வாசலிலே பூத்திருக்கும் வண்ண மலர் உனக்காக
என்று துவங்கும் இந்த பாடலை இயற்றியது யார் ?
அமெரிக்கா வாழ் தமிழ் ஆன்மீக பாடல் ஆசிரியர் .
இந்த பாடலை மேலும் படிக்க இங்கே செல்லுங்கள்.
பாடலை இயற்றியவர் மேடம் கவிநயா அவர்கள். அம்மன் பாட்டு என்னும் வலைத் தளத்திலே பதினைந்து ஆண்டுகளாக, ஓய்வில்லாது அம்மன் புகழ் பாடுகிறார். ஒவ்வொரு செவ்வாய் அன்றும் அவரது பாடலை சுப்பு தாத்தா கடந்த பத்து ஆண்டுகளாக பாடி வருகிறார். சுமார் 1000 பாடல்களுக்கு மேல் கவிநயா பாடல்களை இசை அமைத்து இருக்கிறார்.
இருந்தாலும் சுப்பு தாத்தா பாடகர் இல்லை. அவருக்கும் மிகவும் வயதாவதால்
குரலும் ஒத்துழைக்கவில்லை .
அப்போது தான் தாத்தாவின் இல்லத்துக்கு மனமுவந்து வருகை தந்தார், சுப்பு தாத்தா வை தாத்தா , தாத்தா எனக்கூப்பிடும் கீதா ரங்கன் அவர்கள்.
நீங்கள் இதை பாடுங்கள் என்று சொன்ன போது சென்ற செவ்வாய் அன்றும் நாட்டக்குறிஞ்சி யில் பாடினார். நேற்றும் வெளிவந்த இந்தப் பாடலை அவரே
வலஜி ராகத்தில் மெட்டமைத்து பாடுகிறார்.
வலஜி ராகத்தில் பாடுபவர் தில்லை அகத்து கர்னானிக்கல்ஸ் தளத்தின் இணை ஆசிரியர்.
முறையாக இசை பயின்றவர் அவர். அதனால் தான் ராகத்தின் சிறப்புகள் தூக்கி நிற்கின்றன.
அவரை வாழ்த்துங்கள்.
அதே பாடலை பாடுவது மறுபடியும் சுப்பு தாத்தா.
போனால் போகிறார். அவரை
மன்னித்து விடுங்கள்.
i