Pages

Friday, April 12, 2013

துளசி கோபாலும் அகிலம் ஆளும் அகிலாண்ட நாயகியும்

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்த உடனேயே
துளசி கோபால் வலையிலே ஒரு அதிசயம் எனக்காக காத்திருந்தது.


திருவானைக்காவல் கோவில் சென்றேன்.
அகிலாண்டேஸ்வரியின் தரிசனம் பெற்றேன்.
என்ன பேறு பெற்றேனோ ... அதே சமயம் எங்கிருந்தோ இந்தப்பாடல்...
ஆஹா.. ...இதுவும் ...அதே ஆனைக்காவலில் குடியிருக்கும்
அகிலாண்ட நாயகியின் பெருமைதனை பறை சாற்றும் பாடலன்றோ

இதயம் விம்ம, கண்களில் நீர் பெருக,
நாவில் நன்றி எனும் சொல் உதயமாக
துளசி மேடத்துக்கு நான் சொல்லும் நன்றியாக, ,
அவர்கள் அந்தக்கோவில் காட்சி தனை பார்த்த அனுபவித்த‌
காட்சிதனை நானும் கண்டு வியந்து
பாடலையும் உடன் தந்து
பொருளையும் உடன் இட்டு இருக்கிறேன்.

akilandewari... raksha maam.
     ஆகம சாத்திரங்கள் அனைத்திலும் நுண்ணறிவு படைத்தவளே

     அகிலாண்டேஸ்வரி
      ஆதரிப்பாய் 
       எனைக்காப்பாய். 

     அனைத்து அண்டத்திலும் நிறைந்தவளே ...
      தூயவளே ...
     துல்லியமானவளே
     அனைத்து கலைகளையும் கொண்டவளே 
      கருமை நிறத்தவளே என்னைக்
      காப்பவளே

      கணேசனும் குகனும் 
      உனைத்துதிக்க உன் அருள் தந்தனையே 
      காலமெல்லாம் உன் வதனமதில் குறு நகை கொண்டாயே உமையே 
      கலைவாணி உனைத்தொழுவாள்
      உனை நாடியவருக்கெல்லாம் வரம் தரும் நாயகியே
      இமவான் பெற்றெடுத்த கோமளமே...சாரதையே
      இந்திரனும் மாலும் உனைப் பூசித்தனரே.
      துஜாவந்தி ராகத்தில் உனைப்பாட மகிழ்ந்தனரே.
      ஜல்லி, மத்தள மேளங்கள் கொட்டி வணங்கினரே. 

      அகிலமே போற்றும் அகிலாண்டேஸ்வரி..
      ஆதரிப்பாய், எனைக்காப்பாய்.


  நீங்கள் கேட்பது அகிலாண்டேஸ்வரி எனும் முத்துஸ்வாமி தீக்ஷதர் பாடல். 
  மொழி சம்ஸ்க்ருதம்.  
  ராகம் த்விஜாவந்தி.  சும்மா சொல்லக்கூடாது
துளசி மேடம் மாதிரி ஒரு பார்யாள் கிடைக்க
கோபால் பாக்கியம் பண்ணி இருக்கணும்
பூர்வ ஜன்ம புண்ணியம் தான்
அஞ்சாம் இடம் ஸ்ட்ராங்கா இருந்திருக்கணும்.

15 comments:

 1. அருமையான பாடல் ஐயா... நன்றி...

  ReplyDelete
  Replies

  1. வருகைக்கு நன்றி

   Delete
 2. அகிலமே போற்றும் அகிலாண்டேஸ்வரி..
  ஆதரிப்பாய், எனைக்காப்பாய்.

  ReplyDelete
  Replies
  1. //அகிலமே போற்றும் அகிலாண்டேஸ்வரி..//அவள் யார் எனக்கேட்கும்பொழுது
   சப்த ஸ்வரங்களினால் ஆன
   எல்லா ராகங்களிலும் அவள் உள்ளாள் என்றதாம் அசரீரி.

   ஞானம் தரும் ஈஸ்வரி
   ஆனந்த பைரவி
   நம்பினேன் உனை
   எனை ஆதரி.

   கானம் திகழ் கல்யாணி
   கருணாகர கீர்வாணி
   ஞான பைரவி ருத்ராணி
   நம்பினேன் கேதார மந்த்ர பூரணி.

   அம்பிகையே உந்தன் அருள் தேடி
   தேடி தோடி...
   அம்பே...அம்பே...ஆரபி....

   என்றும் மோஹன மாலை சூடி
   ஞான வசந்த ராகம் பாடி
   நாத நாமகிரியை ஆன செபத்தாலே
   நானோர் கமாஸ் ராகம் பாடி

   இந்த நாட்டை ஜெயம் கொள்ளும்
   தன்யாசி..எனை நேசி.
   எந்தனை ஆட்கொள்ளும்
   சுருட்டி அருள் தேவி
   உந்தன் பாத கமலத்தைப்
   போற்றிட அருள் செய்வாய்... தேவி.. தேவி....

   ஞானம் தரும் ஈஸ்வரி....

   சுப்பு தாத்தா.
   This is a Ragha Malika


   Delete
 3. ஒன்னும் சொல்ல முடியலை. அப்படியே பிரமிப்பில் இருக்கேன்.

  என்ன அருமையான பாட்டு!!!! அதுவும் ஜயஸ்ரீ பாடுனா.... அற்புதம்

  ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லுங்க சுப்பு ஐயா.

  நன்றிக்கு வேறு தமிழ்ச் சொல் உண்டா?

  ReplyDelete
  Replies
  1. நானும் உங்கள் பதிவைப் படித்துவிட்டு
   1968 ல் திருவானைக்காவலில் என் தங்கையின் திருமணம் நடந்த நாளன்று நிகழ்ந்த‌
   எல்லாவற்றையும் மறுமுறை பகிர்ந்து கொண்டோம்.

   இந்த திருவானைக்காவலில் பஞ்சபிரகார வைபவத்தின் ஒரு பகுதியாக‌
   இரவு 7 மணிக்குத் துவங்கும்

   போஜனம் இரவு 10 மணி வரை மூன்று நாட்கள் தொடரும்.
   அது எங்கள் அத்தை வீடு தெற்கு சன்னதி வீதியில் நடக்கும்.

   பச்சடி , உசிலி, அவியல், அப்பளம், வடை, பாயசம், சக்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர் வடை, புளிசாதம்,
   எலுமிச்சை சாதம், தயிர் சாதம், ஆவக்காய் ஊறுகாய்

   இன்னமும் சாப்பிட்ட நினைவு இருக்கிறது.

   Delete
 4. என்ன அருமையான பாட்டு. அருமையான பாட்டுக்களை தேர்ந்தெடுத்து அழகாய் பதிவிடுவதற்கு நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. நன்றி தங்கள் வருகைக்கு.

   அகிலாண்டேஸ்வரி அருளால்
   அனைத்தும் அனைவரும்
   பெற்றிட வேண்டுகிறேன்.

   சுப்பு தாத்தா.

   Delete
 5. அருமையாக இருக்கிறது ஐயா. அற்புத கானம்...

  அகிலாண்டேஸ்வரி எல்லோரையும் காக்க வேண்டுகிறேன்.

  நல்ல பகிர்வு!
  என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தங்கள் வருகைக்கு.

   அகிலாண்டேஸ்வரி அருளால்
   அனைத்தும் அனைவரும்
   பெற்றிட வேண்டுகிறேன்.

   சுப்பு தாத்தா.

   Delete
 6. நன்றி அருமையை பகிர்ந்தற்கு

  ReplyDelete
  Replies
  1. நன்றி தங்கள் வருகைக்கு.

   அகிலாண்டேஸ்வரி அருளால்
   அனைத்தும் அனைவரும்
   பெற்றிட வேண்டுகிறேன்.

   சுப்பு தாத்தா.

   Delete
 7. அருமை. பாம்பே ஜெயஸ்ரீ குரலுக்குக் கேட்கணுமா? தரவிறக்கிக் கொண்டேன்!

  நன்றிக்கு வேறு தமிழ்ச்சொல் உண்டா?

  உண்டு.... 'தன்யவாத்' ! :))

  ReplyDelete
 8. ஓக்கே ஸ்ரீராம்! ஷுக்ரியா:-)

  ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!