Sunday, July 5, 2009
காரை விற்று குதிரை வாங்கிய கதை
petrol விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட நாக்பூர் வாசி திரு சஞ்சய் திவாரி தனது காரை விற்றுவிட்டு ஒரு குதிரையை வாங்கினாராம்.
ரூபாய் ஐந்து லட்சத்திற்கு காரை விற்றுவிட்டு நாற்பதினாயிரம் விலை கொடுத்து குதிரையை வாங்கியவர் தினமும் அக்குதிரையில் சவாரி செய்து தனது அலுவலகத்திற்கு போகிறாராம். குதிரைக்கு தினம் போடும் உணவுக்கு நாற்பது ரூபாய் மட்டுமே செலவு. பெட்ரோல் செலவு எண்பது ரூபாய் . ஐம்பது பெர் சென்ட் மிச்சம் .
அது மட்டுமல்ல. சுற்று புற சூழ்நிலையும் என்னால் பாதிக்கபடுவதில்லை என்று பெருமையா சொல்லிக்கொல்கிறாராம்.
சென்னை வீதிகளில் இனி இதுபோல குதிரை சவாரிகளை பார்க்கமுடியுமா என்று தெரியவில்லை. முக்கியமாக சென்னை அண்ணா சாலையில் ஜெமினி பாலம் அருகே அடிக்கடி டிராபிக் ஜாம் ஆகிவிடுகிறது. ஒரு வேலை கார்களுக்கு பதிலாக குதிரைகள் சவாரி அங்கே வந்து விட்டால் எவ்வளவு அழகாக இருக்கும் !!
எனக்கும் வாரத்திற்கு ஒரு முறை மயிலாபூர் செல்லவேண்டி இருக்கிறது. நான் கூட ஒரு குதிரை வாங்கி ஆற்காட்டு ரோடு வழியாக
கோடம்பாக்கம் சென்று நேராக வள்ளுவர் கோட்டம் வழியாக ஜெமினி பாலத்தில் ரைட்டிலே கட் பண்ணி காதேட்றல் ரோடு வழியாக
நேரே பீச்சுக்கு சென்றால் நன்றாக இருக்கும்.
எங்கே வாங்கவேண்டும் எத்தனை ரூபாயில் என்று யாராவது நல்ல ஐடியா கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.
காரை விற்று குதிரை வாங்கிய கதை
நன்றி:
ndtv
Subscribe to:
Posts (Atom)