Pages

Wednesday, April 3, 2013

இது அரசியல் பற்றி பதிவு கண்டிப்பாக அல்ல !!




Posted by PicasaThis is not , certainly not , a posting on Politics. 


  இது அரசியல் பற்றி பதிவு கண்டிப்பாக அல்ல !!

     இன்னிக்கு அதாவது டு டே காலை இந்த கார்ட்டூன் ஹிந்துவிலே பார்த்தேன்.

     சமீப காலத்துலே இந்த அளவுக்கு எந்த கார்ட்டூனும் அவ்வளவு என்னைக் கவரவில்லை.

     ஸோ, முதற்கண், ஹிந்து நாளிதளுக்கு, அந்த கார்ட்டூனிஸ்ட்டுக்கு எனது கங்க்ராட்ஸ்.

     ஜாப் வெல் டன்.

    ஆனா, இந்த ரசித்தவை , நினைவில்.... 
    இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம் ?

    ஃபர்ஸ்ட் பாயின்ட்.      இது நான் ரசித்தது. எனது நண்பர்களும் ரசிப்பார்கள்.

    செகன்ட்லி,   ஒரு விஷயம்.

    படத்தைப் பார்த்தாலே போதும். 

    மன்மோஹன் சிங்க் மாதிரி ஒரு இன்டலெக்சுவல் நமக்கு பிரைம் மினிஸ்டர் ஆவார் என்பது 2004 ல் யாருமே     எதிர்பார்த்திருக்க முடியாது. 

    அது அவரோட பாஸ் சாய்ஸ்.
   அது ரைட்டா தப்பா என்றெல்லாம் சொல்வதற்கு நான் வரவில்லை.
இது அரசியல    பத்தி இல்லை என்று முன்னமேயே சொல்லிவிட்டேன்.

 என்னதான் இருந்தாலும் ஒரு மனுசனை ஒரு மலைக்கு உச்சத்துக்கு கொண்டு போய் வச்சு, இத்தனாம் பெரிய பதவி கொடுத்து, அதற்குண்டான சகல அந்தஸ்து, புகழ் எல்ல்லத்தையும், கொடுத்து, அதே சமயம் இத்தனை டென்சனையுமா மனுசனுக்கு கொடுக்கறது ?

    ஆனா, அவர் முன்னயும் போகமுடியாம, பின்னயும் நகர முடியாம, வேண்டாம்னு சொல்ல முடியாம, வேண்டும் அப்படின்னு அனுபவிக்கவும் முடியாம,

      பாவமா இருக்குல்ல....   

     யாருட்டேந்து எப்ப என்ன பிரச்னை வரும்னே தெரியாம டென்சன்லேயே காலத்தை கடந்த ஒன்பது வருசமா எப்படியோ இருந்துட்டு, அப்பப்ப இந்த உள்ளூர் தொந்தரவு தாங்காம, வெளி நாடு கான்ஃபரன்ஸ் அப்படின்னு அங்க
போய் அங்க கிடைக்கிற ரிகக்னிஷன்லே கொஞ்சம் கொஞ்சம் அமைதி மனத்ருப்தி காண்கிறாரே....

      இதெல்லாம் எதுனாலே நீங்க நினைக்கிறீங்க...

      ருணானி பந்தங்கள் அப்படின்னு சொல்வாக இல்லயா.   பூர்வ ஜன்ம பந்தங்கள், அதில் நாம் தீர்த்திராத கர்ம் பந்தங்கள் , புண்ய பாவங்கள் எல்லாமே நம்மை தொடர்ந்துண்டு வரும்னு சொல்வாக....  

      அதுலே நமக்கு நம்பிக்கை இருக்கு இல்லைங்கறதெல்லாம் வேற விசயம்.

      ஆனா மன்மோஹன் சிங்க ஸாரைப் பார்த்தா, ஒரு பக்கம் பாவமா இருக்கு, க்ளிப் போட்டு அவர அமுக்கு வச்சு,

யோவ் ராகு பகவான் சாரே !  ஏன்யா ஒரு நல்ல மனுசனைப்போட்டு இப்படி வதைக்கிரே என்று சத்தமா கேட்கலாம்னு தோணுது...

 ஆனா கேட்க மாட்டேன்.  நீ என்ன சத்யமூர்த்தி பவன்லேந்து வரியா அப்படின்னு அவரு சம்ஸ்க்ருதத்திலே கேட்டுடுவாரு.

 இ ல்லைன்னா உனக்கு என்ன லோகஸ் ஸ்டான்டி அப்படின்னு இங்க்லீஷில் விளாசுவாரு.

  ராகு பகவான் நம்மை படுத்தினதே போதும் போதும் அப்படின்னு இருக்கு. இன்னொரு தரம் அவரு முன்னாடி போய் மாட்டிக்கக்கூடாது.  இருந்தாலும் மனசு கேட்கல.

       என்னிக்கு இவருக்கு விடுதலையோ !! 

       புவர் ஜென்டில்மென்.   மை ஹார்ட்ஸ் கோ வித் யூ ஸார்.  

       இத்தனையையும் தாங்கிக்கிட்டு உட்கார்ந்திட்டு இருக்கீகளே ...   அதுவெ பெரிய விசயம் சாரே....

       குட் லக்.

       








1 comment:

  1. ஹா... ஹா... அவரைப் பற்றி உங்களது பார்வையில்...

    நல்லது ஐயா... நன்றி...

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!