Pages

Saturday, February 16, 2008

இன்றைய ஸ்டார் பதிவு

இன்று ஒரு வலைப் பதிவு படித்தேன்.
http://sirumuyarchi.blogspot.com/
அதன் பெயர் "சிறு முயற்சி "
சூரஜ்குன்ட் மேளா என்ற இடத்தில் கைவினைப் பொருட்கள் என்னென்ன கிடைக்கிறது
என்பது "சிறு முயற்சி " தரும் தகவல்.
அதைவிட எனைக் கவர்ந்தது வலைப்பதிவு ஆசிரியர் தனது வலை எதைப்பற்றி எனச்
சொல்வதுதான்.
"மாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக..."

உலகத்தில் உள்ள இரண்டு முற்றிலும் மாறுபட்ட நிலைகளைச் சொல்லி ஒன்றை
இன்னொன்றாக மாற்ற சிறு முயற்சி எல்லோரும் செய்ய வேண்டும் எனச் சொல்கிறார் போலும்.
நல்ல கருத்து தான். வரவேற்கத் தகுந்தது தான்.
ஆயினும், யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?
65 வயது கிழவன் நான். என் பேரன் 5 வயதுப் பையனுடன் ஓடவேண்டும் என்பது முடியுமா?
ஆவல் ஒரு பக்கம். சாத்தியக் கூறு மற்ற பக்கம்.
ஒரு பத்து ஆண்டுகள் முன்னால்,
ஒரு மருத்துவர் அலுவலகத்தில் வாசித்தேன். இன்னமும் வாசகம் ஞாபகம் உள்ளது.
"நாம் தெரிந்து கொள்ளவேண்டியது இதுவே.
இவ்வுலகத்தில் எதையெல்லாம் நாம் மாற்ற இயலும்? எதையெல்லாம் நம்மால் மாற்ற இயலாது?
இந்த இரண்டுக்குள்ளேயும் இருக்கும் வித்தியாசம். "
யதார்த்தம் எப்படி இருப்பினும், முயற்சி என்பது வீண்போகாது.
"முயற்சி திருவினையாக்கும் = முயற்சியின்மை
இன்மை புகுத்திவிடும்"
பதிவு அழகாக எழுதப்பட்டுள்ளது.
பதிவுக்கேற்ற படங்கள்.வாழ்த்துக்கள்.
கணிப்பு: ****

5 comments:

  1. முத்துவின் தெளிந்த நடை எனக்கு மிகவும் பிடித்தது.

    ReplyDelete
  2. ஓ இதெல்லாம் வேறயா ... அடடா... மகளுக்கு பரிட்சை நடப்பதால் நான் கொஞ்சம் இங்கே வர லேட்டாகிடுச்சு.. மூவி ராகா ப்ளாக் இரண்டு முறை ஓபன் செய்து ஹேங்க் ஆகிவிட்டது .. ஒரு முறை கொஞ்சம் படித்துக்கொண்டிருந்தேன்.. அருமையான பதிவு என்று தோன்றியது ஆனால் என் கணினி கொஞ்சம் மெதுவாக செல்லும் படங்கள் அதிகம் என்பதால் தானாகவே மூடிக்கொண்டது அந்த பதிவு... முழுதும் வாசிக்க இயலவில்லை பிறிதொரு சமயம் வாசிக்கிறேன்.. உங்களுக்கு மிக நன்றி..நீங்க ரசித்திருக்கிறீர்கள் என்பதே என் சிறுமுயற்சியின் ஒரு சிறு வெற்றி தான்..

    ReplyDelete
  3. முத்துக்காவின் சுற்று பயண வர்ணனைகள் மிகவும் ரசிக்கும் படியாகவும் நம்மை அந்த இடத்திற்கே அழைத்து சொல்லும்

    அவர்களின் கவிதை மற்றும் கதைகளும் கூட மிகவும் நன்றாக இருக்கும் ;))

    ReplyDelete
  4. நல்ல விஷயம் சூரி அவர்களே.. படித்து பிடித்து அதை நம் பதிவிலே தனியாக பாராட்டை தெரிவிப்பது மனதுக்கு இதமான ஒன்று...

    லட்சுமிக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  5. // இவ்வுலகத்தில் எதையெல்லாம் நாம் மாற்ற இயலும்? எதையெல்லாம் நம்மால் மாற்ற இயலாது? //

    இது ஆங்கிலத்தில் Prayer for Serenity என்று சொல்லப்படுகிறது.
    “God give me courage to change things that I can, accept those I cannot and the wisdom to know the difference "

    நல்ல முயற்சி. கபீரின் வலைப்பூவிற்கு இணைப்பு கொடுத்திருப்பதற்கு நன்றி.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!