Pages

Sunday, April 17, 2016

பெரிசு ! புரிஞ்சுக்கய்யா...


வாழ்வின் அந்தி மாலையில் ஒரு நாள்.
பக்கத்தில் இருந்து ஒரு முனகல் சத்தம் கேட்டது.
திரும்பி யார் என்று பார்த்தேன்.

ஒரு பெரியவரும் பக்கத்தில் ஒரு நடுத்தர வயதினரும்.
பெரியவரின் சொந்தமாக இருக்குமோ ?
சொன்னதைக் கேட்டேன்.
"பெரிசு ! புரிஞ்சுக்கய்யா..."
"புரியுது.  மனசு ஒத்துக்கல்லெயே !"

"கவலைப் பட்டு இன்னா பிரயோஜனம் சொல்லு."

"தெரியுது."

வயசாயிக்கிட்டே போவுது.இல்லையா.."

அதுக்காவ, மனுசனை இப்படியா வாட்டுறது !
ஒரு நாளைக்கு வயிறு சரியில்ல. இன்னொரு நாளைக்கு கால் வலி தாங்கல்லே.

ஒரு நாளைக்கு காது வலி. அடுத்த நாள் ஜலதோஷம் .

டாக்டர் கிட்டே கேட்டா இதெல்லாம் வயசு சம்பந்தப்பட்டது அய்யா. என்கிறார்.


ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு ஒன்பது மாத்திரை.

"வயசாகும்போது என்னென்ன நமக்கு நம்ம உடம்பு பீல் பண்ணும்.

கொஞ்சம் இந்த கேள்வி பதில் பாருங்க.  இங்கன க்ளிக் பண்ணுங்க. 

ஆன்சர் பண்ணுங்க ப்ளீஸ்."

"இன்னாது !! இப்ப வோணாம்."

"வயசாகும்போது படிச்சுக்கறேன் அப்படின்னு சொல்றீகளா !

அதுவும் சரிதான். அப்ப இத  தினமும் காலைலே எழுந்த உடனே இதப் படிங்க.. 
சிரிச்சுகிட்டே இருக்கலாம். "
" பாக்கலாம்.  ஆனா,வீட்டுக்காரி படிச்சா கோவிச்சுப்பா."

"இதுவும் வேண்டாமா ? இதப் பாருங்க. "




இல்லேன்னா இதையாவது  பாருங்க.


2 comments:

  1. வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்... சரிதானே!

    ReplyDelete
  2. நல்ல நகைச்சுவை காணொளிகள். வயதானால் என்ன தாத்தா மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால் காலா உன்னை நான் சிறு புல்லென நினைக்கிறேன் எந்தன் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன் என்று ஆடிப் பாடிவிடலாமே....

    கீதா

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!