Pages

Friday, May 31, 2013

என்னது !! உளர்றீங்களா ? ரஹ்மான் சார் காப்பி அடிச்சு இருக்காரா ?

என்னது !! உளர்றீங்களா ?  ரஹ்மான் சார் காப்பி அடிச்சு இருக்காரா ?

   ஆமாம். சார்.  ஆமாம்.

   சித்தம் போக்கு சிவன் போக்கு அப்படின்னு வாய்க்கு வந்ததை எல்லாம்
   உண்மை அப்படின்னு சொல்லக்கூடாது. 
  பிச்சு பிச்சு பிச்சு போட்டுடுவேன்        ஜாக்கிரதை...

   நான் ஆதாரத்தோடு தான் சொல்றேன்.
   இந்த பாட்டை கேளுங்க....




   கேட்கறேன்.  
   ஆஹா..  என்ன அற்புதமான ராகம் !!  ஹிந்துஸ்தானி க்ளாசிகலா ?

   ஆமாம்.  சார்... பூரியா தனச்ரீ என்னும் ராகம்.

   இதை அப்படியே சுத்தமா சாஸ்திர இலக்கணப்படியே பூரியா தனஸ்ரீ ராகத்திலே   ரங்கீலா படத்துலே ...இசை அமைச்சிருக்கார் பாருங்க...
ஹரிஹரன் ஸ்வர்ணலதா என்னமா இழையாருங்க பாருங்க...

   சார் !!
   உண்மையைச் சொல்லட்டுமா சாரே !!

   சொல்லுங்க...

 விடிந்தும் விடியாத வைகறைப்பொழுதிலே அப்பத் தான் மலர்கின்ற பவள மல்லித் தோட்டத்திலே இருக்கற மாதிரி    ஒரு சுகம் உடம்பு முழுக்க பரவுறதுங்க...

    அதுதான்யா எனக்குத் தெரிஞ்ச உண்மை..  ஆனந்தம் எல்லாம். ...

    நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்
 
     அப்படி சொல்லிட்டு ஓடிடாதீங்க...

     ராகத்தை புரிஞ்சுக்க இங்கே போங்க. 
ராகத்தை புரிஞ்சுக்க இங்கே போங்க. 

     போறேன் சார்.  ஆனா ஒண்ணு சொல்லணும் சார்.

     சொல்லுங்க.. 

      சாஸ்த்ரீய இலக்கண அடிப்படையிலே ஒரு சினிமா சங்கீதத்தை அமைச்சிருக்கறதை காப்பி அடிச்சிருக்காரு அப்படின்னு சொல்லிட்டீகளே !!

       எல்லா பாடல்களும் ராகங்கள் அடிப்படையிலே அமைஞ்சது  
      அந்த 72 மேளங்களை அடிப்படையாக கொண்டது தான்.

       அந்த மேளங்கள் அடிப்படையிலே ஒரு பாட்டு போட்டா
       அத காப்பி அடிச்சா அப்படின்னு சொல்லாதீங்க..

        அந்த நாத ரூபமான இறையை புரிஞ்சுண்டவரு
       அப்படியே அதையே பிரதிபலிப்பவரு
       நம்ம கண்ணுக்கு முன்னாடி கொண்டு நிறுத்துபவரு
       
       அப்படின்னு சொல்லுங்க..

        அடே !! ஆமாம். 
         ஒத்தருக்கு ஒரு உண்மை புலப்பட்டுது அப்படின்னா
         அந்த உண்மை இன்னொருவருக்கும் அதே போல 
         புலப்படும் அப்படின்னு சொல்ல முடியாதுங்க...

         ஏன்னா உண்மை புரியறதுக்கு ஒரு விசயம் வேணுமுங்க..

         என்னங்க...

          தன்னை இழக்கணுங்க....
          தான் அப்படிங்கறது அழியணுங்க..
          அடக்கம் வரணும்ங்க..
         அப்பதான் ஆன்மீகம் புரியுமுங்க..

         

Wednesday, May 29, 2013

நீங்கள் கணக்கு வாத்தியா அல்லது காதல் மன்னனா ?




 நீங்கள் இனிய பாட்டு வாத்தியாரா அல்லது இளைய ராஜாவா ?

  கணக்கு வாத்தியா அல்லது காதல் மன்னனா ?

  தொண்டரா லீடரா ?

   யார் தீர்மானிக்கிறார்கள் ?

Let us start with our Sensory perceptions.

இடது கண் வலது கண் சரி.
இடது காது வலது காது சரி.
இடது மூக்கு வழி. வலது மூக்கு வழி.  சரி
இடது கை வலது கை சரி.
இடது கால் வலது கால் சரி.

இதெல்லாமே ஒரு தொண்ணூறு விழுக்காடு நம் கன்ட்ரோலில் இருக்கின்றன. ஆனால் இடது பக்க மூளை
வலது பக்க மூளை ... 

சாரே.. நம்ம மூளைலே இரண்டு ஸைடு இருக்கு.  ஒண்ணு இடப்பக்கம். இன்னொண்ண்டு வலப்பக்கம்.

மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக எண்ணி சிந்திப்பவரும் செயல்படுபவரும் தங்களது மூளையின் வலது பக்கத்தையே அதிகம் பயன் படுத்துவதாக உளவியல் கூறுகிறது.

Whether we are one among the sheep that follow the shepherd or the one who could think differently from others....
who could think he can think of something afresh anew
away from the road in which all his predecessors have tread.

ஆக்க பூர்வமான சிந்தனைகளும் செயல்களும் இரு பக்க மூளைகளுமே செய்கின்றன என்று சொன்னாலும், இடது
பக்க மூளையை உபயோகிப்பவர்கள் ஒரு லாஜிகலாக செயல்படுபவர்கள்.  இதற்குப்பிறகு, இது , என்று ஒவ்வொரு
படியாகத்தான் செல்வார்கள்.   தர்க்கம் புரிவதில் அவர்கள் எத்தர்கள். 

வலது பக்க மூளையை அதிகம் செயல்படுத்துவோர் வித்தியாசமாக சிந்திப்பவர்கள்.  இவர்களுக்கு எப்பொழுதுமே
புதின எண்ணங்களும் புதிய வழி முறைகளுமே தோன்றும்.  அவர்களது சிந்தனையும் மற்றவர்களுக்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுவதற்கு வாய்ப்பும் இருக்கிறது. 

நீங்கள் அதிகம் பயன்படுத்துவது இடது பக்க மூளையா ? வலது பக்க மூளையா ?

இந்த டெஸ்ட் எடுத்துக்கொண்டு உங்களை நீங்களே பரிசோதனை செய்துகொள்ளுங்கள். 

   மேலே க்ளிக்குங்கள் .  உங்களுக்கு ஒரு ஜன்னல் திறக்கும். அந்த ஜன்னலில் 
   வினாக்கள் வரும். 

   ஒவ்வொரு வினாவுக்கும் தகுந்த பதில் அளியுங்கள்.  

   யாருக்கும் உங்கள் முடிவைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்களே உங்களைப் 
   புரிய ஒரு அரிய வாய்ப்பு. 
 
Please click the above, and answer all the questions patiently.  
Only 45 questions are there. 



Right Brain vs Left Brain Creativity Test





      Being creative or artistic doesn’t mean you know how to draw or play an instrument.

 Being creative is a way of thinking, a way of viewing the world.

Being creative is also understanding the World, and also recreating a world which we feel is possible if only we choose to live in it. 


உங்கள் எழுத்தை வைத்துக்கொண்டே நீங்கள் ஒரு படைப்பாளி ஆ இல்லை

    நானும் ஓடினேன் என்ற கேசா அப்படின்னு தெரிந்துகொள்ளலாம்.   பதிவர்களிடையே   சிலர் உண்மையாகவே இந்த இடது மூளையாளர் இருக்கின்றனர். \\\

 Hats Off to Left Brainy Men and Women who always dream of a new world.

மூளையை சலவை பண்ணப்பட்டவரும்     இருக்கின்றனரே என்று என்னை கலாய்க்கவேண்டாம். எல்லோருக்கும் அது தெரிந்தது தான். 

    ஒரு படைப்பாளி என்று ஒரு சக பதிவரை நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம்.  அது நீங்களாகக் கூட இருக்கலாம். 

    அடுத்து, 

    எங்கே... நீங்கள் படித்த வினாக்களின் அடிப்படையில், 

    உங்கள் வீட்டிலோ, உங்களுக்குத் தெரிந்தவர்களிலோ படைப்பாளி ஆகும்
    திறனுள்ளவர்கள் யார் ?

    சொல்லுங்கள் பார்க்கலாம். 

    இது தொடரும்..................
    

Courtesy:
The Art Institute of Vancouver ›› Burnaby Location, 3264 Beta Avenue, Burnaby, BC V5G 4K4
Toll-free: 1.888.665.7236

The Art Institute of Vancouver ›› Downtown Location, 700-1090 West Georgia Street, Vancouver, BC V6E 3V7
Toll-free: 1.888.718.9073

The Art Institute of Vancouver ›› The International Culinary Schools at The Art Institute of Vancouver, 300-609 Granville Street, Vancouver, BC V7Y 1G5
Local: 604.738.3155 or toll-free: 1.800.667.7288
www.wherecreativitygoestoschool.com/vancouver/

Monday, May 27, 2013

யாரும் படிக்க வேண்டாம். தயவு செய்து.

அய்யா தெரியாதய்யா ...

ஒரு பத்து நாளைக்கு முன்பு ஒரு மடல் ஈ மடலாக வந்தது.

இண்டி ப்ளாகர் அமைப்பு அதில் எந்தக்காலத்திலோ நான் சேர்ந்திருக்கிறேன் போல் இருக்கிறது  அதில் தமிழ் மட்டும் என்று இல்லாமல் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் ப்ளாக் எழுதுபவர்கள் சங்கமம். எனது 14 வலைப் பதிவுகளில் ஒரு பதிவு மூவி ராகாஸ் மட்டும் அதில் இருக்கிறது.

சென்னையில் ஒரு கூட்டம் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலிலே நடக்கப்போகிறது . ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு   குறைந்த நபர்களே அனுமதிக்கப்படுவர் என்பதால் உடனே ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும் என்ற தகவல் வேற எனது ஆவலைத் தூண்டி அந்த லின்க்குக்குச் சென்று பார்த்தேன்

ஆமாம். எனது பதிவு அங்கே இருக்கிறது.  அந்த கூட்டத்திற்கு 200 நபர்கள் மட்டுமே இடம் .  எனக்கு முதலிலேயே 163 நபர்கள் பதிவர் ரிஜிஸ்டர் ஆகியிருந்தனர்.

72 வயசாகி விட்டது என்றாலும் ஆசை விடவில்லை
போன வருஷம் தி.நகர்லே இதுபோலே ஒரு கூட்டத்திற்குப் போனது, அங்கு எதிர் பாராத வகையிலே பொன்னாடை கிடைத்தது எல்லாமே நினைவுக்கு வந்தது.

இந்த வெயில்லிலே போய்த்தான் ஆகணுமா என்றாள் வீட்டு எஜமானி.
நான் ஏ . ஸி . பாஸ்ட் ட்ராக் கார்லே தான் போகப்போறேன். என்றேன்

இந்த தடவை எதுனாச்சும் பொன்னாடை மாதிரி கிடைச்சுதுன்னா அது இரண்டாவது பேரனுக்குத்தான் என்றாள் இவள்.

அதெல்லாம் இருக்காதுன்னு நினைக்கிறேன் ஏதோ ஒரு ப்ரப்யூம்  கம்பெனி ஸ்பான்சர் பண்றாங்க.. முழுக்க முழுக்க இது பதிவர் விழாவா இருக்குமா
அப்படின்னு சந்தேகமாத்தான் இருக்கு அப்படின்னேன்

அது எதுவேணா இருந்துட்டு போகட்டும் நீங்க கண்டதெல்லாம்
காணாதது மாதிரி சாப்பிட்டு லபோ லபோ ன்னு என் உயிரை எடுக்காதீக
அடுத்த வாரம் லுப்தான்சா பிளைட்  ஞாபகம் இருக்குல்லே என்றாள்.

இன்னொரு விஷயம் என்றாள்
என்ன என்றேன்
எதையும் பேசுவதற்கு முன்னே பேசித்தான் தீரணுமா என்று யோசித்து பேசுங்க   அது உங்க காலேஜ் இல்ல ..   நீங்க இப்ப ப்ரொபசரும் இல்ல.

மனசில் வாங்கி கொண்டேன்

கரெக்டா ஒரு மணிக்கு ஹையாட் ரெசிடென்சி அடைந்தேன் அப்ப தான்
கூட்டத்திற்கான தயார் நிலைகள் துவங்கிகொண்டு இருந்தன.

சிறிது சிறிதாக மழைத்துளி விழுவது போல பதிவர்கள் வர ஆரம்பித்து சற்று நேரத்தில் ஒரு நூறு பேருக்கு மேல் அங்கு இருந்தனர் எல்லோரும் எங்கே விழா என்ற கேள்வியுடன் இருந்தனர்.

வந்தவர்கள் எல்லோரிலும் இளைய தலைமுறை தான் எழுபது விழுக்காடு மேலே இருந்தது  எல்லோரும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்களில் ஒரு 80 சதவீதம் ஆங்கிலத்தில் பதிவு எழுதுபவர்கள்.  இது சென்னை ப்ளாகர் கூட்டம் என்பதால் இந்தி, தெலுங்கு, உருது மலையாளம் மொழிகளில் எழுதுபவர்களும் வந்து இருந்தனர்.  பொதுவான ஆங்கிலத்தில்
பேசிக்கொண்டு இருந்தனர்.

அவ்வப்போது வரும் கரெண்ட் போல தமிழும் ஒலித்தது

கூட்டம் துவங்கியது  எல்லோரையும் கணினியில் பதிவு செய்யச் சொல்ல, நானும் வரிசையில் நின்று என் இ மெயில் ஐ டி யைப் பதிவுட்ட உடன் என் பெயர் வெள்ளித்திரை பிரம்மாண்டத்தில் வெளிச்சமாக ஆஹா ஆஹா புல்லரித்து \போனேன்.

எல்லோருக்கும் ஆரஞ்சு கோகோ கோலா இளநீர் என்று வித விதமான பானங்கள்.

1.30 மணி அளவில் ....

கூட்டம் துவங்கியது.  மேடை என்று ஒன்றும் இல்லை  காம்பியர்கள் இருவர் ஒரு பிரம்மாண்டமான திரையின் பக்கத்தில் பிரசன்னமானார்கள். அந்த பெரிய ஹாலின் எல்லா பக்கத்திலும் அருகிலும் திரைகள்.  யூனி பாரம் அணிந்த அம்பி பூர் நிறுவனத்தின் அலுவலர்கள் சுறு சுறுப்பாக இயங்கினர்


ஒவ்வொரு மேசையை சுற்றிலும் ஏழு பேர் உட்கார்ந்தோம் ஹால் இப்போது அடைந்து இருந்தது.

ஸ்பான்சர் அம்பி புர் எங்களை வரவேற்றார்  .  அம்பி பூர் வாசனை என்ன
என்பதை அந்த ஹாலிலிருந்தே புரிய முடிந்தது .

அடுத்த நிகழ்வாக வந்திருந்தவர்களில் ராண்டமாக ஒரு முப்பது பேரை கணினி மூலம் தேர்ந்து எடுத்து ஒவ்வொரு பதிவருக்கும் 40 வினாடிகள் தந்து தத்தம்மை அறிமுகம் செய்து கொள்ளச் சொன்னார்கள்.

அவர்கள் பேசும்போதே மற்றவர்கள் ஆரவாரக்கூச்சல் இட்டதால் அவர்கள் என்ன சொன்னார்கள் என்று கேட்க முடியவில்லை

அறிமுகம் முடியும்போது மணி 2 க்குமேல் ஆகி விட்டு இருந்தது.  லஞ்ச் டயம் என்று சொல்லி ஒரு 45 நிமிடம் என்று அறிவித்தனர்

லஞ்ச் என்றால் அது ஒரு கிங்க்ஸ் லஞ்ச் என்று சொல்லவேண்டும்  .  அது போன்ற லஞ்ச் அந்த ஹோட்டலில் ஒரு நபருக்கு ரூபாய் ஆயிரம் சார்ஜ் செய்வதாக சொன்னார்கள் கிட்டத்தட்ட ஒரு 40 ஐடம் இருந்தன. பார்த்தாலே வயிறு நிறைந்துவிடும் போல் இருந்தது. சுவையாகவும் இருந்தது.  

அடுத்த தடவை மேடம் + துளசி கோபால் அவர்கள் திரு கோபால் அவர்களின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட வரும்பொழுது இங்கு தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனசுக்குள் பிரார்த்தித்து கொண்டேன்.   திருவான்மியூர் அனந்த பத்மநாப ஸ்வாமி கிருபையில் கை கூடவேண்டும்

லஞ்ச் நேரத்திலே எனது அந்த கால நெருங்கிய நண்பர் தஞ்சாவூர் மெடிகல் கல்லூரியின் புகழ் பெற்ற இருதய நிபுணர் தஞ்சை மருத்துவ கல்லூரியின்
டீன் ஆக பணியாற்றியவர் டாக்டர் எம். கிருஷ்ணசாமி அவர்கள் பேத்தியை
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .  பிரியா என்றும் பத்ம ப்ரியா அழைக்கப்படும் அவர்கள் தற்பொழுது ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் அவரது தந்தை டாக்டர் மகாதேவன் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். அவர்களது வலை இங்கே

பிரியாவின் தாத்தா டாக்டர் எம்.கிருஷ்ணசாமியுடன் எனது நட்பு குறித்தும் அவரது செல்வாக்கு, புகழ் தஞ்சையிலே எப்படி இருந்தது என்றும் அவரை நான் போரடித்துக்கொண்டு இருந்தேன்

ஐஸ் கிரிம், சாக்லேட் கிரீம், சாக்லேட் கேக், மற்றும் ஏகப்பட்ட பழ வகைகள் என்று நான் ஒருவகையாக அவற்றை மேஞ்சு முடிப்பதற்குள் திரும்பவும் செஷன் துவங்கியது. நேரம் மூன்றுக்கு மேல்

காம்பியர் வந்தார் . திரையில் கலர் கலரான அம்பி பூர் ஏர் ப்ரெஷனர் பற்றிய தகவல்கள் .

அம்பி பூர் வாசனையின் மூல அணுக்கள், அது எப்படி வேலை செய்கிறது, மற்ற வாசனை பர்பியூம் விட இது எப்படி சிறந்தது என்று ஒரு பவர் பாயிண்ட்
பிரசன்டேஷன் செய்தார்கள். அடுத்த 45 நிமிடம்.  விவரித்தவர் மிகவும் அழகாக சொன்னார்.

பிறகு அதில் என்ன சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம் என்றார்கள். ஒரு பத்து பேர் கேட்க அதில் ஒரு 30 நிமிடம் கழிந்தது . ஒரே ஒருவர் மட்டும் இந்த வாசனை திரவியம் உடல் நலத்திற்கு குந்தகம் விளைவிக்க கூடியதா என்று கேட்டார்  இந்த பர்பியூம் ப்ராக்டர் அண்ட் காம்ப்ளார் நிறுவனத்தார் அவர்கள் புகழ் பெற்ற நிறுவனம். என்று சொல்லி எதோ ஒரு சமாதானம் கிடைத்தது

பொதுவாக எல்லா ஏர் ப்ரெஷனர்ஸ் பற்றிய தகவல்களும், அவற்றில் உள்ள வேதிய பொருட்கள் என்ன என்ன தீமைகள் செய்யலாம் என்றும் இந்த தொடர்பில் உள்ளது.

இந்த ப்ராடக்ட் உள்ள சைக்லொடெக்ச்ரின் பற்றிய தகவல் இங்கே இல்லை  இருப்பினும்   யாரும் படிக்காமல் இருக்கவேண்டாம். தயவு செய்து


.t may be boring to read every chemical, but I’m going to list them all, and by no means would that be all you would find in every airfreshener, some have more and some may have less, but here goes:
Alcohol, hydrogenated caster oil, dialkyl sodium sulfosuccinate, polyarcylate, hydrochloric acid, cyclodextrin, modified polydimethicone, alkanolamine, sodium hydroxide, citric acid, quaternary ammonium chloride, benzisothiazolinone (BIT), methylisothiazolinone (MTI), propylene glycol (alchohol), sorbitan oleate, sodium borate, butane, propane and good old fragrances which could be anything.
I will pick only a handful of chemicals out of the above list to tell you about as they are not all toxic and some have not been sufficiently tested so what do we know?
***************************************************************************
A few ingredients in any Air Freshener.  
  • Butane is a neurotoxin, Benzisothiazolinone (BIT) causes contact dermatitis and has been banned for use in cosmetic products.
  • Methylisothiazolinone (MIT) is a group D carcinogen used in pesticides and a known neurotoxin.
  • Propylene glycol is a petroleum derivative which can cause eye and upper respiratory tract irritation and has been shown to decrease fertility and birth weights in rats.
  • Sorbitan oleate is a potential carcinogen used in pesticides; studies have shown it can cause cell mutations. One of the carriers, acetone is used as an industrial solvent and the vapours should be avoided as studies on animals have shown kidney, liver and nerve damage and increased birth defects for chronic exposure.
  • Quaternary ammonium chloride is an allergen which causes reactions when inhaled and if ingested can cause death.

******************************************************************************
சைக்லொடெக்ச்ரின் பற்றிய தகவல் இங்கே இருக்கிறது 

முக்கியமாக இந்த சைக்லோ டேக்ஸ் ட்ரின் டாக்சிடி ( toxicity of cyclodextrin)
பற்றிய தகவல்கள் இங்கே கிடைக்கின்றன

இதை ஐரோப்பாவில் பொதுவாக அனுமதிப்பதாகவும் செய்தி இருக்கிறது.

***************************************************************************

அதற்குள், அம்பி பூர் பர்ப்யூம் பல வகை புட்டிகள் பல்வேறு நிறங்களில்  எல்லோருக்கும் வழங்கப்பட்டன   அவரவர்கள் அவற்றினை கையில் வாங்கி அதில் இருப்பதை படிக்கும் வேளையில்,

அறிவிப்பாளர் எல்லோருக்கும் இலவச புட்டிகள் கிடைத்தனவா என்று உறுதி செய்து கொண்டார்  . அந்த ரகத்திற்கு ஏற்றவாறு , ஒரே ரகத்தை சார்ந்தவர்கள் ஒரே நிரப்புட்டி கிடைத்தவர்கள் ஒன்று கூடி அமர வேண்டும் என கேட்டுகொண்டார்

ஆகவே, லாவண்டர், ரோஜா, மல்லிகை போன்ற வித வித வாசனைகள் கிடைத்தவர்கள் தனிதனி குழுக்கள் ஆனார்கள்.  எனக்கு டிராகன் ப்ரூட் என்று ஒன்று .  எனக்கு இது ஒரு வாசனையா என்ற கேள்வி இருந்தது .

இப்பொழுது குழுக்களிடம் இருந்து வாலண்டியர்களை அழைத்தார்கள்.
அவர்களுக்கு ஒவ்வொரு வாசனைக்கும் உண்டான சிறப்பு விளக்கப்பட்டது போல் தோன்றியது  அவர்கள் திரும்பவும் தத்தம் குழுக்களுக்கு வந்து அவர்களுக்கு அதன் பெருமைகளை எடுத்து சொன்னார்கள்.

நேரம் 4.30 ஆகிவிட்டது  என்னது ? பதிவாளர்கள்,  பதிவுகள் பற்றி ஒன்றுமே இன்னும் துவக்கபடவில்லையே என்று நினைத்தேன்

5 மணிக்கு கூட்டம் முடிந்துவிடும் என்று சொன்னார்கள்.

பக்கத்தில் உள்ளவரிடம் இதனால் இந்த கூட்டத்தால் பதிவருக்கு என்ன பயன் என்றேன் வெகுளித்தனமாக .

அந்த பாட்டிலை எடுத்து காட்டினார்  கடையில் இதன் விலை ரூ.195 போட்டு இருக்கிறது. பார்த்தீர்களா. ஹம கோ முப்த் மிலா ஹாய் என்றார் .

ஆமாம். வாங்குபவர்களுக்கு என்றேன்.

இந்த பதிவர் கூட்டத்தை ஸ்பான்சர் செய்த அமைப்புக்கு ஒரு இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை செலவு இருந்து இருக்கலாம்   ஆனால் ஒரு இருநூறு பேர்கள் வலையில் இந்த பர்ப்யும்மர் பற்றிய தகவல் வரும் சாத்தியங்களும் அவர்கள் அந்த வாசனையால் கவரப்பட்டு அவர்கள் வலை தளங்களும் ஒரு விற்பனை விளம்பர மையமாக விளங்கும் சாத்தியக்கூறும் தெரிந்தது .

நான் அந்த கூட்டத்தில் ஒரு அந்நியனாக உணர்ந்தேன்  உண்மையிலே பதிவர்களுக்கும் இந்த கூட்டத்தில் நடப்பதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.
அதிக பட்சம் இது ஒரு சோஷல் இவன்ட். சமூக விழா அதை நடத்துபவர்
தனது பொருளை விளம்பரபடுத்துவது என்பது அவரது உரிமை.  என்னை நானே சமாதனம் செய்துகொண்டேன்.நான் ஏதோ பதிவுலகத்தைப் பற்றியும் பதிவாளர்கள் பொறுப்பு பற்றியும் பேசப்படும் என நினைத்தது எனது அறியாமை . 

ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் , அதாவது ஒரு வலைப்பதிவு மூலம் என்னவெல்லாம் சாதிக்கலாம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிந்தவர்கள் இருந்தனர் என்று தான் சொல்லவேண்டும்

கூட்டத்தில் சில பதிவாளர்கள் தங்கள் பதிவுகளில் ஆட் சென்ஸ் என்னும் விட்ஜெட் வைத்து அதில் பதிவாகும் கிளிக்குகள் தங்களுக்கு பணம் சம்பாதித்து கொடுக்கின்றன என்றும் அவர்களுக்குள்  பேசிக்கொண்டும் பெருமை பட்டு கொண்டார்கள்.

ஒரு பதிவு என்று இருந்தால் அதில் ஒரு லாபம் இருக்கணும் இல்லையா என்றார் ஒருவர என்னிடம்.

எந்த ஒரு பிரபல வலைப்பதிவையும் அதே போல இருப்பது போல இன்னொரு வலைப்பதிவு போட்டு அதில் லாபகரமான விளம்பரங்கள் கொடுக்கலாம் ஏகப்பட்டது சம்பாதிக்கலாம் என்று கிசு கிசுத்தார் இன்னொருவர் என்னிடம் .



போதுமடா சாமி என்று கூட்டத்தை விட்டு நழுவினேன் \

நான் வந்த டாக்சி எங்கு இருக்கிறது என தேடினேன். செல் அடித்தேன் ச்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

நடப்போம். என்று சொல்லிக்கொண்டு அண்ணா சாலையின் ஓரமாக நடக்க துவங்கினேன்

மதியம் சாப்பாட்டின் கனம் இப்போது வயிற்றில் இல்லை.
மனசில் தெரிந்தது.

நிற்க 

ஆசை அதிகரிக்க அதிகரிக்க ஆசைப்படும் பொருளின் ஊடே நமக்கு வரும் துன்பங்கள் 
பற்றி நாம் நினைக்கிறோமா ? 

வள்ளுவன் நினைத்து இருக்கிறார் 

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன். 




பின் குறிப்பு:

பிரியா என்று இன்னொரு வலைப்பதிவாளர் .  இவர் வலைப்பதிவை அவசியம் 
சென்று பார்க்கவும் . காகமும் மைனாவும்


Saturday, May 25, 2013

எதுதான் நன்னா இருக்கும் ?



  வெய்யில் கொளுத்துகிறது.  தலை நீட்டினால் திட பொருளாக இருக்கும் நாம் ஆவியாகிவிடுவோமோ என்ற அபாயம் இருக்கிறது.

   வீட்டிற்குள் இருந்தாலும் என்ன தான் குளிர் சாதனப்பெட்டி இருந்தாலும் ஒரு பத்து டிகிரிக்கு கீழ் வெப்பத்தை அது கீழே கொண்டு வருவதில்லை.  ஆகவே வீட்டுக்குள்ளும் குளிர்ச்சி இல்லை.

   குளிர்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்யலாம் \\?

   பழைய குப்பை எல்லாத்தையும் எடுத்தேன். போட்டோக்கள் என்னுடையவை எல்லாமே எடுத்தேன்.

   பத்து வயதில் ஒன்னு, பதினெட்டு வயதில், முப்பத்தைந்து வயதில்,
நாற்பத்து நாளில், அம்பதில் , அறுபதில் , இப்பொழுது எழுபத்தி இரண்டில் என்று கண்முன்னே விரிந்தன

    இதில் கண்ட ஒவ்வொரு போடோக்கு பின்னேயும் ஒரு நிகழ்வு இருந்தது மனக்கண் முன்னே வந்து நின்றது.

    அவற்றின் பின்னணியில் என் போட்டோக்களை நானே பார்த்து இதில்
எது நன்றாக அதாவது அழகாக இருக்கிறது ? என்று எடை போட்டேன்.

     பார்யாள் வந்தாள் . பார்த்தாள். என்ன செய்கிறீர்கள் இந்த பழைய குப்பையை பார்த்துகொண்டு. ....கேட்டாள்.

    ஒண்ணுமில்லே   இதிலே எது நன்னா இருக்கு அப்படின்னு பார்த்தேன்

   எது நிரந்தரமா இருக்கோ அதுதான் நன்னா இருக்கும் என்றாள்.

   அப்ப எதுவுமே நன்னா இல்லையா ? என்றேன்... ஒரு விரக்தியுடன்.

   அப்படி சொல்லலே. எது நிரந்தரமோ அதுதான் சத்யம். இருந்துண்டே இருக்கும்.

    அது சரிதான். இன்னும் ஒரு ஐம்பது வருஷம் கழிச்சு ஏன் ஒரு இருபது வருசத்துக்கு பின்னாடியே இந்த போட்டோக்களும் இருக்கப்போவதில்லே ..நாமும் இருக்கப்போவதில்லே ...  இந்த ஆல்பமும் யார் இவங்க அப்படின்னு நினைக்கற ஸ்டேஜுக்கு வந்துடும் இல்லையா.. ?

    அப்ப எதுதான் நன்னா இருக்கும் அப்படின்னு நினைக்கிரே ?

    ஒண்ணுதான்.   Truth is Beauty and Beauty is Truth.

    கீட்ஸ் நா சொல்லி இருக்கார்

    சத்யம் சிவம் சுந்தரம்.  அப்படின்னு நம்ம சொல்றோம் இல்லையா...

   அப்ப அது யாருன்னு நினைக்கிரே ?

    யஸ்ய பிரம்மணி ரமதே சித்தம் ...  
    நந்ததி நந்ததி நந்தத்யேவ 

யாரோட மனசு 
அந்த இறைவனிடத்தில் 
 நிலைத்து நிற்கிறதோ..  ...  
அவங்க அழகு. அவங்க  மனசும் அழகு. 
    


   படம் :  நன்றி: திருமதி இராஜ இராஜேஸ்வரி. அவர்களது ஆன்மீக வலை. 

Thursday, May 23, 2013

இது சரியா இல்லையா ?

உங்கள் பெற்றோருக்கு நீங்கள் எத்தனையாவது குழந்தை ?
நீங்கள் மூத்தவரா ? இளையவரா ? கடைசியா?

உங்கள் தொழிலும் வாழ்க்கையில் நீங்கள் அணுகுமுறையும் இந்த பிறப்பு வரிசையைக் குறித்தே இருக்கிறது என்று இந்த ஆய்வு செய்கிறது 

மேலே க்ளிக்குங்கள் \\\

வாழ்க்கையில் நாம் ரிஸ்க் எடுப்போமா இல்லையா என்பதை நாம் எத்தனையாவது குழந்தை என்பது தான் முடிவு செய்கிறது என்று சொன்னால்
அப்படியெல்லாம் இல்லை என அடித்து சொல்வோம் .

ஆனால் இதை படிக்கவும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லவும்

இது சரியா இல்லையா ?

மேலே க்ளிக்கியது உங்களை அழைத்துச் செல்லவில்லை எனின்,
கீழே கண்ட தொடர்புக்குச் சென்றால் வெப் எம்.டி. என்ற தளத்திற்க்குச் செல்லலாம்

http://www.webmd.com/parenting/rm-quiz-birth-order?ecd=wnl_emw_052213&ctr=wnl-emw-052213_ld-stry&mb=

Monday, May 13, 2013

காதுகளில் காதல் சொல்லி கண்ணன் அவனும் பொய்யன் ஆனான். .




Song from New Delhi (1956) comedy movie starring Kishore Kumar, Vaijayanti Mala, Jabeen Jalil, Radha Krishan, Nazir Husain, Shivraj
Director: Mohan Segal, Music Director: Shankar Jaikishan
Singer : Lata Mangeshkar








குழலே என் கண்ணனின் குழலே 
எனக்கு  எதிரி ஆனதே. 

கண்ணா .. நீ சொல் 
நின்  குழலே  எனக்குப் போட்டியா  ?
இல்லை  எதிரியா ?
உன் அதரங்களின் அருகில் 
இதழோடு இதழாய் இசையும் குழல் 
இந்த ராதையின் எதிரி ஆனதோ? 

கண்ணா நின் காதலில் மதி இழந்தேன்.

நின் குழல் ஒலிக்கும் இடமெல்லாம்
உனைத் தேடி அலைந்தேன்

 வாசம் நிறை இந்த வனத்திலே 
பிருந்தாவனத்திலே 
ராதை நான் என் தன இதயத்தை இழந்தேன். 
நின் குழலுடன் போட்டியிலே 
என்  வழியையும் இழந்தேன்.  

யமுனை கரைதனிலே  
எனைத் திருடிச்   செல்கையிலே 
என் மெய் மனம் மறக்கச் செய்தான். 
காதுகளில்  காதல் சொல்லி   
கண்ணன் அவன் கூட்டிச் சென்றான்.
பின்னே அவனும்  பொய்யன் ஆனான். . 

குழலே கண்ணா நின் குழலே 
எனக்கொரு எதிரி ஆனதே. 

murli ee
murli bairan bhayi ho
Kanhaiyya tori murli bairan bhayi
Kanhaiyya tori murli bairan bhayi
murli bairan bhayi
ho
Kanhaiyya tori murli bairan bhayi
Kanhaiyya tori murli bairan bhayi
baawri ee
baawri main ban gayi re
Kanhaiyya tori murli bairan bhayi
Kanhaiyya tori murli bairan bhayi
Bindravan ki kunjgali mein
Radha gayi dil haar
Bindravan ki kunjgali mein
Radha gayi dil haar
ab ankhiyan ki mast gali mein
ab ankhiyan ki mast gali mein
chhaliya phire baar baar




sautan mere man ko har gayi re
Kanhaiyya tori murli bairan bhayi
Kanhaiyya tori murli bairan bhayi
murli bairan bhayi ho
Kanhaiyya tori murli bairan bhayi
Kanhaiyya tori murli bairan bhayi




pyaar jataa ke tanman loota
peechhe pada beimaan
pyaar jataa ke tanman loota
peechhe pada beimaan
Jamuna tat par le gaya natkhat
Jamuna tat par le gaya natkhat
madhur sunaayi taan
jigar ke paar utar gayi re
Kanhaiyya tori murli bairan bhayi
Kanhaiyya tori murli bairan bhayi
murli bairan bhayi ho
Kanhaiyya tori murli bairan bhayi
Kanhaiyya tori murli bairan bhayi
baawri ee
baawri main ban gayi re
Kanhaiyya tori murli bairan bhayi
Kanhaiyya tori murli bairan bhayi

Monday, May 6, 2013

ஜோஹாரி ஜன்னல் வழியா அஞ்சு குட்டி கதைகள்.

ஜோஹாரி ஜன்னலுக்கு ஒரு கிளாசிக் உதாரணம் என்றால் நீங்கள் விஜய் டி.வி. லே தினசரி இரவு 11 மணிக்கு நடக்கும் கனா காணும் காலங்கள் தொடரினைப் பார்க்கவேண்டும்.

கொஞ்சம் நம்ப இயலாது தான். இதுமாதிரி எந்த அம்மாவுமே  இருப்பாங்களா.. இருக்க முடியுமா என்றெல்லாம் கேள்வி கேட்க வேண்டாம். 

அந்த சிவா வின் அம்மா. அவளும் அந்த கல்லூரி பேராசிரியர் . கண்டிப்பானவர்  ஆனாலும் தனது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கணவனை கோட்டை விட்டவள் போல் சித்தரிக்கப்பட்டு உள்ளார்  . அவளது மகன் அவள்; தன உயிராக நினைக்கும் அவள் மகன் , உனக்காகத்தான் நான் இருக்கிறேன் என்று சொல்லும் அந்த தாய் 

என்னோட அப்பா யாரும்மா என்று கண்ணீர் ததும்ப கேட்கிறான், அவளோ ரகசியங்களை உடைக்க தயார் இல்லை. 

இனி அவன் ஒரு நாள் அந்த ரகசியங்களைத் தெரிந்து கொள்வான் என்பது போலத்தான் கதை செல்கிறது. 

இந்த நிலை பாருங்கள். இவளுக்குள் இருக்கும் மன நிலைகள். தன பையனிடமும் கூட அதைப் பகிர முடியா நிலைகள்.  வாழ்வினிலே தனித்து இருக்கும் நிலை. 

பையன் இனிமேல் இவளைக் கேட்டு பிரயோசனம் இல்லை என்று தானே அது என்ன துப்பறியும் நிலை.

ஜோஹரி ஜன்னலின்  இரண்டாவது ஜன்னலின் ஒரு dimension   இது. 

*****************************************************************************************
கீழ் வரும் உதாரணங்கள் கதைகள் அல்ல முற்றிலும் உண்மைகளும் அல்ல. 
ஜோஹரி ஜன்னலின் இரண்டாவது சதுரத்தின் ஒரு விழுக்காட்டை இவை காண்பிக்கும்.

******************************************************************************************

அடுத்தது நடந்த ஒரு நிகழ்வு தான். நடந்து ஒரு பதினைந்து வருடங்கள் இருக்கலாம். 
சில உண்மைகள் மட்டும் சற்று கலர் அடிக்கப்பட்டு இருக்கிறது.  கதையின் சுவை கூட்டிட. 
அடிப்படையில் நிகழ்வு ஒன்று தான். 
 ****************************************************************************************

ஒரு நாள் கல்லூரி முதல்வர் அறையில் ஒரே சத்தம்  ஒரு யுத்தம் நடப்பது போல இருந்தது. உள்ளே சென்றேன்  சண்டை ஒன்று மில்லை. முதல்வருக்கும் ஒரு பேராசிரியருக்கும் வாக்கு வாதம் . 

என்னை பார்த்ததும் முதல்வர், வாங்க உட்காருங்க  என்றார்  .  நான் அப்போது துணை முதல்வர். 

அவர்கள் இடையே சொற்போர்   தொடர்ந்தது. 

ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.  அகில இந்திய அளவில் முதல் நிலை அலுவலர்கள் பயிற்சி நடை பெற்றுக் கொண்டு இருந்தது. எல்லா பேராசிரியர்களுக்கும் அவரவர்கள் தகுதி திறன் அறிவு அடிப்படையில் வகுப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தன  .  பயிற்சி  ஒரு ஆறு மாத காலம்.  ஒவ்வொரு பெரசிரியருக்குமே இது ஒரு சவால ஆகத்தான் இருந்தது.  ஏன்  எனின்  இந்த பேராசிரியர்கள் எடுக்கும் வகுப்புகள் ஆடியோ வீடியோ எல்லாம் செய்யப்படும், அது அவர்களுக்கே போட்டு காட்டப்பட்டு அவர்கள் பேச்சில் சொல்லித்தரும் பாணியில் இருக்கும் குறைகளை அவர்களே கண்டு பிடித்துக்கொள்ள வேண்டும். அது ஒரு sort of self assessment. 

எனது நண்பர்  அவரும் அங்கே ஒரு பேராசிரியர்.  திறமை சாலி . நன்றாகவே பாடம் நடத்துபவரும் கூட 
அவர் சொல்லிக்கொண்டு இருந்தார்  :
இந்த ஒரு குறிப்பிட்ட பாடம் .  அதை நான் நன்றாக குறிப்புகள் எடுத்துகாட்டுகள் தயாரித்து இருக்கிறேன். இதே வகுப்பை பல முறை எடுத்தும் இருக்கிறேன். vp  சார்கிட்டே வேண்டும் என்றால் கேட்டு பாருங்கள்.  நான் எடுப்பதில்  என்ன குறை கண்டு பிடித்தீர்கள் ?  நான் தான் இந்த வகுப்பு எடுப்பேன் என்று சொல்கிறார். 

முதல்வரோ விடாபிடியாக அந்த பாடத்தை இன்னொரு பேராசிரியரிடம் ஒப்படைத்து விட்டார் 
தனது முடிவினை மாற்றி கொள்வதாக இல்லை.  

ஒரு அரை மணி நேர விவாதத்திற்கு பின் .

அந்த பேராசிரியர் கோபத்துடன் வெளி நடந்தார் . . தன மேல் முதல்வருக்கு நம்பிக்கை இல்லை என அவர் நினைத்து வந்ததற்கு இதுவும் ஒரு இன்னும் ஒரு சான்று என்று நினைத்து இருக்கக்கூடும் 

அவர் கோபத்திற்கு இன்னும் ஒரு காரணம் அவரும் தனது பிரமோஷனை அந்த வருடம் எதிர்நோக்கி இருந்தார்  அந்த வகுப்பை  நிறுவனத்தின் டைரக்டர் பார்வையாளராக வந்து அமர்ந்து கவனிப்பதற்கு தன்னை பாராட்டு வதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் எதிர்பார்த்தார் 

அவர் சென்ற உடன் நான் முதல்வரைக் கேட்டேன் .  என்ன காரணம்.  ஹி  இஸ் ஆல்சோ இக்வலி  குட் என்றேன் . 

முதல்வர் சொன்னார் : அவர் அந்த சப்ஜெக்டை நடத்தினால் ஒரு க்ரெடிபிலிடி (credibility ) டெவலப் ஆகாது  என்றார். 

ஏன் ?

ஒன்னரை மணி நேரம் தான் கொடுக்கப்பட்ட நேரம் ஆனால் இவரோ இரண்டு மணி நேரம் அந்த வகுப்பை தொடர்ந்து நடத்து கிறார் 

அதனால் என்ன?  ஆடியன்சு கேட்டுக்கொண்டு தானே இருக்கபோகிறார்கள் ? இன்டரஸ்டிங் சப்ஜெக்ட் .  லஞ்சு டயம் கூட அப்ப இல்லையே ?   அப்பாவியாக கேட்டேன். 

அந்த சப்ஜெக்ட் என்ன என்று தெரியுமா உங்களுக்கு ? என்றார். 

என்ன என்றேன் 

Time Management 
*****************************************************************************************

இதை அவரிடமே கூறியிருக்கலாமே என்று தோன்றாமல் இல்லை. 
சில நேரங்களில் சில விஷயங்களை மனசுக்குள்ளேயே வைத்து கொள்கிறோம் . நாம் எடுக்கும் முடிவு நன்றாக இருந்தாலும் அதை அந்த முடிவினால் பாதிக்கப்படும் நபரிடம் சொல்வதும் அவரை புரிய வைப்பதும் நல்லது . பல தருணங்களில் ஏற்படும் ஒரு தவறான புரிதலை தவிர்க்க இயலும் .




இது இப்படி என்றால், சில சூழ் நிலைகளில் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது ஒரு சூழ நிலைக் கைதிகள் போன்றும் இருக்கிறோம் 
அன்று சொன்ன கதையில் ராகவேந்தர் போன்று.  என்னால் என்ன செய்ய முடியும் ? நான் சொல்
 வதை சொல்லிவிட்டேன் .  நடப்பது அவன் செயல் .  என்று வாய் இருந்து மூடிக்கொண்டும் இருப்பார்.  அது ஒரு குடும்பச் சூழல் என்பதால் பொறுப்பு அவரிடம் இன்னும் அதிகம்.  இழப்புகள் ஏற்படினும் அவரையும் பாதிக்கும்  
இப்போது விவரிக்கும்  கதை அல்ல, நடந்தது, சிறிது மட்டும் , பெயர்கள்  details மாற்றப்பட்டுள்ளன 
****************************************************************************************
*****************************************************************************************
ஏங்க ... இப்படி தொடர்ந்து மூணு மணி நேரமா வகுப்பு நடத்துவீக  ? 
ஒரு ஒரு மணி நேரம் பேசுங்க கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க ....என்று திடீர் என்று ஒரு நாள் க்வார்டர்சுக்கு லஞ்சுக்குப் போனபோது மனைவி கெட்டாள். 

எனக்கு ரெஸ்ட் எல்லாம் வேண்டாம் . தொடர்ந்து பேச முடியும். 

உங்களுக்கு இல்லீங்க. கேக்கற ஆடியன்சுக்கு வேண்டாமா 

பாதி பாடம் நடக்கும்போதே பசங்க தூங்கிடராக அப்படின்னு லே சொல்றாக 
ஒருவேளை  நீலாம்புரிலே எதுனாச்சும் தாலாட்டு பாடரீகளோ ?...
.
நல்லாத்தான் நடத்துறேன் அவுக ஏன் தூங்கராக யாரு சொல்றாக .. அப்படின்னு எனக்கு ஒன்னும் தெரியல்ல  ?

அன்னிக்கு உங்க ஸ்டூடன்ட் கேட்டு பாத்தேங்க   அவ என்ன சொல்றா தெரியுமுலே !!

யாரு ? என்ன கேட்டே ? 


அதான் . இஷிதா. அந்த  பெங்கால் காரி . நல்ல இந்தி பேசுவாளே அவ. 
எப்படி அவரு க்ளாஸ் ? பேச்சுவாக்கிலே கிண்டினேன்.


அவரு நடத்துற கிளாஸ் சூபரு. ஆனா எல்லோருக்கும்  புரியதான்னு சந்தேகம் . அப்படின்னு சொல்லுது 

ரொம்ப டெக்னிகலா இருக்கோ ? அப்படின்னு கேட்டேன் .

இல்லீங்க ஆடியன்சுக்கு   புரியற இங்க்ளிஷ்லே பேசனும்லெ . பீஹார் ஒரிசா லேந்து வந்தவங்க எல்லாமே இந்தி லே தான் புரிஞ்சுப்பாங்க  

ஏம்மா  அவருகிட்டே இதே சொல்றது. 

நான் சொல்லி அவரு என்ன செய்வாரு ? அவரு இங்க்லீஷ் லே தான் பேசியாகணும். அது தான் இங்கே மீடியம்
 ***********************************************************************************
சம்மட்டியால் என் தலையில் ஓங்கி ஒரு அடி விழுந்தாற்போல் இருந்தது
நான் இருட்டில் இருக்கிறேனா அல்லது என் மாணவர்கள் இருட்டில் இருக்கிறார்களா ?
********************************************************************************************
 THIS IS A CONVERSATION THOUGH NOT VERBATIM  BETWEEN ME AND MY WIFE IN 1998. 
I had the same feeling when we held  classes for Marketing Officials who were high performers . They came from Both Tamil Nadu and Kerala. A good many among them could not follow us, though they could understand English somewhat. . We felt helpless before an audience which lacked due response.  People who sponsored thought that being high performers they should be well up in English also, which was not the case.
I could not help but feel what is the purpose of talking if there is no listening.  
At times, we also keep our listeners blind.  
.**********************************************************************************
   Johari region 2 is what is known about a person by others in the group, but is unknown by the person him/her self. By seeking or soliciting feedback from others, the aim should be to reduce this area and thereby to increase the open area (see the Johari Window diagram below), ie, to increase self-awareness. This blind area is not an effective or productive space for individuals or groups. This blind area could also be referred to as ignorance about oneself, or issues in which one is deluded. A blind area could also include issues that others are deliberately withholding from a person. We all know how difficult it is to work well when kept in the dark. No-one works well when subject to 'mushroom management'. People who are 'thick-skinned' tend to have a large 'blind area'.
*********************************************************************************
இன்னும் ஒரு நிகழ்வு.  And this is not fictitious.

ஒரு சில நிறுவனங்கள் குறிப்பிட்ட காரணத்துக்காக சில முறைகளை பின் பற்றுகின்றன .  அண்மையில் ஒரு கம்பெனியில் எனக்கு இருக்கும் fixed deposit எப்.டி. முதிர்வுத்தொகை கெடுவாகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி இருந்தது.
எதேச்சையாக இது தெரிந்தது
கம்பெனிக்கு தொலைபேசினேன். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால், திரும்பவும் முதலீடு செய்வதாக இருந்தால், இன்று முதல் இன்றைய தேதி வட்டி விகிதத்தில் செய்து கொள்ளளலாம் என்றார். முதிர்வான தேதி முடிந்து மூன்று மாதம் ஆகிவிட்டது. அந்த மூன்று மாதங்களுக்கு வட்டி ? என்றேன் .
மத்திய வங்கி சட்டப்படி 15 நாட்களுக்கு உட்பட்டு புதுபிக்கபட்டால் தான் அந்த வட்டி தர முடியும் என்றார்கள்.
அது சரி, ஒரு நோடீஸ் எனக்கு அனுப்பி இருக்கலாம் இல்லையா என்றேன்.
எங்கள் நிறுவனத்தில் அனுப்புவதில்லை என்றார்.
ஏன் என்றேன். நான் சந்தித்த நபர் அந்த கம்பெனியின் டைரக்டர்.  எனது பழைய
தஞ்சை காலத்து நண்பர்
சூரி, எங்க கம்பெனிலே House wives அதிகம் பேர் முதலீடு செய்கிறார்கள். அவர்களுக்கு இதுபற்றி தபால் போட்டால் தேவை இல்லாத பிரச்னைகள் வருகின்றன என்றார்.

சன்ன குரலில், ஒரு பர்டிகுலர் கேசில் ரொம்ப சீரியஸ் ஆக போய் விட்டது. 
மனைவிக்கு அத்தனை பணம் எப்படி வந்தது அப்படின்னு கணவனுக்கு சந்தேகம்.  மனைவி சொன்னதெல்லாம் கணவன் நம்ப தயார் ஆக இல்லை. 

I was more worried about the customers who are illiterate or have lost the deposit receipt. 
கஸ்டமரே மறந்து போயிட்டார் அப்படின்னா அந்த டெபாசிட் என்ன ஆகும் ?
He shot back.
அஞ்சு வருஷம் வரைக்கும் எப்ப வேணாலும் வாங்கிக்கலாம்.
அதுக்கப்பரம் என்ன ஆகும்.
write off  ஆகிடும். என்று சொன்னவர் தொடர்ந்து 

. Any way this is company policy i cant talk much என்று சொல்லிவிட்டு டீ  ஆரிபோறது சாப்பிடு,  ஆத்துக்கு ஒரு நாள் கண்டிப்பா லஞ்சுசுக்கு வா என்று சொன்னார்

அந்த கம்பெனியின் ஆண்டு அறிக்கை பார்த்தேன். 
குறைச்சலாகத்தான் இருந்தது தொகை.   
உரிமை கோரப்படாத தொகைகள் (unclaimed domestic deposits ) கிட்டத்தட்ட 15 லட்சம் .

பணம் சம்பந்தமான தகவல்கள் மட்டு மல்ல பல குடும்பங்களில் மன சம்பந்தமான தகவல்களும் அவரவர் மனங்களிலே முழுகிக்கிடக்கின்றன
அவர்கள் இறக்கும்போது அவர்களுடன் அவர்கள் ரகசியங்களும் மரிக்கின்றன

அதற்கு இது ஒரு உதாரணமாக சொல்ல லாமா ?  நீங்கள் தான் சொல்லவேண்டும் 

vijay TV. Serial AVAL.

இந்த தொடர் நின்று போனதே ஏன் என்று தெரியவில்லை. 

அந்த நடுத்தரவயது பெண்மணி ஒரு சமூக அந்தஸ்து உள்ள பெண்மணியாக சித்தரிக்க படுகிறாள். அவள்  சட்டென்று நினைவுக்கு வரவில்லை ஜானகி என
அழைப்போம். 
ஜானகியின்  பெண் திருமணமாகி செல்லும் இடத்தில் இன்னொரு  பெண். இருக்கிறாள்.  அவள் பெயர் ஷாலினி  . ஷாலினி  இவளது மருமகனின் வளர்ப்புத் தங்கை ஆக அறிமுகம் செய்கிறார்கள். . 
ஜானகியின் பெண்ணுக்கு தன கணவன் மேலும் அந்த ஷாலினியின் மேலும் சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது 
ஜானகிக்கே இது சரியில்லை இந்த அண்ணன் தங்கை உறவு என்று படுவதால் அவளைப்பிரிக்க முயல்கிறாள். 
ஷாலினியைக் காப்பாற்ற ஜானகியின் தந்தை ஒரு கிழம் தடுமாறுகிறது. ஷாலினியின் பிறப்பு பற்றி இருக்கும் ஒரு நிஜத்தை ஒரு இருபது வருடம் கழித்து வெளியிட முடியவில்லை. உண்மையிலே அந்த பெண் ஜானகியின் 
பெண்தான் . திருமணத்திற்கு முன்பே இன்னொருவனால் காதலிக்கப்பட்டு 
காதலன் வெளி நாடு செல்வதாக ஏமாற்றி செல்கிறான். இவளுக்கு குழ்ந்தை 
பிறக்கிறது. அதை இறந்தே பிறந்தது என்று ஜானகியை நம்பச் செய்து விடுகிறார்கள். 
அந்தக் குழந்தை இருபது வருடம் கழித்து எதிரே வந்து நிற்கிறது 
இதலாம் சாத்தியமா என்று கேட்காதீர்கள்  .
இது டிவி சீரியல். 
நம்மை பொறுத்த அளவில் ஜானகியின் தந்தை ஒரு ரகசியத்தை மனதில் வைத்துக்கொண்டு தன்னையும் சிதைத்துக்கொண்டு ஜானகி வாழ்வை மட்டு மல்ல, ஷாலினி, ஜானகி யின் மகள் யாவருக்குமே உண்மையைச் சொல்லாமல் காலத்தை போக்குகிறார்  

தனக்கு மட்டும் தான் தெரியும் என்ற நினைத்த ரகசியம், இன்னொருவருக்கும் 
தெரிகிறது என்பது பின்பு தான் அவருக்கு புரிகிறது  
ஏகப்பட்ட குழப்பங்கள் 

இதுவும் ஒரு உதாரணம்  
ஜோஹரி ஜன்னலின் இரண்டாவது சதுரம்
தன் குடும்பத்தையே சரிவர நிர்வகிக்க தவறிவிட்டார் அந்த பெரியவர் 
CLEAR CASE OF MUSHROOM MANAGEMENT. 


 ஜோஹாரி ஜன்னல் வழியா அஞ்சு குட்டி கதைகள். 






   

Wednesday, May 1, 2013

When All the Doors Are Open, I Close Mine. So What ?

When  all the doors are closed, God opens His. 
But here,
when all the doors are open, I close mine. 
So what ? It is my choice.

எல்லாக் கதவுகளுமே மூடி விட்டன .
என் செய்வேன் எனக் கதறிய காலத்திலே
 கடவுள் தன் கதவுகளைத் திறந்தான் 

ஆனால் எல்லாக் கதவுகளுமே திறந்திருக்கின்றன 
நான் என் கதவுகளை மூடிவிட்டேன். 
அதனால் என்ன ?
அது என்னுடைய முடிவு 
எனது இஷ்டம் 





 P L E A S E    C L I C K   A B O V  E.

!
ஜோஹரி சன்னலின் இரண்டாம் சதுரத்திற்கு செல்லப்போகிறோம்.

உங்க இஷ்டம். தியரி படிக்கணும் அப்படின்னா தொடர்ந்து படிக்கலாம் 
இல்ல, 
இதை விளக்க ஒரு கேஸ் ஸ்டடி இருக்கு 
கதை போல, 
அது போதும் 
என்றால்   
இரண்டாம் பகுதிக்கு நேரடியாகச் செல்க 
 PART TWO. IS FOR YOU.

AGAIN YOU CAN READ THE STORY FIRST AND COME BACK TO THE THEORY.
OR READ THE THEORY FIRST AND 
APPLY THE THEORY IN THE SECOND PART.
கதை படித்துவிட்டு பிறகும் வந்து இந்த தியரி என்ன சொல்கிறது 
நான் புரிந்து கொண்டது சரிதானா என்றும் நீங்கள் உங்களையே 
சோதித்து பார்த்துகொள்ளலாம் 

  IT IS YOUR CHOICE.
********************************************************************************
இரண்டாவது சன்னல் 

ஆபத்தான கட்டம் என்று சொன்னேன்.
ஏன் எனச் சொல்லட்டுமா ?
Why should I listen when I am correct ?

இருட்டிலே தடுமாறுபவர் எப்படி இருப்பார் ?
அதுவும்  தடுமாறுபவர் குருடாக இருந்தால் ?

இதிலே இன்னொரு சிக்கல். நம்பர் 2.
தடுமாறுபவர், தான் சரியான வழிதான் செல்கிறோம் என நினைத்துகொண்டு இருப்பார்.

இன்னொரு சிக்கல். நம்பர் 3.
அவருக்கு சரியான வழி எது என்ன சொல்ல எவரையுமே  அவர் அனுமதிப்பது இல்லை

அடுத்ததும் ஒரு சிக்கல் நம்பர் 4.
சரியான வழி இது சொல்லும் எந்த நபர் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை.
கடைசி சிக்கல். நம்பர் 5.

நாளா வட்டத்தில் அவருக்கு வழி என்ன என்று சொல்வதற்கே ஆட்கள் இல்லை

இது சைகாலஜி ஹெச்.ஆர். மாணவர்கள் அறியாத ஒன்றல்ல. Dr.A.Thomas Harris M.D. published his work TRANSACTIONAL ANALYSIS in the year 1972. It offered hope and a scale for millions of people living then to understand their patterns of behaviour while dealing with others in the society. 

What follows in the next few lines, is an attempt to convey in simpler terms in a lay man;s language 

ஈண்டு இவ்வுலகத்தே நான்கு விதமான மக்கள் மன ரீதியிலே இருக்கின்றனர்
 பொதுவாக, அவர்கள் சிந்தனை ஓட்டம் எப்படி இருக்கும்

இராமன் பரதனிடம் பேசுகிறான் என வைத்துகொள்வோம்
பேசும்போது பல விஷயங்கள் பேசுகின்றனர்
முடிவில் ,
இராமன் மனம் எப்படி எல்லாம் சொல்லும் ?   நீ என்பது பரதன். .

1. நான் சரி.  நீயும் சரி.      I am OK . You are also OK.
2. நான் சரி நீ தவறு. .       I am OK. You are NOT OK.
3. நான் .தவறு  நீ சரி .      I am NOT OK. you are OK.

4, நான் தவறு நீயும் தவறு.  I am not OK. You are not also OK. .

முதல் நிலையில் ராமனுக்குத் தெரிகிறது. தானும் சரி. பரதனும் சரியே
இருவரும் இணைந்து செயல்  எது என்ன நிச்சயித்து அதை எப்படி செய்வது என்ற அடுத்த குறிக்கோளுக்கு சென்று விடுகிறார்கள்.  பிரச்னை இல்லை.


நான்காவது நிலையிலும் பிரச்னை இருக்காது அதிகமாக .

இவனைக் காது கொடுத்து கேட்ட பின்னே நான் சரி என்று தோன்றவில்லை.
ஆனால், இவன் சொல்வதும் சரியாகப் படவில்லையே .

இராமன் நினைப்பதை பரதன் ஒத்துக்கொள்ளும் நேரத்திலும் பிரச்னை இல்லை.

இருவரும் சேர்ந்து, யாருக்கு இது பற்றி தெரியும், அவரை நாடுவோம் என்று முடிவு எடுப்பார்கள்  .

பரதன் ஒத்துக்கொள்ளாத நிலையில் தான் சங்கடம்.embarrassment எனப்பொருள் கொள்க.

பரவாயில்லை.  இப்பொழுதைக்கு அவனும் தனக்கு தெரியாது தான் நினைப்பது சரியல்ல எனவே சொல்லுகிறான் எனக்கொள்வோம் 

ஆக முதல் நிலையிலும் நான்காவது நிலையிலும்,
ஒரு குழுவாக இயங்கும் நபர்கள் ஒரு வெல்வோம் வெல்வோம் என்ற நிலையிலே இருக்கின்றனர். ஆங்கிலத்தில் இதை வின் வின் win win situation
எனக் குறிப்பு இடுகிறோம்.

பிரச்னை இரண்டாவது அல்லது மூன்றாவது நிலைகளில் தான்.

முதலில் இரண்டாம் நிலை.

இராமன் தான் சரி என நினைக்கும்பொழுது,  பரதனை தன மன நிலைக்கு எப்படி கொண்டு வருவான் ?
அவனுக்கு என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்கின்றன ?
1. பரதனுக்கு திரும்பவும் ஒரு முறை பிரச்னை என்ன என்பதை விவரிப்பது.
பிரச்னையை தீர்ப்பதற்கு பரதன் ஒரு வழி சொல்லி இருந்தால் அதில் என்ன
தவறு இருக்கிறது என்று எடுத்து சொல்வது.
2. பரதனுக்கு இன்னும் சற்று நேரம் அளித்து நன்றாக யோசித்து வா.
என சொல்வது.
3. பரதன் அடுத்த நாளும் அதே நிலையில் இருந்தால்,
நம் இரண்டு நபர்களில் முடிவுக்கு பொறுப்பு எனக்கு அதிகம் இருப்பதால்,
நான் சொல்வதை நீ கேட்டு செயல் படவேண்டும் என ஆணை இடுவது
4. பரதன் தனது ஆணையை ஒத்துக்கொண்டு செயல் படமாட்டான் எனத் தோன்றினால் , உன்னை நான் வற்புறுத்த விரும்பவில்லை. நாம் இந்த செயலில் பிரிவோம் என தெளிவாக சொல்லுதல், பிரிதல்
parting with dignity.

இது போல் நடந்தால் பிரச்னை இல்லை. பரதனுக்கு என்னொரு வேலை கிடைக்கும் .  குழுத் தலைவர் அதற்கானவற்றை செய்வர்
இதே கட்டத்தில்
 பரதன்  வேறு விதமாகவும் செயல் படலாம்.

1.எனக்குத் தெரியும் இவன் தவறு என்று. எனக்கென்ன. ?
முடிவு தப்பாக இருந்தால் நான் பொறுப்பில்லை அதனால் நான் கவலைபடவேண்டாம் பகவான் விட்ட வழி என்று ஒதுங்கலாம்.  மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இராமன் சொன்னபடி செய்யலாம்

2. இவனை ஒரு வழி பண்ணுவதற்கு இது தாண்டா சான்சு. பேசாம ஜால்ரா
அடித்து கடைசிலே நீங்க சொன்னா மாதிரி செஞ்சேன் .நான் என்ன செய்வது
என்று ஜகா வாங்கலாம் . பஞ்சாயத்து கூடினாலும் என்ன ஒன்னும் சொல்லாது.

3. இத்தனை சொல்லியும் கேட்கல்லியே  இங்கே நான் பெரியவன் அவனை விட படிச்சவன் அப்படின்னு ஒரு மதிப்பு இல்லையே  ?
மனசுக்குள்ளே மத்தாப்பு அல்ல. புழுக்கம். வெளியிலே வேறு விதமாக
நடிக்கிறார் பரதன்.  இராமனுக்குத் தெரியாமல் காலை வாருகிறார்
கடைசி வரை இராமன் கண்ணிலே தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இருப்பதற்கு என்ன உண்டோ அத்தனையும் செய்கிறார்

4. இராமனுக்கு எதிரே போர்க்கொடி உயர்த்தி , தீர்மானிக்கப்பட்ட  செயல் துவங்கவே முடியாமல் அதை த்வம்சம் செய்துவிடுகிறார் .

பரதன் இதைத் தவிர இன்னமும் பலவாறு யோசிக்கலாம்.

வாசகர்கள் இதை ஒரு தியரி ஆக படிக்காமல், உங்கள் வாழ்க்கையில் நடந்த அல்லது நீங்கள் பார்த்த ஏதேனும் ஒரு நிகழ்வுடன் இதைப் பொருத்தி பாருங்கள் .
உங்கள் உணர்வுகள் என்ன ?
*******************************************************************************
பின் வருவது. ஒரு உண்மைக்கதை அல்ல. இன்னொருதரம் அல்ல
கதை தான். இதில் வரும் பாத்திரங்களோ அல்லது சம்பவங்களோ எதுவும்
நடந்ததாக நாங்கள் சொல்லவில்லை.
இதை படித்து விட்டு யாருக்கு ஏதும் மன உளைச்சல் வரவேண்டாம். அப்படி வந்தால் சுப்பு தாத்தாவோ நான் என்ன செய்யட்டும் அது உங்க விதி என்று சொல்வதற்கு சான்சு நிறையாவே இருக்கிறது
இது ஒரு
CASE STUDY.  THAT's ALL.
***************************************************************************
                                                      P A R T   T W O 
                      T H E   C A S E   S T U D Y.
*************************************** 

     


முன்னுரை.
ராகவேந்தர் ஒரு செல்வந்தர் பண்பானவர்  வேலை அப்படின்னு பார்க்கனும்னு எப்பவுமே அவருக்கு தேவை இருந்தது இல்லை. ஷேர் மார்கட் லே சம்பாதித்தது இன்னமும் அஞ்சு தலை முறைக்கு தூங்கிண்டே இருந்தாலும் காப்பாத்தும்
ஒரு பையன் கிருஷ்ண சந்தர். கிருஷ்ணன் என்று ஸ்கூல் பெயர் கிருஷ் செல்லப்பெயர் .சட்டப் படிப்பு முடித்து விட்டு ஒரு தனியார்  கம்பெனியில் இப்பொழுது தான் ஒரு ஆலோசகர் வேலையில்  அமர்ந்து  இருக்கிறான் .

 .இரண்டு பெண்கள் கங்கா யமுனா. கங்கா மருத்துவ கல்லூரியில் இரண்டாம் வருடம். யமுனா பிளஸ் டூ

ராகவேந்தர் தனது மூத்த மகன் கிருஷ்ண சந்தருக்கு   திருமணம் செய்ய நினைக்கிறார் .    தன் மனைவி லக்ஷ்மி யிடம் சொல்லுகிறார் மனைவியின் முகத்திலும் பிரகாசம்.

அதுக்கென்ன செஞ்சுடுவோங்க. என்கிறாள்.

இந்த வாரமே ஹிந்து பேப்பரில் மேட்ரிமோனியல் பகுதியில் BRIDE WANTED பகுதியில் கொடுத்து விடலாம் என்கிறார்.

மதுரை என எதோ சொல்ல ஆரம்பித்து  .....                               நாக்கைக் கடித்துக்கொண்டு ....... ஒரே வார்த்தையில் சன்னமா, செய்யுங்க ...
என்று சொல்லிவிட்டு லக்ஷ்மி ....செல்கிறாள்.


ஞாயிறு பேப்பரில் பார்த்து எல்லோருக்கும் உற்சாகம்   கங்காவும் யமுனாவும் கிருஷ்ணனை கிண்டலோ கிண்டல் எனக் கிண்டல் அடிக்கிறார்கள்.
நடு நடுவில் ஏண்டா கிருஷ்ணா, மாமா மகளை மறந்து விட்டாயா என்கிறாள் கங்கா.  அதிருஷ்டம் பண்ணி இருக்கணும்டீ அதுக்கெல்லாம் என்கிறாள் யமுனா. அங்கு வந்த அப்பாவை பார்த்து விட்டு சும்மா சொன்னேன் அப்பா
என்று சொல்லி தனது அறைக்குச் செல்கிறாள் கங்கா. அப்பா யமுனாவை ஒரு பார்வை பார்க்கிறார்.  யமுனாவோ அம்மா அம்மா எனக் குரல் கொடுத்துக்கொண்டே நழுவுகிறாள்.

எல்லோருமே அந்த ஹிந்து பேப்பரை அந்த AD ஐ திருப்பி திருப்பி படித்துக் கொண்டு இருக்க, அதில் அந்த அளவுக்கு லக்ஷ்மிக்கு கவனம் இல்லை என்பதை ராகவேந்தர் கவனிக்கிறார்.


 மாலை 4 மணி இருக்கும். வாசலிலே கார் வந்து நிற்கிறது.
மதுரையில் இருந்து லக்ஷ்மியின் அண்ணன் நாராயணன் வருகிறார் அவர் கூடவே அவரது தர்மபத்னி சாரதா.  நாராயணன் எதோ ஒரு கம்பெனியிலே
இப்ப ஒரு ப்ராஞ்ச் ஹெட்.   சின்ன கம்பெனி தான்  அந்தக் காலத்துலே சேர்ந்தது . பெஞ்சு தேச்சு தேச்சு இந்த லெவெலுக்கு வந்து இருக்கார்
சாரதா ஒரு ஸ்கூல் லே டீச்சரா இருந்தாள். இப்ப அசிஸ்டென்ட் ஹெச் எம்மாம்.

என்னது திடீர் என்று விஜயம்!!
ராகவேந்தர் கேட்கவில்லை. நினைத்து கொண்டார்

வாங்க அண்ணா, வாங்க மன்னி என்று வாய் நிறைய அழைத்தாள் லக்ஷ்மி.

எங்கே அண்ணா சாவித்திரி என மெதுவாகத்தான் லக்ஷ்மி வினவினாள் .

பதில் சொன்ன சாரதா , "அவளுக்கு இன்றைக்கு ஹாஸ்பிடல் லே அவள் தான் டுடீ டாக்டராம். நான் வரவில்லை என்று சொல்லி விட்டாள்"  என்றபோது, :ஆமாம் ஆமாம்,  வேலையை போட்டுட்டு  வரவா  முடியும்" என்றாள் லக்ஷ்மி.

 திடீர்னு என்ன ஐக்கியம் அப்படின்னு நினைத்துகொண்டார் ராகவேந்தர்

 அடுத்த மூன்று  மணி நேரம் அவர்கள் தங்கள் இரு வீட்டு க்ஷேம லாபங்களை பகிர்ந்து கொள்வதிலும் சமையல் அறையில் இருந்து வந்த சுடச்சுட போண்டவிலும் ஆர்டர் பண்ணி வந்து இருந்த பிஸ்ஸாவை  சாப்பிடுவதிலும் கழித்தனர் . 

அப்பப்ப ராகவேந்தர்க்கு செல் அடிச்சுண்டே இருக்கு. எந்த ஷேர் விக்கலாம் வாங்கலாம் அப்படின்னு ஏகப்பட்ட பேருக்கு இவர் அட்வைஸ்.

ஷேர் மார்கெட் என்னானே நாராயணனுக்கு புரியாத விஷயம் நமக்கென்ன மாப்பிள்ளை நன்னா சொத்து சேர்த்தாச்சு. அதுதானே இன்னிக்கு எல்லாவற்றையும் விட முக்கியம்

ஒரு நல்ல சமாசாரம் இன்னிக்கு ஹிந்து பேப்பர்லே பார்த்தேன் அதான் வந்தேன் என்று ஆரம்பித்தார் நாராயணன்  ராகவேந்தர் புரிந்து கொண்டார். அவர் லக்ஷ்மியை பார்க்கும்போது அவளோ நாராயணிடம் சிரித்துக்கொண்டே சொன்னாள் அதானே இன்னுமா நீ பார்க்கவில்லை , அதுபற்றி பேச்சே எடுக்கலையே என்று இருந்தேன்

 ஆமாம். லக்ஷ்மி, கிணத்து தண்ணி எங்கே போயிடும் என்று தான் இத்தனை நாள் நாங்க இருந்தோம் இன்னிக்கு பேப்பர்லே பார்த்தபின்னே உடனடியாக
சொல்லணும் ஒரு நல்ல முடிவா இருக்கணும் அப்படின்னு புறப்பட்டு வந்துட்டோம் என்றார் நாராயணன்.

கங்கா கிருஷ்ணனை  எங்கே இவன் எனத் தேடினாள்.  
என்ன நடக்கும் என்ற ஒரு டென்சனில் இருப்பதாக அவன் கண்கள் சொல்வதாக இருந்தது   பக்கத்தில் போய் ஆல் த பெஸ்ட் என்று கிசு கிசுத்தாள்.


எனக்கும் உறவு விட்டுப்போகக்கூடாது அப்படித்தான் தோன்றது.
இவர் என்ன சொல்வார் அப்படின்னு தெரியல்லையே
என்றாள் லக்ஷ்மி.

நீ சொன்னால் இங்கே அப்பீலே கிடையாது லக்ஷ்மி,
எனக்குத் தெரியாதா என்ன. . ?    இது நாராயணன்.
மீனாச்சி ராஜ்ஜியம் சொக்கனுக்கும் புரிந்த விஷயம்.

ராகவேந்தர் ஏதும் பேசவில்லை.
ஆனால்,  சாரதாவோ இந்த பேச்சில் ஒரு உற்சாகம் இல்லை என்பது போல முகத்தை வைத்து கொண்டு இருந்தா:ள்

இப்போது கங்காவும் இல்லை. யமுனாவும் இல்லை.

கொஞ்ச நேரம் யாருமே பேசவில்லை.
ஒண்ணுமே யாரும் சொல்லாமல் இருந்தால் என்ன எப்படி ? என்று திரும்பவும்
துவங்கினார் நாராயணன்.
ராகவேந்தர் லக்ஷ்மியைப் பார்த்தார் .
இந்தப்பக்கம்,
சாரதா  பக்கம் திரும்பி பார்த்தபோது அவள் அங்கு கிடந்த குமுதத்தை புரட்டிக்கொண்டு இருந்தாள்.

திடீர்னு முழிச் சுண்டது போல, சாரதா  ஒரு வார்த்தை ஒரு லட்சம் போல  நடுவிலே.சொன்னாள்.
 அவள் மேலே படிக்கணும் இந்த பீல்டுலெ இன்னும் நெறையா தெரிஞ்சுக்கணும். கொள்ளை ஆசை. அதுலேயே குறியா இருக்கா. 

சாவித்திரி இஸ் ஆல்வேஸ் போகச்ஸ்ட்
என்று சொல்லும்போது  ராகவேந்தர் கிருஷ்ணனைப் பார்த்தார்  .

அதை கவனிக்க நாராயணன் தவறவில்லை. சாவித்திரி அளவுக்கு கிருஷ் ஒரு அகடெமிக் இன்டளிஜன்ட் இல்லைன்னு தெரிந்ததுதான்

அவருக்கு கிருஷ் அந்த அளவுக்கு போகலைன்னு ஒரு குறை இருக்காதா ..
அதனாலே என்ன....கிருஷ் என்னோட  தங்கை பையனாச்சே .. சூர்யா மாதிரி ஒரு அப்பியரன்சு  சட்ட படிப்பு
அது போதாதா என்ன.  

நாராயணன் மனசுலே என்ன ஓடறது அவர் மனசிலே என்ன நினைக்கிறார் அது  ராகவேந்தருக்குப் புரியாமல் இல்லை

எல்லாமே கிராண்டா செஞ்சுடுவோம்.  .  நாராயணன்

எனக்கு தெரியாதா என்றாள் லக்ஷ்மி.

அடுத்து, என்ன செய்வது எப்படி திருமணத்தை கிராண்டா செய்வது என்பது பற்றி த்தான் இருவருமே முனைந்து பேசுவது போல சாரதாவும் நினைத்தாள் . அ ப்பப்ப  லேட் ஆகிவிட்டது என்று கணவரிடம் நச்சரித்து கொண்டும் இருந்தாள் .

இருங்கோ ... சாவித்ரிக்கு ஒரு போன் செய்துவிட்டு வருகிறேன்
என்று செல்லை எடுத்துகொண்டு அந்தப்பக்கம்  சாரதா.

ஒரு அரை மணி நேரம் ஏதோ பேச்சில்  கழிந்தது.
ராகவேந்தர் இன்னமும் மௌனத்திலே தான் இருந்தார்

சரி சரி.  நான் சொல்லிட்டேன் எனக்கும் லக்ஷ்மிக்கும் இதில் பூர்ண திருப்தி. சம்மதம்.  நீங்க இதுக்கு ஓகே சொல்லிட்டா நான் மண்டபம் புக் பண்ணுவேன் இந்த காலத்துலே பையன் ஒரு நிமிஷத்துலே புக் ஆயிடறான். மண்டபம் கிடைக்க குதிரை கொம்பாகி விடுகிறது.
என்று சொன்ன நாராயணன்
எங்கே இவள் ..சாரதா  எனக் கூப்பிட்டார்
நான் இங்கே இருக்கிறேன் என்று வாசலில் கார் பக்கத்தில் இருந்து குரல் கொடுத்தாள்  சாரதா.

சாவித்திரி உடன் செல்லிலே பேசிண்டு இருந்தேன் 
உங்களை டிஸ்டர்ப் பண்ண விரும்ப வில்லை
 என்றாள் சாரதா.

சரி நீங்க உள்ள வாங்க 
அப்படின்னு லக்ஷ்மி சாரதாவை உள்ளே இருந்தபடியே அழைத்தாள்.

சாரதா உ ள்ளே வரும்போது, " இன்னமும் சாவித்திரி கிட்டே இது பத்தி பேசவே இல்லை. அதையும் உங்க கிட்டே சொல்லணும் இல்லையா
என்று சன்ன குரலில் சொன்னது ராகவேந்தர் செவியில் விழாமல் இல்லை.

கங்காவும் யமுனாவும் மாமா மாமிக்கு டா டா சொன்னார்கள்.

அடுத்த இரண்டு நாட்கள். அமைதியாக கழிந்தன
மூன்றாவது நாள்.
வந்தவர்களுக்கு  பதில்சொன்னாத்தானே அவர்கள் அடுத்த ஸ்டெப்புக்கு  போக முடியும் ...
லக்ஷ்மி.

அவர்கள் முதலில் தன் பொண்ணு கிட்டேயே பேசல்லயே ....
ராகவேந்தர்.

அவ என்ன சொல்லப்போறா.  கரும்பு கசக்குமா என்ன..நாளைக்கே அவளுக்கு
ஒரு கிளினிக் வைக்கணும்னா இருபதோ முப்பதோ நம்ப தான் கொடுக்கணும். அது அவளுக்கே நன்னாத் தெரியும் சமத்து பொண் அவள்.

ராகவேந்தர் இப்போதைக்கு இப்படியே இருப்போம். அவருக்கு சாரதாவோ அல்லது சாவித்ரியோ ஒரு ப்ரேக் போட்டால் நல்லது என்று நினைப்பு

தன் பையனைப் பற்றி லக்ஷ்மி நன்றாகவே புரிந்து வைத்து இருந்தாள்.
நல்ல பையன். அவன் படிப்புக்கு இந்த  உத்தியோகம் போதும் நமக்கு எதுக்கு வேலை எல்லாம் ? கிருஷ்  ரொம்ப எ துக்குமே அலட்டிக்க மாட்டான்..
வந்ததை வரவில் வைக்கும்  மன நிலை. எதுவும் பெரிசா கிடைக்கல்லேன்னா பெரிசா வருத்தமும் படமாட்டான். சுக வாசி.
காதல், கீதல் இதெல்லாம் ஊஹும்  சரிப்பட்டு வராது. சாவித்திரி எப்படியும் கிடைப்பாள் என்று மனசுக்குள்ளே ஒரு எண்ணம் இருக்கலாம்.

நீ என்னடா சொல்றே..  அப்படின்னு அப்பாக்கு நேரே கேட்டாள் லக்ஷ்மி.
உன் கையிலே தாம்மா இருக்கு என்றான் கிருஷ்.

லக்ஷ்மி அர்த்தத்தோட ராகவேந்தரை பார்த்தார்
என்னிக்குமே கிருஷ் அம்மா கோண்டு.
புதுசா பாத்து அந்த குடும்பம் சரியா இருக்கான்னு விசாரிச்சு பின்னே எதுனாச்சும் நடந்து வருத்தப்பட இல்லாம தெரிஞ்சவர்களே நல்லது இல்லையா. என்றாள் லக்ஷ்மி.

அம்மா சொன்னா ரைட்டாத்தான் இருக்கும் என்றார்கள் கங்காவும் யமுனாவும். கிருஷ் ஒரு ரஜினி புன்னகை பூத்தான்.



அப்பா ஜாஸ்தி பேசமாட்டார் என்று அவனுக்குத் தெரியும். சாவித்திரி  நன்றாகத்தான் இருக்காள். அழகுக்கு என்ன குறைச்சல். டாக்டர் வேற.
இங்க வந்து நம்மோட இருக்க முடியும்னா நன்னா இருக்கும் இல்லைன்னா
என்ன செய்யறது அதை  அப்பறம் யோசிச்சுக்கலாம்.  இப்படிதான் அவன்
மனசு நினைத்தது. .

என்னோட மருமகள் ஒரு டாக்டராக்கும் அப்படின்னு லக்ஷ்மி ஆல்ரெடி ஒரு மனசுலே வந்து விட்டாள்.

ஏதாவது நடந்து சாவித்திரி, "என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க இப்போதைக்கு நான் படிச்சு முடிச்சப்பறம் பார்த்துக்கலாம் "என்று சொல்வாள்  என்று ராகவேந்தர் நினைத்தது நீர்த்துப்போனது.

சாவித்ரிக்கு மனசுக்குள்ளே கல்யாணம் வேண்டாம் அப்படின்னு இல்லை. அத்தை மகன் புடிக்காமயும்  இல்ல. அது ஒருபக்கம் . இன்னொரு பக்கம். கிளினிக் வைக்கணும்னா அவர்கள் உதவி இல்லை அப்படின்னா ஒண்ணுமே முடியாது.
அப்பா கிட்டே அந்த அளவுக்கு பணம் கிடையாது. படிப்புக்கு வாங்கின லோனே இன்னும் அடைஞ்ச பாடில்ல . இப்போதைக்கு அவள் நாட்டம் எல்லாமே எம்.டி. படிப்பு. அதற்கான முழு மூச்சில் முயற்சி. ஒரு இன்டர் நேஷனல் லெவலுக்கு ஒரு ரிசர்ச் செய்யணும்.   அது யு. ஈஸ். யுனிவர்சிடி லே செய்யணும்.
அதுதான் லைப்லே முதல் குறிக்கோள்.


அப்பா சொன்னார் இல்ல காதோட கிசுத்தார்
 ஒரு நிச்சயம் பண்ணி வெச்சுப்போமே உன்னோட எம்.டி. படிப்பு முடிஞ்சப்பறம் கல்யாணம் அப்படின்னு கூட சொல்லிக்கலாமே

சாவித்ரிக்கு அப்படி  நடக்காது என்று தெரியும் ஆனா திருமணம் லேட்டோ உடனடியோ அதை அவ்வளவு ஒர்ரி பண்ணிக்கவில்லை  அப்பாவுக்கு குறுக்கே நிற்கவும் விருப்பம் இல்லை.


இங்க, ராகவேந்தர் லக்ஷ்மியிடம் ஒரு நாள் சொன்னார். இவர்கள் இரண்டு பேரோட ஜாதகத்தை நம்ம வீட்டு ஜோசியர் கிட்டே காட்டினேன்.
கோவிச்சு காதீங்க.. இது இரண்டு ஜாதகமும் பொருந்தாது 
அப்படின்னு சொல்றாரே ..

என்னை கேட்காம நீங்க எப்பவுமே இப்படி ஒரு வேலைய செஞ்சுடுவீங்க அப்படின்னு நான் நன்னாவே எதிர்பார்த்தேன் . டான்னு பதில் லக்ஷ்மி .

அஷ்ட சஷ்டகம் . ஆறும் எட்டும் ஆக இருக்காம்.  கிருஷ்ணனுக்கு மகரம்
சாவித்திரி சிம்மம். இந்த அஷ்ட சஷ்டகம் ரொம்ப படுத்தும் அப்படின்னு ,....

ஜோஸ்யர் அப்படித்தான் சொல்லுவார். இன்னும் ஒரு அம்பது கூட கொடுத்தீங்க அப்படின்னா இதைப்போல உசத்தி ஜாதகம் கிடையாது அப்படின்னு சொல்லுவா.

மாமன் மகள், அத்தை புள்ளை இவர்களுக்கு பொருத்தம் பார்க்கணும் அப்படின்னு எந்த மடையன் ஜோசியன் எந்த புத்தகத்தில் பார்த்து சொன்னான்?

நம்ம ஜோசியர் தான். கங்காவை மெடிகல் காலேஜிலே சேக்கலாமா வேண்டாமா அப்படின்னு அவர் கிட்டே தானே நீ கன்சல்ட் பண்ணினே

அது கங்காவுக்கு. இது கிருஷ்ணன் சமாசாரம்.

எனக்கு ஒண்ணுமில்லே  என்ன நாளைக்கு ஒன்னும் சொல்லகூடாது.
அன்னிக்கே சொல்லலையே. அப்படின்னு ....

நான் வாயை தொறந்தா சொல்லுங்க..

ஒரு தினுசா தன்னோட உண்மைக் கவலை என்ன அப்படின்னு வாயைத் திறந்தார் ராக வேந்தர் :

"அவ படிப்பு படிப்பு அப்படின்னு அதுலேயே இருக்கா. மேல் நாட்டுக்கு போனாலும் போயிடுவா.  இவனுக்கு... இவன் படிப்புக்கு ...அங்கே என்ன கிடைக்கும் ? அதெல்லாம் யோசித்தாயா ? "

வாய் ஏனோ சொற்களை உதிர்க்கவில்லை. கேட்டு பிரயோசனம் இல்லை.

ராகவேந்தர் தன் வாயைத் திறக்கவேண்டாம் என்று முடிவு செய்து கொண்டார். ஷேர் மார்கெட் ஓபன் ஆகிவிட்டது. அதில் கவனம் போனது.


அங்கும் சாரதாவுக்கும் இந்த சம்பந்தம் அத்தனை உற்சாகம் இல்லை. இருந்தாலும் கணவனுக்கு குறுக்கே நிக்கரதையும் அவள் விரும்ப வில்லை.
ஈஸ்வரன் எப்படி போட்டு இருக்கானோ அப்படித்தானே நடக்கும் என்று
மாமியாரிடம் சொன்னாள்.  நல்லது நடக்கும்போது நாமும் கூடத்தாண்டி இருக்கணும் அதுதான் நம்ம சம்ப்ரதாயம் என்றாள் மாமியார்.

இப்படி அப்படி இரண்டு மாசம் கடந்தது. சித்திரை வந்தது. நாராயணன் வந்தார் இந்த தடவை வெத்திலை பாக்கு பழம் புஷ்பம் எல்லாம் வாங்கிண்டு வந்தார்.

சுப யோக சுப தினம் ஒண்ணு தாங்கோ
நீங்க தானே இந்த வீட்டு ஜோசியர்.
அப்படின்னு ராகவேந்தர் வீட்டு ஜோசியர்கிட்டே கேட்டார் நாராயணன். பேஷா..அதுக்காதானே நான் இருக்கேன் டான்னு மணி அடிச்சா மாதிரி பதில் சொன்னார் ஜோசியர்

அடுத்த மாசமே சர்வ முகூர்த்த நாள் ஒண்ணு இருக்கு. என்று ஜோசியர் சொல்ல ஆரம்பித்ததை , கட் பண்ணி,
மே 1 ந்தேதி சத்திரம் புக் பண்ணியாச்சே என்றார் நாராயணன்.
எப்படி கரெக்டா அதே தேதி வரது. எல்லாம் ஈஸ்வர சங்கல்பம்
என்றார் வாத்தியார்

திருமணம் இனிதே நடந்தது.

திருமணம் முடிஞ்ச கையோட மதுரையிலே ரிசப்ஷன்
கிருஷ் அங்கேயே தங்கி விட்டான் போல இருந்தது. 
அப்பறம் இங்க லா கம்பெனிலே உனக்கு இனிமே லீவு இல்லை. வா என்று கண்டித்த பின் தான்  வந்தான்.

என்னடா என்ன விஷயம் என்றாள் அம்மா.
கம்பெனி கம்பெல் பண்றது அம்மா. எனக்கு இமீடியட்டா வேற ஜாபும் கிடைக்காது  சாவித்ரிக்கும் எம்.டி. படிக்க டெல்லி மெடிகல் காலேஜ் ல இடம் கிடைச்சு இருக்கு.

அப்ப அங்க போயிடுவாளே என்றாள் முதல் தரம் கவலையோடு லக்ஷ்மி.

ஆமா படிப்பு முடிஞ்சு வரதுக்கு இரண்டு வருஷம் ஆகிவிடுமாம். ரெசிடென்சியல் ஸ்டடி . தனியாத்தான் இருக்கணும்
இருந்தாலும் சாவித்திரி ரொம்ப ஸ்மார்ட் அம்மா.
படிச்சப்பறம் இங்கே வந்துடுவாள் அப்படின்னு நினைக்கிறேன்
ஐ பீல் வெரி ப்ரௌடு ஆப் ஹர் .

லக்கி டூ என்று சொன்னாள் கங்கா.
அவன் லக்கியா இல்லையா என்று அடுத்த இரண்டு வருஷங்கள் சொன்னது போல இருந்தது.

எம்.டி. முடிச்சபின் சாவித்திரி இன்னமும் ஒரு  இரண்டு வருஷம் ஒரு சிறப்பு  specialisation கோர்ஸ் படிக்கவேண்டும் என்று தில்லியிலே இருந்து விட்டாள். படித்துக்கொண்டே வேலையும் பார்க்கும்படியான பொசிஷன் கிடைச்சிருக்காம்.

அப்பப்ப கிருஷ் டல்லாக இருந்தான் சாவித்திரி கிட்டே இருந்து போன் வந்ததா? என்று கேட்டு கொண்டு இருந்தான்.  Dr.Savithri M.D. DNB பத்து நாளைக்கு ஒரு தரம் ஞாயிற்றுக் கிழமை கிருஷ்க்கு செல்லில் ஒரு பத்து நிமிஷம் பேசுவாள். அதற்குள் யாராவது கிளைன்ட் வந்துவிடுவார்கள் அவளுக்கு.  சீ யூ லேடர் என்று முடித்து விடுவாள்.

. ரொம்ப லக்கி டாக்டர் என்று  சாவித்திரி யை எல்லாரும் சொல்கிறார்களாம்.   இன்னும் அடுத்த வருஷத்திலே அமெரிக்க போவதற்கும் அங்கே ஒரு ரிசர்ச் டீமிலே சேருவதற்கும்  வாய்ப்பு இருக்கிறதாம்.
சாரதா லக்ஷ்மிக்கு அடுத்தது என்ன என குறிப்பு கொடுத்தாள்.
இந்த காலம் அந்த காலம் மாதிரியா, அடுப்பு சமையல், குழ்ந்தை, பிரசவம்,அப்படின்னு அடுக்கட்டுக்கா, வருசத்துக்கு ஒண்ணா இந்த காலத்து பொண்ணுங்க, மேல மேல உசரனும்னு பாக்கராக இல்லையா. என்றாள் ஒரு நாளைக்கு சாரதா லக்ஷ்மியிடம் .

அடுத்த தடவை லக்ஷ்மி பேசின பொழுது சாரதா வீட்டு வேலைக்காரி , அம்மா பிசியாக இருக்காங்க அவங்களே போன் செய்வாங்க என்றாள்.

ஒரு நாளைக்கு என்னோட மருமவள் அமெரிக்கா வுக்கு பிரிட்டிஷ் ஏர் லைன்ஸுலெ போறா நானும் க்ருஷ்ஷும் போயிட்டு வந்துடறோம்
அய்யாவை கொஞ்சம் கவனிச்சுக்கங்க என்று வீட்டு வேலைக்காரர்களிடம்
லக்ஷ்மி சொல்லிக்கொண்டு டில்லி போய்விட்டு வந்தாள்.  .

நாலு மாதம் கழித்து ஒரு நாள் மதுரையில் இருந்து டெட் நைட்டிலே ஒரு செல். வந்தது.
 
திடீர் என்று ஒரு நாள் நாராயணன் ஜிம்முக்கு போனவர் அப்படியே ஐ.சி.யுவுக்கு போனார் மாசிவ் ஹார்ட் அட்டாக் ஆம்.
ராகவேந்தரும் லக்ஷ்மியும் பிளைட்டிலே மதுரைக்கு போயிட்டு பத்து நாள் கழிச்சுட்டு தான் திரும்பி வந்தார்கள்.  சாவித்ரி டூ பிசி . ஐ ஆம் சாரி மாம் என்று செல்லினதாக சாரதா சொன்னாள்.

அப்பப்ப சாவித்திரி க்ருஷ்ஷோட பேசற மாதிரித் தான் இருந்தது.

 இன்னும் அஞ்சு வருசத்திலே கண்டிப்பா நான் வந்துடுவேன் எங்கே நான் போயிடுவேன் , பொறுமையா உங்க புள்ளைய இருக்கசொல்லுங்க என்று லக்ஷ்மியிடம் சொன்னாளாம்

.கிருஷ் பொறுமை சாலி

என்னோட மருமகள் சாவித்திரி என்றைக்கு இந்தியா வருவாள். 
வருவாளா இல்லையா ? 

ஜோசியரிடம் லக்ஷ்மி கேட்டாள்.     

சனி பெயர்ச்சி இப்ப இன்னும் ஒரே வருசத்திலே நடக்கபோறது அது முடிஞ்சப்பறம் ஒரு சான்சு இருக்கு என்றார்

 அதே ஜோசியர். எதுக்கும் தஞ்சாவூர் பக்கத்திலே ஒரு கோவில் சொன்னார்.

அங்கே விட்டுப்போன தம்பதியரை ஒன்னு சேர்த்து வைக்கும் ஹோமம் பண்ணுவாங்களாம்.  ஒரு லட்சம் ஆகும். இருந்தாலும் முயற்சி செய்யறது 
தப்பே கிடையாது  என்றும் சொன்னார்.
அந்த நாளுக்கு லக்ஷ்மி ராகவேந்தர் காத்து கொண்டு இருந்தார்கள்.
அப்பப்ப கிருஷ் என்னவோ ஒரு பதட்டத்தில் இருப்பதாக லக்ஷ்மிக்கு பட்டது. என்ன அப்படின்னு கேட்கவில்லை.

கிருஷ் பொறுமை சாலி என்று எல்லோரும் நினைச்சது தவறோ என்று
ஒரு நிகழ்வு.


இங்கே கிருஷ்ண சந்தர் வேலை பார்க்கும் கம்பெனியில் ஒரு நாளைக்கு சல சலப்பு. யாரோ கூப்பிடுவதாக அப்பா ராகவேந்தர் அந்த லா கம்பெனிக்கு சென்றார்

இது மாதிரி நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.
 திஸ் இஸ் பார் யு டு சால்வ் . ஐ கான்ட் பி பேசிங் தீஸ் ப்ராப்ளம்ஸ்.
 என்றார் கம்பெனி சி.இ.ஓ .

ஒரு பெண் அங்கே கிருஷ்ணன் பக்கத்தில் அமர்ந்து அவனுடன் பேசிக்கொண்டு இருந்தாள். அந்த பெண்ணுக்கு அந்த பக்கம் ஒரு மராத்தி மாதிரி இருந்தது. அப்பா அம்மா போல் இருந்தது. .


என்னடா.. என்றார் ராகவேந்தர்.

ஷீலா ரொம்ப நல்லவ அப்பா.  ஹிந்திக்காரா .. நம்ம பாஷை தெரியாது. அவ்வளவு தான்.   

அதுலே நமக்கு என்னடா ..சம்பந்தம்....

உங்களுக்கு இல்லே ஆனா அவனுக்கும் அவளுக்கும் பத்து மாசம் சம்பந்தம் இப்ப மூணு மாசத்திலே இருக்கு.
விஷயம் தெரிஞ்சு ஷீலாவோட பேரன்ட்ஸ் வந்து இருக்காங்க 
என்றார் சி. ஈ. ஓ.

ஹம் லோக் கிருஷ்ண கே ஸாத் பூனே ஜாதே ஹைன் கல்.
ஆப்கோ பி டிக்கட் புக் கர் தியா மைனே.
ஷாதி ஹமாரி மந்திர் மெய்ன். 
 ஷீலா அப்பாதான் இந்தியிலே சொன்னார்.

ராகவேந்தர் விக்கித்துப்போனார்.
ஹி இஸ் ஆல்ரெடி மாரீட். என்றார்.
ஐ ஜஸ்ட் டோன்ட் பாதர். என்றாள் ஷீலா.

லக்ஷ்மி லக்ஷ்மி ....அவர் மனசு கூவியது.
அதற்குள் தொண்டை அடைத்தது போல் இருந்தது.

யாரோ அப்பலோவுக்கு போன் செய்தார்கள்.


*****************************************************************
தொடரும்
ஜோஹரி ஜன்னல் இரண்டாம் சதுரம் தொடரும்.


சாய்ஸ் அப்படின்னு எதுவுமே இல்லடா.. கண்ணா.
லைப்லே எல்லாமே சான்சு தாண்டா.
References:


Johari region 2 is what is known about a person by others in the group, but is unknown by the person him/her self. By seeking or soliciting feedback from others, the aim should be to reduce this area and thereby to increase the open area (see the Johari Window diagram below), ie, to increase self-awareness. This blind area is not an effective or productive space for individuals or groups. This blind area could also be referred to as ignorance about oneself, or issues in which one is deluded. A blind area could also include issues that others are deliberately withholding from a person. We all know how difficult it is to work well when kept in the dark. No-one works well when subject to 'mushroom management'. People who are 'thick-skinned' tend to have a large 'blind area'.