Pages

Monday, June 6, 2016

இப்போ அப்போ இதயத்திலே




                                    (அதே மெட்டில் பாடிப்பாருங்கள்.)
********************************************************************************************************************
+mohan gurumurthy நல்லாவே மொழிபெயர்ப்பு செய்கிறார். 
சிவகுமார் சூரர். 
இருந்தாலும் ஏழைக்கு ஏற்ற எள்ளுரண்டை என்று சொல்வது போல, 
எனக்குத் தெரிந்த உருது சாஹித்யம். எனக்குத் தெரிந்த தமிழில் வார்த்தைக்கு வார்த்தை 
மொழி பெயர்ப்பு இல்லை, ஒரு தினுசு ஆ அதே அதே பாவத்தில், 
*******************************************************************************************************************
இப்போ அப்போ இதயத்திலே  
இந்த எண்ணங்கள் சொல்லாமல் வருதே !

இந்த மண்ணில் எனக்கென்றே  உனை  
இறைவன் படைத்தானோ ?. 

தரைக்கு வருமுன்னே 

வானத்தில் நீ 
வண்ணத்தாரகையா இருந்தாயோ?

இரங்கி என் மேல்  எனக்காக 
இறங்கி வந்தாயோ 

இந்த நின் கரங்கள், இரு தோள்கள் 
இனி என் புதையல் எனச் சொல்வேன். 
இந்த நிழல் போலும்  நின் கருங்கூந்தல் -என் 
சொந்தமென நான் சொல்வேன். . 
இனிக்கு மி தழும் நின் அணைப்பு தரும் சுகமும் 
சொர்க்கம் எனச் சொல்வேன். 

இப்போ அப்போ என்றிலாது என் உள்ளே 
இந்த எண்ணங்கள். 

இனிய இரவில் இந்த   சாலை ஊடே   ஷஹநாயி சத்தம்  
இது தானோ என் முதல் இரவு திறந்து பார்ப்பேன் உன் முகக் கதவு. 

ஈதென்ன என் கைகளில் நீ 
குறுகி அமிழ்ந்து விட்டாய் 
ஈதென்ன நாணம் என்ன வெட்கம் 
என்னுள் குமைந்து மறைந்து விட்டாய். 

என்ன இது போல என்னை நீ 
எப்போதும் கொஞ்சுவாயா.....நின் 
கண்கள் இமை கள் மேல் நோக்கி எனைப் பார்க்கும் இக் 
காட்சி காலமெல்லாம் எனக்கா ...?

சென்ற காலம் எல்லாமே சோகம் தானே  என் வழியில் 
இன்று கண்டேன் புதிய  மோகம்  நான் உன் விழியில். 
இப்போ அப்போ இதயத்திலே  
இந்த எண்ணங்கள் வருது. 

Kabhi kabhi mere dil mein khyal aata hai
Kabhi kabhi mere dil mein khyal aata hai


Ke zindagi teri zulfon ki naram chhaaon mein guzarne paati
To shahdaab ho bhi sakti thi
Ye teergi jo meri zees ka mukkaddar hai
Teri nazar ki shuaaon mein kho bhi sakti thi
Ajab na tha ke main begaana-e-alam reh kar
Tere Jamaal ki raanaion mein kho rehta
Tere gudaas badan teri neembaand aankhein
Inhi haseen hassen fasaanon mein main kho rehta
Pukarti mujhe jab talkhiyan zamane ki
Tere labon se halaawat ke ghoont pi leta
Haya cheekthi firti barhe-na-sur 
Aur mein ghaneri zulfon ke saaye mein chhup ke jee leta
Magar yeh ho na saka aur ab yeh aalam hai
Ke tu nahi tera gam teri juus-t-juu bhi nahi
Guzar rahi kuchh is tarah se zindagi meri
Jaise isse kisi ke sahare ki aarzoo bhi nahi
Zamane bhar ke dukhon ko laga chukka hun gale
Guzar raha hun kuchh anjani reh-guzaron se

1 comment:

  1. தாத்தா பாட்டு வேறாக உள்ளதே..வருவது வேறாக இருக்கிறது

    கீதா

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!