Pages

Saturday, September 6, 2008

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ?

ரசித்துப் படிக்கும் வலைப்பதிவுகளில் இப்போதெல்லாம் அடிக்கடி எழுதமுடிவதில்லை.
வயது ஒரு காரணம் . இன்னொன்று impress ஆகி, ஆஹா என்று சொல்கிற‌
அளவிற்கு பதிவுகள் என் கண்களில் எதுவும் தென்படவில்லை.
( Possibly I have become too old to understand or appreciate things which the younger generation seek. I concede writers can never be at fault. They write what appeals to their immediate environment.)

அரைத்த மாவையே அரைப்பது அவ்வளவு உற்சாகப்படுத்தவில்லை.

ஏதேனும் புதிதாக செய்தால் என்ன என்று நினைக்கும்போது, ரசித்துப் படித்த‌
செய்திகளைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது.

இன்று யாஹூ செய்திகளில் ஒரு சம்பவம். தமிழ் நாட்டில் ஒரே நேரத்தில்
ஒரே மண்டபத்தில் நூற்றுக்கணக்கில் திருமணங்களை நடத்திவைப்பது
புதிய செய்தி அல்ல.

இருந்தாலும், அப்படிப்பட்ட mass marriages நடக்கும்போது திடீரென்று
தாலி கட்டும் நேரத்தில் மின்சாரம் நின்று போனால் என்ன ஆகும் என்று
இந்த சம்பவம் வருணிக்கிறது.

திடீர் என கரண்ட் போனதால், யார் பக்கத்தில் இருக்கிறார் எனக்கூடத் தெரியாமல்,
முகூர்த்த நேரத்தில் இன்னொருவர் கழுத்தில் இருவர் தாலி கட்டிவிட்டார்களாம் !
திரும்பவும் கரன்ட் வந்தபோது திடுக்கிட்டுப்போனார்களாம்

தாலி கட்டிய இருவர் மன நிலை
எப்படி இருக்கும் !!!தாலி கட்டிக்கொண்டவர் மன நிலை எப்படி இருக்கும் ?

அப்பாடி ! பிழைத்தோம் என்றிருக்குமோ !1
இல்லை !! இது செல்லாது !! நான் பார்த்தது அவளைத்தான். அவரைத்தான்
என்று இருக்குமோ ?

கட்டினா கட்டினதுதான். அதைக் கயட்ட முடியாது என்று "அந்த ஏழு நாட்கள்"
கதையாகிவிடுமோ ?


என்ன நடந்தது என மேலும் படித்தேன்.
ஒரு பரிகார பூஜை என செய்துவிட்டு, கட்டிய தாலியைக் கயட்டிவிட்டு,
சரியான நபரிடம் தாலி கட்டிக்கொண்டு அப்பாடா என பெருமூச்சு விட்டார்களாம்.
ஆல் இஸ் வெல் தட் என்ட்ஸ் வெல்.

Let us Bless the married couples and wish them all well.

A melody delights us.

கல்யாணத் தேன் நிலா
காய்க்காத பால் நிலா
Raag kanada




சுவையான செய்தியைப் படியுங்கள்.
நன்றி: யாஹூ செய்திகள்.


Married the wrong girl? Blame it on power cut
Fri, Sep 5 01:49 PM



Married the wrong girl? At least two grooms in Tamil Nadu can blame it on a power cut.

A black out at a crowded mass marriage venue In Theni at an auspicious moment when about 40 grooms had to simultaneously tie the 'mangal sutra' around their bride's neck led to a mix up with two of them missing the target.

Veerachamy, instead of tying the mangal sutra to Subbulakshmi, the bride, tied it around the neck of her friend, who was standing near her.

Similarly, Balamurugan tied the sacred thread around another girl's neck, instead of Sivakami.

The mix-up which took place at the Sri Subramaniaswamy temple complex at Periyakulam, however, was soon detected.

All ended well as elders, in a quick damage control exercise, removed the mangal sutras and made the grooms tie the tread to the right brides after a 'parikara pooja' (pooja for making amends).

Temple officials said as all the couples had gathered along with their relatives and their friends, leading to overcrowding on Wednesday night.

3 comments:

  1. ஒரு எமர்ஜென்ஸி லைட் இருக்காதோ இப்படிப்பட்டப் பொது இடங்களில்!!!!!

    அக்காவுக்கு நல்ல காலம். இல்லேன்னா பரிகாரப்பூஜை செய்யவேண்டி வந்துருக்கும்:-))))

    ReplyDelete
  2. ஹோ! இது தான் கானடா ராகமா! அந்த அளவுக்கு தான் என் சாஸ்திரீய சங்கீத அறிவு.

    ReplyDelete
  3. இந்த பாடலின் அழகு..
    லா லா என்று முடியும் அழகிலா?
    அமலா அழகிலா?
    அவர்கள் கடிக்கும் திராட்சையிலா?
    இளையராஜா புல்லாங்குழலிலிலா?
    செம பாட்டு.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!