Pages

Monday, August 12, 2013

உங்களுக்கு மூளை இருக்கா ?

ஒரு துறவி வெள்ளம் பொங்கி வரும் நதியோரம் சென்று கொண்டு இருந்தாராம். பின்னே வருவது வாய் பொத்தி கை கட்டி நடக்கும் அவரது சிஷ்யன்.
எதோ சத்தம் கேட்டு திரும்பியபோது, நதியில் ஒருவனோ ஒருவளோ தத்தளிக்கும் காட்சி.  அது அவனா அவளா என்று நினைக்கும் தருணமும் இல்லை.
துறவி நதியில் குதித்தார்.  ஒரே முயற்சியில் அவளைக் கரை  ஏற்றினார்.
பின் தன்வழியே செல்லலானார். 
பின்னால் வந்த சிஷ்யன் முனுமுனுத்துக்கொண்டே வருகிறான்.
அவனுக்கு மனசுக்குள்ளே சஞ்சலம். துறவி காஷாயம் உடுத்தியவர் உலகத்தை துறந்தவர் ஆசையை அறுத்தவர் பெண்ணை தொட்டுவிட்டாரே ????
துறவி திரும்பி பார்த்தார்.   சொன்னார்:
" நான் அப்போதே அவளை விட்டு விட்டேன். நீ இன்னுமா அவளை தூக்கிக் கொண்டு இருக்கிறாய் ?:
கதை என்ன நீதி சொல்கிறது ?
கடந்த கால நிகழ்வுகளில் நல்லவை, அல்லவை அனைத்துமே சங்கமம். தெரிந்தோ தெரியாமலோ செய்த உதவிகளும் அநேகம். செய்த உதவிகளால் நேர்ந்த உபத்ரவங்களும் அநேகம்.
சென்றவை சென்றுவிட்டன. கொட்டியது பால் எனினும் அதை திரும்ப அள்ள இயலாது.  ஆயினும் அதைக்குறித்து விசனப்படுவது , சினம் கொள்வது, சிந்தையை சிவன் பால் கொள்ளாது திசை மாறி தன்னையும் பிறரையும் நொந்துகொள்வது  எல்லாம் சரிதானா ?
ஆன்மீகக் கதை போதும் அய்யா என்று நீங்கள் சொல்வது எல்லாம் காதில் விழாமல் இல்லை.

கிழவனும் கிழவியும் பூங்காவில் அன்றாட வாக்கிங் போய்க்கொண்டு இருந்தார்கள்.





 நடுவில் ஏதோ ஒரு  கருத்து வேறுபாடு.  கிழவிக்கு கோபம் .

உங்களுக்கு மூளை இருக்கா என்று இரைந்தாள். 

கிழவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

பக்கத்தில் போகிறவர்கள் நின்று பார்த்தார்கள்.  புன்னகைத்தார்கள்.

" இதை நீ சத்தமாய் கேட்டுத்தான் ஆகவேண்டுமா ? இப்ப என்னவோ புதுசா கண்டு பிடித்தாற்போல் பேசுகிறாய். ?"  

எப்ப உன்னை கலியாணம் செய்து கொண்டேனோ அப்போதே உனக்குத் தெரிஞ்சு இருக்கணும் இல்லையா ?  ?  "


"போகப்போக உங்களுக்கு திமிர் ஜாஸ்தியாய் போயிடுத்து.." கொலச்டேரால் 350 க்கும் மேலே போயிடுத்தோ என்னவோ ? ஸ்டோர்வாஸ் சாப்பிடுகிறீர்களா இல்லையா ?  "

"  திமிர் வந்தது சகவாச தோஷம்.  அம்பது வருஷ பந்தம் இல்லையா..??"

"சரி, சரி,  சத்தமா பேசாதீக ... சீக்கிரம் வீட்டுக்குப்போய் ஒரு வாய்  டீ போட்டுத் தாங்க "

என்று ,

கிழவனின் வாயை அடக்கினாள் கிழவி.

"எஸ் மேடம் .." என்று அடங்கினார் கிழவர்.

( இது நாங்களா என்று பலர் ஐயப்பாடு கொண்டால் அதில் வியப்பு ஒன்றுமில்லை.  யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று யார் சொன்னாங்க... மறந்து போச்சே !!  இளங்கோ சார்! வாங்க ! +)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பின்னே வருவது நேற்று முந்தாநாள் நடந்த கதை அல்ல  இது.உண்மை.

எனது தஞ்சை நண்பரின் சதாப்தி விழா.  எண்பது வயதினைக் கடந்த நல்ல இதயம் படைத்த நண்பர்.

எல்லா வைதீக முறையான ஹோமங்களும் சிறப்பாக நடை பெற்றன. கண்டு களித்தோம்.   எங்களை விட என்னும் 8 வயது பெரியவர் அவர். அவர் மனைவி அவருக்கென்றே பிறந்தவர்.  தர்ம பத்னி என்பது அவருக்குத்தான் உண்மையாகப் பொருந்தும்.  அன்புக்கும் அறனுக்கும் சான்றாக விளங்கியவர் அவர். அவரால் நன்மை அடைந்த குடும்பங்கள் பல.

எனது தஞ்சை கால நண்பர்களை பார்க்க முடிந்தது .  நிழல்கள் ரவி, (எனது தஞ்சை அலுவலக 1962ம் வருஷ பாஸ் அவர்களின் புதல்வர், என் நண்பரின் உறவினர் ) வருவார் என நினைத்து இருந்தேன். அவர் வரவில்லை.  

சதாப்தி திருமணம் முதல் திருமண நிகழ்ச்சியைபோலவே இருந்தது.  மாலை மாற்றுதல், பழம் பால் தருதல், ஹோமங்கள், மாங்கல்ய தாரணம். எல்லாமே.
இந்த வருண ஜபம் செய்து அந்த நீரால் அபிஷேகம் செய்வது இந்த அறுபது, எழுபது, எண்பது திருமணங்களின் சிறப்பு .

ஆசிர்வாதம் பெற்று மகிழ்ந்தோம்.

அடுத்தது சாப்பாடு.  ஸ்ரீ பாதுகா காடரிங் வைஷ்ணவ சம்பிரதாய படி சாப்பாடு.
போளி, புளியோதரை, மெது வடை, க்ஷீரான்னம் , பாயசம் எல்லாமே பிரமாதம்.  +Tulsi Gopal  அவர்கள் அறுபது கல்யாண நிகழ்ச்சியிலே சாப்பிட்டது நினைவுக்கு வந்தது.

சாப்பிட்டபின் நண்பரின் மூத்த மகன் எங்களுக்கு ஒரு அன்புப்பரிசு தனியே வந்து என்னிடம் தந்தார்.
என்ன என்று பார்த்தேன்.  தேங்காய், வெற்றிலை பாக்கு, பக்ஷணம் தான் என நினைத்த எனக்கு, ஆச்சரியம்.
என் மனைவிக்கு ஒரு விலை உயர்ந்த புடவையும் எனக்கு ஒரு ஷர்ட் துணியும்.

ஆஹா. ஆஹா.  !!

நூறாவது வயது பங்க்ஷன் இன்னும்  ரொம்ப நாள் இருக்கா ? என்று விசாரித்தேன்.

என்ன யாரோ கூப்பிடுகிறார்கள் !!
சாட் ல் திரு +Gopalakrishnan Vai.  அழைக்கிறார். என்ன வென்று பார்க்கிறேன்.












No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!