Pages

Monday, April 8, 2013

கொஞ்சம் மெல்லப்பேசு.


PANKAJ UDHAS GHAZAL.
A TRANSLATION IN TAMIL ( NOT LITERAL WORD BY WORD BUT CONVEYING THE TRUE SPIRIT OF THIS GAZAL IN FULL )
THE ROMAN SCRIPT OF THIS URDU GAZAL IS HERE.
I THOUGHT +SRIRAM OF ENGAL BLOG MAY LIKE THIS.
DINDUGAL DHANABALAN WAS FIRST TO ENJOY THIS WONDERFUL GAZAL.
NEEDLESS FOR ME TO SAY THAT I ALWAYS ENJOYED HIS BLOG.

பங்கஜ் உதாஸின் கஜல்கள் போதை ஊட்டக்கொடியவை .
ஒரு தரம் கேட்டு விட்டா ல் பித்துப் பிடித்து விடும்
1980 களில் இவரது கஜல் சிட்டி  ஆயி ஹை    லட்சக்கணக்கான கேசட்கள் விற்றன

இங்கே இவரது இன்னொரு கஜல்
 அழுத்தமான காதல் கதை.
கண்ணீரும் சேர்ந்த கதை.
சோகத்திலே ஸ்ருங்கார சங்கீதம் கலந்த கதை.
கேளுங்கள் .
 **********************************************************************
பின் வருவது வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு அல்ல
கவிதையின் உயிரோட்டம் உண்மையாகவே இருக்கும்
***************************************************************************
 கொஞ்சம் மெல்லப்பேசு ... உன்
கொஞ்சும்  இதயத்துடிப்புகளை யாரேனும் கேட்டுவிடுவர்.                     
            
 உன் இதழ்களிலிருந்து முத்துக்கள் உதிராது  பார்த்துக் கொள் - நான்
 எண்ணுமுன்னே காலம் அதைப் பொறுக்கிச்சென்றுவிடும்.
.கொஞ்சம் மெல்லப்பேசு.


வாசலுக்கும் கதவுக்கும் காதுகள்  இங்கே. . நம்
 வாய் நழுவிய   ரகசியமெல்லாமே நுகரும் உடனே . ..
மெல்லப்ப்பேசு....கொஞ்சம் மெல்லப்பேசு.

உன் இதயத்தின் துன்பக்கதை சொல்லிடவேண்டா.
 உன் பார்வை ஒன்றில் நான் புரிந்துகொள்வேன். . சொல்லிடாதே.
.கொஞ்சம் மெல்லப்பேசு.
             
 நாலு திசைகளிலுமே நமது உலகம்
 நமது பெருமூச்சுகளை எங்கேனும் கேட்டுவி டும் .
          இன்னும் கொஞ்சம் மெல்லப்பேசு.

 வா..   வாசல் கதவுகளை மூடிவிடு . 
 இரவு என் கனவுகளை திருடும் பின்  ஓடிவிடும்.

 இந்த    சூறைக்காற்றும்  ஒரு நாடோடி தான்.
 இதயத்துக் கனவுகளை காற்றுடனே கலக்கச்செய்யும். .
.கொஞ்சம் மெல்லப்பேசு.
 .                                              
  
   
 இன்று வா. இன்னும் அருகில் வா.
 இடைவெளி நமக்குள்ளா ?
 அடையாளமே தெரியாமல் என்னுள்
 அமர்ந்திரு.  என்னுள் நிறைந்திரு.
                        
 ஒருவரிலே ஒருவர் நாம் ஒன்றாகிப்போவோம்.
கொஞ்சம் மெல்லப்பேசு.  .

और आहिस्ता कीजिये बातेंऔर आहिस्ता कीजिये बातें
धड़कनें कोई सुन रहा होगा
लब्ज़ गिरने ना पाये होंठों से
वक़्त के हाथ इनको चुन लेंगे
कान रखते हैं यह दरों-दीवार
राज की सारी बात सुन लेंगे
और आहिस्ता कीजिये बातें

ऐसे बोलो के दिल का अफ़साना
दिल सुने और निगाह दोहराये
अपने चारों तरफ की यह दुनियाँ
साँस का शोर भी ना सुन पाये, ना सुन पाये

आईये बंद कर ले दरवाजे
रात सपने चुरा ना ले जाये
कोई झोंका हवा का आवारा
दिल की बातों को उड़ा ना ले जाये , ना ले जाये

आज इतने करीब आ जाओ
दूरियों का कहीं निशान ना रहें
ऐसे एक दूसरे में गुम हो जायें
फासला कोई दरमियाँ ना रह जाये , ना रह जाये 
धड़कनें कोई सुन रहा होगा
लब्ज़ गिरने ना पाये होंठों से
वक़्त के हाथ इनको चुन लेंगे
कान रखते हैं यह दरों-दीवार
राज की सारी बात सुन लेंगे
और आहिस्ता कीजिये बातें

ऐसे बोलो के दिल का अफ़साना
दिल सुने और निगाह दोहराये
अपने चारों तरफ की यह दुनियाँ
साँस का शोर भी ना सुन पाये, ना सुन पाये

आईये बंद कर ले दरवाजे
रात सपने चुरा ना ले जाये
कोई झोंका हवा का आवारा
दिल की बातों को उड़ा ना ले जाये , ना ले जाये

आज इतने करीब आ जाओ
दूरियों का कहीं निशान ना रहें
ऐसे एक दूसरे में गुम हो जायें
फासला कोई दरमियाँ ना रह जाये , ना रह जाये 

13 comments:

  1. நானும் மெல்லப்பேசுகிறேன்...
    ஸ்ரீராம் சார் மட்டும் ரசிப்பாரா ?

    மொழிப்பெயர்ப்புக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பாயசம் இல்லாம கல்யாணச்சாப்பாடா ?
      திண்டுக்கல் இல்லாம ஒரு ரசிகர் குழாமா !!
      வருக..வருக... உங்கள் பதிவுக்கு லிங்க் கொடுத்தால் அது என்னவோ பைபிள் படிப்பகத்திற்கு
      கொண்டு போகிறது. என்ன வென்று புரியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு உங்கள் லிங்கைப்
      பிடித்தேன்.

      சுப்பு தாத்தா.

      Delete
  2. 'இரவு என் கனவுகளைத் திருடும், பின்னர் ஓடிவிடும்' வரிகளை ரசித்தேன். ஹிந்தி வரிகளையும் போட்டு தமிழைக் கொடுத்திருந்தால் இன்னும் சௌகர்யமாக இருந்திருக்கும்.

    ஹிந்தித் திரைப் படங்களிலேயே இடம் கஜல்கள் கூட சுகமானவை. உதாரணமாக ரஃபியின் 'சவுதினி கா சாந்த்' அருமையான பாடல். இன்றும் என் செல்லில் வைத்திருக்கிறேன். சமீபத்தில் சாஜன் படத்தின் 'ஜீயே தொ ஜீயே' நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies

    1. இந்தி வரிகளும் ரோமன் ஸ்கிரிப்டில் கொடுத்து இருக்கிறேன்.
      இருப்பினும் தமிழ் யூனிகோட் முதல் ஆப்ஷனாக இருப்பதால்
      இந்தி மறைந்து விடுகிறது.
      இரண்டு மொழிகள் மட்டுமே பிரசுரித்த பின் தெரிகிறது. ஆனால் எடிட் செய்யும் பக்கத்தில் இருக்கிறது.
      திரும்பவும் உள்ளே சென்று ஒரு லிங்க் கொடுத்து இருக்கிறேன். அங்கே போய் இக்கவிதை படியுங்கள்.
      இந்தி, மற்றும் உருது கவிதைகள்,உங்களுக்கு பிடிக்குமாயின் நீங்கள் அதற்கான எனது வலைக்கு
      செல்லவும். .
      www.sachboloyaar.blogspot.com
      சுப்பு தாத்தா.

      Delete
  3. சுப்பு ஐயா,
    உங்கள் கஜல் மனதை வருடி செல்கிறது.
    இது வரை கஜல் எல்லாம் கேட்டதேயில்லை. உங்கள் பதிவில் தான் கேட்டு தான் பார்ப்போமே என்று கேட்டேன். எத்தனை முறை கேட்டிருப்பேனோ கணக்கில்லாமல் தான். உங்கள் மொழிபெயர்ப்பு பாட்டை ரசிக்க உதவுகிறது.

    ReplyDelete
    Replies
    1. இந்த கஜல்களே இப்படித்தான். ஒரு தரம் கேட்டுவிட்டால் இன்னொரு தரம், இன்னொரு தரம்,......
      அப்படி கேட்டுக்கொண்டே கிட்டத்தட்ட ஒரு போதைப்பொருள் மாதிரி அடிக்ஷன் கொண்டுவந்து விடும்.


      உருது இசை கலைஞர்கள் இந்த கஜல் முறைக்கு மூதாதையர்கள். ஜக்ஜீத் சிங், சித்ரா சிங், பர்வீண்
      சுல்தானா, அனூப் ஜலோடா, பங்கஜ் உதாஸ் போன்ற பல இசை வல்லுனர்கள் பிரசித்த கஜல் பாடகர்கள்.
      தற்பொழுது ஹரிஹரன், சங்கர் மஹாதேவன் கஜல்களை இன்னுமா நீங்கள் கேட்கவில்லை...!!

      விரைவில் சங்கர் மஹாதேவன் ஹரிஹரன் பாடிய கஜல் மொழிபெயர்ப்புடன் தருகிறேன்.

      தங்கள் வருகைக்கு நன்றி.

      சுப்பு தாத்தா.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நல்ல தமிழாக்கம். வரிகளின் நுண்மை கெடாமல் அப்படியே ..
    உதாஸ் பாடல்களில் பல, முதல்  முத்தத்தின் கிளர்ச்சியை மீட்க வல்லவை.    
    அதிகம் உர்து இல்லாத எளிய ஹிந்தி, பாமரனை கவர அமைக்கப்பட்ட மெட்டு, இவை உதாஸின் பலங்கள்.
    வருசக்கணக்காச்சு உதாஸ் கேட்டு. நன்றி!

    ReplyDelete
  6. Rajeswari jaghamani writes:

    REPRODUCED FROM GOOGLE
    FIRST
    RAJESWARI JAGHAMANI

    //உன் இதழ்களிலிருந்து முத்துக்கள் உதிராது பார்த்துக்கொள்
    எண்ணுமுன்னே காலம் அதைப் பொறுக்கிச்சென்றுவிடும்.
    .கொஞ்சம் மெல்லப்பேசு.//

    முத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

    Geetha Sambasivam4:10 PM

    இது கேட்டதில்லை. ஆனால் பங்கஜ் உதாஸின் "சிட்டி ஆயி ஹை" என்னோட ஆல்டைம் ஃபேவரிட்!. இதுவும் நல்லா இருக்கு.

    

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா...
    அருமை. நன்றாக இருக்கிறதே. ரசித்துக் கேட்டேன்.

    நீங்கள் தந்த பாடல் இணைப்பு இங்கு எமக்கு ஜேர்மனி நாட்டில் காண்பிக்கக்கூடிதாக இல்லை என்று வந்தது. அதனால் வேறு தளத்தில் தேடிப் பார்த்துவிட்டேன். மிகமிக அமைதியான மெலோடியாக அற்புதமாக இருகின்றது.
    உண்மையாக நல்ல தென்றலென வருடும் இசையாக இழையோடுகிறது பாடல்.
    பாடல் கேட்பதற்கு அதன் இசையும் மெட்டமைப்புமே போதும். இசைக்கு மொழி அவசியமில்லை. ஆனாலும் உங்கள் மொழிபெயர்ப்புப் பார்த்தாச்சே. அதிலே பாடல் என்ன என்பதைச் சொல்லிவிட்டீர்களே...

    நல்ல பகிர்வு ஐயா. மிக்கநன்றி!

    ReplyDelete
  8. அருமையான மொழிபெயர்ப்ப உயிரோட்டமுள்ள கவிதை

    ReplyDelete
  9. அருமையான பாட்டு, கல்லூரிக் காலங்களில் அடிக்கடிப் பார்ப்பதுண்டு, அதை நினைவு படுத்திவிட்டீர்கள்!
    பள்ளியில் படித்த ஒ.ஹென்றி அவர்களின் 'gift of magi' என்ற கதையின் தழுவல் இப்பாடல்.

    ReplyDelete
    Replies

    1. மேடம்
      கிரேஸ்... நீங்கள் குறிப்பிடும் ஓ.ஹென்றியின் கதை உண்மையில் கதையே அல்ல.
      ஒரு காவியம்...காதல் காவியம்.

      . http://www.eastoftheweb.com/short-stories/UBooks/GifMag.shtml


      நான் அதை முதன் முதலாக படித்ததும் என் மனதில் உண்டான உணர்வுகளை இன்னமும்
      நினைவு வைத்து இருக்கிறேன்.

      ஆஹிஸ்தா பாடலை இயற்றிவருக்கும் காட்சியை அமைத்திருக்கும் இயக்குனரக்கும் இந்தக்கதை
      ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்திருக்கக்கூடும் .

      ஐ கான் சர்டன்லி விசுஎலைஸ் தட் பாசிபிலிடி.

      சுப்பு தாத்தா.

      Delete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!