Pages

Tuesday, January 21, 2014

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன

இன்னிக்கு கல்யாண சாப்பாடு, 


காரட் பொரியல் , கதம்ப சாம்பார், சௌ சௌ கூட்டு, ஆப்பிள் பச்சடி, சேமியா பாயசம், மெது வடை,, அப்பளம், மைசூர் ரசம், பொடடோ சிப்ஸ், சோன் பப்டி, எல்லாமே 

கிழவி , உண்ட மயக்கம் ரொம்ப இருக்குது போல. கொஞ்சம் தூங்கிட்டு வரேன் என்று கிளம்பினாள் 

என்ன அவசரம் !!

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன 

என்று பாட ஆரம்பித்தேன். 

என்ன இது ? எழுபத்தி இரண்டு முடிஞ்சுடுத்து. 22 ஞாபகம் வருதோ ??
என்று சிரித்தாள் கிழவி. 

இல்லேடி, இந்த சரத் பாடினதை சொன்னேன். 
காலிங் பெல் அடிக்குது.  டிரிங்....டிரிங்.....


ஹாப்பி வெட்டிங் டே  

அப்படின்னு பாடிக்கினெ
தாத்தா பாட்டி 46வது திருமண நாள் அப்படின்னு நினைவு வச்சுக்கிட்டு,
சோனியா வும் சரத் சந்தோஷும்  வர்றாங்க.தாத்தா பாட்டி, 

நாங்க உங்களுக்காக ஒரு பாட்டு பாடப்போறோம் அடடா // இன்னிக்கு ஒரு கச்சேரி வேறயா ...

ஜமாயுங்க. என்றேன் நான். 


அதுக்கு முன்னாடி இந்த ஐஸ் சாக்கலேட் கேக் சாப்பிடுங்க என்றேன்.


sonia and
sarath santhosh.
together
தில்லானா தில்லானா  
சரத், சோனியா. உள்ளிட்ட 

சூப்பர் சிங்கர் 4 லே தேர்ந்து எடுக்கப்பட்ட பைனலிஸ்ட் ஐந்து பேருக்கும்  


எங்களது இதயங்கனிந்த பாராட்டுக்கள்.  நல வாழ்த்துக்கள்


திவாகர் , பார்வதி, சுபான், சரத், சோனியா 

இவர்கள் எல்லோருமே 

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இசை வானில் 

மின்னப்போகும் 

நட்சத்திரங்கள்


ஆனா இதிலே பைனல்சிலெ யார் பர்ஸ்ட் வருவாங்க..யார் செகண்ட் ? 

எல்லாமே மக்கள் கையிலே தான் இருக்கு. 

இருந்தாலும் ...அப்படின்னு வூட்டு கிழவி  இழுக்குது. 


நான் சொன்னேன்;

பைனல்ஸ் லே 
என்னோட  சாய்ஸ். 


சோனியா, பார்வதி, சரத் .  

நோ. நோ. அப்படின்னு சத்தம் போட்டாள்  கிழவி.  

பின்னே எப்படி? உன்னோட  சாய்ஸ் என்ன ?  என்றேன் நான்  

சரத், பார்வதி, சோனியா. 

இல்லேன்னா 

சரத், பார்வதி, சுபான். 

என்றாள் இவள். 

அப்ப திவாகர் ?

அவரு தனி உலகம் ..  அதுக்கு யாருமே நிகர் இல்லைங்க.

அன்னி தேதி சி.எஸ்.ஜெயராமன், பி.யூ.சின்னப்பா  போல குரலுங்க... அதுக்கு ஒரு 
ஸ்பெசலா அவார்டு தரனுங்க.  ரஹ்மான் சார் மனசு வச்சார் அப்படின்னா இவரு எங்கேயோ போயிடுவாரு.  இவரோட உழைப்புக்காகவே இவருக்கு ஒரு தனி ரிகக்னிஷன் தரனும். 

அப்ப சோனியா என்ன ஆறது ? என்று இறைந்தேன் நான். 

சோனியாவுக்கு நோ சான்ஸ். என்று உள்ளே நுழைந்தார் என் நண்பர் வெங்கடராமன்.

அவர் சொல்ற சோனியா வேற சோனியா என்று கிசு கிசுத்தாள் வூட்டுக் கிழவி.

என்ன சண்டை இன்னிக்கு என்று உள்ளே நுழைந்தார் வெங்கடராமன், என் பிரண்டு. 

நீங்க சொல்லுங்க நியாயத்தை என்று ஆரம்பித்தேன். 
ஆதியோட அந்தமா அரை மணி நேரத்திற்குள்ளாகவே என் பிரசங்கத்தை .
முடித்தேன்.என் வாதத்தை.

நோ நோ.  இதெல்லாமே இல்லை. என்றார் காலனி பிரண்டு. 

பின்னே எப்படி ?

பேப்பர் லே வேற இல்ல போட்டு இருக்கு என்று ஹா ஹா என்று சிரித்தார். 

என்ன ?

நாடு முழுக்க சர்வே பண்ணினதிலே 
இன்னிக்கு தேதியிலே 

மோடி, கஜ்ரிவால், சோனியா தான். 

அப்படித்தான் இல்லையா 
எல்லா டி.வி. யும் சொல்லுது. 
முக்கியமா ஐ.பி. என். டி.வி. சொல்லுது. 

சரிதான். 
ஆனா இது நமக்கு வேணாம் ங்க  ...

நம்ம இந்த இசை உலகத்துலேயே இருந்துடுவோம். Friday, January 10, 2014

Vijay TV அனந்த் சார் கிட்டே ஒன்னு கேட்கணும்.

அனந்த் சார் கிட்டே ஒன்னு கேட்கணும்.

எனக்கு ஒரு உண்மை தெரியனும்க....

நயாகரா ஏன் உறைஞ்சு  போயிடுத்து.

எப்படி இந்த மாதிரி பனி பாறையா  ஆயிடுச்சு ?நாங்க ஜூலை 2013 லே நேரடியா பார்த்தபோது இப்படி இல்ல இருந்துச்சு!!இந்த கொட்டுகின்ற நயாகரா நீர்விழ்ச்சி கூட நின்னு போய்,
ஸ்தம்பிச்சு போய் பனிக்கட்டி யா போயிடுச்சே !  ஏன் ??

இந்த விஜய் டி.வி.லே சோனியா பாடல்
கேட்டபின்னே தான்
தெரிய வருது.

ஒரு வேளை இந்தனை வெள்ளமும், அருவியா பாஞ்ச நீர் வீழ்ச்சியும் சோனியா பாட்டை கேட்டு பிரமிச்சு போய், அப்படியே நிக்குது போல .. ?
niagara


ra ra

ra raஆர்க்டிக்லேந்து வந்த குளிர் காற்றுலே இறுகிப்போன நீர் வெள்ளம் அங்கே.  இசையிலே கூட உருகாத பனிக்கட்டிகள் இங்கேயா ??
ஆனா, இந்த பனிக்கட்டி எல்லாமே  உருகி திரும்பவும் வெள்ளம் போல நீர்
பெருகி வரும்.
திரும்பவும் அந்த நயாகரா ஒரு நாள்  பார்க்க முடியும்.

இன்னும் கொஞ்ச நாட்களிலே வெய்யில் அடிக்கும்.
இந்த பனிக்கட்டி எல்லாமே கரைஞ்சு போயி,
முன்னம் போலேநயாகராவிலே  நீர் பாயும்.

ஆனா, மனுசங்க மனசு கரைஞ்சு உருகி, சோனியாவுக்கு வோட்டு போடுவங்களா ?

தெரியலயே !!

அனந்து ஸாரு என்ன சொல்வாரு ?

இசை வாழ்க.