Pages

Sunday, January 25, 2009

Politics, ethics and democracy அரசியல், ஜன நாயகம்

சென்னையிலிருந்து அமெரிக்காவில் உள்ள கனெக்டிகெட் ஸ்டாம்ஃபோர்டு வந்து ஒரு சில தினங்களே ஆகின்றன. இருந்தாலும் சென்னையை விட்டுப் பிரிந்துபோன உணர்வு மேல் நோங்கி நிற்கிறது.

என்ன காரணம் ? இங்கு உள்ள கடும் குளிரா ? வித்தியாசமான சாலைகளா ? இங்கு காணப்படும் ஒழுங்கு விதிகளா ?
இதெல்லாம் இல்லை. இதற்கு மேலே :

முதற்காரணம்: கிட்டத்தட்ட 50 வருடங்களாக எழுந்த உடனேயே கையில் எடுக்கும் எனது தினசரி ஹின்டு பேப்பர் எனப்புரிந்தது.

என்னதான், எனக்கு எனக்கு ஹின்டுவின் பக்கங்கள் முக்கிய சங்கதிகள் இன்டர்னெட் வழியாக படிக்கமுடிந்தாலும் பேப்பரைக் கையிலே ஃபிஸிகலா எடுத்து மேலும் கீழுமாக கண்களை உலவவிட்டு நமக்குப்பிடித்த பக்கங்களை முதலில் படித்து ஒரு மன அமைதி பெறுவதே தனி சுகம்.

இன்று காலை ஹின்டு வில் திரு நரேஷ் குப்தா அவர்கள் எழுதிய கட்டுரை மிகவும் கவர்ந்தது. ஆஃப் லேட் நான் ஹின்டு ஒர் பக்கமாக எழுதுகிறது என்று பலர் கூறுவதில் சிறிது உண்மை இருக்கிறது என்பது எனது கருத்து. இன்றைய கட்டுரை ஹின்டுவில் தானா என்றுகூட ஐயமாக இருந்தது.

எழுதிய திரு. நரேஷ் குப்தா அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ் நாடு. அண்மையில் அவரது செயல்பாடுகள் ஒரு சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் இருந்தன என்பது வெள்ளிடைமலை.

அவர் எழுதிய இந்தக் கட்டுரை படித்தபின் அவரது மன உணர்வுகள் புரியாமல் இல்லை. சாதாரணமாக, அரசியல் குறித்த பதிவுகள் எழுதுவதில்லை. ஆயினும் இது அரசியல் மட்டுமன்றி, அரசியல் சரித்திரம், எதிக்ஸ் உள்ளிட்டதாக‌ இருக்கிறது.

பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்திய நண்பர்கள் இக்கட்டுரையை அவசியம் படிக்கவேண்டும்.

காபி ரைட் கட்டுரையாக இருக்கிறது. இருந்தாலும் ஹின்டுவின் ஒரு 60 வருட வாசகன் என்ற முறையில் அதை நான் இத்துடன் இணைப்பதில் ஹின்டு நிர்வாகம் கோபமடையாது என எண்ணுகிறேன்.

Politics, ethics and democracy

Naresh Gupta

Democracy is at stake if the loudest voice counts as the voice of wisdom or when coercive pressures take the place of reason and persuasion

Democracy was never alien to India. In fact, India could be considered to have been the cradle of democracy. The roots of Indian democracy can be traced back to as early as the Vedic age. There was a time when India was studded with republics. Even where there were monarchies, they were either elected or limited. They had to function in accordance with dharma, or the rule of law. Pali texts provide interesting details of how the assemblies of republics in the post-Vedic period functioned like parliaments and followed highly sophisticated procedures. However, the parliamentary system in its modern connotation owes its origin and growth to India’s British connection for some two centuries.

The Indian Independence Act, 1947, provided for the setting up of two dominions of India and Pakistan with effect from August 15, 1947. It was, according to Lord Samuel, “an event unique in history — a treaty of peace without war.”

The Founding Fathers of the Constitution chose the system of representative parliamentary democracy with universal adult franchise. Freedom brings responsibility. Building on the traditions of the national movement, Indian leaders strengthened the foundations of democracy in the country by the manner of their functioning. They gave due importance to the institutional aspects of the democratic system and adhered not only to the forms of democratic institutions and procedures but also the spirit.

From an electorate of around 173 million in 1951 when India went to the polls for the first time under the Constitution, the number of electors swelled to nearly 672 million in 2004. The fair and peaceful conduct of elections periodically with a large turn-out of voters, especially of the rural folk and women, and the participation of all groups with differing ideology and religious faith, is an indication of the acceptance of the framework of the Constitution and the growing political awareness among the people. India is the largest democracy in the world. These elections have demonstrated that the democratic urge is very deep-rooted among the people of India and their faith in a constitutional system of government very strong.

Jawaharlal Nehru was quite amazed at democracy functioning so successfully in India. On the last day of the second Lok Sabha, he could say with some satisfaction on the floor of the House: “Democracy... is the hallmark of India at present. But democracy does not consist of 210 million people voting. Democracy, ultimately, is a way of life, a way of reacting to circumstances, a way of thinking and a way of putting with the things we dislike even. And I think we have done fairly well… and considering the state of the world today when every other day we read bout coup d’ etats in various countries, it is surprising how we have carried on in our normal way.”

If we are to live in peace and happiness, every nation, community, and the individual must envision universal and humanitarian ideals and must strive to practise them in thought, speech and action. Religion and even politics must be founded on moral and spiritual fundamentals. In ancient India, politics was regarded as a branch of ethics. Peace, justice and liberty for all were the prime purposes of politics.

Mahatma Gandhi recommended that politics should be a branch of ethics. While there has been considerable progress on the economic front, there has been regression of the values in the society and devaluation of the institutions.

The expectation at the time of Independence that public men would sacrifice their personal interest for public welfare has not been fulfilled. Mahatma Gandhi did not want the constructive workers, the men and women who had directed the several organisations over the years to remove untouchability, extend basic education, improve food cultivation, develop village industries and encourage hand spinning, to go into power politics. That would, he felt, spell ruin.

Democracy is at stake if the loudest voice counts as the voice of wisdom or when coercive pressures take the place of reason and persuasion. Referring to his tours, especially concerned with the general elections that were approaching at that time, Nehru wrote: “Elections were an inseparable part of the democratic process and there was no way of doing away with them. Yet, often enough, elections bring out the evil side of man and they do not always lead to the success of the better man.”

In his address on October 18, 1951, Nehru laid great emphasis on the importance of the right means to achieve right ends. He said: “... [I]f in our eagerness to win the elections, we compromise with something that is wrong, then we have lost the fight already and it matters little who tops the poll...”

(Naresh Gupta is an Indian Administrative Service officer serving as Chief Electoral Officer, Tamil Nadu.)

© Copyright 2000 - 2008 The Hindu

Courtesy: THE HINDU

Sunday, January 11, 2009

புக்கர் பரிசு இந்த வருஷம் ஒன்று கொடுத்தால்....



இதே போல் கலர் கலரா தினுசு தினுசா ஒரு பத்து பூ. கண்டு களிக்க செல்க:

http://thulasidhalam.blogspot.com

கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக இந்த ப்பதிவினில் புதிதாக ஏதும் எழுதவில்லை என்பதே மறந்து போன நிலையில் வடுவூர் குமார் கானடா ராகத்தை ரசித்துவிட்டுப் போன விவரம் அறிந்து மகிழ்ந்தேன். அந்தப்பாட்டு திரையில் வந்து வெகு காலமானாலும், மக்களின் மனதை விட்டுப் போகவில்லை. இனிமையென்றால் அப்படி ஒரு இனிமை அந்தப்பாட்டில்.
நிலா, நிலா எனத்துவங்கும் பாட்டு அது.

துளசி டீச்சர் பதிவு டாலியா பூக்களின் ஒரு சுந்தர வனமாகத் திகழ்கிறது. அப்பூக்களைப் பார்த்து மயங்காத ரசிகர் இல்லை. நான் என்ன செய்தேன், அவற்றில் சில , இல்லை பலவற்றை எடுத்துக் கொண்டு போய், மேடம் கவினயா திருவெம்பாவை பாட்டுடன் இணைத்து யூ ட்யூபில் வெளியிட்டேன். அதைப்பார்த்து துளசி டீச்சர் மகிழ்ந்தார். அவர் நன்றி கூறும் அழகே தனி. வார்த்தைகளை கையாள்வதில், தான் சொல்லவேண்டியதை, எளிமையாக, கோர்வையாக சொல்வதில் அவருடைய திறமைதனை வார்த்தைகளால் வர்ணிப்பது எளிதல்ல. தமிழ் வலையுலகத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் துவங்கினால் அவர்தான் முதல் வைஸ் சான்ஸலர் ஆவார்.

துளசிதளம் வலைப்பதிவுக்கு வருகை தந்திருந்த ( எனக்கு அறிமுகமாகாத ) ஒரு வலைப்பதிவுக்குச் சென்றேன். துளசிதளம் புஷ்பவனம். தெய்வ சுகந்தி அவர்களின் தளத்திலோ குருமா மணம். அப்படியே தூக்கி சாப்பிட்டு விடும் போல் இருக்கிறது.

இந்த வயதில் கொண்டக்கடலை, குருமா எல்லாம் வயிரு புடைக்க தின்றுவிட்டால், ஜீரணம் ஆகுமோ ஆகாதா என்றே தெரியவில்லை.

நான் பார்த்திராத வலைப்பதிவு இது. ஜன்மம் எடுத்ததே சாப்பிடத்தானே ! நல்ல சாப்பாடு சாப்பிடவேண்டும், நல்ல பாட்டு கேட்கவேண்டும், நல்ல தூக்கம் தூங்க வேண்டும். இதைத் தவிர வேறு என்ன வேண்டும் ! அப்பப்ப , காதுக்கும் நல்லது கொஞ்சம் கேட்கவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம், நான் ஜீவா அவர்களின் வலைப்பதிவு செல்வேன். அது பதிவு அல்ல. இசைக்கடல். அதில் முழுகிவிட்டால், அடுத்த வேளை மாத்திரை சாப்பிடவேண்டும் என்பது கூட மறந்து போகிறது. சமீபத்தில் தோடி ராகத்தில் ஒரு ராகம் தானம் பல்லவி. அப்பப்பா ! என்ன சுகம் என்ன சுகம் !!

சில மாதங்களாக எல்லா வலைகளிலும் பார்ப்பது :
follow me
விசிறிகள் தாங்கள் விசிட் செய்யும் வலையில் தங்கள் ஃபோட்டோக்களைப் பதிவு செய்ய சுலபமான வழி.
ஜீவா அவர்கள் இதை " பெரியோர் தொடர்பு" என நாகரீகமாகச் சொன்னதற்கு சிறியவனான நான் கடமைப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் ஒன்று பாருங்கள். ஒரு வலைப்பதிவாளர் ஏறத்தாள 53 பதிவுகளை ஃபாலோ செய்கிறாராம். அதில் எனது ஒன்பது பதிவுகளில் ஒன்றாவது இருக்குமென நினைத்து மேலும் கீழும் பன்முறை பார்த்தேன். கழுத்து வலித்ததுதான் மிச்சம். ஊஹூம். எனக்கு அந்த பாக்கியம் இல்லை. ஆண்டவனுக்கு நான் விசிறியாக முடியுமே தவிர ஆண்டவன் எனக்கு விசிறியாக முடியுமோ ? எனது பைத்தியக்கார பேராசையைப் பார்த்து எனக்கே சிரிப்பாக வந்தது.

இன்னும் பத்து நாட்களில் யூ.எஸ்ஸுக்குச் செல்லவேண்டும். அங்கு போய் அந்தக்குளிரில் எப்படி நடுங்கப்போகிறேன் என்று இப்போது வருணிக்க இயலாது. பல் கிடு கிடு என்று ஆடுமேன்னு தான் பல் செட்டே போட்டுக்கொள்ளவில்லை. அங்கிருந்து எனது பெண் தொலைபேசியில் இந்த கோதுமை ரவா என்னன்னு கேட்டால், இங்கே யாருக்கும் புரியவில்லை. உனக்கு தினம் கோதுமை சாதம் வேண்டுமல்லவா , அதனால், வரும்போது கொஞ்சம் ரவா எடுத்து வந்தால் அதைக்காண்பித்து அதை இங்கே வாங்கலாம் என்றாள். கோதுமை மாவு சப்பாத்திக்கு. க்ளுடன் என்பது அல்வா பண்ணுவதற்கு.அமெரிக்க தமிழர்கள்
கோதுமை ரவா உப்புமா எப்படி செய்கிறார்கள் ? கோதுமை ரவாவுக்கு அமெரிக்காவில், குறிப்பாக கனெக்டிகட்டில், new jersey ல் என்ன பெயர் ? தெரிந்தவர்கள் எழுதலாம். ஒருவேளை ஜீவா இதைப்படித்தால் E-மைல் போடுவார்.

இப்படி யோசித்துக்கொண்டே, வலைகளை வலம் வரும்போது, ராஜீஸ் கிச்சன் என்று ஒரு ஆங்கில வலை கண்ணில் பட்டது. கூகுளில் வீட் ரவா என்று தேடினேன். அப்போது,வீட்டில் வீட் ரவாவில் பாயசம் செய்வது எப்படி என்று ஒரு கிச்சன் வலை கண்ணில் பட்டது. ரவா பாயசத்தை வர்ணித்திருப்பது ரவா பாயசம் சாப்பிட்டது போலவே இருக்கிறது. மிந்திரி, திராட்சை எல்லாம் போட்டு, அதை ஃபோட்டோ பிடித்து போட்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்று புரியவில்லை. எல்லாவற்றையும் வர்ணித்துவிட்டு, இது காபி ரைட் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இன்டலக்சுவல் காபிரைட் என்பது அமெரிக்காவில் உண்டு என்பதை நானறிவேன். ஆனால், இவர்கள் சொன்னது போல‌ நான் ரவா பாயசம் செய்து அதில் ஒன்றிரண்டு டம்ளர் குடித்தபின், நீ காபிரைட்டை இன்ஃப்ரிஞ்சு செய்துவிட்டாய் என்று கேஸ் போட்டு விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. ஆனால் ஒன்று, மிந்திரிக்கு பதிலாக பாதாம் பருப்பைப் போட்டுவிட்டு, இது வேற என்று சமாளித்துக் கொள்ளலாம்.

எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றுவான்.

கடைசியில் துளசி டீச்சருடைய பதிலொன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதை மறுபடியும் மறுபடியும் படித்தேன்.

அது இதுவே:

"இயற்கையை மிஞ்சுனது ஏதும் உண்டா?

உண்மையாப் பார்த்தால் இதுதான் கடவுள். நாம்தான் அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தாற்போல் பேர் வச்சுருக்கோம்,சாமிக்கு."

இரண்டே வாக்கியங்களில் உலக வானிலே அமைதி நிலா பரிணமிக்க பவனி வர‌ வழி ஒன்று சொல்லியிருக்கிறார்கள்.

புக்கர் பரிசு இந்த வருஷம் ஒன்று கொடுத்தால் அதை எங்கள் துளசி டீச்சருக்குத் தரவேண்டும்.