Pages

Saturday, February 23, 2008

And this week, the Golden Crown Goes to...


இந்த வாரம் கிட்டத்தட்ட 70 முதல் 80 வலைபதிவுகள் பார்த்தேன். இவைகளில் ஒரு பதினைந்து வலைப்பதிவுகள் நான் கடந்த 3 அல்லது 4 மாதங்களாக almost as a routine பார்ப்பவை ஆகும். புதியதாக முதன்முதலாக பார்த்தது சுமார் 50 பதிவுகள் இருக்கும் (தமிழ் மட்டும்) அன்னிய மொழிகளில் எழுதப்பட்ட பதிவுகள் முக்கியமாக ஆங்கிலம் ஒரு 30ம் ஹிந்தி 10 ம் பார்த்தேன்.

இதில் இரண்டு பதிவுகள் (ஆங்கிலத்தில்) கருத்துச் செறிவுடன் அமைந்திருந்தன்.
ஒன்று http://letsbefriends.blogspot.comமுற்றிலும் குணங்களில் மாறுபட்ட, ஒன்றுக்கு மற்றது எதிரியாக நினைக்கப்படும் விலங்கினங்களை ( நாயும், பூனையும் )(தவளையும் எலியும்) ஏதோ ஆப்த நண்பர்கள் மாதிரி உறவாடச்செய்து படமெடுத்திருக்கிறார்கள். அதோடு விடாமல், படமெடுத்தவர்
ஒரு கேள்வி கேட்கிறார். IF THEY CAN DO IT, THEN SO CAN WE ! A bold question indeed !!

இந்த வலைப்பதிவுக்கு தனியாக செல்லாதீர். துணைவர்/துணைவியுடன் சென்று ரசியுங்கள். அல்லது அலுவலகத்தில் உங்கள் பாஸுடன் சேர்ந்து பாருங்கள்.!!

அடுத்த வலைப்பதிவு http://rathna.blogspot.comஎந்த அளவுக்கு நாம் கேட்பார் பேச்சைக் கேட்டு, நம் சுயமாக சிந்தனை செய்யாது
இருக்கிறோம் .. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொருவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு, கடைசியில், நம்முடைய பாதை என்ன என்றே தெரியாமல் இருக்கிறோமே? இந்த வலைப்பதிவு நம்மை சிந்திக்க வைக்கிறது.
//So many people try to influence our lives for some benefit of theirs or for no reason at all. Try to give our life their meaning and also make us believe it as ours! Though it is a positive or negative influence, the ultimate decision should be ours. Only we can give our life a meaning//

இவ்விரண்டு வலைப்பதிவுகளையும் விட, மற்றுமோர் வலைப்பதிவு என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது. Valentine day அன்று காதல் பற்றி
கொச்சையாகவும் பச்சையாகவும் எழுதாமல், பெண்மையை ஏன் நாம் போற்றவேண்டும் என அருமையாக எழுதியிருக்கிறார். இவர் "ஏன் நான் intha விஷயத்தில் எழுதுகிறேன்" என்று சொன்னது இவருடைய நேர்மையை பிரதிபலிப்பாக இருந்தது.
What he says is just as simple as it is revealing and equally unpretending : I adore women, as a woman is my mother, a woman is my sister, a woman is my wife, a woman is my friend, a woman is my teacher, a woman is my guide, a woman is my philosopher, a woman is my counsellor, last, but not the least, a woman is my God, as she is my mother.
தாய்க்குலம் எல்லோரும் கண்டிப்பாக படிப்பது மட்டுமல்ல, ஒரு நகல் எடுத்து தனது அலுவலக மேசைக் கண்ணாடிக்கு அடியில் வருவோர் பார்க்கும் வண்ணம் வைத்திட வேண்டும்.
http://broadcastcism.blogspot.com/10 Things i Love about women
இந்த வார ஸ்டார் பதிவு இவருக்கு தர இயலாமல் போனதிற்கு காரணம் கடைசி வினாடியில் எங்கிருந்தோ வந்த ஒரு dark horse இந்த பதிவினை ஒரு whiskerல் ஜெயித்துவிட்டது.

அந்த பதிவின் சொந்தக்காரர் வேறு யாருமல்ல. நமக்கெல்லாம் பரிச்சயமான கபீரான் அவர்கள்தான்.

நானும் தான் கடந்த ஒரு 4 அல்லது 5 மாதங்களாக கவனித்து வருகிறேன். இவரது சொற்களில் எங்கிரு ந்துதான் இவ்வளவு இனிமையும் கனிவும் இழைகிறதோ தெரியவில்லை.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற =
என்னும் வள்ளுவரின் வாக்கினை

கபீரின் ஒரு பாடல் மூலம் நம் மனதில் பதிய வைக்கிறார்.

ஒரு குழந்தை ஏன் எல்லோராலும் நாடப்படுகின்றது? என ஒரு கேள்வி எழுப்பி அவருக்கே உரித்த பதில் ஒன்றையும் தருகிறார்.

//ஈர்ப்பு குழந்தைகளிடத்தில் எப்படி ஏற்படுகிறது ? யாவரும் சொல்வது அவர்களின் கள்ளம் கபடம் அற்ற மனதே காரணம் என்பதே. அவர்களோடு இருக்கும் பொழுது பெரியவர்களும் குழந்தைகளாகி விடுகிறோம். நம்மை மறக்கும் அந்த கணங்களிலே நம் இதயமும் தூய்மையாய் இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.//

ஞானிகளும் குழந்தைகளும் ஒன்று எனச்சொல்லி அவர்கள் இருப்பிடமும் கடவுள் இருப்பிடமும் ஒன்றுதான் எனத்திண்ணமாகச் சொல்கிறார்.

அவர் மேற்கோள் காட்டும் கபீர் தோஹா எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம்.
கங்கை நீர் போன்ற பவித்திரமான புனிதமான நிர்மலமான மனம் ஆண்டவனின் இல்லம். அப்படிப்பட்ட மனதை உடையவன் ஆண்டவனை நோக்கிப் போகவேண்டியது
இல்லை. ஏன் ?

ஆண்டவன் அல்லவா அப்படிப்பட்ட பக்தனைச் சுற்றிச் சுற்றித் திரிகிறான் ?
என்னே அற்புதமான கருத்து !! வாவ் !!!

http://kabeeran.blogspot.com

ஆகவே இந்த வார ஸ்டார் பதிவு என்பதில் அடுத்ததொரு கருத்து இல்லை.
அவருக்கே இந்த வாரம் முடி சூட்டுவோம்.!!
So Kabeeran gets the Golden Crown This Week.
Congratulations.
OUR ASSESSMENT SCORE *****

Just an introspection

இந்த வலை உலகத்தில் நடைபெறுவதெல்லாம் என்ன என யோசித்தேன் !

கிட்டத்தட்ட எல்லாமே ! இந்த பதிவு உலகம் விசித்திரமானது. பற்பல வினோதங்களை உடையது.
இந்த வலைப்பதிவுகளை யார் வேண்டுமானாலும் துவங்கலாம்.
எதை வேண்டுமானாலும் எழுதலாம். இதில் இடம் பெறாத
உயர்திணை, அஃறிணைப் பொருட்கள் எதுவுமே இல்லை. இந்த வலை உலகத்தில்
எல்லா உணர்வுகளும் உணர்ச்சிகளும் காணப்படுகின்றன. ந‌வ‌ ர‌ச‌ங்க‌ளும் உண்டு.
விர‌ச‌ம்,
வீரம், கோபம், தாபம், மதம், மாத்ஸர்யம், அன்பு, அரவணைப்பு,வீராப்பு,
கருணை, காதல், கண்ணோட்டம் (தாட்சண்யம்),எக்காளம், ஏளனம், சங்கீதம், இங்கீதம். எல்லா விஷ‌ய‌ங்க‌ளும் அல‌ச‌ப்ப‌டுகின்ற‌ன். ம‌ருத்துவ‌ம், வானிய‌ல், புவி இய‌ல், க‌ணினி,
சரித்திரம், பூகோளம், மனோதத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், சார்ந்த தலைப்புகள்.
இதைத்தவிர என்னெல்லாம் ந‌ட‌க்கின்ற‌ன‌ ?
நகுதல், நையாண்டி செய்தல்,திட்டுதல், மிரட்டல்,கலாய்த்தல் (சீண்டுதல் அல்லது மறைமுகமாக கிண்டலடித்தல் என நினைக்கிறேன்.)காய்தல், உவத்தல், ஊறுகாய் போடுதல் (என்ன அர்த்தம் என்று புரியவில்லை! ) காப்பி அடித்தல்,கண்ணாமூச்சி காட்டுதல்,

ஜோதிடம்,பிராணிகள் வதைத்தடுப்பு, பிரியாணி செய்தல்,
கவிதை எழுதுதல், கவிதை மாதிரி கிறுக்குதல்,
ஆடு, மாடு,கழுதை மேய்த்தல், காக்காய் பிடித்தல்,
காலை வாருதல்,
பன்னி மேய்த்தல் ( நிஜமாக இதற்கொரு ஃப்ளாக் இருக்கிறது)
கும்மி அடித்தல், குப்பை கிளறுதல், திரித்தல், தீர்த்து வைத்தல், தின்னுதல்,தன் விளம்பரம் தானே தண்டோரா போடுதல், போட்டி வைத்தல், மார்க் போடுதல், நொந்து போதல், நோதல், பிறரை நோக வைத்தல், அழுதல்,மற்றவரை அழ வைத்தல்.
எல்லாம் செய்தபின் சோர்ந்து போய், சும்மா இருத்தல்.
இத்தனைக்கும் நடுவிலே அர்த்தமுள்ள, அதாவது மற்றவர்களுக்கு
உண்மையாகவே உருப்படியாக எடுத்துச்சொல்லும்படியாக நாலு நல்ல வலைகள், பதிவுகள் இருக்கத்தான் செய்கின்றன.
பல பொய்களுக்கிடையே நிஜம் சில சமயங்களில் நடு நாயகமாக இருக்கிறதும் உண்டல்லவா ?

வ‌லைப்ப‌திவுக‌ளை மேனேஜ் செய்ப‌வ‌ர்க‌ள் அண்மையில் இத்த‌னை (சுமார் 2000 கோடி டெரா பைட்ஸ்) வ‌லைக‌ளையும் ஒரே ஸ்ட்ரோக்கில் காலி ப‌ண்ணி புதுசா ஆர‌ம்பிக்க‌லாமா என்று கூட‌ எண்ண‌த்துவ‌ங்கியிருக்கிறார்க‌ள்.

எல்லாமே ஆண்ட‌வ‌ன் ப‌டைப்புதான்.
இருக்கும் 600 கோடி ம‌க்க‌ள் எல்லோருமே உப‌யோக‌மான‌வ‌ர்க‌ள்தானா ?

ந‌டுவில் சுப்பு ர‌த்தின‌ம் மாதிரி எத்த‌னை பேர் தேவையில்லாது பூமிக்கு பாரமாக இருக்கிறார்க‌ள் ? அது போல‌த்தான் வ‌லை உல‌க‌மும்.

Wednesday, February 20, 2008

குட்டி தேவ‌தை


ஒரு நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு என்னென்ன பிடிக்கும்?
அவள் உலகம் என்ன? என்பதையெல்லாம் இந்த blog எடுத்துச்சொல்கிறது
குழந்தைகள் curiosity இன் எல்லை என்று சொன்னால்
மிகையாகாது.
இந்த குட்டி தேவ‌தை அஞ்சலி எகிப்து நாட்டுக்குச் சென்றபோது அவள் தோழி தந்த‌ புக் மார்க் வைத்துக் கொண்டு, எகிப்து நாட்டு மொழியில் தன்
பெயரை எப்படி எழுதுவது என்று யோசித்திருக்கிறாள்.
அவள் சொல்கிறாள்.
"அதுல ancient Egyptians எழுத்துகள் இருக்குது. அதை Hieroglyphic alphabet எண்டு சொல்லுறது. அது நல்ல வடிவா இருந்தது. எனக்கு அது நல்லா புடிச்சிருந்தது"


"இந்த மொழியில left to right or right to left or even top to bottom எழுதலாமாம். Very interesting. :) நான் left to right எழுதப் போறன்."
"
நீங்க‌ளும் உங்க‌ள் பெய‌ரை எழுதிப்பாருங்க‌ளேன்.

கொஞ்ச‌ம் ம‌லையாள‌ம் க‌ல‌ப்பு, எழுத்தில் தெரிகிற‌து.
அவ‌ள் அப்பா அவ‌ளுக்கு குட்டி தேவ‌தை என‌ப்பெய‌ர் சூட்டியுள்ள‌ன‌ர்.

http://anjalisplace.blogspot.com/ஒரு ப‌ள்ளிச்சிறுமிக்கே உரிய‌ உற்சாக‌த்துட‌ன் சில‌ links கொடுத்திருக்கிறாள்.
அதில் ஒன்று இன்ஸ்பிரேஷ‌ன‌ல் போய‌ம்ஸ்.

Nursery Rhymes for Children


http://www.love-poems.me.uk/a_childrens_nursery_rhymes_index.htm
குட்டித்தேவ‌தைக்கு ந‌ம‌து பாராட்டுக்க‌ள்.
We congratulate ANJALI for her creative blog.
Assessment: ***
Bloggers must think awhile.
Are we encouraging our children like this !

Saturday, February 16, 2008

இன்றைய ஸ்டார் பதிவு

இன்று ஒரு வலைப் பதிவு படித்தேன்.
http://sirumuyarchi.blogspot.com/
அதன் பெயர் "சிறு முயற்சி "
சூரஜ்குன்ட் மேளா என்ற இடத்தில் கைவினைப் பொருட்கள் என்னென்ன கிடைக்கிறது
என்பது "சிறு முயற்சி " தரும் தகவல்.
அதைவிட எனைக் கவர்ந்தது வலைப்பதிவு ஆசிரியர் தனது வலை எதைப்பற்றி எனச்
சொல்வதுதான்.
"மாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக..."

உலகத்தில் உள்ள இரண்டு முற்றிலும் மாறுபட்ட நிலைகளைச் சொல்லி ஒன்றை
இன்னொன்றாக மாற்ற சிறு முயற்சி எல்லோரும் செய்ய வேண்டும் எனச் சொல்கிறார் போலும்.
நல்ல கருத்து தான். வரவேற்கத் தகுந்தது தான்.
ஆயினும், யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?
65 வயது கிழவன் நான். என் பேரன் 5 வயதுப் பையனுடன் ஓடவேண்டும் என்பது முடியுமா?
ஆவல் ஒரு பக்கம். சாத்தியக் கூறு மற்ற பக்கம்.
ஒரு பத்து ஆண்டுகள் முன்னால்,
ஒரு மருத்துவர் அலுவலகத்தில் வாசித்தேன். இன்னமும் வாசகம் ஞாபகம் உள்ளது.
"நாம் தெரிந்து கொள்ளவேண்டியது இதுவே.
இவ்வுலகத்தில் எதையெல்லாம் நாம் மாற்ற இயலும்? எதையெல்லாம் நம்மால் மாற்ற இயலாது?
இந்த இரண்டுக்குள்ளேயும் இருக்கும் வித்தியாசம். "
யதார்த்தம் எப்படி இருப்பினும், முயற்சி என்பது வீண்போகாது.
"முயற்சி திருவினையாக்கும் = முயற்சியின்மை
இன்மை புகுத்திவிடும்"
பதிவு அழகாக எழுதப்பட்டுள்ளது.
பதிவுக்கேற்ற படங்கள்.வாழ்த்துக்கள்.
கணிப்பு: ****

நான் ரசித்துப்படிக்கும் வலைப்பதிவுகள்


நான் ரசித்துப்படிக்கும் வலைப்பதிவுகள்

ஆயிரமாயிரம் வலைப்பதிவுகள் தமிழில் இப்போது !!
வியக்கும் வண்ணம் உள்ள இவ் வலைப்பதிவுகளில்
நேர்த்தியான நேர்மையான கருத்துக்கள் பல‌
நேராகச் சொல்லப்படுகின்றன.

தமிழ் வலை உலகம் இன்று, சினிமா, அரசியல், மற்ற வகை
பொழுது போக்கு அம்சங்கள் மட்டுமன்றி, அறம், ஆன்மீகம், இலக்கணம்,
இன்னிசை,
இலக்கியம், பொருளாதாரம், வணிகம், கணினி, பங்கு வணிகம்,
நாட்டியல், வேதியல், வானியல், சொல்லியல் ஆகிய தலைப்புகளில்
அமைந்துள்ளது பெருமைப்படத் தக்கதாக உள்ளது.

இந்த வலைப்பதிவில் நான் படித்த ரசித்த பெருமைப்பட்ட வலைப்பதிவுகளைப்
பற்றி குறிப்பிடலாமென இருக்கிறேன்.


இது ஒரு தினசரி குறிப்பேடு போல் மட்டும் அமையாமல், ஒரு குறிப்பிட்ட‌
பொருள் பற்றி அறியவேண்டுவோர் அணுகவேண்டிய இடம் என்ன என்பதையும்
முடிந்தவரை தெரியப்படுத்தும் என நம்புகிறேன்.

படிக்கும் பதிவுகளில் புதுமையாகவும் எளிமையாகவும் படிப்போர் ரசிக்கும்படியாக‌
இன்னும் ஒருமுறை இந்த பதிவுக்கு வருவோம் வரவேண்டும் என்ற எண்ணத்தினை
உண்டாக்கும் ஒரு பதிவின் சிறப்புகளை வாரம் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து அதற்குரிய‌
அங்கீகாரத்தினையும் பாராட்டுதல்களையும் வழங்கிடலாம் என இருக்கிறேன்.

எல்லா மொழிப் படைப்புகளும் இதில் அடங்கும் என்றாலும் தாய்மொழி தமிழுக்கு
முதலிடம் தரப்படும் என்பதும் கருத்தில் கொண்டு இச்சிறப்பு கணிப்பு வலைதனைத்
துவங்குகிறேன்.

உங்கள் வீட்டிற்கு நான் வரவேண்டுமா ?
எனக்கு விலாசம் அடங்கிய‌
ஒரு வரவேற்பு இதழ் மட்டும் பின்னூட்டமாகத்தாருங்கள்.
நான் ஓடோடி வந்து உங்கள் பதிவினைப் பெருமையுடன் படிப்பேன்.
எனது கணிப்பில் உங்களது பதிவின் கருத்துக்கள் ஆழமானவை, எளிமையானவை,
இனிமையானவை என கருதும் பட்சத்தில் உங்கள் பதிவு "அவசியம் படியுங்கள், ரசியுங்கள்" எனும் தலைப்புக்கீழ் அமையும்.

"அவசியம் படியுங்கள்" என்பதிலும் உங்கள் பதிவு விலாசத்தைத் தருவேன்.