Pages

Monday, April 1, 2013

எது உங்களுக்கு பிடித்த ஆடல் ?

இன்று அதிகாலை எழுந்தவுடன் என் மனைவியை கேட்டேன். 
கமலை உனக்கு பிடிக்குமா ?
என்னது ! எட்டரை மணிக்கு எழுந்துண்டு என்ன கேள்வி ?
ஏப்ரில் ஒன்னாம் தேதியும் அதுவுமா ? என்றாள்.
இல்ல சொல்லு அப்படின்னு சொன்னேன் 
என்னது உங்களைத்தான் பிடிக்கும் 
அதுதான் எனக்குத் தெரியுமே . இந்த 45 வருடமா பிடிச்சிருக்கே. 
நான் கேட்டது கமலை பிடிக்குமா ?
அப் கோர்ஸ் ஆஸ் ஆன் ஆக்டர் 
மீனாட்சி உவாச.
கமல் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நான் சொல்ல மாட்டேன் 
கமலை நான் களத்தூர் கண்ணம்மா காலத்திலேந்து பார்த்து இருக்கிறேன். ரசித்து இருக்கிறேன்.  பதினாறு வயதினிலே மூன்றாம் பிறை ஆகிய படங்களிலே அவரது நடிப்பைக் கண்டு பிரமித்து போயிருக்கிறேன். எந்த ஒரு பாத்திரத்திலும் அந்த பாத்திரமாகவே ஆகி செயல்படும் திறன் அவருக்கு இருக்கிறது என்பது உலகம் அறிந்த உண்மை. 
அவரது நடிப்பு ஒரு பக்கம் அவரது ஆடல் திறன் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்  பரதத்தின் இலக்கணங்கள் சற்றே நான் அறிவேன். கமல் பரதம் மட்டுமல்ல கதகளி ஒடிசி, போன்ற வற்றிலும் சற்றும் குறை சொல்ல இயலாதவாறு நடனம் ஆடியிருக்கிறார். 
கடந்த 25 ஆண்டுகளில் அவரது ஆடல் திறனில் அதிசயித்த ரசிகர் ஆயிரமாயிரம் இருப்பினும் அந்த வரிசையில் நான் முதல் பத்தில் இருப்பேன் என்றால் மிகை அல்ல 
எப்பவுமே எனக்குன்னு ஒரு ஒபினியன் இருக்கும் ஆனா என் இல்லக்கிழத்தி சொல்றதிலே இருக்கிற உண்மையும் எனக்கு புரியும் .( என்ன\.... பேசறதுக்கு ஒரு சான்சு கிடைச்சுதுன்னா அப்படியே தூய தமிழ் . இலக்கண சுத்தமா ..ஒரு சொற்பொழிவே நடத்திடுவா  என்ன இருந்தாலும் அந்தக்கால தமிழ் ஆசிரியர் சாரி ஆசிரியை அல்லவா ?)
எனக்கு இன்று ஒரு ஆவல். அன்று முதல் இன்று வரை அவரது ஆடல் காட்சிகளில் இருந்து ஒரு மூன்றினை மட்டும் இங்கே இட்டு இருக்கிறேன். 
கமல் ரசிகர்களே !! உங்களைக் கவர்ந்த நடனம் எது ?
Salangai Oli. Nadha vinodhangal.
1983ல்  வெளியான சலங்கை ஒலி என்னும் படத்திலே கமல் ஆடிய நடனம்.


இது 1997 லே. இந்தியன் படத்திலே.
This is in 1997
இது இப்பதான் ஊரே உலகமே காத்து இருந்த படம்.
 எப்ப வரும் எப்ப வரும் அப்படின்னு தவிக்க வச்ச படம்

கமல் ரசிகருக்கு மட்டுமல்ல இந்த அறை கூவல். 
நாட்டிய ரசிகர் அனைவருக்குமே இந்த அழைப்பு.
நீங்கள் சொல்லுங்கள்.   எது உங்களுக்கு பிடித்த ஆடல் ?

23 comments:

  1. கண்டிப்பாக என் வோட்டு சலங்கை ஒலி ஆடல் காட்சிக்கு!

    ReplyDelete
    Replies
    1. சலங்கை ஒலி கன்வென்ஷனல்.அன்ட் ஈக்வலி ட்ரெடிஷனல். உங்களுக்கு பிடித்ததில் வியப்பில்லை.
      மேடம் துளசி கோபாலுக்கும் அந்த படத்திலே வர பால கனக மய டான்ஸ் தான் பிடிக்குமாம்.
      அடாணா ராகம். அபாரம்.
      சுப்பு தாத்தா.

      Delete
  2. Replies
    1. வட்டியிலே எதுவுமே கிடையாது. வாங்கின ஜோர்லே நம்ம விட்டுட்டு ஓடிப்போயிடும்.
      எதுவுமே முதலிலே உள்ளது தான்.
      அது சரி.. கமல் சார் முதல்லே டான்ஸ் ஆடின படம் எதுன்னு உங்களுக்கு தெரியுமா ?
      சுப்பு தாத்தா.

      Delete
  3. லேட்டஸ்ட் விஸ்வருபம் டான்ஸ் தான் .......... ...........எனக்குப் பிடித்தது

    ReplyDelete
    Replies
    1. அதிலே பாவங்கள் தான் அள்ளறது. ஆனா அதிலே ஒண்ணு இரண்டு வசனங்கள் ....??

      வேண்டாம். சர்ச்சை வேண்டாம்.

      சுப்பு தாத்தா.

      Delete
  4. எனக்குப் பிடித்தது சலங்கை ஒலி படப்பாலுக்கான ஆடல்தான்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்
      தாங்க் யூ. ஃபார் யுவர் விஸிட் அன்ட் கமென்ட்.
      வாருங்கள் very often.

      சுப்பு தாத்தா.



      சுப்பு தாத்தா.

      Delete

  5. சலங்கை ஒலி நடனம்தான் நம்பர் ஒன். விஸ்வரூபம் நம்பர் டூ.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      மூன்றாம் சுழியில் உங்களது ஃப்ராங்க் அஸெஸ்மென்ட் மிகவும் பிடித்து இருந்தது.

      சுப்பு தாத்தா.

      Delete
  6. அந்த ஊர் உலகமே காத்துக்கிடந்த படமும் சரி, அதில் கமலின் நடனமும் சரி எனக்குச் சுத்தமாப் பிடிக்கவே இல்லை:(

    சலங்கை ஒலியில்கூட கல்யாண வீட்டு சமையலறையில் ஆடும் நடனம் 'பால கனகமய'தான் ரொம்பப் பிடிச்சது.

    ReplyDelete
    Replies
    1. பால கனக மய ..
      சாஸ்திர பரதம்.
      நோ அபீல்.
      எந்த ஒரு கலையிலேயும் ஒரு முழுமை இருக்கவேண்டும் ஒரு இலக்கண சுத்தம் இருக்கவேண்டும்
      ஆங்கிலத்தில் இதை ப்யூரிடன் அப்ரோச் என்று சொல்லவேண்டும்.
      மொழியிலே எந்த அளவிற்கு நமக்கு ஈடுபாடு இருக்கிறதோ அந்த அளவிற்கு நமது கலைகளிலே
      இல்லையே ??

      அந்த பரதத்தைக் கண்டு மனம் குளிர்ந்தவர் இன்று இருப்பது அபூர்வம். கீதா சாம்பசிவம் எடுத்துக்காட்டிய‌
      பரதத்தை எனது அடுத்த பதிவில் காட்டி இருக்கிறேன்.

      கண்டு களியுங்கள். அவருக்கு நன்றி தெரிவியுங்கள்.

      சுப்பு தாத்தா.

      Delete
  7. நம் தமிழ்நாட்டில் பொதுவாக, நடனம் என்றதும் நினைவிற்கு வருவது பரதம் தான். நடனம் கற்க விரும்புபவர்கள் முதலில் கற்பதும் பரதம் தான். கமலும் அவ்வாறே. ஆனால் 'கதக்'?. ஒரு பேட்டியில் மிகக் குறைந்த காலமே கதக் பயின்றதாக, கமல் சொல்லியிருந்தார். 'விஸ்வரூபத்தில்', அந்த மகாபாரத 'பிருஹந்ந‌ளை'யை மனதில் கொண்டு, அவர் ஆடியிருக்கும் கதக் அவர் ஒரு பண்பட்ட நடிகர் மட்டுமல்ல நடனக் கலைஞரும் கூட என்பதை நிரூபித்தது. என் வோட்டு அதுக்குத்தான்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.

      இந்த கதக் நாட்டியம் ப்ருஜ் மஹராஜ் அவர்கள் பார்த்திருக்கிறீர்களா ?

      ஏதோ ஒரு சமயத்தில் 1985 என நினைக்கிறேன். வட இந்தியாவில் இருந்தபோது பார்த்தேன்.
      இப்போது யூ ட்யூபில் தான் காண முடிகிறது.


      சுப்பு தாத்தா.

      Delete
  8. Geetha Sambasivam
    ஹாஹா, எனக்குக் கமலைப் பிடிக்காது. அதுக்காகப் படங்களைப் பார்க்காமல் ஒதுக்க மாட்டேன். பார்த்தால் தானே விமரிசிக்க முடியும். ஆனால் நாட்டியம்னு பார்க்கப் போனால் கமலாவுக்கு அப்புறமா யாமினி கிருஷ்ணமூர்த்தி(குச்சுபுடி) தாண்டவம் பார்த்து அசந்திருக்கேன். எப்போவுமே கமலாதான் முதலில். பத்மா சுப்ரமணியம், தனஞ்சயன்,சாந்தா தனஞ்சயன் பிடிக்கும். இன்னும் சிலரும் இருக்காங்க. ஆனாலும் அசத்தல்னு பார்க்கப் போனால் கமலாவின் நளினமும், யாமினியின் சிவ தாண்டவமும் இதுவரை காணக்கிடைக்காத ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. Madam,

      இதுதான் எனக்குப் பிடிக்கும் அப்படின்னு சொல்வதற்கு இன்னமும் இருக்கிறார்களே
      பரத ரசிகர்கள் !

      உங்களுக்காகவே எனது அடுத்த பதிவு.

      வாருங்கள்.

      சுப்பு தாத்தா.

      Delete
  9. சலங்கை ஒலி நடனமே எனக்கு மிகவும் பிடித்தது. விஸ்வரூபம் கதக் நடனம் டி.வி.யில் பார்த்தேன், ஏனோ ரசிக்க முடியவில்லை. முக பாவங்கள் கொஞ்சம் பெண்மை கலந்தாற் போல் இருந்தது. கதக் அப்படித்தான் இருக்குமோ என்னவோ. தெரியவில்லை. வேறு ஒரு ஆண் (பரிமள் படேகர் என்பவர்) கதக் ஆடிப் பார்த்திருக்கிறேன், இப்படி இருந்ததாக நினைவில்லை.

    கீதாம்மா அளவிற்கு பலர் நடனங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை :) ஆனால் சாந்தாக்கா தனஞ்சயன் அண்ணா இவர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். (கீதாம்மா முன்னாடி ஆடணும்னா கொஞ்சம் யோசிக்கணும் போலருக்கே! :)

    ReplyDelete
    Replies

    1. நீங்க அடுத்த தடவை இங்க வரும்பொழுது
      ஒரு நிகழ்ச்சி அரேஞ்ச் செய்யலாமா ?

      எனது அடுத்த பதிவிலே யாமினி க்ருஷ்ணமூர்த்தி நடனம் பாருங்கள்.

      பெண்மையின் முக பாவங்களைக் காட்டுவது மிமிக்கிங் ஆகத்தோன்றுகிறது என்று சொல்வது சரியே
      சுப்பு தாத்தா.

      Delete
    2. மகாபாரதத்தில் அர்ச்சுனன் (விராட பர்வதத்தில்) பிருகன்னளையாக இருப்பதைப் பிரதிபலிப்பதுதான் கமலின் பாத்திரமாம். அதனால்தான் முக பாவங்களும் அப்படி அமைந்திருப்பதாக பார்வதி தனிமடலில் விளக்கி இருந்தார்... நன்றி பார்வதி! :) அப்படிப் பார்த்தால் சரியாகவே இருக்கிறது...

      Delete
  10. எல்லா ஆடல்களையும் எல்லா நேரமும் ரசிக்க முடிவதில்லை. எல்லா ஆடல்களையும் எல்லா நேரமும் வெறுக்க முடிவதுமில்லை. இந்த நேரத்தில் இந்த ஆடல் பிடிக்கிறது என்பதற்கு அந்த நேரத்து மனம், மூட், வேறு எதுவோ இனம் தெரியாத காரணம் கூட இருக்கலாம். அந்த வகையில் இந்தப் பாடல்களும்.

    எனக்குப் பிடித்தவையில் மூன்றாம் பிறையில் சில்க் உடன் ஆடும் 'பொன்மேனி உருகுதே' மற்றும் சிம்லா ஸ்பெஷல் படத்தில் வரும் 'உனக்கென்ன மேலே நின்றாய்' பாடல்.

    சட்டென நினைவுக்கு நினைவுக்கு அறுவது இவை இரண்டும்.அப்புறம் சிப்பிக்குள் முத்து வில் 'துள்ளித் துள்ளி', உன்னால் முடியும் தம்பி யில் 'புஞ்சை உண்டு நஞ்சை உண்டு'

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      சுப்பு தாத்தா.

      Delete
  11. கீதா சாம்பசிவம் என்று கூப்பிட்டு பதில் சொல்லியுள்ளீர்கள். அனால் அவரது கமெண்ட் என் கண்ணுக்குப் படவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிட்டது மேடம் கீதா சாம்பசிவம் கொடுத்திருந்த பின்னூட்டம் தான். அவர்கள் இதை எனது கூகிள் ளே பதில் தந்திருக்கிறார்கள். அதை நான் அப்படியே இங்கே ட்ரான்ஸ்போர்ட் செய்ய முடியவில்லை. அதனால் தான்
      காபி அன்ட் பேஸ்ட் பண்ணினேன். ரிஷபன் ஸாரும் அங்கு தான் பதில் தந்து இருக்கிறார்கள்.
      subbu thatha.

      Delete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!