Pages

Saturday, April 27, 2013

1 + 1 = 1.5 ?



பல்லவி 

**********
இது ஒரு எலிமெண்டரி பள்ளி கணக்கு. 
இரண்டு பேர்  ஆறு  நாட்களில் முடிக்கும் வேலையை நான்கு பேர் சேர்ந்து எத்தனை நாட்களில்  முடிப்பார்கள். ? மூன்று என நீங்கள் சொன்னால் நீங்கள் 1940க்கு முன் பிறந்தவர் 

அடுத்த கணக்கு. 
ஒன்றும் ஒன்றும் இரண்டா ?
இரண்டு என்று நீங்கள் சொல்வது கணிதத்தில் சரி.
 காணும் வாழ்க்கையில் அல்ல

அனுபல்லவி.

ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் மூன்று ஆவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன 
Given the synergy, the whole is indeed greater than the sum of its parts. (read more here )

நடப்பிலே  ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் சில நேரங்களில் பூஜ்யமும் ஆகும்
முயன்றால், மூன்றும் ஆகும்.

உண்மையிலே ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் தொகை என்ன ?
அது பூஜ்யம் முதல் மூன்று வரை எங்கோ இருக்கிறது.

சரணம்.

1955 ம் வருடம் அமெரிக்க உளவியல் ஆராய்ச்சியாளர்கள் ஜோசப் லஃப்ட் , ஹாரி இங்காம் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் , ஒரு குழு செயல்படும் விதத்தை ஆராய்ந்தார்கள்.  இவர்கள் முடிவாக்கிய வரைபடமே இவர்களது முதற்பெயர் கொண்டு ஜோஹாரி ஜன்னல் எனப்பெயரிடப்பட்டது.

 துவக்கத்தில் இது குழுக்களின் செயல் திறனை திறம்படுத்த உதவும் என்றுதான் நினைத்தனர் என்றாலும், ஒரு சில  வருடங்களுக்குப்பின், இவர்களது ஆய்வு ஒரு சமூகச் சூழ்நிலை ஒரு குடும்பச் சூழ்நிலை இவற்றையும் மேம்படுத்த உதவும் என முடிவு செய்தனர்



   ஏன் ஜன்னல் என்று சொன்னார்கள்.?

  நமது வீட்டு  ஜன்னல் வழியே வெளிச்சம் வரும், காற்று வரும்.
  ஜோஹாரி ஜன்னல் வழியே தெளிவு வரும். சூழ் நிலை இதமாக அமையும்.

  ஆயினும் என் வீட்டுக்கு  ஜன்னல் வேண்டாம் என்று சொல்பவர்கள் உண்டு.
   ஏன் சொல்கிறார்கள் ?
 
   ஜன்னலைத் திறந்தால் எனக்கு வெளியிலிருந்து வெளிச்சம் கிடைக்கிறது, காற்றும் கிடைக்கிறது. 

   ஆனால், அதே சமயம் வெளியிலிருப்பவர் நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கவும் வாய்ப்பு இருக்கிறது.
   நான் என்ன செய்கிறேன் என்று பிறருக்கு ஏன் தெரியவேண்டும்..
   அவர்களுக்கு நான் செய்வது சம்பந்தமில்லை.
   அவர்கள் எனக்கு இடைஞ்சலாகத்தான் இருப்பார்கள்.
   எனக்கு தேவையான காற்றோ அல்லது ஒளிக்கோ நான் மின் விசிறி அல்லது ட்யூப் லைட் போட்டுக்கொள்கிறேன்.

    என்னை தனியாக  விடு.. ப்ளீஸ் என்கிறார்கள்.

  இவர்கள் சிந்தனை எப்படி இருக்கக்கூடும் ?

    எல்லாம் எனக்குத் தெரியும்.  ( அல்லது )
    நான் செய்கிற காரியத்துக்கு எனக்குத் தெரிந்தது போதும்.
    எனக்குத் தெரியாதது என்று ஒன்றுமில்லை.
    எப்படியும் எனக்குத் தெரியாதது இந்த வீட்டில் இன்னொருவருக்கு தெரிந்திருக்க போவதில்லை.
    நான் ஏதும் கெடுதல் யாருக்கும் செய்யவில்லையே.. 
    என் எண்ணங்கள் எனக்கு மட்டுமே சொந்தம்.
 

    இந்த கட்டத்தில் ஒன்று சொல்லட்டுமா ?

    இது போல  நம் குடும்பங்களிலேயே ஒருவர் இருவர் தம்மையே ஒரு அறையில் அடைத்துக்கொண்டு

    யாரிடமும் பேசாமல், தான் என்ன செய்கிறோம் என்ன நினைக்கிறோம் என்பதை அவர்களைச் சார்ந்தவரே   அறியாவண்ணம் செயல்படுகிறார்கள்.
மனக்கதவை பூட்டி வைத்து தாமே கற்பித்த ஒரு இருளிலே சஞ்சரிக்கிறார்கள்.

அறை எனபதை Literal  பொருள் கொள்ளவேண்டாம்.
  A few of us keep our minds closed OR at least away from others.
Others seldom know what we feel, how we feel and why we feel about the very same things that happen within the four walls of the house in which others also live.

    குடும்பத்தில் மற்றவர்கள் துவக்கத்தில் ஏன் இப்படி இவர் இருக்கிறார் ? என்று நினைக்கிறார்கள். மனம் நொந்து போகிறார்கள். இல்லை எனச் சொல்லமுடியாது.

    சில சமயங்களில்  கேட்கவும் செய்கிறார்கள்.: என்ன ஆச்சு உனக்கு ?

    உரிய பதில் அல்லது தன்னை திருப்திப்படுத்தும் பதில் அவர்களுக்குக் கிடைக்காதபோது

    சில நாட்களில் அல்லது மாதங்களில்,

    என்னவோ, அவர் தன்  போக்குலே  இருக்கிறார்.

    என்னை அவர் பொருட்படுத்தி பேசும் பதில் சொல்லும் நிலையில் இல்லை.

    நான் எத்தனை நாட்கள் மாதங்கள் தான் அவரிடம் கேட்டுக்கொண்டே இருப்பது?

    என்னைப் பொறுத்த அளவில் என்னால் அவருக்கு தொந்தரவு இல்லை.
    அவராலும் எனக்குத் தொந்தரவு இல்லை.

    என்னை நான் சமாளித்துக் கொள்கிறேன்.
   அவரும் தன்னை சமாளித்துக் கொள்கிறார்.

   காலம் ஓடுகிறது.   அது நிற்குமா என்ன ?

   யாருக்கு நஷ்டம் ?

   ஒருவருக்கா ? இருவருக்குமா ?

  ஜோஹரி ஜன்னல் வழியாக பார்ப்போம்
  நீங்கள் பார்ப்பது முதல் படம்.

 இது ஒரு எளிய முதல் நிலை வரை படம்.

 
 இது என்ன 4 பெட் ரூம் அபார்ட் மெண்டா ?
 இல்லை அந்தக்காலத்து ஒன்டுக்குடுத்தனமா ?

  ஆம். இல்லை .

   இரண்டும் சொன்னால் என்ன அர்த்தம்.
   ஒரு வீடு நான்கு அறைகள்.
   நீங்களோ முதல் அறை போதுமென இருப்போம் என்று முடிவெடுத்து
   அதன் ஜன்னல் கதவுகளை பூட்டி வைத்துவிட்டால் வீட்டின் மற்றவர்கள்
   என்ன செய்வார்கள் ?
   அவர்களும் அவர்களுக்கென ஒரு அறை எடுத்து அங்கே சங்கமம் ஆகி விடுவர்

   நீங்கள் நினைத்தால் எல்லோரும் எல்லா இடத்திலும் புழங்கலாம்.
  விளையாடலாம்.

   அது எப்படி. ?

**Johari region 1 is also known as the 'area of free activity'. This is the information about the person - behaviour, attitude, feelings, emotion, knowledge, experience, skills, views, etc - known by the person ('the self') and known by the group ('others').

முதல் சதுரம் :

சுதந்திர பிரதேசம்
இது உங்கள் ராஜ்ஜியம் மட்டும் அல்ல.
இங்கு இருப்பது எல்லாமே உங்களுக்கும் தெரியும்
உங்களை சார்ந்தவருக்கும் தெரியும்.
*The open free area, or 'the arena', can be seen as the space where good communications and cooperation occur, free from distractions, mistrust, confusion, conflict and misunderstanding.


இதில்உள்ளவை  மட்டும்.
உள்ளவை  என்றால் ?
நீங்கள் எந்த அளவுக்கு மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்களோ
அந்த அளவுக்கே.
என்னென்ன அவை ?

 உங்கள்
அறிவு,
ஆக்கம்,
 அனுபவம்,
 செயல் திறன்,
உணர்வுகள்
வேண்டிய வேண்டாதவை பற்றிய எண்ணங்கள்,
உங்களது நம்பிக்கைகள், உங்கள் எதிர்பார்ப்புகள். ( எதுவாக இருந்தாலும் )
சுற்றம் உற்றம் பற்றிய உங்கள் கருத்துக்கள்,
உங்கள் வெற்றிகள், தோல்விகள்

நீங்கள் பார்க்கும் தொழில்,
உங்கள் நண்பர்கள்
உங்கள் சரித்திரம்

  ( உங்களது ஆஸ்தி, சொத்துக்கள் அசைவது அசையாதது இவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று இல்லை )


அப்ப எல்லாமே என்று சொல்லுங்கள்.
அப்படி நான் சொல்லவில்லை.
உங்களைப் பற்றி மற்றவர்களுக்கு
 ( உங்கள் மனைவி மகன்,மகள் உட்பட )
 என்ன தெரியவேண்டும் என நீங்கள் நினைத்து சொல்லி இருக்கிறீர்களோ
அவை எல்லாம்.

இப்போது,   அடுத்த சதுரம் என்ன என நோக்குமுன்,
ஒரு கேள்வி.

படிப்பவர் யாவருக்கும்
எனக்கும் சேர்த்து

எத்தனை விஷயங்களை உள்ளது உள்ளபடி
அன்றாட வாழ்க்கையின்
தோல்விகள், வெற்றிகள், சிரிப்புகள், கசப்புகள், பொறாமைகள், ஏமாற்றங்கள்,

 நாம்  மனைவியிடம் (அல்லது கணவரிடம் ) ( குடும்ப சூழ்நிலையில் )
தோழர்களிடம் ( சமூக சூழ்நிலையில் )
சக அலுவலர்களிடம் ( (அலுவலக சூழ்நிலையில் )

பகிர்ந்து கொண்டு இருக்கிறோம் ?

 என்னிடம் சொல்லவேண்டாம்
 பின்னூட்டமாகவும்  போடவேண்டாம்
  நீங்களே உங்களுக்கு சொல்லிக்கொள்ளுங்கள்

இதெல்லாம் அவளுக்குத் தேவையில்லை (அல்லது அவருக்கு )
இதெல்லாம் அவளுக்குப் புரியாது
அவளுக்கு புரியும்போது நானே சொல்லுவேன்
அனாவசிய குழப்பம் வேண்டாம்
ஏதாவது எனக்கு நடந்து விட்டால் பகவான் பார்த்துப்பார்.

என நினைத்தது உண்டா ?

மங்களம் 

ஒரு இரண்டு நாட்கள் யோசியுங்கள்.
பின் அடுத்த சதுரத்திற்கு செல்லலாம்

ஏன் இன்றைக்கே செல்லலாமே ? 

வேண்டாம்.

அடுத்த கட்டம்
ஆபத்தான கட்டம்.
அடுத்த கட்டத்தில்
உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத
(அல்லது ஒப்புக்கொள்ளாத ) விஷயத்தைப் பற்றி பட்டியல் பட்டியலாக
படம் பிடித்து வைத்து இருக்கிறார்கள்
உங்களிடம் சொல்லவும் துணிவில்லை 
சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. 

யார் அவர்கள் ?
நீங்களே சொல்லுங்கள்
அவசர டபேல்.


Courtesy:
 References
:http://www.businessballs.com/johariwindowmodel.htm
*


3 comments:

  1. good article, to know about ourselves..

    ReplyDelete
  2. விரிவான ஆழமான அழகான பதிவு,

    மற்ற பதிவுகளையும் படிக்க முடியவில்லையே என்கிற வருத்தம்...
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்..
    https://www.facebook.com/malartharu

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!