Pages

Tuesday, April 9, 2013

இங்கே காதல் காதல் கனாவாகி போனதே !!

கவ்வாலி அப்படின்னு கேள்விப்பட்டு இருப்பீர்கள் ...
இந்துஸ்தானி சங்கீதத்திலே இது ஒரு பாணி.

1980,90 லே இந்த பாணி இல்லாத இந்தி படமே இருக்காது

இருப்பினும் கவாலி முறையைப் பின்பற்றி சில தமிழ் சினிமா பாடல்களும்
வந்து இருக்கின்றன

இங்கு ஹரிஹரன் அவர் குழுவினருடன் பாடுகிறார்

இங்கே காதல் காதல் கனாவாகி போனதே !!


A superb mix of Qawwaali with Saastriya Sangeeth. 

27 comments:

 1. பழைய சினிமா ஒன்றில் கூட திருமதி சாவித்திரி இதே முறையில் பாடியிருக்கிறார் என்று நினைக்கிரேன். எதிரில் பாடியது சிவாஜியோ?நினைவு வரவில்லை.

  கவ்வாலி ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி மேடம்.

   பதிவிலே குறிப்பித்தது போல இது கவ்வாலி மிக்ஸ்.

   இது கவ்வாலி முறையுடன் சாஸ்த்ரீய சங்கீதம் இணைந்தது
   ராகம் இதில் நீங்கள் கேட்பது ஆபோகி.

   கவ்வாலி இசையில் ஒரே வார்த்தையை, அல்லது வாக்கியத்தை திரும்ப திரும்ப சொல்வார்கள். அதுவும் ஒரே வார்த்தை என்றாலும் அதில் உள்ள பல சிலபில்களில் ஒன்றில் அழுத்தம், இன்னொரு தடவை பாடுவதில் இன்னொரு சிலபிளில் அழுத்தம் கொடுத்து பாடுவார்கள்.

   ஒரே வாக்கியத்தை திரும்ப பாடும்பொழுது வெவ்வேறு வார்த்தைகளில் அழுத்தம் தருவார்கள்

   கவ்வாலி முறை தோன்றியது இஸ்லாம் சமூகத்தாரிடையே . தமது மத சம்பந்தமான முக்கிய கருத்துக்களை மக்களிடையே கொண்டு வந்து சேர்க்கும் பணியில் இந்த பாணி உருவானது. இதன் கதையை
   இங்கே படிக்கலாம்


   http://www.indianetzone.com/41/history_qawwali.htm

   சுப்பு தாத்தா

   Delete
  2. சுப்பு ஐயா,
   நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியில் போய் கவ்வாலி சரித்திரம் படித்தேன்.
   உங்கள் வலைத்தளத்திற்கு வந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்.
   உங்களுடைய ஷங்கர் மகாதேவன் கஜல் பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

   Delete
 2. நல்லா இருக்கு ஐயா... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வரவும்
   நீங்கள் தரும் ஊக்கமும்
   எனக்கு ஒரு ரிகரிங் டெபாசிட்.

   சுப்பு தாத்தா.

   Delete
 3. இந்த பாடல்களில் சாவித்திரி, மனோகர், அசோகன் காட்சியில் இடம்பெறும் "பாரடி கண்ணே கொஞ்சம்... பைத்தியமானது நெஞ்சம்" பாடல் நன்றாக இருக்கும். ஹிந்தி கவ்வாலி பாடல்கள் அவ்வளவு பிடிப்பதில்லை. ஹம் கிசீசே கம் நஹீன் படப் பாடல், அமர் அக்பர் ஆண்டனி படப் பாடல் எல்லாம் காட்சியைப் பார்க்கவே கூட போரடிக்கும்.

  ReplyDelete
  Replies

  1. நீங்கள் சொல்லும் படங்களை நான் பார்க்கவில்லை

   இருப்பினும் ஒன்று சொல்லலாம்

   ஒரு சினிமா காட்சியிலே பாடல் அமையும்பொழுது அந்த பாடல் உருவாகும் காட்சிக்கு ஏற்றபடிதான்பாடலின் சொற்கள் அமையவேண்டும் அதே போல் அந்த படத்தில் உள்ள பாத்திரங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் கால, தேசவர்த்தமானத்திற்கு இணைந்த இசையாகவும் இருக்கவேண்டும் உதாரணமாக அண்மையில் பாலா எடுத்த படம். பரதேசி

   அவ்வாறு இல்லாது போகும்பொழுது நீங்கள் சொல்லிய சலிப்பு உணர்வுகள் ஏற்படத்தான் செய்யும்

   சுப்பு தாத்தா.

   Delete
 4. அருமையான பாடல் அய்யா...
  பகிர்வுக்கு .நன்றிகள் .. பல..

  ReplyDelete
  Replies
  1. //அருமை//

   நீங்கள் வந்தது எனக்குப் பெருமை

   சுப்பு தாத்தா.

   Delete
 5. நான் சொல்ல நினைத்ததை ஸ்ரீராம் சொல்லிவிட்டார்!

  ReplyDelete
  Replies

  1. நான் பேச நினைத்த தெல்லாம் நீ பேசவேண்டும்

   ..........

   அப்படி ஒரு ப்ரெண்ட்ஷிப்பா !!

   சுப்பு தாத்தா.


   Delete
 6. ஹரிஹரன் என்றால் சொல்லவா வேண்டும்?
  நல்ல பாடல்!
  பகிவிற்கு நன்றி சுப்பு சார்!

  ReplyDelete
  Replies
  1. //ஹரிஹரன் என்றால் சொல்லவா வேண்டும்?// ஒவ்வொரு
   சொல்லையும்
   சொல்லிடும்போது
   அது
   அல்வா போல்
   அல்லவா
   இருக்கிறது .
   இல்லையா
   சொல்லுங்கள்
   சுப்பையா

   சுப்பு தாத்தா.
   பி.கு உங்கள் வலைக்கு நான் தினமும் வந்து கொண்டுதான்
   இருக்கிறேன்


   Delete
 7. மிகமிக அருமையாக இருக்கிறது ஐயா...

  கவால்லின்னு சிலபாடல்கள் கேட்டிருக்கிறேன். ஆனா பாடகர் ஹரிஹரன் பாடியது இதுதான் இப்பதான் முதல் தடவையா கேட்கிறேன்.

  பகிர்வுக்கு மிக்க மிக்க நன்றி ஐயா...

  ReplyDelete
  Replies
  1. இசைக்கு எல்லைகள் இல்லை.
   இறையும் இசையும் ஒன்றே
   இணைவின் இனிதே எவரும்
   இன்புற இயலும்


   சுப்பு தாத்தா.

   Delete
 8. ஹரிஹரன் சர்க்கஸ்.

  ReplyDelete
  Replies
  1. சர்க்கஸ் என்னும் வார்த்தை லத்தீன் மொழியைச் சார்ந்தது
   இதன் மூலம் கிரீக்க வார்த்தையான கிர்கொஸ். ஒரு வட்டம் அல்லது மோதிரம் என்று இதற்கு பொருள்.

   ஒரே வார்த்தையை அல்லது ஒரே வார்த்தையில் ஒரே சிலபில்லை (தமிழ் என்ன ? )திரும்பவும் திரும்பவும்கவாலி பாடுபவர்கள் சொல்வதாலும் பாடுபவர்கள் ஒரு அரை சதுரமாக உட்காருவதைக் கருத்தில் கொண்டும்

   சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்

   எனிவே,

   ஹரிஹரன் சர்கஸ் ?
   எஸ்.
   பேட் வித் சக்சஸ்.

   சுப்பு தாத்தா.

   Delete
 9. நல்ல இருந்தது ரசித்தேன் நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி

   சுப்பு தாத்தா.

   Delete
 10. இந்த இசையை ரசிக்கத் தெரிந்தவர்க்கு இது நன்றாகவே பிடிக்கும். நல்லாருக்கு!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது மிகவும் நியாயமே

   தலப்பா கட்டு பிரியாணி மிகவும் நல்லா இருக்கு, நல்லா இருக்கு
   அப்படின்னு என்னோட உயிருக்கும் உயிரான நண்பர் ஒருவர்
   நாள் முழுக்க என்னிடம் சொல்லிக்கொண்டு இருந்தார்

   நான் நீங்கள் சொன்ன மாதிரிதான் சொன்னேன்


   லோகோ பின்ன ருசிஹி

   அப்படின்னு இங்க்லீஷிலே சாரி
   சம்ஸ்க்ருதத்திலே எழுதி இருக்கு இல்லையா.

   அப்படி இல்லைன்னா என்ன ஆகும் அப்படிங்கறதுக்கு
   ஒரு மெக்சிகோ ஜோக் அந்தக்காலத்திலேயே இருக்கு.

   சே. ....வேணாம்.
   அசைவ சமாசாரம்
   இசைக்கு ஒத்துக்காது

   சுப்பு தாத்தா.

   Delete
 11. இந்த இசையை ரசிக்கத் தெரிந்தவர்க்கு இது நன்றாகவே பிடிக்கும். நல்லாருக்கு!

  ReplyDelete
  Replies
  1. ஊஹும்.

   அந்த ஜோக் எல்லாம் சொல்ல மாட்டேன்.

   திரும்ப திரும்ப கவ்வாலி பாட்டு மாதிரி
   ஒரே கமெண்டை போடாதீங்க

   சுப்பு தாத்தா.

   Delete
 12. இனிமையான விஷயம். 1980 -க்கு முன்பும், எப்பவுமே இந்திப் படங்களில் கவ்வாலி பாடல்கள் ரொம்ப COMMON. 60-களில் 'ustadon ki ustad' படத்தில் ரவி இசையில் வரும் 'Milte hi nazar tumse...'(தமிழிலும் வந்தது) ஓர் அருமையான பாடல்.

  ReplyDelete
  Replies
  1. உங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி
   https://www.youtube.com/watch?v=GKr9qNiNIc8

   நீங்கள் சுட்டி காட்டிய இந்த கவ்வாலி வந்த பொழுது
   கொட்டகையில் உள்ள எல்லோருமே சேர்ந்து தாளம்
   போட்டார்கள் கெயிட்டி தியேட்டர் திருச்சியிலே . நானும் சேர்ந்துதான்
   ரபியும் ஆஷாவும் அசத்துகிறார்கள் .

   சுப்பு தாத்தா.

   Delete
 13. கவ்வாலி மட்டும் இல்ல, பின்னூட்டங்களும் ருசியே:)

  ReplyDelete
 14. நான் நினைத்ததை ஸ்ரீராம் சொல்லிவிட்டார். இன்னாட்களின் கவ்வாலியில் கலப்படம் புகுந்து விட்டது.

  ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!