Pages

Wednesday, July 31, 2013

சம்மர் சோனோடா

சம்மர் சோனோடா .. இன்னிக்கு போக்கப்போறோம் என்றாள் தர்ம பத்தினி.

அது என்ன சொனாடோ, சோன் பப்டி மாதிரி ..அது என்ன ரேசார்டா , என்ன சாப்பாடு என்று கேட்டேன்.

சாப்பாடா !!  மிகப்பெரிய விருந்து.. என்றாள்.

சேமியா பாயசம், புளியோதரை, பிசி பேலா ஹூளி, மெது வடை , சிப்ஸ் எல்லாம் இருக்குமோ ?

இல்லை ...இது இசை விருந்து.  நம்ம வீட்டுக்கு வரும் பியானோ மாஸ்டர் காரி மாடிசன் அவர்கள் தனது எல்லா சிஷ்ய புள்ளைங்களுடன் ஒரு ப்ரோக்ராம் பண்ணுகிறார் .  மத்தியானம் 1 மணிக்கு கிளம்பி போனால், கரெக்டா இருக்கும் என்றாள்.  எடிசன் பக்கத்திலே ஒரு பிரபல பியானோ கம்பெனி இதற்கான ஏற்பாட்டைச் செய்து இருக்கிறது.

தாமஸ் ஆல்வா எடிசனைத் தான் எனக்கு தெரியும். இது என்ன எடிசன் ? யோசித்துக்கொண்டு இருக்கும்போது !!!

என் பெண்ணோ என்னைக் கூர்ந்து கவனித்தாள்.  உன் ஹேர் ஸ்டைல் சரியா இல்ல. என் பிரண்ட்ஸ் எல்லாம் வருவாங்க.  அவங்களுக்கு உங்களை இன்ட்ரொடுயுஸ் பன்னனும்லே ... இது மாதிரி அசிங்கமா ஹேர் ஸ்டைல் ..!!1  எனக்கு மானம் போயிடும்.  போய் அர்ஜெண்டா ஒரு ஹேர் கட் பண்ணிண்டு வாங்க.  ஏங்க !!   இவரையும் நீங்க கூட்டிண்டு போய்ட்டு வாங்க அப்படின்னு அவ , பாவம் அவ ஆத்துக்காருக்கு , என் மாப்பிள்ளைக்கு ஒரு பிடி வாரான்ட் இஸ்யு பண்ணினாள்.

எனக்கு ஒன்னும் ஹேர் கட் வேண்டாம். ஹேர் சுத்தமா இல்ல. மொட்டையா இருக்கு. இதுலே அனாவசியமா ஒரு 15 டாலர் கொடுத்து என்ன ஸ்டைல் வேண்டி இருக்கு.?   நான் என்ன ஹன்சிகாவோடயா நடிக்கபோறேன் !!  ஒரு சங்கீத கச்சேரிக்கு போக இத்தனை கலாட்டாவா என்று இரைந்தேன்.

இது ஒன்னும் உங்க மைலாப்பூர் அகாடமி இல்ல. சொனோடா சம்மர். ஆபெரா சிங்கர்ஸ் எல்லாம் வந்திருப்பா. அப்பறம் சஞ்சுவோட ப்ரெண்ட்ஸ் அல்லாருமே அவாவா அப்பா அம்மா வோட வந்திருப்பாங்க... இவ்வளவு அசிங்கமா இருந்தா அவங்களுக்கு எப்படி உங்களை இன்ட்ரொட்யூஸ் பண்றது ?

அப்ப நான் வல்ல...என்று பேக் அடித்தேன்.

சரி.. போனாபோறது .. வரட்டும்.  ஆனா வந்தோமா சொனோடா கேட்டுட்டு சும்மா இருக்கணும்.  அனாவசிய அரட்டை கூடாது என்றாள்.

சுமார் 2 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது.


THE GREAT AMERICAN PIANO STORE  முன்பாக.

அது ஒரு பியானோக்கள் விற்பனை கூடம்.  அங்கு ஒவ்வொரு வாரமும் பியானோ வல்லுனர்கள் தங்கள் மாணவர்களுடன் அங்கு வந்து ஒவ்வொருவரும்  பர்பார்மன்ஸ் தருகிறார்கள்.

எடுத்த எடுப்பிலே அந்த கம்பெனி ஓனர் ஒரு பியானோவின் நுணுக்கத்தைப் பற்றி விளக்கினார்.   மேஜருக்கும் மைனருக்கும் ஒலி வித்தியாசம் எப்படி வருகிறது என்பது பற்றி பேசினார் என நினைக்கிறேன்.  அவரது அக்சென்ட் புரிவதற்குள் அவர் தனது பேச்சை முடித்து விட்டார்.

காரி மாடிசான் தனது பியானோ புலமையை ஒரு இரு 10 நிமிசத்திலே பிச்சு உதறி விட்டார்.


அதர்குப்பின்னே செலஸ்டா மாண் ஒரு விசேட விருந்தினர். பிலெடெல்ப்பியா நகரத்தில் ஸ்பானிஷ் ரெபார்டையரில் சிறப்புடையவர்.  அவரது இரு பாடல்களும் வியக்க வைத்தது.


Tango de lo Menegilda (Federico Chueca)

Palomica aragonesa  Jose Serrano


எனக்குள்ளே ஒரு எண்ணம்.  நம்ம கச்சேரி எல்லாமே ஆரம்பிக்கும்போது ஒரு ஹம்சத்வனிலே வாதாபி கணபதிம் பஜே இல்லேன்னா நாட்டை லே ஒரு வர்ணம் பாடிட்டு தான் மத்த பாடல்கள். இங்கே எப்படி.?

அந்த கன்வென்ஷன் இங்கே கிடையாதாம்.


அதற்கு பின் ஒவ்வொருவராக காரி மாடிசன் அவர்களின் மாணவர்கள் தங்கள் பியானோ பாடங்களை வாசித்து காண்பித்தார்கள்.  ஒரு அஞ்சு வயது பையன் முதல் எனது பேத்தி வரை அவரவர்கள் துறையிலே லெவல் லே பியானோ வாய்பாட்டு என்று அடுத்த 2 மணி நேரத்திற்கு ஜமாய்த்தார்கள்.

அவங்க அப்பா அம்மா, தாத்தா பாட்டி எல்லோருக்கும் மகா சந்தோஷம்.  பலர் தனது காமிராவில் வீடியோ எடுத்துக்கொண்டும் கை தட்டியும் உச்சி முகர்ந்தும் பாராட்டினார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவிலும் கரகோஷம்.


இது போன்ற நிகழ்ச்சிகள் சென்னையில் நடை பெறுகிறதா என்று தெரியவில்லை.  லக்ஷ்மண் சுருதி செய்கிறார்கள் போல் தோன்றுகிறது.

எனது பேத்தியின் பர்பார்மென்ஸ் வழக்கம் போல மிக நன்றாக இருந்தது.

நீங்கள் இப்போது கேட்பது ஒரு இத்தாலியன் மொழி பாடல் 



O del mio dolce ardor
Bramato oggetto,
L'aura che tu respiri,
Alfin respiro.

O vunque il guardo io giro,
Le tue vaghe sembianze
Amore in me dipinge:
Il mio pensier si finge
Le più liete speranze;
E nel desio che così
M'empie il petto
Cerco te, chiamo te, spero e sospiro.
 
கிரிஸ்போர்டு வான் கலக் இசை அமைத்த பாடல் இது.  இவர் 18 ம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர். 


டிராய் நகர இளவரசன் பாரிஸ் , பாரிஸ் அண்ட் ஹெலன் என்னும் ஆபெரா வில்
பாடும் பாடல் இது.

கிரேக் இதிகாச காவியங்களில் ஹோமர் எழுதிய இலியட் . 
அந்த காவியத்தில் ஒரு காட்சி.

மூன்று தேவதைகள் பாரிஸ் முன்னே தோன்றி தம் மூவரில் மிகவும் அழகு 
யாரென கேட்கிறார்கள். தன்னை அழகு என்று சொன்னால் ஒரு பரிசு
தருவதாக அவர்கள் வாக்களிக்க, 

பாரிஸ் அவர்களில் அப்ரோடைட் எனும் பேருடைய காதல் தேவதை தான் மிக 
அழகு என்று உரைக்கிறான். 

பாரிஸ் க்கு பரிசாக உலகத்திலேயே மிகவும் அழகான பெண்ணான ஸ்பார்ட்டா 
ராஜ்யத்தின் ராணி ஹெலன் உறுதி அளிக்கப்படிக்கிறான். 

ஆபெரா துவங்கும்போது, பாரிஸ் ஸ்பார்டா ராஜிய கடற்கரைக்கு வந்து, 
தன கனவுக் கன்னி ஹெலனுக்காக காத்திருக்கும் நேரம் இப்பாடலைப் 
பாடுவதாக அமைந்திருக்கிறது.  



    O my  sweet ardor,and desired object.
    The air which you breathe,
    At last I breathe.
    
    Wherever I turn my glance
    Your lovely features
    Paint love for me:
    My thoughts imagine
    The most happy hopes,
    And in the longing which
    Fills my bosom
    I seek you, I call you, I hope, and I sigh.
    
    
    
    
    
    
    
    ஓ என் மனமிசைந்த மணமே !! 
    நான் விரும்பிய பொருளே !!
    
    
    நீ சுவாசித்த காற்றையே தானே பின் 
    நான் சுவாசிக்கின்றேன். 
    
    
    எங்கெலாம் நான் பார்க்கிறேனோ 
    அங்கேலாம் உனது அழகிய அங்கங்கள் 
    எனக்கென ஒரு காதல் ஓவியத்தை 
    தீட்டுகின்ற பொலிவு தான் என்னே !!
    
    
    எண்ணங்கள் எனது கற்பனையிலே 
    இன்ப எதிர்பார்ப்புகளை என் 
    இதயத்தில் நிரையச்செய்கின்றனவே. 
    
    
    நீ வேண்டுமென உன்னை நான் கூப்பிடும் குரலை 
    நீ கேளாயோ ?
    என் பெருமூச்சை நீ கேளாயோ 
    
    
    
    
    
    
    
    
    
    
    பாடல் காதலில் தோய்த்த சோக சங்கீதம். 
    சுகம். 
    நான் பாடாத பாட்டா அப்படின்னு நினைத்துக்கொண்டு வந்தேன். 
    *************************************************************

    முடிந்து வெளிலே வரும்போது வயிறு நானும் இருக்கேன் இருக்கேன் அப்படின்னு எல்லாருக்கும் சொன்னது.

    நேரே எடிசன் சரவணா பவன் போனோம்.  உள்ளே நான் தான் முதல்லே நுழைந்தேன்.

     அங்கே நம்ம தமிழ் பொண்ணு பார்த்தா சாப்ட் வேர் படித்த ஐ.டி. ப்ரோபசானல் மாதிரி ஒரு தோற்றம்.   ஜீன்ஸ் பாண்ட் பனியன் போட்டு, கையில் ஒரு குறிப்பு புத்தகம் பேனா இத்யாதி...

    என்னை வழி மறித்து எத்தனை பேர் என்றாள். முதலில் எனக்கு புரியவில்லை.  நான் ஒல்லியாத்தான்/இருக்கேன் என்னைப்பார்த்து எத்தனை பேர் அப்படின்னா என்ன அர்த்தம்?


    பிறகு மாப்பிள்ளை தான் சொன்னார். அவள் ஹோஸ்டஸ்
     யார் எங்கே உட்காரணும் அப்படின்னு சீட் ஆர்கனைசராம்.

    நான் அஞ்சு பேர் என்றேன்.  எங்களுக்கு ஒரு தனி டேபிள் ஒதுக்கப்பட்டது.

    எனக்கு  சப்பாத்தி, வூட்டுக்காரி மசால் தோசை, பெண் 14 சின்ன இட்லி , பேத்தி ஆனியன் தோசை, கூடவே  நான் இரண்டு மெது வடை, வூட்டுக்காரி தயிர் வடை மாப்பிள்ளை தோசை ,காபி,  எல்லாம் சாப்பிட்டோம்.   மொத்த பில் 80 டாலர் கிட்டத்தட்ட.. சீப் என்றாள் என் பெண். நான் இந்திய ரூபாயில் கணக்குப்போட்டேன். ரூபாய் 4800 ஆ பில் !!! தலை சுற்றியது. இன்னொரு காபி சாப்பிட்டேன். மைலாபூர் சரவணா பவன் போல இங்கும் சாப்பிட்டபின் சோம்பு கற்கண்டு மிக்சர்.

    வெளிலே வந்த உடனே நான்  எங்க இப்ப நெக்ஸ்ட். என்றேன்.

    இன்னிக்கு சனிக்கிழமை இல்லையா.  நவ க்ருஹம் சுத்தணும். ஹனுமார் தரிசிக்கணும். இப்ப நம்ம ச்வீடிஸ்போரோ என்ற ஒரு இடத்துக்கு போறோம். அங்க ஒரு ராஜ கணபதி கோவில் இருக்கிறது.  இன்னும் ஒரு மணி நேரத்திலே போயிடலாம் என்றார் மாப்பிள்ளை.

    எடிசன் லேந்து ஸ்வீடிஸ் போரோ ஒரு 50 மைல் இருக்கலாம். ஆடோ கியர்லே போட்டுட்டா அதுவே ட்ராபிக்குக்கு தகுந்தபடி அட்ஜச்ட் பண்ணிண்டு வேகமா கார் போகிரது.

    நான் காரிலேயே தூங்கிப்போய் விட்டேன்.


    தொடரும்.....

    SVEDESBORO, NEW JERSEY 
    ராஜ கணபதி கோவிலின் வலைத்தளம் இது.

    பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருங்கள்.


    Wednesday, July 24, 2013

    ஆனந்த நயாகரா வெள்ளம்

    நியூ ஜெர்சியிலிருந்து சிகாகோ வழியே நாங்கள் வந்த வான் வழிப் பயணத்தை பற்றி அறியாதவர்கள் இங்கே சென்று படித்துவிட்டு பிறகு இங்கே வரவும். 

    நயாகரா நகரம் பக்கத்துலே வரும்போது பார்த்த வியூ. 


    நாங்கள் தங்கிய ஹோட்டல்.


    கிட்டத்தட்ட ஒரு பதினிரண்டு மணி இரவு ஹாம்டன் இன் ஹோட்டலுக்குச் சென்றோம்.  ஏகப்பட்ட கார்கள். ஒரு வழியா பார்கிங் ஸ்லாட் கண்டுபிடித்து
    ஹோட்டலுக்கு உள்ளே நுழைந்தோம்.  நம்ம பக்கத்திலே போன உடனே கதவு தானா திறக்கிறது. உள்ளே போன பின்னே மூடிகொள்கிறது.  அந்தக் காலத்து மாயா பஜார் படம் நினைவுக்கு வந்தது.

    ரிசெப்ஷன் ஹாலில் அமர்ந்திருந்த நாட் ஸோ ஓல்டு லேடி எங்களை ஹாய் என்று வரவேற்றாள்.   ஏற்கனவே ஆன் லைனில் ரிசர்வ செய்யப்பட்டு இருந்ததால், ரூம் 213 என்று சொல்லி அதற்கான சாவி , அதுவும் ஒரு க்ரெடிட் கார்டு மாதிரி இருந்தது.  அதை ஸ்வைப் செய்ய கதவு திறந்தது.


    ரிசப்ஷன் ஹாலிலேயே காபி, சாக்லேட் மில்க், சாக்லேட் கோகோ,  டீ, என்று பலவிதமான ஐடம்கள். 

    எல்லாமே அவங்கவங்க அவங்க்கவளுக்கு தேவைப்படுவது போல தயார் பண்ணிக்கொள்ள வேண்டும்.பக்கத்திலே கப், மூடி, ஸ்பூன், டிஷ்யூ பேப்பர். சானிடைசர் எல்லாம் அடுக்கி அடுக்கி வைத்திருக்கிறார்கள்.  எத்தனை வேணுமானாலும் எடுத்துக்கலாம்.

    காபி என்னுடைய பேத்தி நிமிஷமா தயார் பண்ணி கொடுத்தாள். க்ரீம் மில்க், பாட் ப்ரீ மில்க் ,எது வேணும் என்றாள்.

    எனக்கு fat free மில்க் போடு, உன்னோட  பாட்டிக்கு கொழுப்பு ஜாஸ்தி. இருந்தாலும் க்ரீம் மில்க் போட்டு சக்கரை 2 தடவை போட்டு கொடு என்றேன். கொடுத்தாள்.கிழவி நன்னா தூங்கணும். அப்படிங்கற கவலை எனக்கு.

    ரூமுக்கு வந்தால், அங்கேயும் காபி மேகிங் மெஷின் பக்கத்துலே பால் பாக்கெட், கால்சியம் மில்க், பௌடர், டிகாஷன் அவங்கவளுக்கு வேண்டிய மாதிரி, இருந்தது.     அங்கேயும் இன்னொரு தரம் காபி சாப்பிட்டேன். கையை துடைச்சுக்க

    அல்ப்ராக்ஸ் சாப்பிட்டேனா இல்லையா என்று நினைவு இல்லை. இன்னிக்கு மட்டும் இன்னும் ஒன்னு சாப்பிட்டு விடுவோம் என்று அந்த மஞ்ச மாத்திரை முழுங்கினேன்.


    காலைல,  நம்மவே நம்ம ரெண்டல் கார் இருக்கே அதை எடுத்துட்டு நயாகரா போலாமா அல்லது ஹோட்டலிலே ஒரு டூரிஸ்ட் பஸ் போகிரது. அதில் போகலாமா என்று மாப்பிள்ளையும் பெண்ணும் டிஸ்கஸ் செய்துகொண்டார்கள். 

    எனக்கு தூக்கம் கண்ணை சுயற்றிற்று.  நான் தூங்கி போய்விட்டேன்.

    மறு நாள் காலை எழும்பொழுது மணி 7.  நன்றாக விடிந்திருக்கிறது.  இங்கே இப்பொழுது சம்மரில் காலை 5 மணிக்கே உதய சூரியன் உதயமாகிவிடுகிறான் . (ரொம்ப அவசரம் போல . 2014 லே எலக்சன் இல்லையா ??!!!) மாலை இல்லை இரவு 8.30 மணிக்குத் தான் சூரியன் அஸ்தமனம்.

    இந்த நயாகரா பால்ஸ் டவுன் லாடிட்யூட் 50க்கு மேலே.
    இன்னிக்காவது நல்ல நேரம் பார்த்து வலது காலை எடுத்து பயணத்தை ஆரம்பிக்கணும்.   ஆஹா. இன்னிக்கு சனிக்கிழமை.. காலைலேயே ராகுவோட காலமாச்சே !!!

    அப்ப  ராகு காலம் சூரிய உதயத்திலேந்து தான் கணக்கு பண்ணனும். இது தெரியாம, நம்ம நாட்டிலும் எல்லோரும் தி ச வெ பு வி செ ஞா அப்படின்னு  கணக்கு பண்றாக.fixed time ஒரு பார்முலா மட்டுமே. நம்மதான் லாட்டிடுட் லாஞ்சிடுட் எடுத்துண்டு கணக்கு போட்டுக்கணும்.

    சூரிய உதயத்திலேந்து ஒரு நாளைக்கு ப்ளேசுக்கு 1 1/2 மணி நேரம் கூட்டிக்கணும். ஸோ, சனிக்கிழமை அப்படிங்கறதாலே , ராகு காலம் உதய நேரம் 5.30 ப்ளஸ் 2 x 1 .30 .அதாவது 8.00 லேந்து 9.30 .  . நாட் 7.30 டு 9.00 .

    இன்னிக்கு சனிக்கிழமை, மகா பிரதோஷம் வேற.  பக்கத்துலே பபலோ ஊருக்குத் திரும்பி போய் , சிவன் கோவிலுக்கு சென்று வரலாம் என்றார் மாப்பிள்ளை.

    பஸ் 1 மணிக்கு கிளம்புகிறது.அதற்குள்ளே  நம்ம திரும்பி வர முடியாதே என்று வீடோ பவரை உபயோகப்படுத்துவேன் கோவிலுக்கு போவதை நிறுத்திவிடுவாளோ என்று பயமுறுத்தினாள் பேத்தி.

    போகலாமா, முடியாதா என்ற சர்ச்சை  மேட்டூர் அணைக்கு தண்ணீர் பிரச்னை மாதிரி தொடர , காரை கிளப்பினார் மாப்பிள்ளை.

    எங்கே போறோம் என்று கேட்கிறாள் பேத்தி. அவளுக்கு இந்த கோவில் சமாசாரம் இதெல்லாம் அவ்வளவு இஷ்டம் இல்லை.  வேற ஜோலி ஒண்ணும் இல்லேன்னா கோவிலுக்கு போலாம். இப்ப நயாகரா வந்திருக்கோம். அங்க போயிட்டு வரணும் இல்லையா.

    அவ சொல்றதுதான் சரி, என்கிறது இந்தக்கிழம்.  இத்தன நாள் தான் பிரதோஷத்துக்கு கோவிலுக்கு போயாச்சே. ஒரு தடவை போகலேன்னா என்ன ஆயிடும் அப்படின்னு அவ கட்சி.  இவ எப்ப எந்த சைடு இருப்பா அப்படின்னு எப்பவுமே எனக்கு சொல்ல முடியாது.  பா. ம. க.விலே மெம்பரா இருப்பா போல இருக்கு.

    மாப்பிள்ளை ஒன்னுமே சொல்லாம வண்டியை ஓட்டிட்டே இருக்கார். அடுத்த
    40 நிமிஷத்திலே கோவில் வாசல்லே கார் வந்து நின்னுடுத்து.

    நேரம் ரொம்ப ஆயிடுத்து.  நீங்களும் அப்பாவும் மட்டும் போயிட்டு வாங்க, நாங்க காரிலேயே காத்திருக்கோம் என்றாள் பெண்.. ஆமாம் என்கிறது கிழம்.

    நானும் மாப்பிள்ளையும் மட்டும் சிவன் கோவிலுக்குள் நுழைந்தோம்.

    அமெரிக்க கனடா எல்லையில் இத்தனை ஒரு அற்புதமான சிவன் கோவிலா ?




    நாங்கள் சென்ற நேரத்தில் ஒரு நவ க்ருஹ ஹோமம் நடை பெற்றுக்கொண்டு இருந்தது.

    பிரதோஷம் என்பதால், சிவ பெருமான் பாலிலே குளித்துக்கொண்டு இருந்தார்.

    இங்கு பால் இரண்டு வகை. ஒன்னு ஆர்கானிக் இன்னொன்று ரெகுலர். ஒவ்வொன்றிலும் நாலு வகை. அதுக்கு மேலே.  வளரும் புல்லை மட்டும் சாப்பிடும் பசுக்கள் பால் தான் ஆர்கானிக் மில்க்.  ரெகுலர் மில்க் தரும் பசு மாடுகள் ஹார்மோன்ஸ் உள்ளிட்ட உணவுகளையும் சாப்பிடுமாம்.
    ஸோ,சிவனுக்கு அபிஷேகம் பண்ர பால் ஆர்கானிக் பாலாகத் தான் இருக்கணும் .இல்லையா.   நம்ம நாட்டிலே அபிஷேகம் ஆவின் பால் தான் எல்லாத்துக்கும். . 

    ஏகப்பட்ட பேர் பஞ்ச கச்சம் கட்டி வட நாட்டுப்பேர் அதிகமாக இருந்தார்கள்.  நம்ம தமிழ் ஊர் காராரும் அதிகம் பேர் கண்ணில் பட்டனர்..  நானும் அந்த வட்டத்தில் ஒன்றாக இருக்க அவர்களுடன் அளவளாவ ஆவல் இருக்கத்தான் செய்தது.  இருந்தாலும், அவாவா ஆத்துக்காரி காரில் காளி மாதிரி காத்துக்கொண்டு இருப்பாள் என்ற பயம் இருந்து வந்ததால், சிவனுக்கு பை பை சொல்லிட்டு வெளிலே வந்தோம்.

    இருந்தாலும், வந்தோமா, கிளம்பினோமா என்றிருக்கனும் அப்படின்னு ஒரு
    அஞ்சே நிமிசத்திலே சிவா சிவா என்று சொல்லிட்டு கன்னத்திலே போட்டுண்டு கிளம்பினோம்.சக்கரை பொங்கல் அவ்வளவு பிரமாதம். இன்னொரு ஸ்பூன் எடுத்து வரக்கூட டயம் இல்லை. எனக்கு வேண்டாம் பேத்திக்கு தருவோம் என்று எடுத்து வந்தேன்.  என்னை தரிசிப்பவா தான் சாப்பிடணும் அப்படின்னு ஒரு 144 இல்லை . அத தெரிஞ்சுண்ட என் பொண்ணு ஒரே வாயிலே அத்தனையும் ஸ்வாஹா .

    சனிக்கிழமை ஹனுமார் தரிசனம் என்னைப்பொருத்த வரை ரொம்ப முக்கியம். அதுவும் ஹனுமத் கிருபையால் நடந்தேறியது.  அதுவே போதும். பிரசாதம் எல்லாம் மெட்ராஸ் போன உடனே ஆள்வார்பெட்டை அனுமார் கோவில் லே கிடைக்கும். சக்கரை பொங்கல், புளியோதரை எல்லாமே. அப்படி இல்லே அப்படின்னாலும் பக்கத்திலே வல்லி நரசிம்மன் அம்மா வீடு. தாயார் மாதிரி எப்ப போனாலும் ஒரு வாய் தயிர் சாதம் தராம இருப்பாளா என்ன ?

    அசாத்திய சாதக சுவாமின் அசாத்திய தவ கிம் வதா.

    முடியாது என்று நினைப்பதெல்லாம் முடித்துக்காண்பிக்கும் அனுமாரே, உன்னால் முடியாது தான் என்ன ? 

    நீங்கள் கீழே பார்ப்பது இந்த கோவிலில் ஒரு காட்சி.  இந்த வீடியோ நாங்கள் எடுத்தது அல்ல.

     சிவா பெருமான் கோவில் லே ஒரு காட்சி.
    Shiv Mandhir at Buffalo Airport Town, forty miles away from Niagara Falls City.




    இந்த வீடியோ பாருங்கள். 2 வது நிமிஷம் துவங்கும்போது ருத்ரம் சமகம் சொல்லி கார்த்திகை அன்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது.  ( இதுவும்நாங்கள்  எடுத்த வீடியோ அல்ல. )
    அதற்கெல்லாம் டயம் இல்லை.









    காரை திருப்பிக்கொண்டு அசாத்திய சாதகனை பார்த்தாச்சு , பிரதோஷத்தின் நாளன்று, சிவ தர்சனம் கிடைத்தாச்சு என்ற திருப்தியில் நயாகரா நகரை நோக்கி விரைந்தோம்.

    இரண்டு இடத்தில் நடுவில் டோல் செலுத்தும் இடம்.  கார்கள் இஞ்ச் இஞ்ச் ஆக
    நகருகின்றன.  பேத்தி எள்ளும் கொள்ளுமாக வெடிக்கிறாள். இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு, ஒன்பது, எட்டு, ஏழு ,ஆறு,......அவள் கௌண்டு டவுன்
    டயம் தர மாப்பிள்ளை கிட்டத்தட்ட 80 மெயில் ஸ்பீடு ஓட்டுகிறார்.

    எனக்கோ , நேத்திக்கு வானத்திலே பயம், இன்னிக்கு தரைலேயே பயம் அப்படி ஆயிடுத்து.

    நின்னா பயம், நடந்தா பயம், ஓடினா பயம்.இன்னும் கொஞ்ச நேரத்திலே கொட்டற நீர் விழ்ச்சிக்கு கீழே இருக்கப்போறோம் அப்படின்னு நினைச்சாலே ஹார்ட் பக் பக்.   பக்கும் பக்கும் மாடப்புறா மாதிரி இல்லாம கொஞ்சம் வேகமா அடிக்கறது.  எதுக்கும் இருக்கட்டும் என்று ஒரு ஆஸ்பிரின் மாத்திரை எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.  இதய வலி வந்தால் என்ன செய்வது அப்படின்னு ஒரு புத்தகம் இருந்தது. அதை மறந்து சென்னையிலே வைத்து விட்டு வந்துவிட்டேன்.  வந்தால் பாத்துக்கலாம்.  அப்படின்னு ஒரு தைரியம்.

    பகவான் என்ன நினைச்சிண்டு இருக்கானோ அது தான் நடக்கும் என்று நினைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு

    சிவ சிவ என்றிருந்தேன்.

    ஹோட்டல் ஹாம்டன் இன் லே எங்களுக்காக அந்த பஸ் காத்திருக்கிறது.
    நாங்கள் தான் லாஸ்ட் .

    டிரைவர் கம் கைட் அழகா நயகார நகரை விவரித்துக்கொண்டே பஸ்ஸை ஓட்டத் துவங்குகிறார்.

    போகும் இடமெல்லாம் நயாகரா... ஆனந்த நயாகரா வெள்ளம்.  சில இடங்களில் பொங்குகிறது.  நதியாக. சில இடங்களில்  அருவியாக.

    A video from Canada Side: Courtesy: Youtube.




    காணக் கண்கோடி வேண்டும்.

    இரண்டு தான் இருக்கிறதா ?

    மிச்சத்தை நீங்கள் நாளைக்குள் கொண்டு வாருங்கள்.

    அந்த அடுத்த பதிவில் நீர் வீழ்ச்சியின் வேகத்தை பார்ப்போம்.

    மறக்காது வாருங்கள்.

    Saturday, July 13, 2013

    அனுமார் கிட்டே போய்...



    சின்மயா பால விஹார்

    ஆண்டோவர் என்னும் சிறிய டவுன் இது. பாஸ்டன் லிருந்து ஒரு 40 மைல் தொலைவு.


    இங்கு பூஜ்ய ஸ்ரீ  சின்மயாநந்தா அவர்கள் துவங்கி வைத்த பால விஹாரில் ஹனுமனை தரிசிக்க
     இது வரை ஒரு மூன்று தரம் போயிருப்பேன்.












    இந்த ஹனுமார் கோவில் இந்த பாஸ்டன் சுற்று வட்டாரத்தில் மிக பிரசித்தமாக இருக்கிறது.

    இந்த தளத்தில் கோவிலைக் கண்டு களியுங்கள்.
    பூஜ்ய ஸ்ரீ  தேஜோமயானந்தா, தயானந்த சரஸ்வதி குருகுலத்தைச் சார்ந்த துறவி.
    இந்த மாதம் 21ம் தேதி முதல் துளசி ராமாயணம் உபன்யாசம் செய்யப்போகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சம்பந்தமான ஐயங்களுக்கு அவர் பதில் அளிப்பாராம். 



    அத்துடன் இந்த  ஸ்தலம் மிகவும் அழகான ஆர்கிடேக்சரல் ப்யூடி. அமெரிக்க கட்டிட கலை இந்திய பண்பாட்டுடன் கலந்து காணப்படுகிறது.

    இதின் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை. அவர்கள்  சம்மதம் இன்றி எனக்கு புகைப்படம் எடுக்கவும் மனம் வரவில்லை.

    இருப்பினும் நேற்று
    மூன்றாவது மாடியில் இருக்கும் ஆடிடோரியம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
    அதை மனக்கண் மூலம் ஒரு போடோ எடுத்தேன்.

    மூன்றாவது தளத்தில் இங்கு வசிக்கும் பாரத நாட்டு மக்கள் கலாசார உணர்வினை எடுத்து வலியுறுத்தும் விதமாக,

    அவ்வப்போது ப்ல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    பல்வேறு மொழிகள் கற்று தரப்படுகின்றன.  தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, சம்ஸ்க்ருதம், ஆகிய மொழிகளில் அவ்வப்போது வாலண்டியர்ஸ் வாரம் இரு முறை அல்லது மூன்று முறை மொழி மட்டும் அல்லாது மொழி பேசப்படும் மக்களின் பண்பாட்டினையும் போதிக்கிறார்கள்.

    இதைத் தவிர கணிதம் கற்று தரப்படுகிறது.
    செஸ் துவக்க வகுப்புகள், தமிழகத்தைச் சார்ந்த ஒரு பெண்மணியினால் நடத்தப் படுகின்றன.

    எனது பேரன் ஐ பாடில் செஸ் காயின்ஸ்களை வெகு வேகமாக மூவுகளைச் செய்கிறான்.

    செஸ்ஸில் யானைக்கு ரூர்க் என்று ஒரு பெயரும் உண்டல்லவா ?  அதற்கு மட்டும் யானையின் உருவம் ஏன் இல்லை என்று கேட்டான்.

    அது அப்படித் தாண்டா என்று சமாளித்தேன். 

    அதைப் பாரு, பில்லர் போல் இருக்கிறது இல்லையா ..   அது ராஜா பாலஸில் தூண் போன்றது . ரொம்ப ஸ்ட்ராங்.  அதனால், ராஜா வோடபரிவாரத்திலே குதிரை, சிப்பாய், பிஷப் போன்று எளிபெண்டும் உண்டு.  அதற்கு தான் அப்படி இருக்கிறது என்று சொல்லிவிட்டு, காலரை நிமித்திக்கொன்டேன்.

    என்ன தாத்தா.  பில்லர் அப்படின்னா எப்படி நகரும் ?

    சும்மா இருடா !! தாத்தா வை ரொம்ப தொந்தரவு செய்யக்கூடாது.. விஸ்வநாதன் ஆனந்திக் கேட்டு சொல்வார்  என்றார் மாப்பிள்ளை.

    அவர் இப்ப பார்ம்லே இல்ல. அவருக்கு எப்படித் தெரியும் எனக்கேட்கிறான் பிச்சை, என் பேரன்.

    அனுமார் கிட்டே போய்,

    அப்பனே , அசாத்திய சாதகன் அல்லவா நீ. 

    என்னை காபாத்துடா ...இந்த
    கேள்விக்கு என்ன பதில் ?

    அனுமான் என்ற உடன் ஜகமணி அவர்கள் வழிதான் நினைவுக்கு வருகிறது.
    இன்று சனிக்கிழமை. அவர தளத்திற்கு செல்லவேண்டும்.

    வேகத்திற்கு மட்டுமல்ல, விவேகத்திற்கும் அவன் பாதங்களே துணை.
    அவனோ கண்களை மூடிக்கொண்டு, கண்களிலே நீர் சுரக்க ராமா, ராமா என்று
    24  7 ராம ஜபம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்.

    அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம் பிரும்ம சாரினம்.

    துஷ்ட கிருக வினாசாயா ஹனுமந்தம் உபாஸ்மஹே.



    ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே.
    ரகுநாதாய நாதாய சீதாயாஃ பதயே நமஹ.



    அப்பனே ! ஆஞ்சனேயா.. 
    என் பேரக்குழந்தைகளை காப்பாற்று.
    உன்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை.

    இன்னிக்கு மதியம் 11 மணி அளவில் இந்த ஊரில் இருந்து திரும்பி ஜெர்சிக்கு
    செல்லவேண்டும்.

    பிரச்னைகளுக்கு தீர்வு காண்  என்ற தலைபபிலே இந்த பதிவை எழுதும்போது
    திரு ராஜ முகுந்த வல்லியூறான் அவர்களிடமிருந்து ஒரு செய்தி. அது என்ன ?
    அனுமார் அவர் மூலம் எதுனாச்சும் செய்தி எனக்கு அனுப்பி இருக்கிறாரோ ?