Pages

Thursday, April 3, 2014

கண்கள் இல்லாதவர் மட்டும் படிக்க



இன்று ஒரு அமுதமான பதிவு படித்தேன். அது ஆங்கில பதிவு. 

ஒரு பெண்.
பிறவியிலேயே அவள் குருடு இல்லை. எனினும் அவளுக்கு விவரம் தெரிந்தது முதல் அவள் உலகத்தைக் கண்டதே இல்லை.

அவளுக்கு, தான் குருடு என்பதாலேயே
உலகத்தார் எல்லாவற்றையும் காண்கையிலே

தான் மட்டும் காண இயலவில்லையே என்ற ஆதங்கம்.


கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை என்பதை புரியாத வயது.

தனக்கு இல்லாதது பார்வை. அது மற்றவர்களுக்கு இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் தன்னைக் காண வருபவர் அத்தனை பேரையும் வெறுத்தாள் .

ஒருவன் மட்டும் விதி விலக்கு . அவனும் அவள் வயதை ஒத்தவன்.
அவன் பேசுவது இதமாக இருந்தது. அவன் அருகாமை அவள் ஆதங்கத்தைக் குறைத்தது.

அவளுக்கு வேண்டுவது எல்லாம் அவன் மூலம் கிடைத்தது. அவன் அவள் கண்களாய் இருந்தான்.

அவனும் அவளும் ஒன்றாய் இருந்ததைக் கண்ட சுற்றம் உற்றம் அவளிடம் அவனிடம் சொல்லியது.

நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

கண்டிப்பாக செய்துகொள்கிறேன்.  மன்னவனே மனதுக்கு ஏற்ற வனே அவன் தானே .!!
ஆனால் ஒன்று
திருமணம் எனக்கு பார்வை கிடைத்த பின். என்றாள் அவள்.

அதைக் கேட்ட அவன் உலகெங்கும் சுற்றினான். தன பொருள் எல்லாம் கொட்டினான். வாரி இறைத்தான்.

அவன் பார்க்காத மருத்துவர், வணங்காத தெய்வம் இல்லை.

ஒரு நாள் ஒரு நாள் ...

அவளுக்கு பார்வை கிட்டியது.

ஆஹா என மகிழ்ந்தாள்.

என்ன ஒரு உலகம் !  என்ன அழகான உலகம். !!
என்ன அழகான வாலிபர்கள் !

உலகத்தின் அழகில் லயித்தாள் .
எதிரில் உள்ள கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.
தான் எத்தனை அழகு !!
தன் அழகிலே தானே மயங்கினாள்.

அந்த சமயத்தில், பக்கத்தில் இருந்த யாரோ ஒருவர், அவள் என்றோ இட்ட
வாக்குறுதியை நினைவு கூர்ந்தார்கள்.

ஆமாம். எனக்குப் பார்வை கிடைத்தால், எனக்கு இதுகாறும் உறுதுணையாய் இருந்தவனைத்  திருமணம் செய்வேன் என்று வாக்கு தந்தேன்.

அவன் எங்கே ?

இதோ வந்து விடுவான் என்றார் ஒருவர் .

அவன் வந்தான்.

இவள் திடுக்கிட்டாள்.

இவனையா திருமணம் செய்துகொள்வது ?
இவன் அழகில்லையே ?
எனக்கு நிகரில்லையே..!!

தன்னால் முடியாது என்று தீர்மானமாக நினைத்தாள்.
சொல்லிவிட்டாள்.
ஐ ஆம் சாரி.

அவன் சொன்னான்.

சரி. .
நீ கண்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்.

சொல்லி மறைந்தான்.

**************************************************************************
***********************************************************************
********************************************************************

.
கருத்து:
ஆவிஸ்  விச்வனாநாதன்.
http://avisviswanathan.blogspot.in/2014/04/when-you-give-give-without-expectations.html

Anything you gave, bounces back to you. What we gave, comes back to us. - Sri Sri Ravi Shankar
But not necessarily from the same person. 

8 comments:

  1. ஏற்றுக் கொள்ளா விட்டாலும் இவளுக்கு அவன் கண்ணாகி விட்டானோ!

    ReplyDelete
  2. நெகிழ வைத்த கதை! நன்றி!

    ReplyDelete
  3. மனதை ரொம்பவே உலுக்கி விட்டது! கண்ணிருந்தும் குருடியானாள்! ஆம் மனக்கண் குருடி!!

    சொன்ன விதம் அருமை!

    ReplyDelete
  4. கண் வந்தவுடன் மனம் மூடிக் கொண்டுவிட்டதே! என்ன பயன்?

    ReplyDelete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

    வலைச்சர தள இணைப்பு : வியாழனின் விழுதுகள்

    ReplyDelete
  6. அருமை. பலரும் வாசித்தறிய வேண்டிய பதிவு. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் . என் தளத்தில்: http://newsigaram.blogspot.com/2014/04/100happydays.html #100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!