போன பதிவில் நான் நம்பிக்கை எனும் பொருள்படும் இரு சொல்கள் ஆங்கிலத்தில்
இருப்பினும்,( belief, faith) அவை எவ்வாறு வேறுபடும் என்று விளக்க
முயற்சித்திருந்தேன். இன்னமும், இந்த நம்பிக்கை ( belief ) ஏற்படுவதற்கே ஒரு அடித்தளம், perception என்றும் இது எவ்வாறு ஏற்படும் என்பதை பிறகு விளக்குகிறேன் எனவும் சொல்லியிருந்தேன்.
இந்த நம்பிக்கை தனி நம்பிக்கை எனவும் பொது நம்பிக்கை எனவும் வித்தியாசப்படும்.
தனி நம்பிக்கைதனை ஆங்கிலத்தில் individual perception பொது நம்பிக்கைதனை group or public perception எனவும் கூறலாம். (There is yet another social perception which is again a public perception but varies with the societal environment)
தனி நம்பிக்கைக்கு (individual perception )ஒரு உதாரணம்
ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த கதையல்ல. நிஜம்.
எனது தங்கை 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அவளது கவனம் அதிகம் இசை, மற்றும் விளையாட்டில் இருந்ததால் படிப்பில் மிகவும் சுமாராகவே இருந்தது. பல சமயங்களில் அவள் பாஸ் மார்க்குக்கும் குறைவாகவே வாங்கி இருந்தாள்.
இருந்தாலும் என் அம்மாவுக்கு தன் பெண்ணின் மேல் அபார நம்பிக்கை. எப்படியாவது நல்ல மார்க் வாங்கிவிடுவாள் என்று. எனக்கு எதிர் நம்பிக்கை.
ஒரு அரையாண்டுத் தேர்வு முடிந்திருந்தது. பள்ளியிலிருந்து வந்த தங்கை வரும்போதே சத்தமாக : அம்மா ! நான் 93 வாங்கிவிட்டேன். என்றாள். உடன் அங்கு வந்த என் அம்மா, என்னைப் பார்த்து நீ தான் அவளை எப்ப பார்த்தாலும் கரித்துக் கொண்டிருந்தாய். பார் ! அவள் 93 வாங்கி விட்டாள். நான் இன்னைக்கு பால் பாயசம் பண்ணப்போகிறேன் என்று சொல்லிவிட்டு செய்யவும் துவங்கிவிட்டாள்.
நான் பேசாது இருந்தேன். மதிய உணவு முடிந்தது. பால் பாயசம் அமக்களம்.
அம்மா அந்தப் பக்கம் போன உடன் என் தங்கையைப் பார்த்துக் கேட்டேன்: "உண்மையைச் சொல்லு. எத்தனை மார்க் ? "
அவள் பதில் சொன்னாள். " இதில் உண்மை, பொய் எங்கே இருக்கு ? 93 மார்க் தான்" என்றாள். என்னால் நம்ப முடியவில்லை. " ப்ரொக்ரஸ் ரிபோர்ட்டைக் காண்பி" என்றேன். காண்பித்தாள். 93 மார்க் தான். ஆனால், மொத்தம் 500 க்கு 93 மார்க்.
அவளைப்பார்த்தேன்.
" நான் சொன்னதில் தவறு ஒன்றுமில்லையே ! எத்தனைக்கு என்று நீ கேட்காதவரைக்கும் நானும் சொல்லவேண்டும் என்பதில்லையே ! " என்றாள்.
individual perception எப்படி மாறுபடுகின்றது என்பதற்கு இது ஓர் உதாரணம். அவ்வளவே. இப்பொழுது group perception கவனிப்போம்.
சில நம்பிக்கைகளை வரையறுக்க இயலாது. காலம் காலமாக மக்களிடம் ஊன்றிப்போன சம்பிரதாயங்கள் இவை. ஒன்றை இங்கே பார்ப்போம்.
இங்கே நெருப்பின் மேல் நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கிறார்கள்.
(What is it that moves men to walk on fire ?
Is it blind faith ? )
இன்னொரு காட்சி இங்கே.
சக்தி யாத்திரை
இதையும் கேட்போம்
nambinorai kaapavale muthumari sujatha Sri Bannari amman kushboo actress.
http://www.musicindiaonline.com/p/x/CAXgMbZD.9.As1NMvHdW/?done_detect
allopathy, homeopathy, ayurvedha, unani மருத்துவ ஆதாரங்களை
ஆய்வு செய்யும் ஒரு பதிவு கண்ணில் பட்டது.
http://nanoscience.blogspot.com
இவர் தனது பதிவில் ஹோமியோபதி ஒரு pseudo science or pseudo medical system எனச்சொல்லி அதற்கான பல்வேறு காரணங்களை விவரித்திருந்தார். தற்போது ஆயுர்வேதமும் இந்த நிலையே என்றும் சொல்கிறார்.
இவர் சொல்லும் முக்கிய காரணம் எந்த அளவிற்கு அல்லோபதி மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டு, பிறகு சோதனை செய்யப்படுகின்றதோ ( முதலில் மிருகங்களில், அடுத்தது மனிதர்களில் ) அதனின் நோய் குணப்படுத்துகிற தன்மை கண்டு பிடிக்கப் படுகிறதோ அதன் பின் தான் வணிகத்திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு பொது வினியோகம் செய்யப்படுகிறதோ அதுபோன்று இந்திய புராதன மருத்துவமான ஆயுர்வேதமும் இல்லை. ஹோமியோபதியும் இல்லை
என்கிறார்.
இவர் சொல்வதை ஆராய்ந்து பார்த்தால், இவரது முடிவுக்குக் காரணம் ஒரு (public perception) நம்பிக்கை எனத் தெரிகிறது.
1. அலோபதி கம்பெனிகள் தங்கள் ஆராய்ச்சிக்குப்பின் தயார் செய்யும் மருந்துகளை
ஒரு பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்கள். முதலில் எலிகள், குரங்குகள்,போன்ற உயிரினங்கள், அடுத்தததாக human trials. முன்வரும் நோயாளிகளுக்குக் கொடுத்து அவற்றின் விளைவுகளைக் கணிப்பது. ( இவை பெரும்பாலும் ஒரு sample theory தனை ஒத்து இருக்கும். இது பெரும்பாலும் random sample அடிப்படையில் அமையும். )
2. அந்தப் பரிசோதனை தரும் விளைவுகள் எதிர்பார்த்தவையாக இருக்கும் பட்சத்தில் வணிகம் செய்ய, அனுமதி கோருகிறார்கள்.
3. மருந்து வணிகத்தைக் கட்டுப்படுத்தும் நிர்வாகமும் ( அரசாங்க க் கட்டுப்பாட்டுக்குள்)அமைந்தது) இவர்கள் செய்ததாகச் சொல்லப்படும் பரிசோதனைகளைக் கவனித்து பின் ஒப்புதல் அளிக்கிறார்கள்.
இவையெல்லாமே ஒரு சட்ட வரைமுறைகளுக்குள் இருப்பதாகத்தோற்றமளிக்கின்றனவே தவிர உண்மையிலே நூற்றுக்கு நூறு உண்மையா என யாருமே சொல்லிடுதல் கடினம்.
1960 வருடங்களிலேயே மெட்ரானிடசோல் எனச்சொல்லப்படும் டிசன்ட்ரிக்காகக்
கொடுக்கப்படும் மருந்து கார்சினோஜெனிக் என்று நிருபிக்கப்பட்ட பின்பும் கொடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மருந்துகள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டபின்பும் ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளில் oTC drugs ஆகக்கிடக்கின்றன. உதாரணம் : celecoxib , (pain killer) nimusalide போன்றவை. இவையின் side effects அளவுக்கு மேற்பட்டதாக இருப்பதாகச்சொல்லப்படினும் இவை மருத்துவர்களால் தரப்படுகிறது.
பல்வேறு ஆங்கில மருந்துகள் குணப்படுவதை விட வேறுவிதமான இடைஞ்சல்களையும் பாதிப்புகளையும் ஏறபடுத்துகின்றன. இதுவும் ஒரு public perception.
பரிசோதனைகள் சரிவர நடத்தப்பட்டன என்பதையும் பரிசோதனைகளின் முடிவுகள் சரியாகவே கணிக்கப்பட்டுள்ளன என்றும் வியாதியுறும் பொது மக்களிடையேயும் இப்பரிசோதனையில் உட்படுத்தப்பட்ட மருந்துகள் அதே மாதிரியான முடிவுகளைத் தரும் என்பதும் ஒரு perception தான். இதுபோன்று அறிமுகப்பட்ட பல மருந்துகள்
பல நோயாளிகளின் உயிரைக்குடித்தபின் அவை வணிக வளாகங்களிலிருந்து
வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன. (withdrawn from markets )ஆகவே சோதனைகள் முழுமையானவை இல்லை என்பதையும் அனுபவமே நிரூபிக்கிறது.
இருந்தும் இந்த உண்மையை நாம் மறந்து (அல்லது மறைத்து) நமக்கு நாமே ஒரு
பொய்த்தோற்றத்தை, அதாவது, ஆங்கில் வைத்திய மருந்துகள் அனைத்துமே
கண்டிப்பாக நோய் நீக்க வல்லதென்ற கணிப்பை வைத்திருக்கிறோம். This is what I call a group perception. ( a perception based on a process which is as incorrect as it is inadequate)
மாறாக, ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் பூண்டு, மஞ்சள்,வேப்பங்காய், துளசி, முருங்கை, பாகை, வெந்தயம், சீரகம்,மிளகு, அதி மதுரம், வசம்பு, ஆடு தொடா இலை,சிறியா நங்கை, வெங்காயம், சுண்ணாம்பு, sarpa gandhi, ஆகிய பலவும் பல நூறாண்டு காலமாக வெவ்வேறு நோய்களுக்குப் பயன் படுத்தப்படுகின்றன. இவையின் நோய் நீக்க சக்தி அனுபவத்தால் தெரியப்பட்டுள்ளது.
இதுவும் ஒரு பொது நம்பிக்கை.( public perception )
சீனாவின் அகுபங்க்சர் முறை இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ரத்த அழுத்தம், போன்ற நோய்களை ஒரு குண்டூசி குத்துவதின் மூலம்
சரியாக்க முடியும் எனச் சொல்கிறார்கள்.
ரீகி முறை. அண்டத்தில் இயற்கையாக உள்ள சக்தியை மாஸ்டர் தனது
கைகள் வழியாகக் கொண்டு வந்து வியாதியஸ்தரைக் குணப்படுத்துவதாக
நம்ப்படுகிறது. ப்ரானிக் ஹீலிங் என்று இன்னொரு முறை.
இங்கேயெல்லாம் எத்தனை எத்தனை verifiable experiments ந்டந்தன ?
(This apart, even amidst allopathy, a good amount of drugs are prescribed since the physicians found them to work, despite the process by which the molecules contained in the drug has not been subjected to adequate research. For instance, GABAPENTIN
a drug primarily given for grand mal and petit mal (fits ) is also given for depression. This works but ask for the literature as to how it cures, you do not get adequate information...This is mentioned only to bring home that even in Allopathy medicines which are not subject to verifiable experiments are prescribed. )
ஆகவே public perception ஐ அடிப்படையாக வைத்துக்கொண்டு செயல்படும் ஒரு குறிப்பிட்ட செயல்முறை சரியா தவறா எனச் சொல்லிவிடஇயலாது. ஒரு குறிப்பிட்ட செயல் விஞ்ஞான ரீதியாகச் சரியில்லை எனச்சொன்னாலும் அது நம்பிக்கைக்கு உட்பட்ட செயல் என்றால் அதைக் கண்டிப்பதில் பொருள் இல்லை. (உதாரணம்: சூரிய சந்திர கிரஹணங்கள் மனிதர்களை பாதிப்பதில்லை. சூரிய கிருஹணத்தின் போது சூரியனை நேரடியாகப்பார்ப்பது தான் கூடாது. இருப்பினும் அந்த நேரத்தில் லக்ஷக்கணக்கான பொது மக்கள் கடலில் நீராடுகிறார்கள், நீத்தோர் கடன் கழிக்கிறார்கள்.) இரண்டாவது, நம்பிக்கை faith. ( I have witnessed Professors of Astronomy lecturing in the classroom as to how an eclipse occurs, to return home later in the evening to do a Amavasya tharpana during Solar eclipse. For them there is no contradiction, as between their two acts, first based on scientific knowledge and the second based on social faith.)
இன்னொரு கோணத்தில் பார்ப்போம்.
கல்பனா சாவ்லாவை ஏற்றிச்சென்ற விண் மின்கலம் சோதனைக்குட்படுத்தப்படாமலேயா அண்டத்திற்குச் செலுத்தப்பட்டது ? ஏன் திரும்பி பூமிக்குள் திரும்பி வரும்போது பழுதாகிவிட்டது ? அது ஒரு gamble ஆ?
எத்தனை எத்தனை சோதனைகளுக்குப்பின்னும் திறந்த இதய வால்வு அறுவை சிகிச்சை தோல்வி அடைகிறது ? அதற்காக அதை வேண்டாம் என புறக்கணிக்கிறோமா ?
There have been verifiable experiments but these do not add up to a conclusion that will ever work. So,we always look at probabilities, as to what are the chances that such and such thing will work or will not work in specified circumstances.
( I have personally witnessed a case, where the body temperature of a person suffering from Malaria could not be reduced to manageable levels of under 101 or so with two tablets of paracetamol of 500 mg and maintained for four to five hours, but with a single dose of pherum phos (homeopathic dosage for an adult) the temperature not only gets reduced but got sustained at < 101 for well over 5 to 6 hours )
This is not to decry Allopathy, but stressing the need to choose the right system at the right place.
ஒருவருக்கு இருக்கும் perception இன்னொருவருக்கு faith ஆகவும் இருக்கும். நம்பிக்கை உள்ளோர் ( faithfuls) இடம் சென்று verifiable experiments க்கு உட்படுத்தியபின்பு தான் நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும் , இல்லையெனின் நீங்கள் புத்திசாலியில்லை எனச் சொல்லிடுதல் முடியுமோ ?
Things fail even after verifiable and verified experiments. அறிவு ஜீவிகள் யோசித்துப்ப்பார்க்கவேண்டும்.
There comes one's intuitive power, which is possibly ahead of one's
reasoning power.
What is then intuition ?
ஆய்வுகளுக்கு உட்படுத்துதலும், கேள்விகளை எழுப்புதலுமே அறிவுஜீவித்தனங்களின் முகவரி என்பது இன்றைய நம்பிக்கையாயுள்ள நிலையில் இது போன்ற எழுத்துக்கள் மிகப்பெரும் உதவியைச்செய்யும். ஆனால் இதற்கான் பதில்களை நாம் ஏற்றுக்கொல்ளும் பக்குவத்தில் இருந்தால் மட்டுமே....
ReplyDeleteமிகவும் சிந்திக்கத்தூண்டிய பதிவு...
நன்றி..
கிருத்திகா கூறியிருப்பது போல பல கோணங்களில் சிந்திக்கத் தூண்டும் பதிவு.
ReplyDeletekrithika said:
ReplyDelete// நாம் ஏற்றுக்கொல்ளும் பக்குவத்தில் இருந்தால் மட்டுமே....//
உண்மையே.
எதை நாம் ' நிரூபிக்கப்பட்டது ' என எண்ணுகிறோமோ அதுவே
ஒரு perception தான். எல்லா பரிசோதனைகளுமே
அன்றைய காலத்திய சோதனைக்கூட உபகரணங்களின் திறன்,
மற்றும் அவற்றை உபயோகிக்கும் மக்களின் அறிவு, ஆற்றலுக்கு
உட்பட்டதே.
பற்பல கருத்துக்கள் ( from astronomy thro' geophysics to genetic engineering )
ஒரு காலத்தில் சரியெனக் கொள்ளப்பட்டு, பின்னே ஒரு காலத்தில்
இன்னொரு விதமான சோதனையின் விளைவாக உடைபட்டிருக்கின்றன.
ஆகவே எதையுமே முழுமையான சோதனை எனச் சொல்லமுடியாது.
இன்றைய தேதியில் சரி. அவ்வளவே. உதாரணமாக, சமீபத்தில்
ப்ளூடோ ஒரு கிரகம் இல்லை எனக்கூறுகிறார்கள். ஏன் ? கிரகம் என்பதற்கான
சொல்லின் விளக்கத்தை மாற்றிவிட்டார்கள்.
So, to me, it appears whatever we call as proven things are
just as good as perceptions.
சுப்பு ரத்தினம்.
ராமலக்ஷ்மி கூறுவார்:
ReplyDelete// கிருத்திகா கூறியிருப்பது போல பல கோணங்களில் சிந்திக்கத் தூண்டும் பதிவு.//
நன்றி.
சுப்பு ரத்தினம்.