Pages

Sunday, September 20, 2015

மன்மதன் என்றாலே...........

எச்சரிக்கை: இது ஒரு ஜாலி பதிவு.  ரேடிங் : UA 

CONCEPTS SELDOM DIE

எனச் சொல்வது வழக்கம்.


மனிதர்கள் பிறப்பர் வாழ்வர் மரிப்ப்ர்
ஆயினும் சமூக
மனித  மனதிலே பதிந்துவிட்ட சில பல
கான்ச்செப்ட்
 ( கூகுள் மொழி பெயர்ப்பு கருத்து   தமிழில் சரியான வார்த்தை யாராச்சும் சொல்லுங்கப்பா)
மறைவதில்லை. மறந்துபோவதில்லை. யாரும் மறுப்பதும் இல்லை.

அத்தகைய ஒரு கன்செப்ட் இந்த மன்மத ரதி 
  திருப்பரங்குன்றம் கோவிலிலே மன்மத ரதி சிற்பம். 
(நன்றி: ப்ளிக்கர் )

அன்று முதல் இன்று வரை மன்மதன் ரதி கான்செப்ட்
அழிவில்லாதது.
ஆனந்தம் தரவல்லது.
இணையில்லாதது.
ஈடில்லா இன்பம் .
ஃ  வரைக்கும் போலாம்.

ஆனால், மன்மதன் வசப்பட்டவங்களுக்கு பொறுமை இருக்காது. ஒரு அம்பைப் போட்டு, காரியத்தை முடிச்சுப்பாங்க.
(சிவன் மேலே போட்ட அம்பைத் தான் நான் சொன்னேன். )
நன்றி; கூகிள் சிந்தாலா. பெயிண்டிங்.
இலக்கியத்திலும் சரி, இன்னிசையிலும் சரி,
இனிமையாகப் பொழுதைக் கழிக்க உதவும் சினிமாக்களும் சரி.

மன்மதன் தொடர்ந்து இருக்கிறான். இளசுகளை  டிஸ்டர்ப் பண்ணிக்கொண்டே  இருக்கிறான்.

அவனை வெறும் ஒரு அழகா  கள்ளழகா  என்று ஒரு இரண்டு சொல்லில் மட்டும் சொல்லிவிட முடியாது. ஏன் என்றால்,மன்மதன்  என்பது ஒரு பர்சநாலடி. ஒரு இமேஜ்.


சிருங்காரம் என்று சொல்லை மன்மதன் இருக்கும் இடத்தில் சொல்ல முடியுமா ?  ஊஹும்.
காதல் முதல் காமம் வரை .
0 லேந்து இன்பினிட்டி வரை. ஒரு ஸ்கேல் இருந்தா,
அதில் மன்மதன் எந்த புள்ளி லே இருப்பான்?
ஒவ்வொருவரும் தனது மன நிலைக்கு ஏற்ப, இந்த மன்மதன் கன்செப்ட் ஐ
தனக்குப் புரிந்த அளவுக்கே பதில் சொல்வார்கள்.
மன்மதன் இப்படித்தான் என்றும் சொல்ல முடியாது.
காலத்துக்குத் தகுந்தாற்போல அவன் தோற்றமும், பேச்சும், ஆட்டமும் பாட்டமும்.
இதோ:
பழைய நூற்றாண்டின் மத்தியிலே
மன்மதன் எப்படி எங்கே இருக்கிறான் என்று பார்த்தேன்.

மன்மத லீலையைக் கண்டார் உண்டோ ? பாடுவது எம்.கே.டி. படம் ஹரிதாஸ்.
பாடுவது ஆடுவதோடு சரி. அந்த மன்மதன் உட்கார்ந்தே இருக்கிறான் (ர் ) பாடுகிறார்.அப்பப்ப பழ ரசம் குடிக்கிறார். அவ்வளவே !! முதல்லே பாட்டு டான்ஸ் எல்லாம் முடியட்டும். அப்பறம் தான் மத்தது எல்லாம் என்ற காலம் போல இருக்கு !!  . இப்ப எல்லாம் ரிவர்ஸ் லே இருக்கு இல்லையா !!
 
அந்த காலத்துலே நாகை லே சிவகவி தியேட்டர் லே இந்தப் படம் வந்ததா 1978 லே நான் சந்திச்ச ஒரு 90 வயசு பாட்டி சொன்னார். கண் முன்னாடியே இன்னும் எம்.கே.டி நிக்கிறாராம். அந்தப் படத்தையும் பாட்டையும் கேட்டுட்டுத் தான் நான் உசிரை விடுவேன் என்றார்.  படத்தை பார்த்தாரா, பாட்டைக் கேட்டாரா, இல்லை இன்னும் இந்த பிளானெட் டிலேயே அந்தக் கனவிலேயே தான் இன்னமும் உயிரோட இருக்காரா என்று தெரியவில்லை. 

  

C

(பல நேரத்திலே மனசுலே பதிஞ்சு போன உரு என்ன செய்தாலும் நீங்காது நிற்கும்.
லைப் லே மறக்கவேண்டியது மறக்காது. மறக்க கூடாதது மறந்து போயிடும். 
நம்முடைய இந்த பிரைன் பிகேவியர் நமக்கே ஒரு புரிபடாத ஒன்றாகும். )

வருடங்கள் கழிகின்றன.
அதே  கான்செப்ட் ஐ வைத்து படம் எடுக்கிறார்கள்.
 மன்மதன் நாற்பது ஐம்பது வருஷம் கழித்து வரும்போது
எப்படி இருக்கிறான் எந்தெந்த உணர்வுகளை தோற்றுவிக்கிறான் !!

இந்த மன்மதன் பாருங்கள்.
குதிரை சவாரி, கார் சவாரி
அதிசயம் கமல் உட்கார்ந்தால் எல்லாமே பின்னால் போகிறது !!

மன்மதன் மனசுக்குள்ளே உட்கார்ந்தால்
இன்னா இன்னா நடக்குமோ !!

இதை கமல் ஓல்டு மூவி என்று போட்டு இருக்கிறார்கள் யூ ட்யூபிலே
கமலைப் பார்த்தால் யங்காத்தானே இருக்கு !

கே. பாலச்சந்தர் பார்த்த மன்மதன்.
படம்: மன்மத லீலை.1976 ல் வந்த படம் என நினைக்கிறேன்.




இது மன்மத பாணம் . பானம் அல்ல.
பாணம் என்றால் அம்பு.
ரிவர்ஸ் டெக்னாலஜியில் எடுத்ததாம்.
மன்மதனில் என்ன ரிவர்ஸ் டெக்னாலஜி
சுப்பு தாத்தாவுக்குத் தெரியாம??  !!!!
அது தான்  பார்த்தேன்.
அப்பாதுரை சார் மாதிரி ஆர்தொடாக்ஸ் பீபிள் தயவு செய்து கண்ணை மூடிக்கொள்ளவும்.

இன்னும் ஐம்பது வருஷம் கழிகிறது.
21ம் நூற்றாண்டின் துவக்கத்தில்,
இந்த மன்மதன் கன்செப்ட் உருவே மாறிவிட்டது பாருங்கள்.
அந்த மன்மதன் வந்தே விட்டான்.
வந்தவன் சும்மாவா இருப்பான் ?

இப்ப எல்லாம்
மன்மதன்
என்றாலே
வேகம்
அசுர வேகம்.




எங்க இது போவப் போவதோ ????

எது எப்படியோ
இந்த மன்மதன் கன்செப்ட் க்கு முடிவில்லை.
அழிவில்லை.

எ கண்டின்யூட் ஜர்னி


2 comments:

  1. மன்மதனின் அம்பு குறிப்பிட்ட வயது வரைதான் செல்லுபடியாகிறது என்று சொல்லலாமா? இன்னும் சில ரதி-மன்மதன் பாடல்கள்..

    ரதிதேவி சன்னதியில் ரகசிய பூஜை..

    மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்...

    மதனோற்சவம்... ரதியோடுதான்

    மன்மதனே நீ அழைக்கிறாய்... மன்மதனே நீ காதலன்தான்...

    ReplyDelete
  2. நெற்றிக் கண் நெருப்பில்
    சாம்பலாகிப் போனவனுக்கே -
    இத்தனை சாமர்த்தியம்!..

    இன்னும் முழு உடலோடு இருந்தால் -
    என்ன ஆகியிருக்கும்!?..

    வெண்ணிலவைக் குடைபிடித்து,
    வீசுதென்றல் தேரேறி
    மென்குயில் தான் இசை முழங்க,
    மீன் வரைந்த கொடியசைய
    கண்கவரும் பேரழகி,
    கனக மணிப் பொற்பாவை
    அன்னநடை ரதியுடனே,
    அழகு மதன் வில்லேந்தி
    தண்முல்லை, தாமரை, மா,
    தனிநீலம், அசோகம் எனும்
    வண்ண மலர் கணை
    தொடுத்தான் வையமெல்லாம்
    வாழ்கவென்றே!..

    கவிஞர் கே.டி. சந்தானம் அவர்கள்..
    திரைப்படம் - கண்காட்சி..

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!