Pages

Thursday, June 26, 2008

What is Faith ? What is Belief ? What else is Perception ? என்றோ நடந்த கதை

நம்பிக்கை என்பது ஒரு சொல். அதன் பல பரிமாணங்கள்.



கந்தர்வ நகரம் என்று சொல்லப்படும் மஹாராஷ்ட்ரா மா நிலத்தில் ஒரு ஊருக்குச்
சென்று வந்து அதுபற்றி வெகு அழகாக வர்ணித்திருக்கிறார் இந்த வலைப்பதிவு
ஆசிரியர்.

"சுமார் தரை மட்டத்தில் இருந்து 1300 அடி உயரம் வந்ததும் மிகப்பெரும் நிலப்பரப்பு, சுற்றிலும் மரங்கள், மரங்கள், மரங்கள் மற்றும் குத்துச்செடிகள், மருந்துக்கு கூட மனிதர்களோ ஆடு மாடுகளோ இல்லை "

http://authoor.blogspot.com/
அந்தக் காலத்து ஹிட்ச்காக் படம் பார்ப்பது போல்
கொஞ்சம் பயமாவும் இருந்தது மேலே படிப்பதற்கு.
படித்துக் கொண்டே போனேன்.
என்ன ஒரு வர்ணனை. அந்த கிராமத்து அழகில், வனப்பில்,
ஒய்யாரத்தில், மனம் மகிழ்ந்து போனேன்.

அந்த ஊர் சிறப்புகளை எல்லாம் அழகுபட வர்ணிக்கும்போது அந்த கிராம அருகாமையில்
வசிக்கும் மக்களது நம்பிக்கைதனையும் எடுத்துரைத்திருக்கிறார்.

//சிவனே முழு முதல் கடவுள். கோவில் என்று ஏதுமில்லை। சூலம் பதித்த ஒரு மரத்தடியும் அதன் அடியே புதைந்துள்ள கல்லுமே அவர்களின் கடவுள் அடையாளம்। ரிஷி ஆசீர்வதித்த மரமென்று ஒரு ஆலமரத்தைச் காட்டுகிறார்கள்। காரணம் ஆல மரத்தினடியில் வேறு எந்த மரமும் வளராதாம் ஆனால் இந்த மரத்தின் அடியில் ஒரு கருவேப்பிலை மரம் வளர்ந்து தழைத்தோங்கியுள்ளது। அங்கு பல வருடங்கள் கண்ட ஒரு பாம்பு வாழ்வதாகவும் நம்புகிறார்கள்। அந்த இடத்தில் பரவியிருக்கும் அமானுஷ்யமும், வெள்ளந்தியான அந்த மக்களின் வாழ்வும் மிகவும் சூட்சுமமான இடம் இது என்ற உணர்வையே தந்தது। இன்னும் தன்னை அகழ்ந்தாராய்ந்து கொள்ள அந்த இடம் மிகவும் ஏதுவானத இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.//

நான் இந்தப் பதிவுக்கு ஒரு பின்னோட்டம் இட்டிருந்தேன்.

" இறையொன்று உண்டென எல்லோரும் சொல்லிடினும் அவனை எப்படி ஒவ்வொருவரும்
உணர்கிறார் என்பது அவரவர் நம்பிக்கை.
நம்பிக்கை என்பது அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம்.
நம்பிக்கை என்றால் என்ன என ஒரு வகுப்பில் சொல்ல நேரம் கிடைத்தது.
இதை belief என்றும் faith எனவும் வெவ்வேறு நிலைகளில்
காண்கிறோம். சொல்கிறோம்.
What is primarily absorbed from parents, teachers and leading members of
one's social group is known as belief. As 'belief ' enters into one's inner
consciousness and gets integrated into one's intellect, the same " belief "
becomes " faith "
வெவ்வேறு சமூக அமைப்புகள் வெவ்வேறு நம்பிக்கைகளை அடித்தளமாகக்
கொண்டபோதிலும் இவ்வெல்லா நம்பிக்கைகளையும் இணைக்கும்
தளம் ( u may call it as CPU = central processing unit ) "மிகவும் சூட்சுமமான இடம்"
வெறும் பூஜியம் தான். "அந்தப்பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன். அவனைப்புரிந்து கொண்டால் அவன் தான்
இறைவன் "

இந்தப் பின்னூட்டத்தைப் படித்த பதிவாளர் எனக்கு பதிலளித்தார்:

"What is primarily absorbed from parents, teachers and leading members of
one's social group is known as belief. As 'belief ' enters into one's inner
consciousness and gets integrated into one's intellect, the same " belief "
becomes " faith ""

ரொம்பவும் அருமையான விளக்கம். முன்பெல்லாம் கேள்வி கேட்காது எதையும் ஒத்துக்கொள்ளும் பக்குவம் இருந்ததில்லை அதுதான் அறிவின் விஸ்தீரணம் என்று கூட பிதற்றலாய் எண்ணியதுண்டு ஆனால் இப்போதுதான் மெள்ள மெள்ள புரிகிறது கேள்விகளற்ற அகச்சூழலே மெய்தேடலுக்கு உரித்தான களம் என்று அந்த கேள்விகளற்ற அகச்சூழல் belief என்பது faith என்ற உருமாற்றம் அடையும் போது தானோ.... மிக்க நன்றி (belief/faith - இரண்டுக்குமான தமிழ் அர்த்தம் நம்பிக்கை என்று தான் வருகிறது ஆனால் எத்துனை நுட்பமான வித்யாசத்தை தன்னுள் கொண்டுள்ளது - இது பற்றி தங்கள் பார்வையை அனுபவத்தை சொல்லுங்களேன்)

இதற்கு நான் மறு பின்னூட்டம் ஒன்று எழுதினேன்.

thiruchendru le
நடந்த ஒரு அனுபவமே நினைவுக்கு வந்தது.
எழுதப்போனேன். இரு பக்கங்களுக்கு மேல் வந்து விட்டது.
உங்கள் பொறுமையை சோதிப்பது சரியாகாது.
சற்றே காத்திருங்கள்.
என் பதிவுகள் ஒன்றில் போடுகிறேன்.
" என்றோ நடந்த கதை " எனும் தலைப்பிலே.
அதுவரை ( எனது BORE க்கு)
ஒரு Break.

பதிவாசிரியர் பொறுமையுடன் காத்திருப்பதாகவும்
சொல்லிவிட்டார்.

"சற்றே காத்திருங்கள" பெரியவங்க சொல்லீட்டீங்க காத்திருக்கிறேன்...
**************************************************************************

தெரிந்தவரை சொல்ல முயல்கிறேன்.


1984 ம் வருடம். திருச்செந்தூருக்கு, அந்தக் கிளை அலுவலக் கணக்கு ஆய்வுக்காக நானும்
என்னுடன் இருவரும் சென்றிருந்தோம்.





அன்று சூர சம்ஹார உற்சவத்திரு நாள். கடற்கரை
யில் அமைந்த அக்கோவிலின் முன் லட்சம் பேருக்கு மேல் குழுமியிருக்கிறார்கள். மாலை வேளை. கதிரவன்
மறையவில்லை இன்னமும். கந்த தரிசனத்திற்காக நாங்கள் அக்கோவில் படிக்கட்டுகளில்
உட்கார்ந்திருந்தோம். முருக பக்தர்களின் வேல் வேல் கோஷம் வானை முட்டுகிறது.
பிரமிக்கவைக்கும் காவடிகள் ஏந்தும் பக்தர்கள், மொட்டை அடித்த குழந்தைகள், ஆங்காங்கே
பொங்குகின்ற சின்னச்சின்ன சமையல் கூடங்கள், கரகாட்டம், மயிலாட்டம், வாண வேடிக்கை,
பட்டாசு சத்தம். இத்தனையும் மீறி சுதந்திரமாய் சுற்றிவரும்
ஏராளமான பிச்சைக்காரர்கள். நூற்றுக்கணக்கில் என்றால் சரியாகாது. ஆயிரக்கணக்கில்.
பலர் தாம் பிச்சை எடுத்து இது அது செய்ய வேண்டிக்கொண்டிருக்கிறோம் என்று வேறு சொல்கிறார்கள்.
கந்த சட்டியன்று தானம் கொடுக்க வந்தோர் பலர் 5,10 காசுகளாக நூறு பேருக்கு, ஆயிரம் பேருக்கு என்று வரிசையாகக் கொடுக்கும் காட்சி. ( இது போன்ற தான தருமங்கள் செய்வது ஏதோ பிராயச்சித்தம்
பரிகாரம் என நினைப்பதும் ஒரு நம்பிக்கை ( part of a belief system ) )
( அந்தக்காலத்தில் இப்போது ஐந்து ரூபாய்க்கு வாங்க இயலும் ஒரு வாழைப்பழம் அன்று ஐந்து
காசுகளுக்குக் கிடைத்தது. நம்ப முடியாது. இனி நான் சொல்ல வருவதும் அப்படித்தான்.)
அந்தக் காசுகளைப் பெற அந்தப் பிச்சை எடுக்கும் கும்பல் போட்டி போடும் காட்சி.
குமரா ! கந்தா ! வேலா ! முருகா !
கடற்கரை படியில் அமர்ந்திருந்த எனக்கு ஒரு திடீர் யோசனை !
சாதாரணமாக , ஒரு நபரிடமிருந்து ஐந்து காசோ, பத்து காசோ, அதிகம் போனால்
ஒரு 25 காசு மட்டுமே பிச்சை பெறும் இவர்களுக்கு திடீரென்று ஒரு 2 ரூபாய் பிச்சை
விழுந்தால் என்ன நினைப்பார்கள் ?
நான் அருகில் உள்ள என் நண்பரைக் கேட்டேன். அவர் கந்தர் சட்டியை சொல்லி முடித்து
என்ன கேட்டாய் என்றார். திரும்பி ஒரு தரம் சொன்னேன்.
" என்ன ! உங்களைப் போல் ஒரு மஹாராஜன், புண்ய பிரபு உண்டோ ! என பெரிதும்
வணங்குவான். வேறேன்ன செய்வான்" என்றார்.
" ஏய் ! ஆபத்திலே மாட்டிக்காதே ! நாளைக்கும் நீ எங்கேன்னு வந்து தா ன்னு கேட்பானுக "
என்றார் இன்னொருவர்.
என்னதான் ஆகிறது என்று பார்த்துவிடுவோம் என்று பையில் கையை விட்டேன். என் பையில்
தான். இரண்டு ரூபாய் நோட் இல்லை. ஐந்து ரூபாய் நோட் தான் இருந்தது.
" சும்மா கொடுடா தர்ம துரை நீதானே ! " என்று உசுப்பிவிட்டார் நண்பர்.
வேண்டாம் எனச் சொல்லி ப் பின் வாங்கவும் முடியாத தன்மானம் எனக்கு.
ஒரு பிச்சைக்காரனை அழைத்தேன்.
அந்த 5 ரூபாய் நோட்டை அவன் கைகளில் போட்டேன்.
அடுத்த வினாடி அவனைக் காணவில்லை. எங்கே போய்விட்டான் !
ஒரு வேளை நன்றி உணர்ச்சியால் என் காலடியில் சங்கமமாகிவிட்டானோ என்று கூட பார்த்தேன்.
இல்லை. பக்கத்தில் திரும்பினேன். மிக அருகிலே கோபுர வாசலிலே அவன் சாஷ்டாங்கமாக‌
நமஸ்கரித்துக் கொண்டு
" டேய் ! அங்கே பார் ! நீ பிச்சை கொடுத்தவன் என்ன செய்கிறான் என்று " என்றார் நண்பர்.
நம்புங்கள் என்னை.
" முருகா ! என்ன இன்னிக்கு நீ ராசா ஆக்கிட்டயே . " என கந்தனை நோக்கிக் கதறினான்.

அவனுக்கு இருந்தது ஆண்டவன் மேல் faith.
"நான் கொடுக்கிறேன்" என நான் நினைத்தது என்னுடைய Belief.


எது வந்திடினும் பெற்றிடினும் அது இறைவன் தந்தது.
அது அவனுடைய faith. (This is what is integrated into one's intellect )

எது கிடைத்தாலும் அது ஆண்டவனே கொடுக்கிறான் எனும் நம்பிக்கை.
என்னைப் போற்றுவான், வணங்குவான் என ஒரு ஐந்து ரூபாய்க்காக என்று
நான் எதிர் பார்த்தது ஒரு நம்பிக்கையே.
இது my belief.
This stood shattered on witnessing the action of the beggar.

எல்லா belief ம் faith ஆக உருவாவதில்லை.
ஒரு belief,faithஆக ஒரு நிலை மேலே செல்வதிற்கு இடையிலே
ஏகப்பட்ட தடைகள் உள்ளன. இந்த தடைகள் பல நாமே நமக்கு
உருவாக்கியவையும் ஆகும். இத்தடைகளைத் தான் " நாம் நமக்கே
போட்டுக்கொள்ளும் விலங்குகள் " எனும் சொல்கிறோம்.We are
the prisoners of our own situations. பலவற்றினை rationalist
outlook எனச்சொல்லிக்கொண்டு நம்மை நாமே புகழ்ந்தும் கொள்கிறோம்.

ஒரு belief , faith ஆக உருவாக தியானம் ( meditation ) ஒரு
சாதனம். ஒரு கல்லை வைத்து அதன் மேல் நமது இஷ்ட தேவதையை
பிரதிஷ்டை செய்கிறோம். இதற்கு பிரதீக உபாசனை அல்லது
ஆத்யாசன உபாசனை என்றும் பெயர் சொல்வார்கள். ஒரு சிறிய‌
பெளதீக பொருளின் மேல் ஓர் உயர்ந்த கருத்தினை super impose
செய்து அதில் தியானிப்பது இவ்வகையாம்.

ஒரு கால கட்டத்தில் கல்லைக் கல்லாகப் பாராது சிவனாகக் காண்கிறோம்.
மஞ்சளைப் பிடித்து வைத்து அதை பிள்ளையாராகப் பார்க்கிறோம்.

கல் கண்டார் கல்லே கண்டார் . இல்லை. இது சாலிக்கிராமம். இது
சிவலிங்கம் என்று நம்பிக்கை கொண்டவர் அதில் தம் இறைவனது
ப்ரத்யக்ஷத்தினை உணர்கின்றனர்.

ONE MORE FAITH IS SEEN BELOW:



திருமதி. க்ருத்திகா அவர்கள் தமது பதிவில் கந்தர்வ புரியில் காணப்படும்
சூலத்தையும், சூலம் கீழ் இருப்பதாகச் சொல்லும் பாம்பும், கருவேப்பிலை
மரமும் எல்லாமே இந்த பிரதீக உபாசனையின் பிரதிபலிப்புகள்.
faith என்று நாம் கூறும் வார்த்தையின் நிதர்சனங்கள்./


நமது சமூகத்தில் நம்மை அடுத்து பிறர் நம்பும் விஷயங்களை
நாமும் நம்பவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
ஆனான், மதிக்கவேண்டும், மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதுவே உண்மையான மானுட நேயம்


நம்பிக்கை என்ற ஒரே சொல் இருவகையில் பொருள்படுகின்றது.
இருவகையாக உணரப்படுகிறது.
என்று கவனித்தோம்.
இந்த belief system
ஒரு perception வழியாகத்தான் வருகிறது.
இது எப்படி என்பதை இன்னொரு நிகழ்ச்சி மூலம் பின்னொரு
நேரத்தில் விளக்குவேன்.

ஒரு 25 வருடம் முன் நடந்த இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வாய்ப்பு தந்த மேடம் க்ருத்திகா அவர்களுக்கு என் நன்றி.

7 comments:

  1. "எல்லாமே இந்த பிரதீக உபாசனையின் பிரதிபலிப்புகள். " மிகப்பெரிய தத்துவத்தை மிக எளிமையாக விளக்கி விட்டீர்கள். நல்லது நடந்தால் தன் முயற்சி என்றும், கெட்டது நடந்தால் இ
    றைவா ஏனிப்படி சோதிக்கிறாய் என கேல்விக்குள்ளாக்குவதுமே நம் மரபாய் உள்ளது இது போன்ற சமயங்களில் சின்ன சின்ன விஷயங்களையும் உற்றுக்கவனித்து தேர்வதின் மூலமே நாம் உண்மையான மானுட நேயத்தை எட்ட முடியும்.

    சிறு துரும்பும் பல் குத்த உதவும், அதுபோன்றே என் பதிவும் இத்தகைய உயர்ந்த கருத்துள்ள பதிவிற்கு அடிகோலியுள்ளது நன்றிகள் பல.

    அன்புடன்

    ReplyDelete
  2. அருமையான அனுபவம்!

    ReplyDelete
  3. kruthika said:
    //சிறு துரும்பும் பல் குத்த உதவும், அதுபோன்றே என் பதிவும் இத்தகைய உயர்ந்த கருத்துள்ள பதிவிற்கு அடிகோலியுள்ளது நன்றிகள் பல.//
    "சிறு துரும்பும் பல் குத்த உதவும் " எனும் உங்கள் மறுமொழியில்
    ஓர் அவையடக்கம் மிளிர்வது வெள்ளிடைமலை.
    சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள்.
    ஒரு சிட்டிகை உப்பே அறுசுவைக்கும் பிரதானமாகிறது.
    ஒரு பொறி நெருப்பே ஒரு வேள்வியின் துவக்கமாகிறது.
    "ஓம்" எனும் ஒரு சொல்லே உலகத்தைக் காக்கிறது.

    தங்கள் வருகைக்கு நன்றி.
    நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாருங்கள்.
    இசையில் (முக்கியமாக கர்னாடக இசையில்)
    ஈடுபாடு உண்டெனில்
    உங்களுக்கு உற்சாகமளிக்க‌
    http://movieraghas.blogspot.com
    வாருங்கள்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  4. திவா said:
    //அருமை//
    நீங்கள் வந்தது எனக்குப் பெருமை.

    சுப்புரத்தினம்.
    தஞ்சை.
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  5. அருமையான பதிவுக்கு நன்றி, ஐயா.

    ReplyDelete
  6. kavinaya said:
    //அருமையான பதிவுக்கு நன்றி, ஐயா//

    வருகைக்கு எனது நன்றி .
    சுப்பு ரத்தினம்
    தஞ்சை.
    http://ceebrospark.blogspot.com

    ReplyDelete
  7. "Belief, faith"- விளக்கம் வெகு அருமை.

    //நமது சமூகத்தில் நம்மை அடுத்து பிறர் நம்பும் விஷயங்களை
    நாமும் நம்பவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
    ஆனான், மதிக்கவேண்டும், மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
    அதுவே உண்மையான மானுட நேயம்//

    நூற்றில் ஒரு வார்த்தை. நன்றி சார்!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!