Pages

Monday, October 27, 2008

அருள் வாக்கு




என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், எப்படி எழுதவேண்டும் என்ற ஒரு அறிவுரை படிக்கும் வாய்ப்பு, இல்லை, பாக்கியம் கிடைத்தது. அதை நீங்களும் படியுங்கள்.

இன்றைய பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, வலையுலக எழுத்தாளர்களுக்கென
ஒரு நெறி நமக்கு நாமே வைத்துக்கொண்டால், அது இதுவாகத்தான் இருக்கும் என்பது திண்ணம்.



அருள் வாக்கு
இன்றைய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் கடமை, கன்ங்களுக்குப் பிடித்ததை
மட்டுமே சொல்வது என்று வைத்துக்கொள்ளக்கூடாது. அவர்களின் அறிவை, மனத்தை உயர்த்துகிற விஷயங்களையே எழுதவேண்டும். இதை சுவாரசியமாகச் செய்யவேண்டும். உத்தமமான விஷயங்களைப் புதுப்புது விதங்களில் உணர்த்த வேண்டும். பத்திரிகையாளர்கள் வாழ் நாள் முழுதும் மாணாக்கள்களாகவே இருந்தால்தான் தாங்களும் இப்படிப் புதுப்புது விஷயங்களை அறிந்து மற்றவர்களுக்குப் பிரசாரம் செய்ய முடியும்.

சத்தியத்தை, சர்க்கரைப் பூச்சிட்ட மாத்திரைகளாக்கித் தரவேண்டும். சக்கரைப் பூச்சுத்தானே ஒழிய, முழுக்கவும் சர்க்கரை ஆகிவிடக்கூடாது. வெறும் சர்க்கரை உடம்புக்கு நல்லதல்ல. வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாசாரங்களில்தான் ஜன்ங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிகொண்டு இவ்விதமே எழுதுவது சரியல்ல. ஜனங்களுக்கு ஆதம அபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இருதய பூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முனைந்தால், தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும். ' நம்மையும் உயர்த்திக்கொண்டு, நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும் " என்கிற கடமை உணர்ச்சியைப்பெற வேண்டும். இவ்விதம் ஆத்ம க்ஷேமம், லோக க்ஷேமம், சாந்தி, சுபிட்சம் எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெறவேண்டும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள்.

நன்றி: கல்கி இதழ். 07.09.2008

2 comments:

  1. அருமையான அறிவுரை, அருமையான பதிவு! நன்றி. மனதில் வைத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. பொதுஜன ஊடகங்களில் இருப்பவர்கள் காது/கண் வழியே போக வேண்டிய இடத்துக்கு போனால் நல்லது தான்.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!