல்லோருக்குமே நன்றாக வைத்திருப்பான்.
என் கையெழுத்து எனக்கே பிடிக்கும். பல ஃபாண்ட்களில் அந்த காலத்தில் எழுதியதையும் ( எனது அலுவலக சுற்றறிக்கைகள் உட்பட) பிற்காலத்தில் ஆசிரியராக இருந்தபொழுது வெள்ளைப்பலகையில் வண்ணப்பேனாவினால் எழுதியதையும் அடுத்த வகுப்புக்கு வரும் ஆசிரியர்கள் ஆச்சரியப்பட்டு அழிக்கத் தயக்கப்படுவார்களாம்.
அது சரி. எழுத்தை விட, அது என்ன சொல்கிறது என்பது தானே முக்கியம் ?
எழுத்தறிவித்தவன் இறைவனாம்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

பத்து வயதில் பருப்பு சாதம், எங்க அம்மா செய்த கீரை மசியல், வத்தக்குழம்பு.

முப்பது வயதில் கண்ணெதிரில் முன்னே பார்க்கும் எல்லாமே. ( ஏதோ தின்பதற்காகவே பிறவி எடுத்தது போல் நான் என் வயிற்றை ஒரு டஸ்ட் பின் போல் எல்லாவற்றையும் அதற்குள்ளே தள்ளி நிறையவே அவஸ்தையும் பட்டிருக்கிறேன். )

இப்பொழுதோ ? உங்களுக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியும் என்று என் மனைவி சொல்லக்கேட்டுக் கேட்டு இப்பொழுதெல்லாம், என்ன தட்டில் இருக்கிறதோ அதை சத்தம் போடாமல் சாப்பிட்டு விடுவேன்.
அப்பப்ப சமயம் கிடைக்கும்போது மட்டும், இது போல‌

http://www.youtube.com/watch?v=1iHWHkAAUhk

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நகுதல் பொருட்டன்று நட்டல்,
மேற்சென்று இடித்தல் பொருட்டு.

பதவிகளில் இருந்த காலத்தில், என்னைப் புகழ்ந்து பேசுபவரைவிட, என்னை இடித்துப் பேசியவரைக் கவனமாகக் கேட்பது எனது இயல்பு. அது ஒன்று அல்லது இரண்டு தடவைகளில் நட்பாக மலர்ந்ததும் உண்டு.


6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில் ஒரு தடவை குளிச்சிருக்கேன்.பயந்துகொண்டே . அருவிலயோ பல தடவை. அதுவும் ஒரு தடவை உடுமலைப்பேட்டைக்கும் பொள்ளாச்சிக்கும் பக்கத்திலே ஒரு மலை அடிவாரத்திலே ஒரு அருவி என்னமா இருந்தது. சுகமோ சுகம்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

உடல் மொழி. ஆங்கிலத்தில் பாடி லாங்குவேஜ். ஒருவர் வாயால் என்ன சொல்கிறார் என்பதை விட அவர் நினைப்பதை சொல்கிறாரா என்பதை உன்னிப்பாக நோக்குவது எனது தொழில் எனக்குக் கற்றுத் தந்த கலை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது ‍ : ............................ என் பாஸுக்கு பிடிக்காதது.
பிடிக்காதது: ............................என் பாஸுக்கு பிடிச்சது.

அது யார் உங்க பாஸ் ?
அது ஒரு மிலியன் டாலர் கொஸ்சின். சொன்னா இருக்கிற ஒரு வேளை சாப்பாடும் போயிடும். ‍


9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

"சாய்ஸ்ல விட்டாச்!" அப்படின்னு ஜகா வாங்கக்கூடாது. எப்பவுமே ஆனஸ்ட் அன்ட் ஸ்ட்ரைட் கம்யூனிகேஷன்ஸ் பிட்வீன் ஹஸ்பென்ட் அன்ட் வைஃப் இருந்தால் அதைவிட காட்ஸ் கிஃப்ட் வேறு எதுவுமே இல்லை.
என் சரி பாதிகிட்டே எனக்கு பிடித்த விசயம், இந்த நாற்பது + வருசங்களிலே இது வேணும், இங்க போவணும்னு ஒரு தடவைகூட சொன்னதில்ல. எது கிடைக்கிறதோ அதை வச்சுண்டு மன நிறைவு அடையணும்னு நினைக்கிற அவளுடைய மனப்பான்மை.
பிடிக்காத விசயம். என்னோட வள வளா லொடா லொடா சமாசாரங்களைக் கேட்க ஒரு நாளைக்கு ஐந்து நிமிசம் கூட அலாட் பண்ணாதது.
" ஏ மேனகா ! சீக்கிரம் வாயேன். இந்த வலைப்பதிவில் ஒன்னு எழுதியிருக்கேன். " " ஆமாம், இந்த அம்பது வருசத்திலே சொல்லாத எதை ப்புதுசா சொல்லப்போறீங்க. பொறுங்க. நான் நேரம் கிடைக்கும்பொழுது பாத்துக்கறேன். "

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அம்மா. அவ்ள் இன்னமும் இருப்பது சாத்தியமில்லைதான். புத்தி சொல்கிறது. உணர்வு வருந்துகிறது. இன்னமும் அழுகிறது. http://www.youtube.com/watch?v=mIxpyRHeHis

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

சிரிக்காதீர்கள். மயில்கண் வேட்டி. துண்டு.

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

நிசமாவே இதுதான்.
http://www.youtube.com/watch?v=AtrOLDpmaT8

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?


ஞ்ச வர்ம்.

இருந்தாலும் இங்கேயும் பார்க்கவும்.

FIRST CHOICE

http://www.youtube.com/watch?v=R_h-TmMPL_4

second choice.
http://www.youtube.com/watch?v=XfkNKY6OWe8
LAST CHOICE. DO NOT MISS THIS.
http://www.youtube.com/watch?v=uxIzQez8-Nc
14. பிடித்த மணம்?

திருமணம் !!
சே ! சரியான கடி ஜோக் !

சீரியசா சொல்லணும்னா
பூண்டு வத்தக்குழம்பு மணம்.
அதை உண்டு களிப்பதே மனம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?


தொடருக்கு நான் அழைக்கும் நபர்கள்

1. மேடம் துளசி கோபால்.அவர்கள்.
2. அபி அப்பா அவர்கள்.
3. திவா அவர்கள்
.



16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

http://kavinaya.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81

http://www.youtube.com/watch?v=SU9mhymlpsE

17. பிடித்த விளையாட்டு?

அண்மையில் என் பேரன் பிச்சையுடன் ஸ்டாஃஃம்ஃபோர்டில், விளையாடிய கான்டி லேன்டும் செஸ்ஸும். தாமஸ் எஞ்சின் ட்ரையின் க்ராஷ் டபார் டபார் விளையாட்டு.


http://www.youtube.com/watch?v=DirW8mL3W2E

18. கண்ணாடி அணி பவரா?


பவர் இருப்பது அது ஒன்று தான். அப்பப்ப போட்டுக்கொண்டு இருக்கிறேன்.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

அணமையில் ந்யூ ஜெர்சியில் எனது முதல் பெண் எனக்கு ஒரு ஆங்கிலப்படம் டி.வி.டியில் போட்டுக்காட்டினாள். பெயர் நினைவுக்கு வரவில்லை. தமது பதினிரண்டு குழந்தைகளை ( 17 முதல் 1 வரை ) ஒரு கணவன் மனைவி சமாளிக்கும் காட்சிகள். ஒரு வாரம் மனைவி புதிய‌வேலை ஒன்று கிடைத்திருக்கிறதே என்று செல்ல, அப்பொழுதுதான் இந்த குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி என்றே கணவருக்குப் புரிகிறது. எல்லாக் கணவர்களும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

வைதேகி கார்த்திருந்தாள்.
http://www.youtube.com/watch?v=YqOe921vKuI
என்னமா ஆபோஹி ராகத்தைக் கையாண்டு இருக்கிறார்கள். அபாரம் !!

21. பிடித்த பருவ காலம் எது?

ஹி..ஹி..எந்தப்பருவத்தைப் பற்றி சொல்கிறீர்கள் ? இந்தப்பாடலில் இருப்பதா ? மூச் !!


http://www.youtube.com/watch?v=d9jaEdMlUG4


22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?


மலேரியா கொசுவை ஜெனடிக் மாடிஃபிகேஷன் ( genetic modification )செய்து அதன் மூலம் கொசு இன விருத்தியை தடைசெய்ய உதவிடும் ஆராய்ச்சிக் கட்டுரையை.


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கிட்டத்தட்ட நம்ம உடம்புலே இருக்கிற செல்கள் புதுசா பிறந்து , வளர்ந்து, அழிகிற மாதிரி தான்.அது லட்சக்கணக்கில். டெஸ்க்டாப்பில் தினம் ஒன்று கண்டிப்பாக. எனக்குப் பிடித்த வலைப்பதிவுகளிலே இருந்து காப்பியடித்து அதை எடிட் செய்து டெஸ்க்டாப்பில் போடுவதும் உண்டு. வேலையில்லாத கிழவனுக்கு நல்ல ஹாபிதானே !

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது - http://www.youtube.com/watch?v=WHVPTJlK3Zc
பிடிக்காதது -
http://www.youtube.com/watch?v=08YFPXrJB-o

இந்தப்பெண்களைப்பெற்றவர் பாவம் !!

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
எனது 41வது திருமண நாளன்று ஜெட் விமானத்தில் சென்னையிலிருந்து ந்யூ யார்க் சென்றபோதுவிமானம் 42370 அடி உயரத்தில் பறந்தது. உயரத்தில் அது தான் வீட்டை விட்டு அதிக பட்சம் சென்ற தொலைவு.

" நம்ம போவேண்டியது இன்னும் உசரத்திலே இருக்குமோ" என அருகிலிருந்த‌ என் சகதர்மிணியிடம் கிசுகிசுத்தேன். ஒரு முறை முறைத்துப்பார்த்தாள். ந்யூ யார்க் வரை வாயைத் திறக்கவில்லை.
நான்.


26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சுத்தம்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

எதைச் சொல்வது ? இரண்டாவது, நான் ஏற்றுக்கொள்ளவேண்டும் யார் எதிர்பார்க்கிறார்கள் ? உலகம் உங்களை ஏற்றுக்கொள்கிறதா ? அதுதானே முக்கியம் !

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அது என்ன உள்ளே இருக்கும் சாத்தான் !


29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?


1981 வரை எனது மாமனார் வீடு. பாவம், மனுசர் பயந்துபோய், இனி என்னைத் தாக்குபிடிக்கமுடியாது என நினைத்தாரோ என்னவோ, இந்த ப்ளானட்டை வெகேட் பண்ணிட்டு போயிட்டார்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
http://www.youtube.com/watch?v=d50Cp2GFY98

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்.

நான் மட்டுமல்ல,எல்லாருமே மனைவி இல்லாம, செய்ய முடியும் ஒரே காரியமும் இதுதான்.
எச்சரிக்கை: நகைச்சுவை உணர்வு குறைச்சலாக‌ உள்ளவர்கள் பார்க்கவேண்டாம்.
http://www.youtube.com/watch?v=OcnvOOA9Suw

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
ttp://www.youtube.com/watch?v=N7AYVCBQMsM
மாயம்.