Pages

Sunday, March 24, 2013

இதையா கிறுக்கல் என்றா சொல்கிறீர்கள் ?
 வலைச்சரம் இன்று படிக்கப்போய் அங்கு அருணா என்ன சொல்கிறார் என்று பார்க்கும்போதே

     கிறுக்கல்கள் என கீதா அவர்கள் எழுதிய கவிதை ஒன்று என்னை
     கவர்ந்தது எனச்சொன்னால் அது மிகையல்ல .கவிதை படிக்க மேலே கிளிக்கவும். 

     கவிதை மரபு இலக்கணத்துக்கு உட்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்ற கட்சி எனதல்ல.

     சந்தங்கள் இருந்தால் தான் அது சிந்தை கவரும் என்ற வாதத்தையும் நான் ஒப்புக்கொள்ளவில்லை.

    வசன கவிதை பாரதி காலம் முதலே ( என்க்குத் தெரிந்து )  உருவாகி இருக்கிறது.  ஏன் ..  அதற்கு முன்னமே    சங்க கால கவிதைகள் சில இது போலவே இருக்கின்றன.

     ஒரு கவிதையைப் படித்து அதனால் உங்கள் உள்ளத்தில் ஒரு உதய சூரியன் உருவானால் அது கவிதை.

    என்ன ஒரு எளிமையான, பொருள் பொதிந்த கவிதை பாருங்கள்.

    இதையா  கிறுக்கல் என்றா சொல்கிறீர்கள் ?
    இதயம் எனக்கு இருக்கிறது.
    இனிய கவிதை என
    இதையே நான் சொல்வேன்.

12 comments:

 1. அழகான ஓவியம் + உங்களின் பாடல் அருமை ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை
   தங்களின்
   தங்க மனதை
   பிரதி பலிக்கச் செய்கிறது

   சுப்பு தாத்தா

   Delete
 2. உண்மை! ஓரு கவிதை இன்னொரு திரியை ஏற்றினால் அதுவே கவிதை.
  இதை நானும் ஏற்றுக் கொள்கிறேன் தாத்தா.
  இப்படித்தான் நானும் கூறுவதுண்டு.
  பதிவை ரசித்தேன்.
  மகிழ்வு. இறையாசி நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி
   தங்கள்
   இல்லங்களில்
   இலக்கியமும் இசையும்
   இணைந்து மகிழ,
   இல்லத்தோர் அனைவரும்
   இன்பம் பெற,
   எனது ஆசிகள்
   சுப்பு தாத்தா

   Delete
 3. Replies
  1. தாங்க்ஸ் என்று சொன்னால் போதுமா ?
   தினந்தோறும்
   ஒரு கவிதை எழுதுங்கள்
   அதை தரணி முழுவதும் பாடி
   இன்பம் பொங்க செய்யுங்கள்

   ஆசிகளுடன்
   சுப்பு தாத்தா

   Delete


 4. வணக்கம்!

  எடுத்துரைத்த வண்ணம் இனிமை அளிக்கத்
  தொடுத்துரைத்தேன் உ்ன்னைத் தொடர்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவிஞர் அவர்களே
   தங்களுக்கு ஒரு பாடல் அனுப்பி இருக்கிறேன்
   வெண்பா பாடி இருக்கிறீர்களா ? அல்லது காதல்
   வெண்புறாவை பறக்க விட்டு இருக்கிறீரகளா ?ஹன்முக பிரியா
   இந்தோளம் பாகேஸ்வரி, ஷண்முக ப்ரியா , நீலாம்பரி , மத்யமாவதி
   எனும் ஐந்து ராகங்களில் உங்கள் ஐந்து வெண்பாக்களை பாட
   என்னால் இயன்றதைச் செய்து இருக்கிறேன்.

   நான் பாடகன் அல்ல. ஒரு உற்சாகம் அவ்வளவே


   ஆசிகளுடன்
   சுப்பு தாத்தா

   Delete
 5. ஐயா... என்னவெனச் சொல்வேன்..
  அருமையான பாடல், பாடும் மெட்டு அப்படியே கண்மூடிக் கேட்டுக்கொண்டிருந்தால் மெய் மறந்து இந்த உலகே மறந்து போகிறது.
  இந்த வயதிலும் இத்தனை அருமையாக அழகாகப் பாடியிருக்கின்றீர்கள். அருமை ஐயா.
  உங்கள் திறமை, மற்ரவர்களையும் வாழவைக்கின்றது. மிகவும் ரசித்தேன்.

  உங்களை வணங்கி வாழ்த்துகிறேன்!

  இதை எழுதிய அன்புத்தோழி கீதாவுக்கும் என் வாழ்த்துக்கள்! மிக அருமையாக அழகாக் இருக்கிறது உங்கள் கவி.
  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
  Replies
  1. இளமதி !!
   நாளை முழு மதி
   நாவெலாம் இனிக்க
   நானிலம் போற்றிட
   நவிலுங்கள் நாலு வரி .
   நானும் அதை பாடிடுவேன்
   ஆசிகளுடன்
   சுப்பு தாத்தா

   Delete

 6. வணக்கம்!

  என்றன் வலையில் எழுதிய நல்லுரைக்கு
  நன்றி உரைத்தேன் நயந்து!

  ஐயா தங்களை எண்ணும்பொழு மனம் மிகவும் மகிழ்கிறது
  உங்களின் வாழ்த்து என்னை மேலும் உயா்வுறச் செய்யும்

  என் மின்னஞ்சல்
  kambane2007@yahoo.fr

  ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!