Pages

Monday, February 18, 2013

வறட்டு இருமலுக்கு வாட் இஸ் த மெடிஸன் ?


Picture Courtesy: 
http://www.emirates247.com

   ஆஹா !! வீட்டு வைத்தியம் by Srihari என்று ஒரு புஸ்தகம் இருக்கா ?
   இன்னிக்கு திருமதி + Valli narasimhan வல்லி நரசிம்மன் அவர்கள் பதிவிலே படித்தேன். இது மாதிரி ஒரு புஸ்தகம் இருக்கு அப்படின்னு.   எனக்காக அதைக்கொஞ்சம் படித்து சொல்லுங்களேன். 

   வறட்டு இருமல் சரியாக 30.ஜனவரி 2013 இரவு 9.32 க்கு ஆரம்பித்தது.
 ஸோர் த்ரோட் ஆக ஆரம்பித்தது    ஒரு கட் த்ரோட் ராஸ்கலாக இன்னமும் தொடர்ந்து என்னை விஜய் டிவி serial கருத்தம்மா  வரும் ராஜம்மா    வில்லி மாதிரி என்னை துன்புறுத்துகிறது.

 லொக்...லொக்....லொக்...

   எல்லாவித காஃப் சிரப்புகள், ஆன்டி ஹிஸ்டமின் மாத்திரைகள் , இரண்டு பிரபல ஸ்பெஷலிஸ்ட்    கன்சல்டேஷன் எல்லாருமே இது வெறும் வறட்டு இருமல் தான்     கபம் இல்லை.லங்க்ஸ் க்லீயர் ஆக இருக்கிறது.
சரியாக போயிடும் என்று சொல்லி இன்று    இருபது நாட்கள் ஆகிறது.  பர்ஸ் க்ளியர் ஆகிவிட்டது.  லங்க்ஸ் க்ளியர் ஆகவில்லை.

 லொக்..லொக்....

   வென்னிர் லே, மஞ்சள் பொடி, மிளகு பொடி, பனங்கல் கண்டு போட்டு ஒரு தடவை.
   ஓமவல்லி, ஆடுதொடாஇலை, கண்டங்கத்திரி இலைய் பொடி பண்ணி, தேன் கலந்து.
   திராட்சையோட இரண்டு துளசி இலை.  ஒரு நாளைக்கு நாலு தடவை.
   துளசி, சுக்கு, மிளகு, ஜீரகம், கண்டந்திப்பிலி, தேன், சித்தரைத்தை எல்லாம் கலந்து
   சித்ரவதை செய்யும் ஒரு சூரணம். , சாப்பிட்டபின்.

   மிளகு குழம்பு என் மாட்டுப்பொண் உங்களுக்காகன்னு கொண்டு வந்தேன்பா அப்படின்னு தோஹாவிலேந்து கொண்டு வந்ததை  தினம் காலையிலும் ராத்திரியிலும் சுடற சாதத்தோட மிளகு அப்பளம், ஜீரக லேகியம் இத்யாதி.

   இதைத் தவிர கோட்டக்கல் ஆரிய வைத்த்ய சாலா டாக்டர் கொடுத்த‌
   தாளீசாதி சூரணம், வடகம் ,சீதோபலாதி,zandu company  கதிராதி குடிகம், ஸ்ரீஹரி க்ராந்தி லேகியம்,  ச்யவன ப்ராசம்,

   தூங்கும்பொழுது இருமல் ச்ரமப்படுத்தரதேன்னு, நன்னா தூங்கிட்டா, இருமாது அப்படின்னு சொல்லி,  வசம்பு இழைச்சு மஞ்சள் பொடி, மிளகு பொடி போடி போட்டு பால் தர்றா ஆத்து ராக்ஷஸி.

  ஊஹூம். போவேன்னா அப்படிங்கறது.  

   எதிர்த்த மருந்து கடை கொடுத்த செரி காஃப், ஹிமாலயா ஹனிடஸ் , காஃப்லெட
   ஹால்ஸ், விக்ஸ், வாடர்பரீஸ் காம்பவுன்ட் . பாட்டில் பாடிலா காலியாரது....

  எதுவும் ப்ரயோஜனப்படல்லை.    லொக்...லொக்....

என்னோட நண்பர் இதே காலனி  ஆன்மீகத்திலே கரை கடந்தவர் அவர்கிட்ட போயி இது மாதிரி இருக்கே ஏதாவது தெய்வ குத்தம் இருக்குமோ என்று பேச துவங்கினேன்.  என்ன இருந்தாலும் மேஷ ராசிக்கு இது கண்ட சனி . படுத்தத்தான் செய்யும். இவர் என்ன சொல்கிறார் பார்ப்போம் என்று  தொலைபேசினேன்.

   சனிக்கிழமை சப்தமி முடிஞ்சு அஷ்டமி ஆரம்பிச்சுடுது. அஷ்டமி லே ஒரு வியாதி ஆரம்பிசுடுதுன்னா என்று ஆரம்பிக்கும்போதே வயத்தைக் கலக்கியது. ஒரு வாரா சமாளிச்சுண்டு என்ன ஆகும் என்று அழாமல் கேட்டேன்.

   இதுக்கு போய் அழுவாளா ?  வயசாயிடுத்து இல்லையோ.  எல்லாம் வரும் போகும்.
கவலை பட வேண்டாம். அஷ்டமி தான் இருந்தாலும் திருவோணம் நக்ஷத்திரம் இல்லையா. பெருமாள் நக்ஷத்திரம். கவலை படாதேங்கோ. பெருமாள் பாத்துப்பார். என்றார்
  
   ஆண்டவா, அனந்த பத்மனாபா, என்ன செய்யறது அப்படின்னு தவிச்சுண்டு இருக்கிற போது   சரியான சமயத்துலே ஆபத் பாந்தவ, அனாத ரக்ஷகராக வந்திருக்கிறீர்கள்.
 
  வீட்டு வைத்தியத்திலே வறட்டு இருமலுக்கு, லொக்...லொக்... ஸ்ரீ ஹரி என்ன சொல்லியிருக்கிறார் ?

  எங்க அம்மாவுக்கும்  ரொம்ப புடிச்ச புஸ்தகம்.
 ( ஆம் முழுக்க தேடிப்பாத்துட்டேன். எங்க வச்சுட்டு போயிருக்கான்னு தெரியல்ல.  சொல்லாமலேயே  மேலே போயிட்டார். அங்கே நான் போகும்போது தான் கேட்க வேண்டும்.)
 
   நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்.
   மற்றபடி,
   உபய குசலோபரி.
 
  சுப்பு தாத்தா.


Also see here

8 comments:

  1. மிளகும் சர்க்கரையும் சம அளவில் போட்டு பொடித்துக் கொண்டு, அரை டீஸ்பூன் எடுத்து நெய் விட்டு குழைத்து தொடர்ந்து மூன்று வேளையாவது சாப்பிட்டால் வறட்டு இருமல் நிற்கும். இது என் மாமியார் சொல்லி நாங்கள் அனைவருமே பின்பற்றுகிறோம். பலன் இருக்கிறது.

    சித்தரத்தையை நசுக்கி தண்ணீரில் போட்டு அவ்வப்போது குடித்து வந்தால் பலன் தெரியும்.

    அதிமதுரமும் வாயில் ஒதுக்கிக் கொண்டால் நல்லது.

    ReplyDelete
  2. இருமல் அதிகம் இருந்து எந்த மருந்துகளுக்கும் கட்டுப்பட மறுத்து தொல்லை கொடுத்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்திருப்பதுக் ஒரு காரணமாக இருக்கலாம் ..

    கிராமங்களில் உள்நாக்கு கீழே இறங்கிவிடுவதால் இருமல் என்று உச்சந்தலை முடிகள் சிலவற்றை கொத்தாகப்பிடித்து இழுத்து சட்க்கு எடுத்தார்கள் ... இருமல் சட் என்று நின்றதை ஆச்சரியத்துடன் பார்த்தேன் ..

    பேரீச்சைக்காய்களை கழுவிவிட்டு கொதிக்கும் தண்ணீரில் இட்டு அந்த தண்ணீரை பொறுக்கும் சூட்டில் குடித்து அந்த பேரீட்சையும் சாப்பிட்டு வந்தால் இரத்த சிவப்பணுக்கள் அதிகரித்து இருமல் நிற்கலாம் .

    தங்கள் நலத்திற்கு தன்வந்திரி பகவானை பிரார்த்திகிறேன் ஐயா..

    ReplyDelete
  3. எனக்கு அவ்வளவாக வீட்டு வைத்தியம் தெரியாது. வறட்டு இருமல் வந்தால், காபி, டீக்கு தடா போட்டுவிடுவேன். சுக்கு மல்லி பொடி, பனங்கல்கண்டு போட்ட பால் குடிப்பதுண்டு. தங்கள் கட்டுரையைப் படிக்க நிஜமாகவே கஷ்டமாக இருக்கிறது. 'வைத்யோ நாராயணோ ஹரி:'. தன்வந்திரி ஸ்லோகம் சொல்லி தங்கள் நலனுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்.

    ReplyDelete
  4. ஒரு கைப்பிடி துளசி இலையை பறித்து வந்து சுத்தம் செய்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அரை டம்ளர் ஆகுமளவு நன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக காலை ஒரு நேரம் உட் கொள்ளலாம்.

    அந்த காலத்தில் செம்பு பாத்திரத்தில் 10 15 துளசி இலைகளை போட்டு இறைவனிடம் வைத்து விட்டு தீர்த்தமாய் குடிப்பார்கள் தினம் அதனால் ஜலதோஷம் பிடிக்காமல் இருந்தார்கள்.

    கருந்துளசி மிகவும் சிறப்பு.
    தெய்வீக மூலிகை டாகடர் திரு மானிக்கவாசகம் அவர்கள் சொன்னது சாப்பிட்டு பாருங்கள். இருமல் குணமாகும்.

    ReplyDelete
  5. .http://pettagum.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D//

    இதில் கை வைத்தியங்கள் நிறைய இருக்கிறது பாருங்கள் சார்.

    ReplyDelete
  6. திருமதி கோவை2தில்லி ,
    திருமதி ராஜேஸ்வரி
    திருமதி பார்வதி ராமச்சந்திரன்

    உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி பல.
    திருமதி ராஜேஸ்வரியின் ஆயுர்தேவதையை இன்னும் சற்று நேரத்தில் படிப்பேன்.
    திருமதி ராஜேஸ்வரி அவர்களின் இன்றைய பதிவினையும் இனிமேல் தான் படிக்கவேண்டும்.

    திருமதி கோமதி அரசு. உங்கள் ஆலோசனை படி பெட்டகம் ப்ளாக் சென்றேன்.
    அவரது பூண்டு பற்றிய விளக்கங்கள் பார்த்தேன். படித்தேன்.
    பூண்டை பத்துவருடங்களாக சாப்பிடுவதால் உடல் இளைத்தேன்.
    கொலஸ்ட்ரால் தொலைத்தேன். நன்றி பல.

    நான் போன சமயத்தில் அவர் பீட் ரூட் அல்வா செய்வது எப்படி என விளக்கி இருந்தார்கள்.
    அதையும் இப்பொழுது செய்துகொண்டு இருக்கிறேன்.
    அதிலெயாவது இருமல் சரியாகுமோ என்று இருக்கிறது.

    இந்த இருமல் சரவணன் மீனாட்சி தொடர் போல இருக்கிறது.
    இரண்டுமே தொல்லை.
    என்றைக்கு முடியுமோ தெரியவில்லை.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  7. அன்பினிய தாத்தா, எனக்கு தெரிந்ததெல்லாம் நீங்க already செய்துட்டீங்களே. அதைத்தவிர, வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து sip பண்ணினால், இருமல் குணமாகிறதோ இல்லையோ, தொண்டைக்கு இதமாக இருக்கும். பல சமயம் எனக்கு இரவெல்லாம் இருமல் வரும்போது அப்படித்தான் செய்வேன். உங்களுக்கு சீக்கிரத்தில் குணமடைய அம்மாவை வேண்டிக்கிறேன்.

    ReplyDelete
  8. funny narration. hope you feel better soon.

    coating throat with turmeric paste really helps. (mix turmeric powder in minimum amount of water and swallow slowly as it coats the throat). do this every four hours.

    i had to make an important presentation to a top ranking govt authority figure in Delhi... i came down with severe throat infection the day before, serious enough to risk my entire meeting. my local host's mother suggested this medication.. i felt much better the next day, and i was completely cured in less than two days. i stand by this traditional cure.

    another advantage of this approach is that one must not talk or eat or drink for an hour after coating.. not talking is seen as a huge advantage - by others :-)

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!