Pages

Monday, June 16, 2014

அப்பா என்று ஒரு அல்ப ஜீவன்

இன்னிக்கு அப்பா நாள். 

+Balu Sriram 
எழுதற மாதிரி பாசிடிவ் கண்ணோட்டம் தேவை தான். 
ஸோ , முதல் லே 

an inspirational song by Gary Valenciano
My dad
அப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கும் பாச உறவே தனி.

இங்கே.

அன்புள்ள அப்பா உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா !!எல்லா பொண்ணுங்களுக்கும் அப்பா தான் HERO.
A tribute to father.


அப்பாவைக் கொண்டாடும் குழந்தைகளும் இன்று இருப்பது ஆங்காங்கே ஓரிரு பெற்றோர் செய்த பாக்கியம் புண்ணியம்.


+Chellappa Yagyaswamy மாதிரி புண்யாத்மாக்கள் இந்த காலகட்டத்துலே துர்லபம். 
  பொண்ணுங்க வூட்டுலேயும் ஒரு மனுசன் ஓஹோன்னு இருக்கணும் அப்படின்னா அவன் ஜாதகத்துலே   அஞ்சாம் இடம் வலுவா இருந்து குரு, சுக்ரன் , இல்லைன்னா, அட் லீஸ்ட் லக்னாதிபதி பார்வையாச்சும் 
  இருக்கணும். 
+Geetha Sambasivam 
   கீதா அம்மா நான் சொல்வதற்கு நோ சொன்னாலும் பரவாயில்லை

இன்னிக்கு எங்கே பார்த்தாலும் அப்பா அப்பா அப்பா அப்படின்னு அப்பா புராணம். ஹேமா, ராஜி, காவியக்கவி, தேன்மதுரத்தமிழ் கிரேஸ்  அரசி, அம்பாள் அடியாள் எல்லோருமே கச்சை கட்டிக்கிட்டு அப்பா அப்பா அப்படின்னு உருகறாங்க. 

அவங்களுக்கு அப்பாக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தாங்க்ஸ்  சொல்லித்தான் .ஆகணும். 

 திருமணமான பொண்ணுங்க, எல்லா விதமான கவலைகளையும் விட்டு விட்டு, ஈவன் .இன் லாஸ் பர்மிசன் கூட இல்லாம, புரந்த வூட்டை புகழ்  பாட இன்னிக்கு ஒரு நாள்  தான் கண்டிப்பா முடியும் . 

அப்பா இஸ் ரியலி கிரேட் யூ நோ. 
அப்படின்னு எதிர்த்த ப்ளாக் குட்டிப்பொண்ணு யூ.கே.ஜி. படிக்கிறது. சொல்லும்போது, நான் உன்மையிலேயே விக்கிச்சு போயிட்டேன். 

இங்கன, சீனா  அவங்க வலை போனேன். 

A tribute to dad
Suja's composition in the blog of VALAICHARAM EDITOR THIRU CHEENA.
SUBBU THATHA SINGS 

சுஜா அவர்கள் வியக்கத்த கவிதை ஒன்று எழுத அதை நான் உடனே பாட ,
உங்களுக்கு கேட்க பொறுமை இருக்குமா ? தெரியல்லையே !!!இப்பாடலைக் கேட்டு அடுத்த நிமிடமே எனக்கு மடல் எழுதிய அன்பு சீனா அவர்கள் எழுதியது :

+அன்பின் சீனா .

சுப்பு தாத்தா @  சூரி சிவா 

நினைவுகளைச் சுமக்கின்ற காலத்தில் இளைப்பாற இது ஒர் நிழல். 
நிமிர்ந்து நடந்து நெஞ்சம கலங்காது செயல் புரிந்த ஓர் சிந்தனை.
உடல் தளர்ந்து ஓய்வு தேடும் காலத்து ஒர் இனிய கனவு.
இன் சொல்லும் இனிய நினைவும் மனத்திற்கு ஓர் நிம்மதி
பாவினைப் பாடலாய்த் தந்த தங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள் 

எதிர் பாராத நிலையில் மகிழ்வூட்டும் பாடல் 
மனம் மகிழ - துணவி - மகள் - மாப்பிள்ளை பேத்திகள் எனக் குடும்பமே மகிழ்ந்தது.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா:

என்னதான் சீனா சார் சொன்னாலும், தினம் தினம் கோவில்களிலும் பப்ளிக் பார்க் லேயும் ஆச்ரமங்களிலும் முதியோர் இல்லங்களிலும் நான் பார்க்கும் அப்பாக்கள் : பலரிடம் தேவையான பணம் இருக்கிறது. ஆ..ஆனாலும் ஆ..ஆதரவா பேச ஆள் இல்லையே !!


அண்மையில்
.......
ஒரு போஷ் முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கும் எனது நண்பர், 
 ஒரு 85 வயது முதியவர்  சொன்னார்.

பையன் நேரடியா அந்த ரெசிடென்சி ஆபிசுக்கு பணம் அனுப்பிச்சுடறான். 

எத்தனை ? 
நான் கேட்டு இருக்கவேண்டாம். கேட்டு விட்டேன். 

அட்வான்ஸ் 25 லட்சம். மாச மாசம் 19 ஆயிரம். 

அப்படியா என்று கேட்டேன். 

எல்லா வசதியும் இருக்கிறது என்றார்.

அப்படி என்ன வசதி ? வீட்டில் இல்லாதது, கிடைக்காதது ? 

என்று வெகுளித்தனமாக நான் கேட்க, 

காமன் கிச்சன், ப்ரேயர் ஹால், ஜிம், இன்டர்னட், ஸ்விம்மிங் பூல், அவசர வைத்திய வசதி  24 x7  எல்லாமே இருக்கு. உடம்புக்கு வந்த அடுத்த செகண்டே, அப்பாலோ விலேந்து ஆம்புலன்ஸ் வந்துடும். 

பலே என்றேன்.

என் கண்களை கூர்ந்து பார்த்த அவர், 
தொடர்ந்து, 

"என் பையன் எப்பவுமே ப்ரோ ஆக்டிவ் ." என்றார். 

புரியல்ல என்றேன். 

"அப்படியே எதுனாச்சும் நடந்துடுத்துன்னா, பையன் நம்ம சம்பிரதாயப்படி எல்லாம் செஞ்சுடலாம், தனக்காக வைட் பண்ண வேண்டாம் என்று எழுதிக்கொடுத்து விட்டு போயிருக்கான் ஸ்டேட்சுக்கு.  
ஹி வொர்க்ஸ் யூ நோ ரௌண்ட் த கிளாக். 
ஆல்வேஸ் பிளையிங் ப்ரம் ஈஸ்ட் டு வெஸ்ட் . "

அவர் சிரித்துக்கொண்டே தான் சொன்னார். எனக்குத் தான் பாவம் என்று தோன்றியது.  

பக்கத்திலே என் இல்லாள் இருந்தாள். லேசா என் இடுப்பை இடித்தாள். அம்பது வருசத்துக்கு முன்பு ரசித்து இருந்திருக்கலாம். இப்ப வலித்தது. 

"பேசினது போதும். சும்மா இருங்கோ " 
என்று அதற்கு அர்த்தம் என்று எனக்குப் புரியும். 

"எப்பவுமே ஒரு ஜெனரேஷன் அடுத்த ஜெனெரேஷன் நன்னா இருக்கணும் என்ற நினைப்பிலே தான் தன கார்யங்களைச் செய்யணும். 
அப்படி நம்ம  நினைக்கிற பட்சத்திலே நம்ம தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகணும்.  we should always adjust  "  

இது என் பார்யாள்.

your wife is smart  
என்றார்  .வந்த  நண்பர்

ஐ ஆம் ஒன்லி ப்ராக்மாடிக் என்று இவள் அதற்கு add பண்ணினாள் .நான் மேலே ஆகாயத்தைப் பார்த்தேன். மேகங்கள் கலைந்து கலைந்து புது தினுசான உருவங்களை உண்டு பண்ணிக்கொண்டு இருந்தன. அந்தக் காலத்து வால்யூஸ்  எல்லாம் இந்தக்காலத்துக்கு பொருந்தாதுடா  தாண்டவக்கோனே..
என்று தூரத்தில் யாரோ சதிராட்டம் போடுவது போன்று பிரமை. 

நம்ம போயிட்டா இவளை யாரு பார்த்துப்பா அப்படின்னு யோசனை பண்ணினது , எத்தனை ஃபூலிஷ் என்று புத்தருக்கு வந்த ஞானம் போல் வந்தது. 


IN THE MODERN WORLD, IT IS THE APPAs WHO are perceived by most of the present day children just as 
ammas husband and 
who continue to suffer in silence 
அம்மாக்கள்  எப்பவுமே அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போயிடுவார்கள். 
அப்பா நீ எப்படி இருக்கே ?
அந்த ஒரு வாக்கியத்துக்காக ஏங்கும்
அப்பாமாருக்கு

நீ உன் கடமையைச் செஞ்சாச்சு இல்ல..

கம்னு கிட.

வந்தவருக்கு லேசா கண் கலங்கியதை பார்த்துவிட்டு, இவள் :

கண்ணைத் துடைச்சுக்கோங்கோ . அழக்கூடாது. இன்னிக்கு அப்பாக்கள் தினம். 
இங்கே இருந்தே  ஸ்கைப்பிலே  குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்கோ. 
ஆயுஷ்மான் பவ.

7 comments:

 1. என் கடமையைச் செய்தேன் - என்ற எண்ணம் தான் எனக்குள்!..
  அதில் என் தந்தையின் மனம் நெகிழ்ந்திருக்குமா அல்லது மகிழ்ந்திருக்குமா?..

  பஞ்சமா பாதகங்கள் - அவற்றுக்கு நிகரான அல்லது அவற்றுக்கு மேலான எதையும் செய்து என் குடும்பத்திற்கு அவப்பெயரினை தேடித் தந்ததில்லை.

  அதுவே எனக்குத் திருப்தி - இந்த உயிர் உள்ளவரைக்கும்..

  ReplyDelete
 2. அப்பாக்கள் தினத்தைக் கொண்டாடும் வகையில் அல்லது கௌரவப்படுத்தும் வகையில் குப்பைகளுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருந்த 83 வயது முதியவரை அரசு கைப்பற்றி..ச்சீ... மன்னிக்கவும் காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறதாம். முதல்வரின் நேரடி உத்திரவாம். கடந்த ஒருவருட காலமாக அவருக்கு மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறதாம். இது நிகழக்கூட நாள் தன்னை செலெக்ட் செய்து கொண்டிருக்கிறது பாருங்கள்! நகை முரண்?

  சிவாஜி, அமிதாப் பாடல்கள் முன்னரே கேட்டிருக்கிறேன்!

  ReplyDelete
 3. வணக்கம்

  தந்தையர் தினத்தை முன்னிட்டு பதிவில் நல்ல கருத்துக்களை உரையாடல் வடிவில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. தந்தையர் தின வாழ்த்துக்கள் தாத்தா ...! நலம் தானே? அன்னையை போற்றும் இவ்வுலகில் தந்தையை போற்றி எழுதியது எல்லா அப்பாமாருக்கும் சந்தோஷமாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சியே. எழுதிய அனைவருக்கும் நன்றி கூறியதில் பெருமையே. தங்கள் பாடலும் அந்தக் கவிதையும் அபாரம். மிக்க நன்றி தாத்தா ...! என்றும் வாழ்க நலமுடன் ....!

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 6. தந்தையை கௌரவப்படுத்தும் பகிர்வுகள்..
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்

  ReplyDelete
 7. வணக்கம் !
  என் அன்பு நிறைந்த சுப்புத் தாத்தா இத் தொடர் பகிர்வு ஒன்றிக்குத் தங்களை அன்போடு அழைக்கின்றேன் என் தாழ்மையான இவ் வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்கள் கொடுக்கவிருக்கும் அன்பான பதில்களையும் காணும் ஆவலுடன் .சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும் .

  ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!