Pages

Monday, October 27, 2008

அருள் வாக்கு




என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், எப்படி எழுதவேண்டும் என்ற ஒரு அறிவுரை படிக்கும் வாய்ப்பு, இல்லை, பாக்கியம் கிடைத்தது. அதை நீங்களும் படியுங்கள்.

இன்றைய பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, வலையுலக எழுத்தாளர்களுக்கென
ஒரு நெறி நமக்கு நாமே வைத்துக்கொண்டால், அது இதுவாகத்தான் இருக்கும் என்பது திண்ணம்.



அருள் வாக்கு
இன்றைய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் கடமை, கன்ங்களுக்குப் பிடித்ததை
மட்டுமே சொல்வது என்று வைத்துக்கொள்ளக்கூடாது. அவர்களின் அறிவை, மனத்தை உயர்த்துகிற விஷயங்களையே எழுதவேண்டும். இதை சுவாரசியமாகச் செய்யவேண்டும். உத்தமமான விஷயங்களைப் புதுப்புது விதங்களில் உணர்த்த வேண்டும். பத்திரிகையாளர்கள் வாழ் நாள் முழுதும் மாணாக்கள்களாகவே இருந்தால்தான் தாங்களும் இப்படிப் புதுப்புது விஷயங்களை அறிந்து மற்றவர்களுக்குப் பிரசாரம் செய்ய முடியும்.

சத்தியத்தை, சர்க்கரைப் பூச்சிட்ட மாத்திரைகளாக்கித் தரவேண்டும். சக்கரைப் பூச்சுத்தானே ஒழிய, முழுக்கவும் சர்க்கரை ஆகிவிடக்கூடாது. வெறும் சர்க்கரை உடம்புக்கு நல்லதல்ல. வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாசாரங்களில்தான் ஜன்ங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிகொண்டு இவ்விதமே எழுதுவது சரியல்ல. ஜனங்களுக்கு ஆதம அபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இருதய பூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முனைந்தால், தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும். ' நம்மையும் உயர்த்திக்கொண்டு, நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும் " என்கிற கடமை உணர்ச்சியைப்பெற வேண்டும். இவ்விதம் ஆத்ம க்ஷேமம், லோக க்ஷேமம், சாந்தி, சுபிட்சம் எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெறவேண்டும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள்.

நன்றி: கல்கி இதழ். 07.09.2008

Thursday, October 2, 2008

What Gandhi Owed to Tagore

 

THE ABOVE ARTICLE APPEARS IN THE HINDU SUNDAY MAGAZINE SECTION DATE 28TH SEPTEMBER 2008

"THE ARTICLE DEALS ON THE DEBATE BETWEEN GANDHI AND TAGORE, MEN OF HUGELY DIFFERENT TEMPEARAMENTS AND WORLD VIEWS, ON NATIONALISM STILL MAKES FOR ABSORBING READING"

Written by Sri Ramachandra Guha, the article gives us an insight into what 'nationalism' stood for in the eyes of these great men .

Today, Gandhi's birthday, this article is worthy a gold coin for every letter in it.

Courtesy: THE HINDU, 28TH September 2008
Posted by Picasa


Where are these onlookers of this great conversation today?

Saturday, September 6, 2008

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ?

ரசித்துப் படிக்கும் வலைப்பதிவுகளில் இப்போதெல்லாம் அடிக்கடி எழுதமுடிவதில்லை.
வயது ஒரு காரணம் . இன்னொன்று impress ஆகி, ஆஹா என்று சொல்கிற‌
அளவிற்கு பதிவுகள் என் கண்களில் எதுவும் தென்படவில்லை.
( Possibly I have become too old to understand or appreciate things which the younger generation seek. I concede writers can never be at fault. They write what appeals to their immediate environment.)

அரைத்த மாவையே அரைப்பது அவ்வளவு உற்சாகப்படுத்தவில்லை.

ஏதேனும் புதிதாக செய்தால் என்ன என்று நினைக்கும்போது, ரசித்துப் படித்த‌
செய்திகளைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது.

இன்று யாஹூ செய்திகளில் ஒரு சம்பவம். தமிழ் நாட்டில் ஒரே நேரத்தில்
ஒரே மண்டபத்தில் நூற்றுக்கணக்கில் திருமணங்களை நடத்திவைப்பது
புதிய செய்தி அல்ல.

இருந்தாலும், அப்படிப்பட்ட mass marriages நடக்கும்போது திடீரென்று
தாலி கட்டும் நேரத்தில் மின்சாரம் நின்று போனால் என்ன ஆகும் என்று
இந்த சம்பவம் வருணிக்கிறது.

திடீர் என கரண்ட் போனதால், யார் பக்கத்தில் இருக்கிறார் எனக்கூடத் தெரியாமல்,
முகூர்த்த நேரத்தில் இன்னொருவர் கழுத்தில் இருவர் தாலி கட்டிவிட்டார்களாம் !
திரும்பவும் கரன்ட் வந்தபோது திடுக்கிட்டுப்போனார்களாம்

தாலி கட்டிய இருவர் மன நிலை
எப்படி இருக்கும் !!!தாலி கட்டிக்கொண்டவர் மன நிலை எப்படி இருக்கும் ?

அப்பாடி ! பிழைத்தோம் என்றிருக்குமோ !1
இல்லை !! இது செல்லாது !! நான் பார்த்தது அவளைத்தான். அவரைத்தான்
என்று இருக்குமோ ?

கட்டினா கட்டினதுதான். அதைக் கயட்ட முடியாது என்று "அந்த ஏழு நாட்கள்"
கதையாகிவிடுமோ ?


என்ன நடந்தது என மேலும் படித்தேன்.
ஒரு பரிகார பூஜை என செய்துவிட்டு, கட்டிய தாலியைக் கயட்டிவிட்டு,
சரியான நபரிடம் தாலி கட்டிக்கொண்டு அப்பாடா என பெருமூச்சு விட்டார்களாம்.
ஆல் இஸ் வெல் தட் என்ட்ஸ் வெல்.

Let us Bless the married couples and wish them all well.

A melody delights us.

கல்யாணத் தேன் நிலா
காய்க்காத பால் நிலா
Raag kanada




சுவையான செய்தியைப் படியுங்கள்.
நன்றி: யாஹூ செய்திகள்.


Married the wrong girl? Blame it on power cut
Fri, Sep 5 01:49 PM



Married the wrong girl? At least two grooms in Tamil Nadu can blame it on a power cut.

A black out at a crowded mass marriage venue In Theni at an auspicious moment when about 40 grooms had to simultaneously tie the 'mangal sutra' around their bride's neck led to a mix up with two of them missing the target.

Veerachamy, instead of tying the mangal sutra to Subbulakshmi, the bride, tied it around the neck of her friend, who was standing near her.

Similarly, Balamurugan tied the sacred thread around another girl's neck, instead of Sivakami.

The mix-up which took place at the Sri Subramaniaswamy temple complex at Periyakulam, however, was soon detected.

All ended well as elders, in a quick damage control exercise, removed the mangal sutras and made the grooms tie the tread to the right brides after a 'parikara pooja' (pooja for making amends).

Temple officials said as all the couples had gathered along with their relatives and their friends, leading to overcrowding on Wednesday night.

Friday, August 15, 2008

Vande Maatharam Enbom .. A song by Subramania Bharathi sung by his descendants



The descendants of Tamizh poet Bharathiyar -granddaughter Lalitha Bharathi, great grandson Rajkumar Bharathi and great great granddaughter Gayathri Bharathi sing Bharathiyar's version of Vande mataram

Wednesday, August 6, 2008

காமாக்ஷி என்றபெயர்



Courtesy: Madam Kavinaya

value="http://www.youtube.com/v/3Xfsom7Mth4&hl=en&fs=1">


Courtesy: Madam Kavinaya in
http://ammanpaattu.blogspot.com


மாங்காட்டுத் திருத்தலத்தில்
காமாக்ஷி என்றபெயர்
கொண்டபடி வீற்றிருக்கும் அம்மா!

பூங்காற்றுபோல நெஞ்சம்
தழுவுகின்ற கருணையினால்
எமைஆட்சி செய்திருக்கும் அம்மா!

அக்கினியின் நடுவினிலே
முக்கண்ணனை வேண்டி
உக்கிரமாய்த் தவம்செய்தாய் அம்மா!

ஒற்றைவிரல் ஒன்றுமட்டும்
ஊசி முனை தாங்கி நிற்க
உள்ளம்ஒன்றி உருகிநின்றாய் அம்மா!

பற்றனைத்தும் விட்டுவிட்டு
உன்னை மட்டும் பற்றிக் கொள்ள
பாவைஎனக் கருள்புரிவாய் அம்மா!

இற்றைக்கும் ஏழேழு
பிறவிக்கும் உன்னடிகள்
போற்றுகின்ற வரம்தருவாய் அம்மா!

மூவிரண்டு வாரங்கள்
மனமொன்றி வேண்டி நின்றால்
மறுக்காமல் அருள்கின்ற அம்மா!

நாவினிக்க உன்பெயரை
நாள்தோறும் பாடுகின்றேன்
நயந்தெனக்கு அருளிடுவாய் அம்மா!

This devotional song is set to Raag Anandha Bhairavi.


--கவிநயா
http://ammanpaattu.blogspot.com/

Sunday, July 20, 2008

அறிவு ஜீவிக‌ள் யோசித்துப்ப்பார்க்க‌வேண்டும்.

போன பதிவில் நான் நம்பிக்கை எனும் பொருள்படும் இரு சொல்கள் ஆங்கிலத்தில்
இருப்பினும்,( belief, faith) அவை எவ்வாறு வேறுபடும் என்று விளக்க
முயற்சித்திருந்தேன். இன்னமும், இந்த நம்பிக்கை ( belief ) ஏற்படுவதற்கே ஒரு அடித்தளம், perception என்றும் இது எவ்வாறு ஏற்படும் என்பதை பிறகு விளக்குகிறேன் எனவும் சொல்லியிருந்தேன்.

இந்த நம்பிக்கை தனி நம்பிக்கை எனவும் பொது நம்பிக்கை எனவும் வித்தியாசப்படும்.

தனி நம்பிக்கைதனை ஆங்கிலத்தில் individual perception பொது நம்பிக்கைதனை group or public perception எனவும் கூறலாம். (There is yet another social perception which is again a public perception but varies with the societal environment)

தனி நம்பிக்கைக்கு (individual perception )ஒரு உதாரணம்

ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த கதையல்ல. நிஜம்.

எனது தங்கை 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அவளது கவனம் அதிகம் இசை, மற்றும் விளையாட்டில் இருந்ததால் படிப்பில் மிகவும் சுமாராகவே இருந்தது. பல சமயங்களில் அவள் பாஸ் மார்க்குக்கும் குறைவாகவே வாங்கி இருந்தாள்.

இருந்தாலும் என் அம்மாவுக்கு தன் பெண்ணின் மேல் அபார நம்பிக்கை. எப்படியாவது நல்ல மார்க் வாங்கிவிடுவாள் என்று. எனக்கு எதிர் நம்பிக்கை.

ஒரு அரையாண்டுத் தேர்வு முடிந்திருந்தது. பள்ளியிலிருந்து வந்த தங்கை வரும்போதே சத்தமாக : அம்மா ! நான் 93 வாங்கிவிட்டேன். என்றாள். உடன் அங்கு வந்த என் அம்மா, என்னைப் பார்த்து நீ தான் அவளை எப்ப பார்த்தாலும் கரித்துக் கொண்டிருந்தாய். பார் ! அவள் 93 வாங்கி விட்டாள். நான் இன்னைக்கு பால் பாயசம் பண்ணப்போகிறேன் என்று சொல்லிவிட்டு செய்யவும் துவங்கிவிட்டாள்.

நான் பேசாது இருந்தேன். மதிய உணவு முடிந்தது. பால் பாயசம் அமக்களம்.
அம்மா அந்தப் பக்கம் போன உடன் என் தங்கையைப் பார்த்துக் கேட்டேன்: "உண்மையைச் சொல்லு. எத்தனை மார்க் ? "
அவள் பதில் சொன்னாள். " இதில் உண்மை, பொய் எங்கே இருக்கு ? 93 மார்க் தான்" என்றாள். என்னால் நம்ப முடியவில்லை. " ப்ரொக்ரஸ் ரிபோர்ட்டைக் காண்பி" என்றேன். காண்பித்தாள். 93 மார்க் தான். ஆனால், மொத்தம் 500 க்கு 93 மார்க்.
அவளைப்பார்த்தேன்.

" நான் சொன்னதில் தவறு ஒன்றுமில்லையே ! எத்தனைக்கு என்று நீ கேட்காதவரைக்கும் நானும் சொல்லவேண்டும் என்பதில்லையே ! " என்றாள்.

individual perception எப்படி மாறுபடுகின்றது என்பதற்கு இது ஓர் உதாரணம். அவ்வளவே. இப்பொழுது group perception கவனிப்போம்.

சில நம்பிக்கைகளை வரையறுக்க இயலாது. காலம் காலமாக மக்களிடம் ஊன்றிப்போன சம்பிரதாயங்கள் இவை. ஒன்றை இங்கே பார்ப்போம்.

இங்கே நெருப்பின் மேல் நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கிறார்கள்.

(What is it that moves men to walk on fire ?
Is it blind faith ? )



இன்னொரு காட்சி இங்கே.
சக்தி யாத்திரை




இதையும் கேட்போம்

nambinorai kaapavale muthumari sujatha Sri Bannari amman kushboo actress.

http://www.musicindiaonline.com/p/x/CAXgMbZD.9.As1NMvHdW/?done_detect


allopathy, homeopathy, ayurvedha, unani மருத்துவ ஆதாரங்களை
ஆய்வு செய்யும் ஒரு பதிவு கண்ணில் பட்டது.

http://nanoscience.blogspot.com

இவர் தனது பதிவில் ஹோமியோபதி ஒரு pseudo science or pseudo medical system எனச்சொல்லி அதற்கான பல்வேறு காரணங்களை விவரித்திருந்தார். தற்போது ஆயுர்வேதமும் இந்த நிலையே என்றும் சொல்கிறார்.

இவர் சொல்லும் முக்கிய காரணம் எந்த அளவிற்கு அல்லோபதி மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டு, பிறகு சோதனை செய்யப்படுகின்றதோ ( முதலில் மிருகங்களில், அடுத்தது மனிதர்களில் ) அதனின் நோய் குணப்படுத்துகிற தன்மை கண்டு பிடிக்கப் படுகிறதோ அதன் பின் தான் வணிகத்திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு பொது வினியோகம் செய்யப்படுகிறதோ அதுபோன்று இந்திய புராதன மருத்துவமான ஆயுர்வேதமும் இல்லை. ஹோமியோபதியும் இல்லை
என்கிறார்.

இவர் சொல்வதை ஆராய்ந்து பார்த்தால், இவரது முடிவுக்குக் காரணம் ஒரு (public perception) நம்பிக்கை எனத் தெரிகிறது.

1. அலோபதி கம்பெனிகள் தங்கள் ஆராய்ச்சிக்குப்பின் தயார் செய்யும் மருந்துகளை
ஒரு பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்கள். முத‌லில் எலிக‌ள், குர‌ங்குக‌ள்,போன்ற‌ உயிரின‌ங்க‌ள், அடுத்த‌ததாக‌ human trials. முன்வ‌ரும் நோயாளிக‌ளுக்குக் கொடுத்து அவ‌ற்றின் விளைவுக‌ளைக் க‌ணிப்ப‌து. ( இவை பெரும்பாலும் ஒரு sample theory த‌னை ஒத்து இருக்கும். இது பெரும்பாலும் random sample அடிப்ப‌டையில் அமையும். )

2. அந்தப் பரிசோதனை தரும் விளைவுகள் எதிர்பார்த்தவையாக இருக்கும் பட்சத்தில் வணிகம் செய்ய, அனுமதி கோருகிறார்கள்.

3. மருந்து வணிகத்தைக் கட்டுப்படுத்தும் நிர்வாகமும் ( அரசாங்க க் கட்டுப்பாட்டுக்குள்)அமைந்தது) இவர்கள் செய்ததாகச் சொல்லப்படும் பரிசோதனைகளைக் கவனித்து பின் ஒப்புதல் அளிக்கிறார்கள்.

இவையெல்லாமே ஒரு சட்ட வரைமுறைகளுக்குள் இருப்பதாகத்தோற்றமளிக்கின்றனவே தவிர உண்மையிலே நூற்றுக்கு நூறு உண்மையா என யாருமே சொல்லிடுதல் கடினம்.

1960 வருடங்களிலேயே மெட்ரானிடசோல் எனச்சொல்லப்படும் டிசன்ட்ரிக்காகக்
கொடுக்கப்படும் மருந்து கார்சினோஜெனிக் என்று நிருபிக்கப்பட்ட பின்பும் கொடுக்கப்பட்டு வருகிறது. ப‌ல்வேறு ம‌ருந்துக‌ள் அமெரிக்காவில் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌பின்பும் ஆசியா, ஆப்பிரிக்கா நாடுக‌ளில் oTC drugs ஆக‌க்கிட‌க்கின்ற‌ன‌. உதார‌ண‌ம் : celecoxib , (pain killer) nimusalide போன்ற‌வை. இவையின் side effects அள‌வுக்கு மேற்ப‌ட்ட‌தாக‌ இருப்ப‌தாக‌ச்சொல்ல‌ப்ப‌டினும் இவை ம‌ருத்துவ‌ர்க‌ளால் த‌ர‌ப்ப‌டுகிற‌து.

ப‌ல்வேறு ஆங்கில‌ ம‌ருந்துக‌ள் குண‌ப்ப‌டுவ‌தை விட‌ வேறுவித‌மான இடைஞ்ச‌ல்க‌ளையும் பாதிப்புக‌ளையும் ஏற‌ப‌டுத்துகின்ற‌ன. இதுவும் ஒரு public perception.

பரிசோதனைகள் சரிவர நடத்தப்பட்டன என்பதையும் பரிசோதனைகளின் முடிவுகள் சரியாகவே கணிக்கப்பட்டுள்ளன என்றும் வியாதியுறும் பொது மக்களிடையேயும் இப்பரிசோதனையில் உட்படுத்தப்பட்ட‌ மருந்துகள் அதே மாதிரியான முடிவுகளைத் தரும் என்பதும் ஒரு perception தான். இதுபோன்று அறிமுகப்பட்ட பல மருந்துகள்
பல நோயாளிகளின் உயிரைக்குடித்தபின் அவை வணிக வளாகங்களிலிருந்து
வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன. (withdrawn from markets )ஆகவே சோதனைகள் முழுமையானவை இல்லை என்பதையும் அனுபவமே நிரூபிக்கிறது.

இருந்தும் இந்த உண்மையை நாம் மறந்து (அல்லது மறைத்து) நமக்கு நாமே ஒரு
பொய்த்தோற்றத்தை, அதாவது, ஆங்கில் வைத்திய மருந்துகள் அனைத்துமே
கண்டிப்பாக நோய் நீக்க வல்லதென்ற கணிப்பை வைத்திருக்கிறோம். This is what I call a group perception. ( a perception based on a process which is as incorrect as it is inadequate)

மாறாக, ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் பூண்டு, மஞ்சள்,வேப்பங்காய், துளசி, முருங்கை, பாகை, வெந்தயம், சீரகம்,மிளகு, அதி மதுரம், வசம்பு, ஆடு தொடா இலை,சிறியா நங்கை, வெங்காயம், சுண்ணாம்பு, sarpa gandhi, ஆகிய பலவும் பல நூறாண்டு காலமாக வெவ்வேறு நோய்களுக்குப் பயன் படுத்தப்படுகின்றன. இவையின் நோய் நீக்க சக்தி அனுபவத்தால் தெரியப்பட்டுள்ளது.

இதுவும் ஒரு பொது நம்பிக்கை.( public perception )

சீனாவின் அகுபங்க்சர் முறை இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ரத்த அழுத்தம், போன்ற நோய்களை ஒரு குண்டூசி குத்துவதின் மூலம்
சரியாக்க முடியும் எனச் சொல்கிறார்கள்.

ரீகி முறை. அண்டத்தில் இயற்கையாக உள்ள சக்தியை மாஸ்டர் தனது
கைகள் வழியாகக் கொண்டு வந்து வியாதியஸ்தரைக் குணப்படுத்துவதாக‌
நம்ப்படுகிறது. ப்ரானிக் ஹீலிங் என்று இன்னொரு முறை.

இங்கேயெல்லாம் எத்தனை எத்தனை verifiable experiments ந்டந்தன ?

(This apart, even amidst allopathy, a good amount of drugs are prescribed since the physicians found them to work, despite the process by which the molecules contained in the drug has not been subjected to adequate research. For instance, GABAPENTIN
a drug primarily given for grand mal and petit mal (fits ) is also given for depression. This works but ask for the literature as to how it cures, you do not get adequate information...This is mentioned only to bring home that even in Allopathy medicines which are not subject to verifiable experiments are prescribed. )


ஆக‌வே public perception ஐ அடிப்ப‌டையாக‌ வைத்துக்கொண்டு செய‌ல்ப‌டும் ஒரு குறிப்பிட்ட‌ செய‌ல்முறை ச‌ரியா த‌வ‌றா என‌ச் சொல்லிவிட‌இய‌லாது. ஒரு குறிப்பிட்ட‌ செய‌ல் விஞ்ஞான‌ ரீதியாக‌ச் ச‌ரியில்லை என‌ச்சொன்னாலும் அது ந‌ம்பிக்கைக்கு உட்ப‌ட்ட‌ செய‌ல் என்றால் அதைக் க‌ண்டிப்ப‌தில் பொருள் இல்லை. (உதார‌ண‌ம்: சூரிய‌ ச‌ந்திர கிரஹணங்கள் மனிதர்களை பாதிப்பதில்லை. சூரிய கிருஹணத்தின் போது சூரியனை நேரடியாகப்பார்ப்பது தான் கூடாது. இருப்பினும் அந்த நேரத்தில் லக்ஷக்கணக்கான பொது மக்கள் கடலில் நீராடுகிறார்கள், நீத்தோர் கடன் கழிக்கிறார்கள்.) இரண்டாவது, நம்பிக்கை faith. ( I have witnessed Professors of Astronomy lecturing in the classroom as to how an eclipse occurs, to return home later in the evening to do a Amavasya tharpana during Solar eclipse. For them there is no contradiction, as between their two acts, first based on scientific knowledge and the second based on social faith.)
இன்னொரு கோணத்தில் பார்ப்போம்.

கல்பனா சாவ்லாவை ஏற்றிச்சென்ற விண் மின்கலம் சோதனைக்குட்படுத்தப்படாமலேயா அண்டத்திற்குச் செலுத்தப்பட்டது ? ஏன் திரும்பி பூமிக்குள் திரும்பி வரும்போது பழுதாகிவிட்டது ? அது ஒரு gamble ஆ?

எத்தனை எத்தனை சோதனைகளுக்குப்பின்னும் திறந்த இதய வால்வு அறுவை சிகிச்சை தோல்வி அடைகிறது ? அதற்காக அதை வேண்டாம் என புறக்கணிக்கிறோமா ?

There have been verifiable experiments but these do not add up to a conclusion that will ever work. So,we always look at probabilities, as to what are the chances that such and such thing will work or will not work in specified circumstances.

( I have personally witnessed a case, where the body temperature of a person suffering from Malaria could not be reduced to manageable levels of under 101 or so with two tablets of paracetamol of 500 mg and maintained for four to five hours, but with a single dose of pherum phos (homeopathic dosage for an adult) the temperature not only gets reduced but got sustained at < 101 for well over 5 to 6 hours )
This is not to decry Allopathy, but stressing the need to choose the right system at the right place.

ஒருவ‌ருக்கு இருக்கும் perception இன்னொருவ‌ருக்கு faith ஆக‌வும் இருக்கும். ந‌ம்பிக்கை உள்ளோர் ( faithfuls) இட‌ம் சென்று verifiable experiments க்கு உட்ப‌டுத்திய‌பின்பு தான் நீங்க‌ள் தொடர்ந்து செய்ய‌வேண்டும் , இல்லையெனின் நீங்க‌ள் புத்திசாலியில்லை என‌ச் சொல்லிடுத‌ல் முடியுமோ ?

Things fail even after verifiable and verified experiments. அறிவு ஜீவிக‌ள் யோசித்துப்ப்பார்க்க‌வேண்டும்.

There comes one's intuitive power, which is possibly ahead of one's
reasoning power.

What is then intuition ?

Thursday, June 26, 2008

What is Faith ? What is Belief ? What else is Perception ? என்றோ நடந்த கதை

நம்பிக்கை என்பது ஒரு சொல். அதன் பல பரிமாணங்கள்.



கந்தர்வ நகரம் என்று சொல்லப்படும் மஹாராஷ்ட்ரா மா நிலத்தில் ஒரு ஊருக்குச்
சென்று வந்து அதுபற்றி வெகு அழகாக வர்ணித்திருக்கிறார் இந்த வலைப்பதிவு
ஆசிரியர்.

"சுமார் தரை மட்டத்தில் இருந்து 1300 அடி உயரம் வந்ததும் மிகப்பெரும் நிலப்பரப்பு, சுற்றிலும் மரங்கள், மரங்கள், மரங்கள் மற்றும் குத்துச்செடிகள், மருந்துக்கு கூட மனிதர்களோ ஆடு மாடுகளோ இல்லை "

http://authoor.blogspot.com/
அந்தக் காலத்து ஹிட்ச்காக் படம் பார்ப்பது போல்
கொஞ்சம் பயமாவும் இருந்தது மேலே படிப்பதற்கு.
படித்துக் கொண்டே போனேன்.
என்ன ஒரு வர்ணனை. அந்த கிராமத்து அழகில், வனப்பில்,
ஒய்யாரத்தில், மனம் மகிழ்ந்து போனேன்.

அந்த ஊர் சிறப்புகளை எல்லாம் அழகுபட வர்ணிக்கும்போது அந்த கிராம அருகாமையில்
வசிக்கும் மக்களது நம்பிக்கைதனையும் எடுத்துரைத்திருக்கிறார்.

//சிவனே முழு முதல் கடவுள். கோவில் என்று ஏதுமில்லை। சூலம் பதித்த ஒரு மரத்தடியும் அதன் அடியே புதைந்துள்ள கல்லுமே அவர்களின் கடவுள் அடையாளம்। ரிஷி ஆசீர்வதித்த மரமென்று ஒரு ஆலமரத்தைச் காட்டுகிறார்கள்। காரணம் ஆல மரத்தினடியில் வேறு எந்த மரமும் வளராதாம் ஆனால் இந்த மரத்தின் அடியில் ஒரு கருவேப்பிலை மரம் வளர்ந்து தழைத்தோங்கியுள்ளது। அங்கு பல வருடங்கள் கண்ட ஒரு பாம்பு வாழ்வதாகவும் நம்புகிறார்கள்। அந்த இடத்தில் பரவியிருக்கும் அமானுஷ்யமும், வெள்ளந்தியான அந்த மக்களின் வாழ்வும் மிகவும் சூட்சுமமான இடம் இது என்ற உணர்வையே தந்தது। இன்னும் தன்னை அகழ்ந்தாராய்ந்து கொள்ள அந்த இடம் மிகவும் ஏதுவானத இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.//

நான் இந்தப் பதிவுக்கு ஒரு பின்னோட்டம் இட்டிருந்தேன்.

" இறையொன்று உண்டென எல்லோரும் சொல்லிடினும் அவனை எப்படி ஒவ்வொருவரும்
உணர்கிறார் என்பது அவரவர் நம்பிக்கை.
நம்பிக்கை என்பது அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம்.
நம்பிக்கை என்றால் என்ன என ஒரு வகுப்பில் சொல்ல நேரம் கிடைத்தது.
இதை belief என்றும் faith எனவும் வெவ்வேறு நிலைகளில்
காண்கிறோம். சொல்கிறோம்.
What is primarily absorbed from parents, teachers and leading members of
one's social group is known as belief. As 'belief ' enters into one's inner
consciousness and gets integrated into one's intellect, the same " belief "
becomes " faith "
வெவ்வேறு சமூக அமைப்புகள் வெவ்வேறு நம்பிக்கைகளை அடித்தளமாகக்
கொண்டபோதிலும் இவ்வெல்லா நம்பிக்கைகளையும் இணைக்கும்
தளம் ( u may call it as CPU = central processing unit ) "மிகவும் சூட்சுமமான இடம்"
வெறும் பூஜியம் தான். "அந்தப்பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன். அவனைப்புரிந்து கொண்டால் அவன் தான்
இறைவன் "

இந்தப் பின்னூட்டத்தைப் படித்த பதிவாளர் எனக்கு பதிலளித்தார்:

"What is primarily absorbed from parents, teachers and leading members of
one's social group is known as belief. As 'belief ' enters into one's inner
consciousness and gets integrated into one's intellect, the same " belief "
becomes " faith ""

ரொம்பவும் அருமையான விளக்கம். முன்பெல்லாம் கேள்வி கேட்காது எதையும் ஒத்துக்கொள்ளும் பக்குவம் இருந்ததில்லை அதுதான் அறிவின் விஸ்தீரணம் என்று கூட பிதற்றலாய் எண்ணியதுண்டு ஆனால் இப்போதுதான் மெள்ள மெள்ள புரிகிறது கேள்விகளற்ற அகச்சூழலே மெய்தேடலுக்கு உரித்தான களம் என்று அந்த கேள்விகளற்ற அகச்சூழல் belief என்பது faith என்ற உருமாற்றம் அடையும் போது தானோ.... மிக்க நன்றி (belief/faith - இரண்டுக்குமான தமிழ் அர்த்தம் நம்பிக்கை என்று தான் வருகிறது ஆனால் எத்துனை நுட்பமான வித்யாசத்தை தன்னுள் கொண்டுள்ளது - இது பற்றி தங்கள் பார்வையை அனுபவத்தை சொல்லுங்களேன்)

இதற்கு நான் மறு பின்னூட்டம் ஒன்று எழுதினேன்.

thiruchendru le
நடந்த ஒரு அனுபவமே நினைவுக்கு வந்தது.
எழுதப்போனேன். இரு பக்கங்களுக்கு மேல் வந்து விட்டது.
உங்கள் பொறுமையை சோதிப்பது சரியாகாது.
சற்றே காத்திருங்கள்.
என் பதிவுகள் ஒன்றில் போடுகிறேன்.
" என்றோ நடந்த கதை " எனும் தலைப்பிலே.
அதுவரை ( எனது BORE க்கு)
ஒரு Break.

பதிவாசிரியர் பொறுமையுடன் காத்திருப்பதாகவும்
சொல்லிவிட்டார்.

"சற்றே காத்திருங்கள" பெரியவங்க சொல்லீட்டீங்க காத்திருக்கிறேன்...
**************************************************************************

தெரிந்தவரை சொல்ல முயல்கிறேன்.


1984 ம் வருடம். திருச்செந்தூருக்கு, அந்தக் கிளை அலுவலக் கணக்கு ஆய்வுக்காக நானும்
என்னுடன் இருவரும் சென்றிருந்தோம்.





அன்று சூர சம்ஹார உற்சவத்திரு நாள். கடற்கரை
யில் அமைந்த அக்கோவிலின் முன் லட்சம் பேருக்கு மேல் குழுமியிருக்கிறார்கள். மாலை வேளை. கதிரவன்
மறையவில்லை இன்னமும். கந்த தரிசனத்திற்காக நாங்கள் அக்கோவில் படிக்கட்டுகளில்
உட்கார்ந்திருந்தோம். முருக பக்தர்களின் வேல் வேல் கோஷம் வானை முட்டுகிறது.
பிரமிக்கவைக்கும் காவடிகள் ஏந்தும் பக்தர்கள், மொட்டை அடித்த குழந்தைகள், ஆங்காங்கே
பொங்குகின்ற சின்னச்சின்ன சமையல் கூடங்கள், கரகாட்டம், மயிலாட்டம், வாண வேடிக்கை,
பட்டாசு சத்தம். இத்தனையும் மீறி சுதந்திரமாய் சுற்றிவரும்
ஏராளமான பிச்சைக்காரர்கள். நூற்றுக்கணக்கில் என்றால் சரியாகாது. ஆயிரக்கணக்கில்.
பலர் தாம் பிச்சை எடுத்து இது அது செய்ய வேண்டிக்கொண்டிருக்கிறோம் என்று வேறு சொல்கிறார்கள்.
கந்த சட்டியன்று தானம் கொடுக்க வந்தோர் பலர் 5,10 காசுகளாக நூறு பேருக்கு, ஆயிரம் பேருக்கு என்று வரிசையாகக் கொடுக்கும் காட்சி. ( இது போன்ற தான தருமங்கள் செய்வது ஏதோ பிராயச்சித்தம்
பரிகாரம் என நினைப்பதும் ஒரு நம்பிக்கை ( part of a belief system ) )
( அந்தக்காலத்தில் இப்போது ஐந்து ரூபாய்க்கு வாங்க இயலும் ஒரு வாழைப்பழம் அன்று ஐந்து
காசுகளுக்குக் கிடைத்தது. நம்ப முடியாது. இனி நான் சொல்ல வருவதும் அப்படித்தான்.)
அந்தக் காசுகளைப் பெற அந்தப் பிச்சை எடுக்கும் கும்பல் போட்டி போடும் காட்சி.
குமரா ! கந்தா ! வேலா ! முருகா !
கடற்கரை படியில் அமர்ந்திருந்த எனக்கு ஒரு திடீர் யோசனை !
சாதாரணமாக , ஒரு நபரிடமிருந்து ஐந்து காசோ, பத்து காசோ, அதிகம் போனால்
ஒரு 25 காசு மட்டுமே பிச்சை பெறும் இவர்களுக்கு திடீரென்று ஒரு 2 ரூபாய் பிச்சை
விழுந்தால் என்ன நினைப்பார்கள் ?
நான் அருகில் உள்ள என் நண்பரைக் கேட்டேன். அவர் கந்தர் சட்டியை சொல்லி முடித்து
என்ன கேட்டாய் என்றார். திரும்பி ஒரு தரம் சொன்னேன்.
" என்ன ! உங்களைப் போல் ஒரு மஹாராஜன், புண்ய பிரபு உண்டோ ! என பெரிதும்
வணங்குவான். வேறேன்ன செய்வான்" என்றார்.
" ஏய் ! ஆபத்திலே மாட்டிக்காதே ! நாளைக்கும் நீ எங்கேன்னு வந்து தா ன்னு கேட்பானுக "
என்றார் இன்னொருவர்.
என்னதான் ஆகிறது என்று பார்த்துவிடுவோம் என்று பையில் கையை விட்டேன். என் பையில்
தான். இரண்டு ரூபாய் நோட் இல்லை. ஐந்து ரூபாய் நோட் தான் இருந்தது.
" சும்மா கொடுடா தர்ம துரை நீதானே ! " என்று உசுப்பிவிட்டார் நண்பர்.
வேண்டாம் எனச் சொல்லி ப் பின் வாங்கவும் முடியாத தன்மானம் எனக்கு.
ஒரு பிச்சைக்காரனை அழைத்தேன்.
அந்த 5 ரூபாய் நோட்டை அவன் கைகளில் போட்டேன்.
அடுத்த வினாடி அவனைக் காணவில்லை. எங்கே போய்விட்டான் !
ஒரு வேளை நன்றி உணர்ச்சியால் என் காலடியில் சங்கமமாகிவிட்டானோ என்று கூட பார்த்தேன்.
இல்லை. பக்கத்தில் திரும்பினேன். மிக அருகிலே கோபுர வாசலிலே அவன் சாஷ்டாங்கமாக‌
நமஸ்கரித்துக் கொண்டு
" டேய் ! அங்கே பார் ! நீ பிச்சை கொடுத்தவன் என்ன செய்கிறான் என்று " என்றார் நண்பர்.
நம்புங்கள் என்னை.
" முருகா ! என்ன இன்னிக்கு நீ ராசா ஆக்கிட்டயே . " என கந்தனை நோக்கிக் கதறினான்.

அவனுக்கு இருந்தது ஆண்டவன் மேல் faith.
"நான் கொடுக்கிறேன்" என நான் நினைத்தது என்னுடைய Belief.


எது வந்திடினும் பெற்றிடினும் அது இறைவன் தந்தது.
அது அவனுடைய faith. (This is what is integrated into one's intellect )

எது கிடைத்தாலும் அது ஆண்டவனே கொடுக்கிறான் எனும் நம்பிக்கை.
என்னைப் போற்றுவான், வணங்குவான் என ஒரு ஐந்து ரூபாய்க்காக என்று
நான் எதிர் பார்த்தது ஒரு நம்பிக்கையே.
இது my belief.
This stood shattered on witnessing the action of the beggar.

எல்லா belief ம் faith ஆக உருவாவதில்லை.
ஒரு belief,faithஆக ஒரு நிலை மேலே செல்வதிற்கு இடையிலே
ஏகப்பட்ட தடைகள் உள்ளன. இந்த தடைகள் பல நாமே நமக்கு
உருவாக்கியவையும் ஆகும். இத்தடைகளைத் தான் " நாம் நமக்கே
போட்டுக்கொள்ளும் விலங்குகள் " எனும் சொல்கிறோம்.We are
the prisoners of our own situations. பலவற்றினை rationalist
outlook எனச்சொல்லிக்கொண்டு நம்மை நாமே புகழ்ந்தும் கொள்கிறோம்.

ஒரு belief , faith ஆக உருவாக தியானம் ( meditation ) ஒரு
சாதனம். ஒரு கல்லை வைத்து அதன் மேல் நமது இஷ்ட தேவதையை
பிரதிஷ்டை செய்கிறோம். இதற்கு பிரதீக உபாசனை அல்லது
ஆத்யாசன உபாசனை என்றும் பெயர் சொல்வார்கள். ஒரு சிறிய‌
பெளதீக பொருளின் மேல் ஓர் உயர்ந்த கருத்தினை super impose
செய்து அதில் தியானிப்பது இவ்வகையாம்.

ஒரு கால கட்டத்தில் கல்லைக் கல்லாகப் பாராது சிவனாகக் காண்கிறோம்.
மஞ்சளைப் பிடித்து வைத்து அதை பிள்ளையாராகப் பார்க்கிறோம்.

கல் கண்டார் கல்லே கண்டார் . இல்லை. இது சாலிக்கிராமம். இது
சிவலிங்கம் என்று நம்பிக்கை கொண்டவர் அதில் தம் இறைவனது
ப்ரத்யக்ஷத்தினை உணர்கின்றனர்.

ONE MORE FAITH IS SEEN BELOW:



திருமதி. க்ருத்திகா அவர்கள் தமது பதிவில் கந்தர்வ புரியில் காணப்படும்
சூலத்தையும், சூலம் கீழ் இருப்பதாகச் சொல்லும் பாம்பும், கருவேப்பிலை
மரமும் எல்லாமே இந்த பிரதீக உபாசனையின் பிரதிபலிப்புகள்.
faith என்று நாம் கூறும் வார்த்தையின் நிதர்சனங்கள்./


நமது சமூகத்தில் நம்மை அடுத்து பிறர் நம்பும் விஷயங்களை
நாமும் நம்பவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
ஆனான், மதிக்கவேண்டும், மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதுவே உண்மையான மானுட நேயம்


நம்பிக்கை என்ற ஒரே சொல் இருவகையில் பொருள்படுகின்றது.
இருவகையாக உணரப்படுகிறது.
என்று கவனித்தோம்.
இந்த belief system
ஒரு perception வழியாகத்தான் வருகிறது.
இது எப்படி என்பதை இன்னொரு நிகழ்ச்சி மூலம் பின்னொரு
நேரத்தில் விளக்குவேன்.

ஒரு 25 வருடம் முன் நடந்த இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வாய்ப்பு தந்த மேடம் க்ருத்திகா அவர்களுக்கு என் நன்றி.

Tuesday, June 17, 2008

அசுர சாதகம் RELENTLESS PRACTICE LEADS ONE TO DO WONDERS !!

இந்த இரண்டு கலைகளுமே அசுர சாதகம் செய்தவற்களுக்குத்தான்
சாத்தியம்.

ஒருவர் தனது உடலை எப்படி எல்லாம் வளைக்கிறார் !
அஷ்டாங்க யோகமாம் இது.!

Krisnamacharya Yoga Film 1938 (silent



This is a video made in 1938 showing the Great yoga teacher demonstrating asana and pranyama. He was the teacher of BKS Iyengar and Sri K. Pattahbi Jois, founder the Astanga style of yoga. The film is so old that any claim to copyright has expired.

THIS IS A CLASSICAL MUSIC RECITAL ( BHAJAN )


இவர்கள் வளைப்பது தமது குரல் வள நாளங்களை !
தமது கற்பனைத்திறனுடன் அதே சமயம் எடுத்துக்கொண்ட‌
ராகத்தின் பரிமாணங்களுக்குட்பட்டு, இவர்கள்
ஒரு தனி உலகத்தையே ஒரு ஏழு நிமிடங்களுக்குள்
உருவாக்குகின்றனர்.


ரஞ்சனியும் காயத்ரியும்
பர்ஸே பாதரியா எனும் அற்புதமான பாடலை என்னமா
பாடுகிறார்கள் !

Ranjani and Gayatri - Barse Badariya (Bhajan) at Podhigai TV Concert.



BOTH ARTISTS HAVE REACHED THE PINNACLES OF GLORY !!
ONLY BECAUSE OF THEIR SUSTAINED AND DEDICATED PRACTICE !!

என்ன தோன்றுகிறது !

எதையும் மேலெழுந்தவாரியாகப் படித்துவிட்டு
நானும் பிரசங்கம் செய்வேன் என்று அதிகப்பிரசங்கி ஆகாது,
அகல உழுவதிலும் ஆழ உழு என்று சொல்வார்களே,
அது போல, ஏதோ ஒன்றில் துல்லியமாகக் கற்றுக்கொள்.

இன்னொரு பழமொழியும் இருக்கிறது:

one should know
something of everything, but
everything of something.
நம்ம என்ன category ?

Sunday, June 1, 2008

அன்பின் பூரண நிலை. தத்துவம். எல்லாமே.

<
அன்பு என்ற ஒரு சொல்லுக்குத்தான் எத்தனை பொருள் !
அன்பு என்ற ஒரு சொல்லில்தான் எத்தனை வலிவு !
அன்பு என்ற ஒரு சொல்லில் தான் எத்தனை இனிமை !
அன்பு என்ற ஒரு சொல்லில் அடங்கியுள்ள மானுட நேயம் தான் என்னே !

அன்பினை ஒரு சொல் சொல்லி வர்ணிக்கவும் இயலுமோ ?
பாசம், நேசம், வாத்சல்யம், பரிவு, நட்பு, காதல், தோழமை,தியாகம், பக்தி, அடிமை (சரணாகதி), அருள் என வாழ் நாளில் ஒவ்வொரு கால கட்டத்திலும் அன்பிற்கு பல்வேறு பெயர்
சூட்டுகிறோம். வாழ்க்கையில் எதுவுமே ஒரு பரிமாற்றத்தின் அடிப்படையாகத்தான்
இருக்கும் நிலையில், அன்பு ஒன்று தான் எதையுமே எதிர்பாராது உயர்ந்து நிற்கும்.

தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பாசம்
மனைவி தன் கணவனிடம் கொண்ட காதல்
ஒருவன் தன் தோழனுக்காக செய்யும் தியாகம்
பற்று ஒழிந்த நிலையில் தன்னையே தன் இறைவனிடம் அர்ப்பிக்கும் பக்தனது சரணாகதி

இவற்றில் எதுவுமே எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதாய் இருப்பின் அவை அன்பு
ஆகிடுமோ ?

ஐம்புலன்களினால் உணரப்படும் அன்பினை ஒருவர் வர்ணிக்கிறார். அந்த அன்பினை
அதிசயம் என்கிறார்.
அன்பாயிருக்க கத்துக்கணும் என்கிறார் இவர்.
http://kavinaya.blogspot.com/2008/05/blog-post_27.html
இன்னொருவர் ஐம்புலன்களையும் அடக்கி தன்னுள்ளே இறைவனைக் காணுகையில்
ஏற்படும் ஏக்கத்தினை வர்ணிக்கிறார்.
http://jeevagv.blogspot.com/2008/05/blog-post_30.html
உலகாயதமாக இருக்கும் நிலையில் மனித நேயம் அன்பு அதிசயம் .
உலகத்தைத் துறந்த நிலையில் ஈசனைத் தன்னுள் காண விழையும் ஏக்கம்
அன்பின் பூரண நிலை. தத்துவம். எல்லாமே.

Let us congratulate both.

Monday, May 26, 2008

அந்த அன்னையின் அழகுக்கு, அன்புக்கு, அருளுக்கு ஈடேது ?




புதுப்புது வலைப்பதிவுகளைப் படிக்கையிலே ஒரு உற்சாகம் தோன்றுகிறது.
அண்மையில் நான் படித்த நானோ சயின்ஸ் என்னும் பதிவு ஆழ்ந்த கருத்துக்களைக்
கொண்டதாக அமைந்திருக்கிறது. நம்மில் பலரை கலை உணர்வு அதிகம் உள்ளவரென்றும் பலரை தர்க்கரீதி ( logic ) யானவர் எனவும் கண்டிருக்கிறோம். மூளையில் ( எங்கே இருக்குன்னு கேட்பீர்களோ ! ) வலது பக்கம் புதுப்புது படைப்புகளைக் கற்பனைத்திறன் கொண்டு ஆக்குவதிலும் இடது பக்கம் எந்த ஒரு பொருளையும் தர்க்கரீதியாக அணுகுவதிலும் செயல் படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். எவருமே இடது பக்கம் ஒன்றே அல்லது வலது பக்கம் ஒன்றே என ஒரு பக்க மூளை செயல்பாடு உடையவர் இல்லை. நம்மில் ஒரு 90 விழுக்காடு இரண்டும் கலந்தவர் எனினும் எந்த பக்க மூளைதனை அதிகம் செயல் படுத்துகிறோம் என்பதை சில பரீட்சைகள் மூலம் தெரிந்து கொள்ள இயலும். நாட்டியம், பாட்டு, ஓவியம் பொதுவாக கலைகள் உணர்வு மிக்கவர் தமது வலது பக்கத்தினை அதிகம் செலவு செய்கிறார்கள் எனினும் ஒரு பரத நாட்டிய நிகழ்வினையோ, ஒரு கர்னாடக சங்கீத இசை நிகழ்ச்சிதனையோ தர்க்க ரீதியாக இலக்கண ரீதியாக ( critic ) அணுகுபவர் இடது பக்க மூளை அதிகம் பயன் படுத்து கின்றனர். நாம் யார் எப்படி என நமக்கே உணர்த்தும் இவரது அறிவு பூர்வமான வலைப்பதிவுகள் வலை உலகத்திற்கு ஒரு வரப்பிரசாதம்.
இந்த வாரம் இப்பகுதியில் " ஓம் எனும் பிரணவத்தில் துவங்கும் காயத்ரி மந்திர மந்திரம் " ஒரு அண்டத்தில் நிகழும் ஒலி அதிர்வுகளைப் பற்றி (நமக்குத் தெரிந்ததும் இருக்கிறது , தெரிந்ததாக நினைப்பதும் ) விலா வாரியாக எடுத்துச்சொல்லி கேள்வி மேல் கேள்வியாக கேட்கிறார்கள்.
http://nonoscience.wordpress.com/2006/04/30/critique-on-gayatri-mantra-a-scientific-view-by-dr-tanmaya/#comment-5784

பிஸிக்ஸ் படித்த ஆன்மீக வாதிகள்
சண்டை போன சரியான இடம். சபாஷ் ! சரியான போட்டி !!

தமது படைப்புகளால் தம்மைச் சுற்றி இருப்போரைக் கவர்வதும் ஒரு கலை தான். சாதாரண ஒரு விஷயத்தைக் கூட சுவையுடன் சொல்வதில் அதே சமயம் அரிய தகவல்களையும் அளித்து தனது வலைதனை ஒரு அறிவுக்கூடம் மட்டுமல்ல, ஒரு ஆய்வுக்கூடமாகவும் ஆக்குகிறார் ந்யூ சீ பதிவாளர்.

தவிடு முதல் தங்கம் வரை இவர் எழுதும் பொருள்கள் ( subjects ) கணக்கிலடங்கா. ஒரு நாள் சூரியன் உதிக்க மறந்தாலும் இருக்கலாம். ஆனால் இவர் பதிவு எழுதா நாள் இல்லையெனச் சொல்லும் அளவிற்கு அளவு கடந்த உற்சாகத்துடன் செயல்படுவதில் இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டி. தொய்வு, சோர்வு என்பதே இவர் அகராதியில் இல்லை போலும். நானும் அவரை அவ்வப்போது ஒரு குண்டூசியால் குத்திப்பார்ப்பேன். ஏற்ற வகையில் பதிலளிப்பார். இவரிடம் அதிகம் நான் காணுவது receptivity as well as balanced approach. "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பார் வள்ளுவர். உலகெல்லாம் அறிவு பரந்து கிடக்கிறது. அதை உள்வாங்கிக்கொள்ள ஒரு அகந்தை இல்லாத மன நிலை வேண்டும். அப்படிப்பட்டவர் தான் இதுபோன்ற புதியவனவற்றை ஆக்க இயலும் இவர் யார் என உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியும் தெரியாமல் போனால், பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்றால் இவரைப் பார்க்கலாம். பரந்தாமனின் மேனியெல்லாம் மாலையாக மணம் வீசுவார். இந்தப் பெருமாள் கோவிலிலே வருடம் முழுவதும் வைகுண்ட ஏகாதசிதான்.
காதோடு ஒரு விஷயம்.

உத்சவத் திரு நாட்களில் கூட்டத்தோடு கூட்டமாக நாமும் காத்திருப்போம்.
அர்ச்சகர் எல்லோருக்கும் தீர்த்தம் கொடுத்து, சடாரி சாத்தி, துளசி தருவார்.
ஒன்றிரண்டு முறை நம் நீட்டிய கைகளைத் தாண்டிச் சென்று விடுவார்.
பக்தர்கள் சோர்வ‌தில்லை. அவர் பிரசாதம் தரும்வரை அங்கிருந்து நகர்வதில்லை.

வலை உலகில் கவிதை எழுதும் கலைஞர் பலர். அவர் சிலரின் கவிதைகள் முதன் முறை படிக்கும்போதே மிகவும் கவர்ந்து விடுகின்றன. சொல் நயம், பொருள் நயம். சொற்கோர்வை, சந்தம், எதுகை, மோனை, உபமானம், உபமேயம், ஆகியவையும் இன்ன பிறவற்றையும் கவிதைக்கு இலக்கணம் கூறுவோர் பகர்வினும் இவையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டபின் கவி பாடுவதில்லை கவிஞர்கள். கவிஞர் தம் வாய் திறந்தாலே மடை போல் பெருக்கெடுத்து ஓடும் பெருவெள்ளத்தில் சந்தமும் எதுகையும் அனந்தம். பாரதி முதல் கண்ணதாசன் வழியே வாலி வந்து இன்றைய யுக பாரதி வரை பாடிய கவிதைகள் அனைத்தும் அவர்தம் உள்ளத்திலிருந்து பெருகிய கங்கைப்பிரவாகம். இலக்கணம் இவர்களுக்கு கைகட்டி நிற்கும். இன்னிசையும் தன்னை மறந்து தாளம் போடும்.


http://kavinaya.blogspot.com/

அவ்வப்போது இதுபோன்ற கவிதைகள் என் கண்ணில் படும். உடனே ஒரு வேகத்துடன் ஆர்வத்துடன் அதற்கு ஒரு மெட்டு போடவேண்டும் என எண்ணுவேன். எனக்குத் தெரிந்த இசை ஞானத்தின் துணையுடன் அக்கவிதைகளைப் பாடிடும்போது நான் காணும் மன நிறைவு சொல்லில் அமையாது. " ஸ்வாந்தஸ் ஸுகாய " என்று சொல்வார்கள், துளசி எதற்கு ராமாயணம் எழுதினார் என்று. ஏதோ லட்சாதி லட்சம் நேயர் படிப்பார்கள் என்றா ? தன் மன நிறைவுக்காக எழுதினார் என்று சொல்வார்கள்.

அது போலத்தான். அன்று நடந்தது. கவி ஒருவர் நயத்துடன் புனைந்த கவிதையை நானும் என் மனைவியும் யதுகுல காம்போதி எனும் ராகத்தில் மெட்டமைத்து பாடினோம். யூ ட்யூபிலும் அரங்கேற்றினோம். எங்கேயோ இருக்கும் என் தங்கை ( அவள் ஒரு க்ளாசிகல் இசை வித்தகர் ) எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். பாடலைத் தானும் ஒரு முறை பாடிக் காண்பித்துப் பெருமிதம் கொண்டார். அப்படியே " உன் வாயைத்திற " என்றார். எதற்கு என்றேன். அம்பிகையின் அழகைப் பற்றிச் சொன்ன வாய் இனிக்க வேண்டாவோ ? இந்தா ஒரு கல்கண்டு என்றார். தொடர்ந்தார்: " அம்பிகையின் அழகை வர்ணிப்பதற்கும் அன்னையின் அருள் வேண்டும்.
http://www.youtube.com/watch?v=-Kg9mQxLpd4pd4


ஆதிசங்கரர் தனது ஸெளந்தர்ய லஹரியில் 100 பாக்கள் அந்த அம்பிகைதனை பாதார கேசம் வர்ணித்து அவளது அருள் வெள்ளத்தினைத் தனது கவிதைகளினூடே பொழிகிறார். 100 பாடல்கள் எழுதியபின்னே அந்த அன்னைக்கு அம்பிகைக்கு, இத்துணை ஆற்றல் எனக்களித்தனையே ! கவி பாடும் திறனை அளித்தாயே ! உனக்கு நைவேத்தியமாக என்ன தருவேன் என்ற கேட்டு அதற்கான விடைதனையும் நூறாவது பாடலிலே முடிவாகத் தருகிறார்.

எந்த உன் அருளால் இத்தனை பாடல்களையும் யான் இயற்ற இயன்றதோ, அந்த ஆற்றலையே உன் பாதங்களிலே சமர்ப்பிக்கிறேன், நைவேத்தியமாக. பெற்று எனக்கருள்வாய் என்கிறார் சங்கரர்.

யார் நம்மைப் பாடலமைக்குமாறு, பாடுமாறு ஊக்குவிக்கிறாரோ, அவர் அன்னையே.
யார் பாடலைப்பாடுகிறாரோ அவரும் அன்னையே.
எது பாடலோ, எது இசையோ அவரும் அன்னையே.
அந்த அன்னையின்
அழகுக்கு, அன்புக்கு, அருளுக்கு
ஈடேது ?

Monday, May 12, 2008

தோன்றியதை எழுதுகிறேன்.

இந்த வலைப்பதிவு துவக்கத்தில் நான் குறிப்பிட்டது " வலைப்பதிவாளர்களின் அதிசய வளர்ச்சி, அவர்தம்
முயற்சி, எழுதவேண்டும் என்ற ஆவல், தமக்குத் தெரிந்தவற்றை சமுதாயத்தின் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற உந்தல்" எல்லாமே.

அடுப்பங்கரை முதல் ஆன்மீகம் வரை, இசையில் துவங்கி ஈசன் வரை இவர்தம் கவனிப்பும் கணிப்பும்
ஒரு பக்கம் பாராட்டத்தகுந்ததாக இருப்பினும், இன்னொரு கோணத்தில், இவர்கள் எல்லோருமே
சில சில குழுக்களில் ஒரு குறிப்பிட்ட வட்டங்களில் மட்டுமே செயல் படுகின்றனர் என்றுமே தோன்றுகிறது.
கடந்த ஒரு ஆறு மாதங்களில் நான் பார்த்த, படித்த வலைப்பதிவுகள் எல்லாமே ஏறத்தாழ இவ்வகைதனைச்
சார்ந்தவையாகவே இருக்கின்றன. ஒரு பதிவுக்கு 100 பின்னூட்டங்கள், முன்மொழிகள், அல்லது விமர்சனங்கள், வருவதாக இருப்பினும், அதில் ஒரே நபர் பல முறை வருவதையும், ஒவ்வொரு முறையும் அவருக்கு பதிவாளர் பதில் எழுதுவதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், எந்த ஒரு பதிவுக்கும் அதிக பட்சமாக ஒரு 25 நபர்களுக்கு மேல் வருகை தருவதில்லை எனவே தோன்றுகிறது. MOST OFTEN MUTUALLY APPRECIATIVE OF ONE ANOTHER, WHATEVER BE THE CONTENT OF THE BLOG. MOST TIMES, THEY JUST MARK THEIR PRESENCE AND GO AWAY. THE WORLD IS SO FAST, YOU KNOW. இந்த நிலை ஏன் என எல்லா பதிவாளர்களும் சிந்திக்கவேண்டும். So there is not much to say about NUMBER OF VISITORS so long as the material published does not attract a new audience.
மாறாக, நல்ல புதிய கருத்துக்களைச் செவ்வனே எடுத்துச்சொல்லும் திறமை வாய்ந்த சில பதிவாளர்கள் தமது பதிவுகளை யாரும் படிப்பதில்லையே என்ற ஒரு ஏமாற்றத்தில், சோகத்தில் பதிவு எழுதுவதைத் தவிர்த்து விடுகின்றனர். ஒருவரின் சிந்தனை ஓட்டங்கள் அவனிருக்கும் சமுதாய சிந்தனை ஓட்டங்களுக்கு முன்னிருக்கும் நிலையில் அவனைத் தொடரும் நபர்கள் அவனது கால கட்டத்தில் அதிகம் இருப்பதில்லை. சரித்திரத்தில் மிகவும் திறனும் வலிவும் கொண்ட எழுத்துக்களுக்கு contemporary readership value
இருந்ததா என்பது கேள்விக்குறியே. ஆகவே உங்கள் கருத்துக்களில் ஆழம் இருப்பதாக நீங்கள் உணரும்
பட்சத்தில் தொடர்ந்து எழுதுங்கள். தமது பதிவினை யாரும் படிக்க வரவில்லையே என வருத்தப்பட வேண்டாம்.
நெல்லில் உமி எது அரிசி எது என காலம் சொல்லும். கவலை வேண்டாம்.

அகல உழுவதிலும் ஆழ உழவேண்டும், எடுத்துக்கொண்ட பொரூளை விவரிப்பதோடு நிற்காமல், ஆராய முற்படவேண்டும், அப்பொருளில் மற்றோர் கருத்துக்களுடன் உரசிப்பார்த்துடன் நில்லாது தன்னையும் ஒரு சுய விமர்சனத்திற்கு உட்படுத்தித் தான் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதாரங்களையும் எடுத்துச் சொல்லும்போது தான் அறிவின் எல்லைகள் நீள்கின்றன.

ஒரு தனி மனிதனின் அறிவு வளர்ச்சியும் முதிர்ச்சியும் அவன் சார்ந்துள்ள சமூகத்தின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது. ஒரு பதிவு அழுத்தமாக ஒரு செய்திதனை விளக்கிச் சொல்கையில், அதுபோன்று நாமும் ஒரு கருத்தினைச் சொல்லவேண்டும் என்கிற எண்ணம் மற்ற பதிவாளர்களிடையே ஏற்படுகிறது.

ஆக, பதிவுகள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியில் ஒரு தூண்டுகோலாக அமைதல் அவசியம்.
பல தினசரி, வார, மாத இதழ்களைப் படிக்கிறோம், ரசிக்கிறோம் என்றாலும் அவற்றினில் மனதில் நிற்கும்படியான கருத்துக்கள், கட்டுரைகள் இருக்கும்போது தான் அவற்றினை த் தொடர்ந்து படிக்கிறோம்.
ஆகவே பதிவுகளும் passing clouds போலன்றி ஒரு சமுதாய அறிவு வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையவேண்டும்.

அண்மையில் நான் படித்த நானோ சயின்ஸ் எனும் பதிவு இவ்வகையில் என்னை மிகவும் ஈர்த்தது.


http://nonoscience.info/2008/05/08/cat-crossing-and-magnetoreception/

ஒரு பூனை குறுக்கே போனால் அதை கெட்ட சகுனம் என்று சொல்லி வீட்டுக்கு திரும்பி விடுகிறோம். இதை ஒரு மூட நம்பிக்கை என்று மட்டும் சொல்லி எள்ளி நகையாடாது, மேலும் இந்த நம்பிக்கையில் அறிவு பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக ஏதேனும் இருக்கிறதா என அலசி எடுத்திருக்கிறார் இந்த
பதிவாளர். Cat Crossing and Magnetoreception

உண்மையாகவே, வானியல் பற்றி எழுதும் ஜெயபரதன் பதிவுகளுக்குப் பின் நான் படிக்கும் ஒரு அர்த்தமுள்ள பதிவு இது.

Congratulations to the writer of nonoscience.

Saturday, May 3, 2008

Sounds of birds and a lot of relaxation





type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355">



Havasupai Indian Waterfall Relaxation



Gentle Rain,Soothing Sounds of Nature

Sunday, April 13, 2008

தஞ்சாவூர் டிகிரி காபி



எங்க தாத்தா ரசிச்சு ஒரு டம்ளர் தஞ்சாவூர் டிகிரி காபி சாப்பிடுகிறார்.

காபி என்பது ஒரு தனி ஆனந்தமாம்.
அந்த ஆனந்தம் பிரும்மானந்தத்திற்கு ஈக்வல்லாம்.
நீங்களும் கேளுங்கள்.

Saturday, April 5, 2008

And This Week, the Golden Crown Goes to....



இந்த வாரம் நான் நவரசங்களையும் சந்தித்தேன் எனச்சொன்னால் அது மிகையாகாது.
First comes
http://myviewsthroughthelens.blogspot.comவருடா வருடம் தென் பிரான்சின் நீஸ்(Nice) நகரில் நடைபெறும் Carnaval வசந்தக் களியாட்டம் பார்க்கச் சென்ற மாதம் author of the blog சென்ற போது எடுத்த படங்கள்.
bEaUtIFuL.

நவ ரசங்கள் என்று சொல்லிய உடனே எல்லோருக்கும் தோன்றுவது காதல்
அலுவலகத்திற்கு புறப்படுமுன் ஒரு காதல் பற்றிய பாடல் கேட்டால் அன்று முழுவதும் மனதுக்குள்ளேயே இருந்து பாடவும் செய்கிறதாம். அந்தப்பாட்டு " காதலின் தீபம் ஒன்று"
http://www.youtube.com/watch?v=6J4uLflEB40
(OR audio only click below)
http://www.esnips.com/doc/8e41f691-96b5-45fe-ae50-a3790a22a494/Kadhalin-Deepam-Onru

Her feeling of joy slowly turns into a feel of fear,as she nears the bus stand. A change in her emotive levels ! How well and ably described !!
பஸ் ஸ்டான்ட் வந்தபோது பயம் வந்து விட்டதாம். தன் பய உணர்வினை
"அம்மாவிடம் சொன்னபோது அம்மா சிரித்தார்கள்.
"பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்குற நீயே பயப்பட்டா எப்படி.." என்றார்களாம். இவர் என்ன சொல்கிறார்:
http://pettagam.blogspot.com/

"அதுவும் சரிதான். அதற்காகப் பயம் இல்லாத மாதிரி நடிக்க வேண்டுமானால் முடியும். பயம் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?" Nice Question indeed ! பயப்படாமல் இருக்க இவருக்கு இந்த வீடியோவைப் பார்க்கச் சொன்னேன். நீங்களும் பாருங்கள்.
இந்தக் குழந்தை போல் இருப்பது சாத்தியமா என்ன ?




fearless child
http://www.youtube.com/watch?v=1a4-jwXejc0
Not only this, she is on in a large-hearted humanitarian job. Kindly visit the blog .


நவரசங்களிலே ஒன்று குதூகுலம். உள்ளம் ஆர்ப்பரிக்கும்போது உடலும் கொம்மாளம் போடுகிறது. இந்தக் காட்சி ஒன்றை நான் துளசி டீச்சர் கிட்டே காமிச்ச போது, அவர், ஏற்கனவே இது தஞ்சையை ராஜ ராஜ சோழன் ஆட்சி செய்து கொண்டிருக்கையிலேயே, “என்னுடைய பதிவில் போட்டு விட்டேன். நீங்க பார்க்கலையா என்கிறார்கள்.” En உடைந்த மூக்கில் ரத்தம் இன்னும் நின்றபாடில்லை. இருந்தாலும் நான் ரசித்ததை இங்கு சொல்லவேண்டும் அல்லவா?
http://www.youtube.com/watch?v=HWD6SI3Orc0
super dapancute dance by a cat
அடுத்து நாம் காண இருப்பது நகைச் சுவை உணர்வு. இதை தட்டச்சு செய்யும்போது அஹமதாபாத்தில் நமது இந்திய அணி ! ayyo பாவமாக இருக்கிறது...
அதை முன்னமேயே எதிர்பார்த்து ஒருவர் இதை தன் யூ ட்யூப்பில் போட்டிருக்கிறார். பார்க்கத்தவறாதீகள்.
படா த்ரில்லர் !!!!

Indian Cricket Worldcup Comedy 2007




அடுத்து நாம காணப்போவது ஒரு சஸ்பென்ஸ் உணர்வு.
http://arisuvadi.blogspot.com/
காதலை மையமாக வைத்து ஒரு கதை.
பின் குறிப்பாக எழுதுகிறார்:

இந்த கதைக்கு உசிரோட இருக்குறவங்களோ,இல்லை உசிரோட இருந்து மண்டையை போட்டவங்களுக்கு சம்பந்தம் இல்லை.இவை அனைத்தும் என் கற்பனையே.அப்படியே இது உங்க சொந்த கதையாக இருந்தால் எல்லாமே ஒரு தற்செயல்.இது இந்த கதையைப் படிக்கிறவங்க மேல சத்தியம்.
கதையில் க்ளைமேக்ஸ்.

"எனக்கு என் அப்பா அம்மா சம்மதம் முக்கியம்.அது மனப்பூர்வமா கிடைக்கனும் என்றால் நீங்க எனக்கு ஏற்றவராக இருக்கனும்.அதுக்கு உங்க வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்.முயற்சி செய்தால் முடியாததுன்னு ஒன்னுமே இல்லைன்னு சொல்லுவாங்க.வாழ்க்கையில சாதிக்கனும்ன்னு ஒரு வெறி வேண்டும் விஷ்ணு.அந்த வெறி மட்டும் இருந்தால் எந்த கஷ்டம் வந்தாலும் உங்களால் சாதிக்க முடியும்.எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு"

இவர்கள் என்ன ஆனார்கள் ! ஜெயித்தார்களா இல்லையான்னு பதிவாளர்கிட்டேயே கேட்கலாம் என்று பார்த்தால் அவர் தன்னைப் பற்றி சொல்கிறார், பதிவுத்தலைப்பில்:

என்னைப் பற்றி கேட்டால் நான் பொய்யைத் தவிர வேறு எதுவும் சொல்ல மாட்டேன்.ஆனால் மத்தவங்களைப் பத்தி கேட்டால் நான் உண்மை மட்டுமே சொல்லுவேன்
இவர் எழுதும் நடை வேகத்துடன் இருக்கிறது. விவேகமும் பரிணமிக்கிறது. அவசியம் படியுங்கள்.

அடுத்ததாக,

http://womankind.weblogs.us/archives/2004_03.html#002618

நான் குறிப்பிடவேண்டிய ஒரு வலைப்பதிவு. அன்பு என்றாலே எல்லோரும் தாயன்பு, தாம் நேசிக்கும் தோழியிடம் அன்பு, டீச்சரிடம் அன்பு, தனக்குரியவரிடத்தில் அன்பு (காதல் என்றாலும் சரி), இயற்கை மேல் தான் கொண்டுள்ள அன்பு, தெய்வத்திடம் கொண்ட அன்பு பற்றிதான் சொல்கிறார்களே தவிர, உலகத்தில்
"அப்பா என்றொரு அற்புத ஜீவன்" என்று இருப்பதையே மறந்துவிடுகிறார்கள். என்னமா தன் அப்பாவைப்
பற்றி இவர் எழுதுகிறார் பாருங்கள்:

தினமும் வீட்டிற்கு வரும் போதும்
குழந்தைகளிருக்கும் வீடுகளுக்கு
போக நேரும்போதும்
வெறுங்கையோடு
செல்லத் துணியாதவர்

நான் குழந்தைகளை
அழைத்துக் கொண்டு
பார்க்க வரும் போதெல்லாம்
அவர்கள் நகங்கள்
சரியாக வெட்டப்பட்டிருகிறதா என்பதை
முதலில் பரிசோதிப்பவர்
........ .....
அம்மா சமைக்கையில்
ருசி பார்த்திருந்து
சாப்பிடும்போது
பக்கத்தமர்ந்து
சாப்பிட வைத்து
பசியாறுபவர்

படித்த புத்தகங்களை
மேசையில் அடுக்கி வைத்திருந்து
தான் அடிக்கோடிட்டு வைத்திருப்பவைகளை
எனக்கு ஆர்வமாய் விளக்குபவர்

தோட்டத்திற்கு கூட்டிப் போய்
முளைவிட்டு பூவிட்டுக் காய்விட்ட
செடியையெல்லாம்
தன் வளர்ப்புக் குழந்தைகளாய்
அடையாளம் காட்டுபவர்

எப்போதாவது
அவர் பள்ளிக்கு
நான் செல்ல நேரும் போது
அருகில் நிறுத்தி
தலையில் கைவைத்து
தன் மகளென
தன் வகுப்பு மாணவர்க்கு
அறிமுகப்படுத்துபவர்

என் குழந்தைகளை
நான் கொஞ்சும் போது
இதே மாதிரித்தான்
தானும் என்னை கொஞ்சி வளர்த்ததாய்
நெகிழ்ச்சியோடு
சொல்லி ரசிப்பவர்

தான் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதாய்
நான் நம்பிக்கொள்ளட்டுமென்று
ஒருநாள்.....
கண்மூடி தூக்கத்தில்
செத்துப் போனவர்.................



இந்த அன்பை வெறும் அஞ்சலியாக என்னால் நினைக்கமுடியவில்லை. இவர் மனதில் தன் aப்பாவைப் பற்றி உள்ள ஒரு தெய்வீக உணர்வுக்கு தலை வணங்கத்தான் வேண்டும். Hats Off to you !!

Next comes…
கடவுளுக்கு உருவமுண்டா, குணமுண்டா என்ற சர்ச்சையில் ஈடுபடாது, கலை அழகில் பிள்ளையாரை ரசிக்கிறார் இந்த பதிவாளர். ஆஹா ! எத்தனை எத்தனை பிள்ளையார் !! "பிள்ளையார் கோவிலுக்கு குடியிருக்க வந்திருக்கும் பிள்ளையாரு, இந்தப் பிள்ளை யாரு?" Remember the song ? பாராட்ட வேண்டும்.
http://thavam.blogspot.com/
http://thavam.blogspot.com/2006/04/blog-post.html


அடுத்து வரும் பதிவு நமது மனத்தில் பதிவு செய்யும் உணர்வு சோகமா அல்லது இன்றைய சமூக யதார்த்ததின்மேல் நமக்கு வரும் கோபமா என எனக்குத்தெரியவில்லை.
http://charalmalar143.wordpress.com/சிறுவயதில் கிணற்றுக்குள் தவறி விழுந்து
குரலெழுப்ப முடியாமல் குற்றுயிராய் உயிர்பிழைத்த போதும்,
பள்ளியில் புதிதாய் வந்த ஆசிரியர்
என்னை வகுப்பில் வாழ்த்து பாடச் சொல்ல,
வகுப்பில் அனைவரும் சிரித்து நான் அழுத போதும் ,
பெண் பார்க்கும் நிகழ்வில் வாய் ஊனத்திற்கு
தனியாய் மாபிள்ளை வீட்ட்டார்
வரதட்சணைகேட்ட போதும்
இல்லாத வலி இப்போது
அழுகின்ற குழந்தைக்கு
தாலாட்டு பாட முடியாததால் ஏற்படுகிறது



NEXT
http://manasukulmaththaapu.blogspot.com/2006/12/blog-post_18.html

வரிசையாக மூன்று பதிவுகள் கிட்டத்தட்ட ஒரே டாபிக் தான். மனசு
இவர் சொல்வது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்தே
எல்லோரும் சொல்வது தான்.

அதில் ஒரு பதிவு.

"காதல் எந்த நேரத்தில் வரும், எந்த வயதில் வரும், எப்படி வரும் என்றே தெரியாது....."
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க!!!


இன்னொரு பதிவு " மனைவியின் மனம் கவருவது எப்படி ? "
வலையுலக இளைஞர் சுமார் 100 பேர், சூப்பர் ஸ்டார் ரஜனி படத்திற்கு முதல் ஷோவுக்கு டிக்கட் வாங்கிப் போய்ப் பார்த்து ஆர்ப்பரிப்பது போல், இந்தப் பதிவிற்கு முன்மொழி, பின்னோட்டம், பின்னோட்டத்திற்கு பின்னோட்டம் எல்லாம் தந்திருக்கிறார்கள். ஒவ்வொரு பின்னோட்டமும் (கமெண்ட்) ஒவ்வொரு கோணத்தில் இருக்கிறது. எல்லா சுவைகளும் இருக்கின்றன.
சும்மா சொல்லக்கூடாது ! பின்னூட்டமும் அதற்கு பதிவாளர் தந்த விளக்கமும் அபாரம்.
ஒரு பின்னூட்டம் பின்னி எடுக்கிறது. யாரை என்று தான் தெரியவில்லை !!!!!!!!!

"கோடியில ஒரு தடவதான் மனைவி பேச்சுல கருத்துனு ஒன்னு இருக்கும் அதுக்கு முக்கியத்துவம் குடுக்காம விட்டுறுவமா??"

இதை எழுதினவர் பதிவுக்குப் போய் ஸ்பெஷல் ஆக ஏதும் பாராட்டு சொல்லவேண்டும் என நினைத்தேன்.
ஆனால், அதைக் காண இயலவில்லை. எங்கிருந்தாலும் என் வாழ்த்துக்கள். Vazhga Vazhamudan

இந்த வலைதனில் பதிவாளர் எழுதிய ஒரு வாக்கியம் பொன்னான வாக்கியம். தன் காதலுக்காக ஒரு அன்னையின் மகிழ்ச்சியில் ஒரு புள்ளி வைத்திட வேண்டாம் என்கிறார். காதலி தன் காதலனிடம் சொல்கிறாளாம்.


"உன் வாழ்க்கையில்
இப்போ உதித்த
எனக்காக,
உலகில் உன்னை
உதிக்க வைச்ச
தாயை தள்ளிடாதே!!பொறுமையுடன் புரிய வைப்போம்,"

இவருக்குத்தான் இந்த வார க்ரீடத்தை அணிவிக்கவேண்டும் என நான் உறுதியாகவும் இறுதியாகவும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், இந்தப்பதிவின் ஒரு பின்னூட்டம் கண்டேன். அதை எழுதியவருக்கு சொந்தமான வலைப்பதிவு.

http://simplycvr.blogspot.com/

உங்கள் முகத்தில் புன்னகை மட்டுமே பார்க்க விரும்பும் ஒரு எளிய நண்பன்!
His comments are:
"You should be angry when an eighth standard boy comes home one fine day and says “Mom there is this girl who is kinda cute, all my friends say we will make a perfect match, so I think i am in love with her”. You should be worried when a college kid returns home and says “mom I saw a girl yesterday in the college balcony, I will kill myself if I don’t get her”
“But when two intelligent adults happen to fall to love and decide to share their life and when your son comes home and says Mom I am sure this girl will make a perfect wife and I want to live with her ,
then You should be happy."


இதை எனது நடையில் எழுதினால்... ( சிவிஆர் அனுமதியுடன்) (anticipating permission from Mr.CVR)( I am just visualising a dialogue for the story.)
8ம் வகுப்பு மாணவன் வீட்டுக்கு வருகிறான். ஒரு excitement உடன்.
" மாம் ! என்னோட gal friend கீதா இருக்காள்லே தெரியுமா !"
" தெரியும்டா என் செல்லம் ! "
" என்னா க்யூட் ! ஸிம்ப்லி சூபர் மாம் ! "
" அதுக்கென்னடா இப்ப.."
" மாம் ! எல்லா friends ம் சொல்றாங்க... டேய் ! நீங்க ரண்டு பேரும்தான்டா சரியான மேட்ச் ...மாம் ! அவள நான் லவ்வரேன் !"
"அடி செருப்பாலே ! "

கல்லூரியில் படிக்கும் மாணவன் வருகிறான். ஒரு ஏக்கமும் எதிர்பார்ப்பும் அவன் முகத்தில்.
" அம்மா ! அம்மா ! இந்த அம்மா எங்கே இருக்கே ...? "
" இங்கேதான் இருக்கேன்...என்ன விசயம்.. என்னவோ மாதிரி இருக்கே ! என்னவாவது வேணுமா ..
" அம்மா ! நேத்திக்கு எங்க காலேஜ் பால்கனிலே ஒரு பொண்ணு பாத்தேம்மா.."
" அதிலே என்னடா இருக்கு.. காலேஜ்லே ஆயிரம் பொண்ணுங்க பால்கனிலே இருக்காங்க.. "
" அது இல்லேம்மா ! அவ இல்லேன்னா நா இல்லைம்மா...அவ்வளவு தான் நா சொல்லுவேன்.! "
" டேய்..டேய்..டேய்..! நான் என்னாத்த சொல்லுவேன் ! எங்க போய் முட்டிப்பேன் !
எவளோ ஒத்தி, படிக்கப்போன குழந்தைய முந்தானையிலே முடிச்சு போட்டு வச்சுட்டாளே !
ஏங்க.. எங்கங்க போனீக .. அடேய் ! உங்கப்பன் தேவலாம்னு ஆக்கிட்டயேடா... !!!! "
(விசும்பலுடன் அழுகை)

அலுவலகத்திலிருந்து மகன் (25) வருகிறான். கூடவே அவனது வெகு நாள் நண்பியும் வருகிறாள்.
" என்ன கிஷோர் ! இன்னிக்கு வரும்போதே ஸ்வேதாவும் வராளே ! ஓகோ .. என் birth day ந்னு தெரியுமா.... வா ஸ்வேதா...எப்படி இருக்க.. நல்லா இருக்கயா..என்ன சாப்பிடற ? "
" அம்மா உனக்கு ஒரு ஹாப்பி ந்யூஸ்.. ரொம்ப தீவிரமா யோசனை செஞ்சப்பறம் நானும் ஸ்வேதாவும் மணம் செஞ்சுகறதா முடிவு பண்ணிட்டோம்.. "
" நீ என்னடா முடிவு பண்றது ! நாந்தான் அத போன வருசமே முடிவு பண்ணிட்டேனே ! " (here and there, I have moved away from the story,as it happens in any film production ! )

http://simplycvr.blogspot.com/2005/06/in-law-issues.html

இவரது வலைப்பதிவு மூன்றில் ஒன்று.
http://buddywishes.blogspot.com/2008/01/dear-friend.html

நண்பர்கள் தமக்குள்ளே வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ள வசதி தந்திருக்கும் இவர், தனது பதிவின் தலைப்புக் கருத்தினை எவ்வளவு அழகாக, எளிதாக, மென்மையாக அதே சமயத்தில அழுத்தமாகவும் எடுத்துரைக்கிறார்..
//The vitality of Friendship lies, not in enjoying the similarities, but in honouring the differences…//
நட்பின் வலிமை, ஒற்றுமைகளில் களித்திருப்பதைவிட, வேற்றுமைகளைப் புரிந்து மதிப்பதுவே // இவரது வாழ்த்துசெய்தி மடல் வசதி உலகத்தில் ஒரு புதிய நட்புப் பாலமாகத் திகழ்கிறது.

"நவில்தொறும் நூல் நயம் போலும் பயில் தொறும்
பண்புடை யாளர் தொடர்ப என்பார் வள்ளுவர்.

அது மட்டுமல்ல, நண்பனுக்கு ஒரு மாற்றுக் கருத்து உள்ளென்றின்
அதை மதித்து நடப்பதே நட்பின் இலக்கணமாம். இதைச் சுட்டிக்காட்டிய
வள்ளுவர் சொல்லுவார்:

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை.

ஆகவே, நட்பினை ஓங்கி உயர்த்திச் சொன்ன சிவிஆர் அவர்களை
பாராட்டுவோம்.
ஐந்து கண்டங்களுக்கும் ஆழிகட்கும் நடுவே நட்புப்பாலம்
அமைத்திட்ட திரு . சி.வி. ஆர். அவர்களுக்கு
இந்த வாரம் தங்க க்ரீடம் சூட்டி மகிழ்வோம்.

இந்தப் பதிவினைத் துவங்கியது இம்சை அரசி எனும் நண்பர் என‌
சற்று நேரம் முன் திரு சி.வி.ஆர். அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
அவருக்கு என் நன்றி.

ஆக, இந்த பாராட்டுதல்களும் க்ரீடமும் திரு.சிவிஆர்,மதிப்புற்குரிய இம்சை அரசி மற்றும் இப்பதிவினை வழிநட‌த்தும் குழுவினருக்கும் உரித்தாக்குவதில் பெருமகிழ்வு
அடைகிறேன்.

இம்சை அரசிக்கும் அவரது குழுவினரையும் மனமுவந்து பாராட்டுவோம்.

வாழ்க வளமுடன்


வாருங்கள் ! !!!!
உங்கள் இலக்கிய, சமுதாய நல்லுறவுப் பணி தொடரட்டும் !
எனது வாழ்த்துக்கள்.

Sunday, March 30, 2008

இந்த வாரம் நான் ரசித்த .... !! Who gets this Golden Crown this week ?


இந்த வாரம் நான் ரசித்த பதிவுகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் நாம் காண இருப்பது:
http://arumbugal.blogspot.com/

அழகான மழலைச் செல்வங்களுக்கான பாட்டு ஒன்று அமோகமாக இருக்கிறது.
ஒரு சிட்டுக் குருவியோ அல்லது புறாவோ அது ! அதைப்பார்த்தபின் என்ன
அழகான ஒரு பாட்டு குழந்தைகளுக்காகவே எழுதியிருக்கார் பாருங்கள்.
சிட்டே சிட்டே பறந்து வா
சிறகை சிறகை அடித்து வா !
கொட்டிக் கிடக்கும் மணிகளை
கொத்திக் கொத்தித் தின்ன வா !

ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய் !
சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய் !

உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயர செல்லணும் ! !

என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு


இதில் என்ன விசேடம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு ப் புரியாமல் இல்லை. இது மற்ற பாடல்களிலிருந்து எனக்கு வித்தியாசமாகவே தெரிந்தது. சின்னஞ்சிறு வயது முதலிலிருந்தே குழந்தைக்கு உயரே உயரே செல்லவேண்டும் என்ற எண்ணத்தினைப் புகட்டுகிறது இப்பா. உன்னால் முடியும் நீ உயர்வது உன் கைகளில் தான் இருக்கிறது என்ற பாடம் துவங்குகிறது ஒரு சிட்டே பாட்டிலிருந்தே என்றால் இப்பதிவு " உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் " என்னும் வள்ளுவனின் சிந்தனைதனைச் சிறிய குழந்தைக்கும் புரிய வைக்கிறார் பாருங்கள். இவரை நாம் பாராட்டியே தீரவேண்டும்.
So beautiful, that I could not resist singing this song and putting the same in youtube. ****

அடுத்தது,
http://jayanthi-dj.blogspot.com/
இல்வாழ்வின் யதார்த்தங்களை இவர் மூன்று வாக்கியங்களில் எழுதிவிட்டார்.
இவர் கேட்கிறார்:
"Huh!!! Got confused. Can you tell me which one is correct ?"
மகளிர் இவருடைய பதிவினைப் பார்க்கவேண்டும். ***
*****************************************************************************
அடுத்து நாம் செல்ல இருப்பது. தூயாவின்ட சமையல் கட்டு
http://thooyaskitchen.blogspot.com
அட என்னங்க ! நம்ம துளசி டீச்சர் பீர்க்கங்காய் கூட்டு, துவையல் என்று ிரமாதப்படுத்தி ஒரு 100 நபர்களுக்கு விருந்து அளித்திருக்கிறாரே ! அதைப் பார்த்தீர்களா என்றால், பார்த்தேன். பண்ணச்சொல்லியும் துவையலை
சாப்பிட்டேன். நன்றாகவே இருக்கிறது. ஆயினும் பாகற்காய் என்னைக் கவர்ந்தது. இவர் எழுதுகிறார்:

"சீனிவியாதியால் அவதியுறும் பெரியம்மா என்னையும் பாகற்காயை வைத்து அவதிப்பட வைத்துவிடுவார். ஆனால் பெரியப்பா துணையுடன் என்று எங்க வீட்டு தோட்டத்தில் பாகற்காய் வந்துதோ, அன்றிலிருந்து பாகற்காயிற்கும் நான் பயப்படுவதில்லை. "

பாகலுக்கு அனேக குணங்கள் உண்டு என நான் அறிந்திருக்கிறேன். எனினும் மற்றவர்களுடன் அட்ஜஸ்ட் பண்னிக்கொள்ளவும் இது சொல்லித்தரும் என்று இப்போது தான் தெரிகிறது. ***
***********************************************
அடுத்து எனக்கு பழக்கமான ஒரு பதிவு.
http://valluvam-rohini.blogspot.com/
வள்ளுவம் என்ற பெயரில் இவர் தன்னைப் பற்றிச் சொல்கிறார்:
"அறிந்ததை அவையில் வைக்கிறேன் பட்டதைப் பகிர்ந்து கொள்கிறேன்"
இவர் எழுதும் புதுக் கவிதையும் ஒரு செய்தி சொல்கிறது. படிப்போமா ?

லட்சாதிபதி -
மரணப் படுக்கையில்.
சுற்றி நிற்கும் ,
குழந்தைகளுக்கு ,
ஒரு கண் அவர் உயிரில்,
மறு கண் அவர் உயிலில்.
கோடீஸ்வரர் -
வாழ்க்கையின் கோடியில்.
கூடி நிற்கும் ,
சுற்றத்தார்க்கு,
ஒரு கண் அவர் சாவில் ,
மறு கண் அவர் சாவியில்.

சும்மாவா சொன்னார் வள்ளுவர்:
ஒரு செல்வந்தரைச் சுற்றியுள்ள கூட்டத்தினை அவர் கூத்தாட்டு அவைக்குழாம் என்றோ
வர்ணித்தார்.
கூட்டாத்து அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அது விளிந்து அற்று.
நச் என்று ஒரு உண்மைதனை எடுத்துச் சொல்லிய வள்ளுவம் ரோகிணி அவர்கட்கு
எனது பாராட்டுக்கள். ****
*****************************************************************
ஒரு அற்புதமான இசை கேட்டேன். அது கீழ்வரும் சுட்டியில் உள்ளது. கேட்கத்தவறாதீர்கள். ***
http://llerrah.com/thebestdayofmylife.htm
*******************************************************************
அடுத்தது ....
உங்களுக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
ஒரு புதிர் போடுகிறார் பாருங்கள் இங்கே. திக்குமுக்காடி விட்டது. இதைப்படித்து விட்டு, இதுவரை ஒரு ஐம்பது பேரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை என்று தான் சொல்கிறார்கள். உங்களுக்குத தெரியுமா?

http://clickmathangi.blogspot.com/2008/03/blog-post_26.html#links
கேள்வி ரொம்ப சிம்பிள்.
திருநெல்வேலி அல்வா, மங்களூர் போண்டா, இதெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது. யாராவது கமலா ஆரஞ்சின் மூலத்தைச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

ஸோடுகோ ப்ராப்ளம் கூட இதைப்பார்த்தால் ஈஸியாக இருக்கிறது. ***
***************************************************************************
அடுத்து, நான் செல்லும் பதிவுகள் யாவற்றிலும் அந்தக் கண்ணன் மாதிரியே இவரும் பிரசன்னமாகியிருப்பார்.
http://govikannan.blogspot.com/


இவர் விருப்பம் தலைப்பில்:
"நம் நற்சூழலுக்கு: நம்மை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என நம்மைச் சுற்றி இருப்பவர் எவரிலும் நாம் வெறுப்பவர்களோ...நம்மை வெறுப்பவர்களோ இருக்கக் கூடாது."
ஒவ்வொருவரும் இதுபோன்று ஒரு வட்டத்தினைத் தயார் செய்தால், உலகமே அமைதிப்பூங்கா ஆகிவிடுமே !
இருக்கட்டும். இவர் கேட்கும் கேள்வி:
"அகஅழகைவிட முகஅழகு அல்லது ஒருவரின் தோற்றம் அவ்வளவு முதன்மையானது அல்ல. முகம் காட்டாத உள்ளங்களை நேசிக்க முடியுமா ? "
தெரஸா அன்னையும் அண்ணல் காந்தியும் அவர் தம் அழகிற்கா போற்றப்பட்டனர் ? அழகு என்பது என்ன ?
என்று மிகவும் அழுத்தமான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். ****



**************************************************************************

அடுத்து,
இம்சை எனத்தலைப்பிட்ட பதிவில், ஒரு அழகான குழந்தையைப் பார்த்தேன். அந்தப்பக்கத்தை விட்டு வர மனமில்லை.
அப்போது தான் அதில் என்ன எழுதியிருக்கிறது என கவனித்தேன்.
http://imsaiarasi.blogspot.com/
அள்ளி இறைத்த
இருளின் கருமையில்
விழித்திருந்து நோக்கியும்
உணர இயலா நொடியில்
பரவும் வெளிச்சக்கீற்றாய்
என்னுள் பரவினாயோ நீ!!!
________________


****
இதற்கு நான் ஒரு மறுமொழி தந்தேன். அது இதுவாம்:

"ஒரு பத்து பதினைந்து வார்த்தைகளுள்
உலகமே என்ன என சொல்லி விட்டீர்களே !!!

அற்புதமான படைப்பு.

இது இம்சையா ! இல்லவே இல்லை.
இது இன்னிசை. = ஒரு
தாயின் மனத்திலுதித்த தாலாட்டு."
*********************************************
*********************************************
இப்போதெல்லாம், பலர் தனது உடல் இளைக்கவேண்டுமென படாத பாடு படுகிறார்கள்.
ஒரு வேளை உணவைக்கூட நிறுத்தி நிறுத்து சாப்பிடுகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு
நான் ஒரு கோதுமை பிரான் வாங்குவதற்காக ஒரு கடைக்குச் சென்றேன். நான் எடுத்த‌
பாக்கெட்டைப் பார்த்த ஒரு பெண் (அங்கு வேலை பார்க்கிறவள் ) தாத்தா ! இதைச் சாப்பிட்டா எடை குறையுமா என்றாள். அவளைப்பார்த்தால் அப்படி ஒன்றும் குண்டாகத் தெரியவில்லை.இருந்தாலும், பிடிவாதமாக இருந்தாள். நான் சொன்னேன். நீ சாப்பிடுவது எத்தனை என்பதைவிட‌ அதை எப்படி சாப்பிடுகிறாய் என்பது தான் முக்கியம். காலையில் அதிகமாகவும், மதியத்தில் மிதமாகவும்,இரவு (டின்னர் ) கால் வயிறும் நிறைய சாப்பிடுங்கள். தானாகவே உங்கள் எடை குறைந்துவிடும் என்றேன். அவளோ நான் சொன்னதற்கு எதிரிடையாக சாப்பிடுகிறாள். ஒன்று. அதிகமாக சாப்பிடுவது எப்படித் தவறோ அத்தனை அத்தனை பட்டினி போடுவதும் தவறு. திடீரென ரத்தத்தில் ஹெமொக்ளோபின்
குறைந்துவிடும் ஆபத்து உள்ளது.

எடை குறைத்திட இரு நடுத்தர வயது பெண்மணிகள் நடத்தும் போராட்ட வாழ்க்கை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒரு பக்கம் இவர்கள் தங்கள் எடையோடு போராடுவதும் தெரிகிறது. மறு பக்கம் இவர்கள் லிங்க் தந்திருக்கும் ரிஸைப்ஸ் மற்றும் பாடல்களைக் கவனித்தால் இவர்கள் லட்சியம் நிறைவேறுமா எனத்தெரியவில்லை. நீங்களும் பாருங்களேன். ****
http://helenkelley.spaces.live.com/
Helen and Kelley Joining Forces Across the Miles for Better Health
in "The Biggest Loser" Million Pounds Match Up

*********************************************************

கடைசியாக நாம் காண இருப்பது விஞ்ஞானக் கவிதை.
சூரிய ஒளி மண்டலத்தில் இருக்கும் அழகுச்சிலையான சுக்கிரனைப் பற்றி
என்னமா வர்ணிக்கிறார் ஜெயபரதன் அவர்கள் ! சுக்கிரன் வறட்சிக் கோளாய்
மாறியது எப்படி என எழுதும் இவரது வானியில் கட்டுரை
விண்வெளியில் கண்சிமிட்டும் விடிவெள்ளி பிரமிக்க வைக்கும் படம்
இதுகாறும் சுக்கிரனைப்பற்றி வானியல் ஆராய்ச்சியாளர் பலர் எடுத்துரைத்த அரிய தகவல்களை ஒரு
chronological orderல் கொடுக்கிறது.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா எழுதும் க‌விதை.

மின்னுவ தெல்லாம் பொன்னல்ல !
http://jayabarathan.wordpress.com/
// நீலக் கடலின் நிறமும்
மோன வெளி வண்ணமும்
காட்சிக் கனவு !
கடன் வாங்கிய களவு !
இடுப்புப் பிள்ளையைக்
கவண் கயிற்றில் சுற்றி இரவில்
வெண்ணிலவை
விளக்கேற்றி வைக்கும் பரிதி
பூமியில் !
நீல வண்ணம் வானிலே
பின்புல மானது எப்படி ?//

“நீரைத் தேடிச் செல்” என்பதே நிலவுக்கு அப்பால் பயணம் செய்ய நினைத்த இருபதாம் நூற்றாண்டு விண்வெளி விஞ்ஞானிகளின் தாரக மந்திரமாக இருந்து வந்திருக்கிறது. "சுக்கிரனையும் பூமியையும் ஒப்பிட்டு அவற்றின் பரிமாணங்களைக் கச்சிதமாக எடுத்துரைத்த அழகும் என்னே ! "வெள்ளிக் கோளின் விட்டம் பூமியின் விட்டத்துக்கு 95% ! வெள்ளியின் நிறை பூமியைப் போல் 81% ! சுக்கிரனில் சூழ்வெளி வாயு அழுத்தம் புவியைப் போல் 93 மடங்கு மிகையானது. அதன் அசுர வாயு மண்டலம் மூவடுக்கு நிலையில் 30 மைல் முதல் 55 மைல் வரை வியாபித்துள்ளது. பூமியில் 5 மைல் உயரத்துக்கு மேல் வாயுவின் அழுத்தம் மிக மிகக் குறைவாயுவின் அழுத்தம் மிக மிகக் குறைவு. சுக்கிரனின் உட்கரு மண்டலம் பூமியைப் போல் அமைப்பும் தீவிரக் கொந்தளிப்பும் கொண்டது !"

இதுபோன்ற‌ ஆராய்ச்சிக் க‌ட்டுரைக‌ளை த‌மிழ் ம‌க்க‌ள் ஆர்வ‌முட‌ன் ப‌டித்து அரிய‌
த‌க‌வ‌ல்க‌ளை அறிய‌ வேண்டும்.

ப‌திவு உல‌க‌த்தின் வெண்ணில‌வாய்ப் பிர‌காசிக்கும் இப்ப‌திவுக்கு இவ்வார‌ த‌ங்க‌க் கிரீட‌த்தைச் சூட்டி ம‌கிழ்கிறோம். *****

An Honour to Mr.Jayabharathan is indeed an honour to all scientists of Tamil origin.
He is one among those who have made Tamils feel proud.

Congratulations Mr. Jayabharathan.
We are proud of you.

Come on Friends ! Let us all give a Standing Ovation to Mr.Jayabharathan.

Friday, March 21, 2008

இந்த தடவை கிரீடம் யாருக்கு ????


இந்த தடவை கிரீடம் யாருக்கு என்று சொல்லுமுன் ஒரு வார்த்தை:

பதிவுகள் ஆயிரக்கணக்கில் உள்ளன். அவை எல்லாவற்றையும் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு ஒவ்வொரு வாரமும் வருவது இயலாத ஒன்றாகும். ஆகையால், நான் படித்ததற்குள் பிடித்தது, ரசித்தது மட்டுமல்ல, ஒரு பொருளைப் பற்றி மேன்மேலும் சிந்திக்கத் தூண்டும் பதிவுகள் பற்றியே இப்பகுதியில் குறிப்பிடுகிறேன். மற்றும் எழுத்து இயல் மட்டுமன்றி இசை, நாட்டியம், ஓவியம், ஆகிய ஏனைய பதிவுகளும் அடங்கும்.

முதலாக, நான் குறிப்பிட விரும்புவது

"அமராவதி ஆத்தங்கரை" தன்னைப் பற்றிய குறிப்பில் இவர் சொல்கிறார்:
"இல்லாத கடவுளுக்கான படையலாய்…எனது கவிதைகள்!" ஒரு புதுக்கவிதை
சற்று முரணாக இருந்தபோதிலும் சிந்திக்க வைக்கிறது.
http://blog.arutperungo/com

இவர் எழுதுகிறார்:” ரோஜாப்பூ மல்லிகையான கதை
ஷேக்ஸ்பியரின் இக்கூற்று ஆங்கிலத்தில் ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன்:

What is there in a name? That we call a rose would in any other name,
smell as sweet.

இதோ நேரிசை வெண்பா வடிவத்தில்:

பெயராக எச்சொல்லைப் பெற்றாலும் ஆங்கே
உயர்வேது மப்பொருளுக் குண்டோ? -- மயங்கா
துரைத்திடுவாய் மல்லிகைக் குற்றபெயர் மாறின்
மறைந்திடுமோ வீசும் மணம்? “

Just beautiful.
***************************************************
அடுத்ததாக நாம் காண்பது;
http://lifeexperiencenhospital.blogspot.com/
தனது இலக்கினைக் குறிப்பிடுகையில் இவர் சொல்கிறார்:

LIFE.... "no matter what work you do work to be the best at it"

தன்னை ஒரு மருத்துவராக எப்படி அறிமுகப்படுத்துகிறார் பாருங்கள்:

I am a doctor, dedicated to God and to my patients

ஆசிரியர்களுக்காகவே ஒரு பாடல்,

A POEM FOR TEACHERS
Teachers Paint their minds
And guide their thoughts
Share their achievements and advise their faults
Inspire a Love Of knowledge and truth
As you light the path
Which leads our youth
For our future brightens
With each lesson you teach
Each smile you lengthen
Each goal you help reach
For the dawn of each poet
Each philosopher and king
Begins with a Teacher
And the wisdom they bring.
By Kevin William Huff.
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு எல்லாப் பள்ளிகளிலும் இப்பலகை இடம் பெறவேண்டும்.
**************************** ****************

அடுத்து நாம் பார்க்கப்போவது,

செவ்வாய் கிரகத்தைப் பற்றி நாம் அறியவேண்டிய தகவல்கள் எல்லாமே இவர் பதிவினில் உள்ளன. பல வரை படங்கள், நாசா மைய நிழற்படங்கள் உள்ளிட்ட இவர் பதிவு ஒரு பொக்கிஷம்.
http://jayabarathan.wordpress.com/
"செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது! அதன் இருக்கை முன்பே அறியப்பட்டாலும் அந்த ரேடார் ஆழ்ந்து அளந்த அனுப்பிய பரிமாணப் பரப்பு பிரமிக்க வைக்கிறது.
செவ்வாய்க் கோளின் காலநிலைப் பனித்திரட்டு முழுவதும் சுமார் 1 மீடர் தடிப்பில் காய்ந்த பனித்திணிவு [Dry Ice] வடிவத்தில் படிவது. தென்துருவ காலநிலைப் பனித்திரட்டு உச்சக் குளிர் காலத்தில் சுமார் 4000 கி.மீடர் [2400 மைல்] தூரம் படர்ந்து படிகிறது"

இவர் சொல்வதைப் பார்த்தால் நமது பூமியும் ஏதோ ஒரு எதிர்காலத்தில் செவ்வாய் போல ஆவது சாத்தியமே. (possibly in 2000000 A.D.) To my query whether there exists such a possibility, he replies, "பூமிக்கு என்ன கேடுகள் இயற்கையால் விளையும் என்று கற்பனை செய்ய இயலாது. தென்னாசியை நாடுகளைக் தாக்கிய கோரச் சுனாமி போல் இயற்கையின் சீற்றங்கள் எழலாம். 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் ஒன்று பூமியில் வீழ்ந்து ஏற்பட்ட பிரளயத்தில் அனைத்து டைனசாரஸ்களும் அழிந்து போயின."
***************************************
*************************************
தமிழ்ப் பதிவு உலகத்தில் போட்டோ போட்டி நடத்தும் மற்றும் அதில் பங்கு பெறும் யாவரும் கண்டு களிக்கவேண்டிய இடம் இதுவே:
http://www.nature.org/?src=t1
"These snakes are incredible swimmers, and given that we have found six 7-foot snakes within a two-month period .....

ஒரு சிறிய கதை படிப்போமா ?
http://athisha.blogspot.com/
ஜென் துறவி ஒருவரை தூக்கிலிட உத்தரவிட்ட அரசன், துறவியை நோக்கி "உன்க்கு இன்னமும் 24 மணி நேரம்தான் இருக்கிறது,நீ அதை எப்படி வாழ விரும்புகிறாய் ? " என கேட்டான். துறவி சிரித்து கொண்டே "எப்போதும் வாழ்வது போல் நொடிக்கு நொடி , என்னை பொறுத்தவரையில் இந்த கணத்துக்கு மேல் எதுவும் கிடையாது , எனவே எனக்கு 24 மணி நேரமும் 24 வருடமும் ஒன்று தான், நான் எப்போதும் கணத்துக்குக் கணம் வாழ்ந்து வந்திருப்பதால் எனக்கு இந்தக் கணமே அதிகம் தான் , 24 மணி நேரம் என்பது மிக அதிகம் , இந்த ஒரு கணமே போதும்" என்றார்.
************
*********
******
****
Next …paraak..paraak..
http://thulasidhalam.blogspot.com

As usual,
மேடம் துளசி அம்மா தான் as usual நல்ல கதை சொல்லுவார்கள். ஆனால், இப்போது அவர்கள் ஏதோ அனாடமி professor போல ஆபரேஷன் appraisal செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஒரு earlier பதிவிலே தான் ஏதோ ஒரு கூட்டத்திற்குப் போய் வந்த கதையை சொல்லுகிறார். தான் என்ன நினைக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். பின்னூட்டங்களுக்கு அவர் போடும் பதிலிருந்துதான் அவர் என்ன நினைத்தார் எனத் தெரிகிறது.

சொல்லாத சொல்லுக்குச் சொல்லிய சொல்லைவிட பன்மதிப்பு உண்டு என சொல்வார்கள்.

அது அவர் பதிவினைப் படித்தாலே தெரியும். Among blogs, hers is Dhruva Star.
*****************************
NEXT
இது முதல் தடவையாக நான் கண்ட பதிவு. தான் படித்து ரசித்த பதிவுகளுக்கான சுட்டி தருகிறார்.
http://padiththavai.blogspot.com/" தம்பதியராகி இன்பமாக வாழ்ந்தவர் ஏன் பிரிகிறார்கள்" என்ற உள இயல் ரீதியான ஒரு விளக்கம்தனை ஒரு மன நிலை மருத்துவர் (ஐரோப்பியர்) தருகிறார். இப் பதிவுக்கான சுட்டி தந்திருக்கிறார்.
சற்று controversial ஆக இருக்கிறது. இருப்பினும் படிக்கத்தகுந்தது.

இதைவிட இந்தப் பதிவாளர் 2005 ம் வருடத்திலே "பணம், பணம் அறிய அவா" என்று எழுதியிருக்கிறார் பாருங்கள் ! அயல் நாடுகளில் உழைத்து ஓடாய்ப்போய் பாசத்துக்கும் பரிவுக்கும் ஆசைப்படும் ஒருவர் வேதனையுடன் என்ன எழுதுகிறார் : "ஒவ்வொரு முறையும் நலம் நலமறிய அவா என்றுதான் கடிதம் எழுதுகிறோம்! பணம் பணமறிய அவா என்றல்லவா பதில் வருகிறது! நமக்கு மட்டும் ஏன் பணம் பந்த பாசங்களின் சமாதியாகி விட்டது?"

உண்மை கசப்பு என்பார்கள். அது உண்மையே.
******************************

படிப்போரது பொறுமை எல்லை தாண்டுமுன்னே நான் முடித்துக்கொள்ளவேண்டும்.

இத்தனை வலைப்பதிவுகளையும் சுற்றிவிட்டு வந்தபோது கண்ணில் பட்டது ஒரு
பெட்டகம்
http://pettagam.blogspot.com/
இந்தப் பெட்டகத்தினைத் திறந்தால் ஒரு வினா ..

ஆக்கபூர்வமாக எதையும் செய்யாது, எதை எடுத்தாலும் தான் செய்தது தான் சரி எனச்சொல்லி பிடிவாதமாக இருந்த ஒரு போக்கு தற்போது கொஞ்சம் கொஞ்சம் மாறி மாற்றான் கருத்துக்கு மதிப்பு தர துவங்கியிருக்கிறது. இது எங்கே போகிறது?

"ஒவ்வொரு துறையிலும் ரசனை மாற்றங்கள்..கொள்கைப் பிடிப்புகள் கருத்து வேறுபாடுகளாக உருவெடுத்து போட்டியிலும், பலப்பரிட்சையிலும் தொடர்ந்து..ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன."

அர்த்தமில்லாத விவாதங்கள் அளவுக்கு இந்த விஷயங்களைக் கொண்டுபோகாத இந்த இளைய தலைமுறையினர் நம்மைக் காட்டிலும் எதார்த்தவாதிகள்தான்."

அர்த்தமுள்ள வலைப்பதிவுகளில் இதற்குத்தான் பரிசளிக்கவேண்டும் என நான் நினைக்கத்துவங்கிய போது கண்ணில் பட்டது.
http://kouthami.blogspot.com/
"கண்மணி பக்கம் அ முதல் ஃ வரை பேசுவோம்"
எனும் தலைப்பில் எழுதும் இவர், தன்னைப் பற்றி எழுதுகிறார்:"

நானும்,என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா "

இவர் கேட்கும் கேள்வி:

"ஒரே ஒரு வரம் தருகிறேன் என்ன வேண்டும் கேள் னு நேர்ல வந்து கடவுள் கேட்டா நாம என்ன கேட்போம் ? "

அதுவும் அது தனக்காக இல்லாமல், பிறருக்காக இருக்கவேண்டுமாம்.
இந்த சிந்தனை எனக்கு மன நிறைவினைத் தந்தது எனச் சொன்னால் மிகையாகாது. தனக்கு என்ன இல்லை என நினைத்து நினைத்து அந்த நினைப்பிலேயே வாடி வதங்கி வேதனையும், பொறாமையும், கோபமும், நிறைந்த ஒரு மனித சமுதாயத்திடம் இவர் என்ன கேட்கிறார் பாருங்கள் : பிறருக்கு என்ன வேண்டும் என ஒரு கணமாவது நாம் நினைத்துப் பார்க்கிறோமா ? நாம் வாழ்கின்ற அளவிற்குக் கூட வாழ இயலாதவர்தம் துயர் துடைக்க நாம் என்ன செய்கிறோம் ? செய்யப்போகிறோம் ? அவர்கட்காக ஒரு சொட்டு கண்ணீர் ! அவர்கள் பொருட்டு ஒரு பிரார்த்தனை ! அவர்களுக்காக கடவுளிடம் ஒரு வரம் !

மேடம் ! நீங்க எங்கேயோ போயிட்டீங்க !! மனித நேயத்தின் உச்சிதனைத் தொட்டிருக்கிறீர்கள்
.
தனிமனிதன் ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த
ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.
இல்லாமை என்பது இல்லாமையாகவேண்டும் என நினைத்திருக்கிறீர்கள். மனித நேயத்தின் முதல் வெற்றி இதுவே. உங்கள் குரல் உலகெலாம் எதிரொலிக்கட்டும்!

வாருங்கள் !! இந்த வாரம் தங்க கிரீடம் தங்களுக்கே !


Congratulations.

Come on Friends! Let us all give a BIG clap.

Thursday, March 20, 2008

இயற்கை சிற்பி நீ யாரோ




இது இரண்டாவது பாட்டு இந்த வரிசையிலே.

மேடம் காட்டாறு எழுதியது. இந்தப் பாட்டிற்கு நான் கர்னாடக இசையின் ராகங்களான பைரவி மற்றும் ஹுசேனியில் மெட்டமைத்திருக்கிறேன் அல்லது மெட்டமைக்க முயற்சி செய்திருக்கிறேன். நேற்று என் தங்கையுடன் (அவள் ஒரு கர்னாடக சங்கீத பாடகி) விவாதித்தபோதுதான் தெரிந்தது : நான் என்னை அறியாமலே இந்த 2 ராகங்களுடன் மூன்றாவதாக முகாரி எனும் ராகத்தினையும் கலந்திருக்கிறேன் என்று. சொல்லப்போனால், இந்த மூன்று ராகங்களுமே ஒரே குழுவைச் சேர்ந்தவை. விஞ்ஞான ரீதியாகச் சொல்லப்போனால், இந்த மூன்று ராகங்களுடைய DNA வும் ஒன்றுபோல.


நான் பாடகன் அல்ல. வேண்டுமானால் என்னை நான் ஒரு க்ரிடிக் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்ளலாம். குரல் வளம் என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. ஆகவே குரல் நயத்திற்காக இந்தப் பாட்டினைக் கேட்பவர்கள், முக்கியமாக, கர்னாடிக் க்ளாசிகல் தெரிந்தவர்கள், அவரவர் குரலிலே பாடி, பதிவு செய்து யூட்யூப்பில் சேர்த்தால் நல்லது.

The lyric content is as simple as scintillating.

ஈசன் அருளுடன் மேடம் காட்டாறு அவர்கள் மேலும் மேலும் நல்ல கருத்துள்ள கவிதைகளை இயற்றுவார் என நம்புகிறேன்.
.
I must repeat I am not a singer but only a grammarian (you may visit http://movieraghas.blogspot.com for more details). Those of you who are aware of the nuances of Carnatic Classical may sing the song in their voice and be kind enough to record and post the same in www.youtube.com.

The song is an ecstacy admiring Nature, in all its bountiful mercy and abundance. The author observing the beauty, serenity, tranquility as well as the harmonious blend in which the flora and fauna unite to make what is NATURE just wonders as to Who must have been the sculptor. The more you dwell into the contents the more you are spellbound at His Creation and His Omnipresence.

The lyric content is as simple as scintillating.

Thanks a lot Respected Madam kaattaaru.
http://kaattaaru.blogspot.com

Incidentlly, I could have well set this in light music (perhaps more enjoyable by fans and lovers of tamil film music, but being what I am, I thought, the lyric content in the song demanded much more a serious approach, that could withstand the viscittudes and test of Time. Music, that too classical and Carnatic, is my passion and it could possibly be wishful thinking that one day musicians of future say, in 2020s or 2050s, may sing this song in Sabhas of Chennai.


இயற்கை சிற்பி நீ யாரோ

கொஞ்சும் கிளியும்
பகையின் பருந்தும்
மருண்ட மானும்
வீருகொண்ட சிங்கமும்
மிரட்டலாய் ஒரு சேர உலவவிட்ட நீ யாரோ

கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட
தலையாட்டி கிளையாட
காற்று வந்து இன்னிசை பாட
கொள்ளை மனதை ஆட்டிவைக்கும் நீ யாரோ

மயக்கும் பச்சை புல்வெளியழகும்
சல சலக்கும் அருவியழகும்
ஒய்யார மலையழகும்
மூங்கில் இசையழகும்
காட்டில் ஒரு சேர தந்த அழகன் நீ யாரோ

பருத்திக் கொட்டை பஞ்சடைக்கி
பழுத்த மாதுளை பவளமடக்கி
உலவும் சிப்பியில் முத்தடக்கி
மானுட நெஞ்சில் ஈரமடக்கி
காட்சி உருவாக்கும் நீ யாரோ

மகத்துவமே மானிட உருவாய்
இயற்கையே என்னுருவாய்
சாதனை காட்டும் கருவாய்
மடிந்து துளிர்க்கும் சருகாய்
நாளும் மாறும் காட்சிதனை தீரஅமைக்கும் நீ யாரோ

-- காட்டாறு

GOD BLESS HER AND HER FAMILY FOR EVER AND EVER.

Tuesday, March 18, 2008

கொஞ்சம் பொறுத்துக்கங்க !!!!

கொஞ்சம் பொறுத்துக்கங்க..ஆமா. த‌ங்க‌ கிரீட‌ம் யாருக்குன்ற‌து சொல்ற‌துல்ல‌ கொஞ்ச‌ம் டிலே ஆகிப்போச்சுங்க‌. இந்த வாரம் பவுன் வில ரொம்ப எகிரிப்போச்சா ! அதுனால தங்கம் வாங்கி கிரிடம் செய்யரதுக்கு கொஞ்சம் டயம் ஆகிடுச்சுங்க. வாங்கி வந்தப்புரம் இந்த கிரிடம் செய்யற ஆட்க ரண்டு நாள் லீவு போட்டுட்டு கிராமத்துக்கு போயிட்டாங்க.. வ‌ ந்த‌ப்போர‌ம் எங்க‌டா கிரீட‌ம்னு கேட்டடாக்க‌, இன்னும் ஒரு வார‌ம் கொடுங்க‌, செஞ்சு கொடுத்துட‌றோம்னு சொல்றாக‌..

நான்கூட கேட்டேன்..எலே என்னங்கடா..வேலையே அப்படியே போட்டுவச்சுகிட்டு
கிராமத்துக்கு போயிட்டீக..அப்படின்னு..

அவங்க சொல்றாக.. நாங்க கிராமத்துக்கு போனோமா..அங்கே வாய்க்கா ஓரமா
வரப்போரமா போய்க்கினே இருந்தோமில்லே..ஒரு பாட்டு கேட்டுச்சுங்க..

அத கேட்டுகினே தூங்கிப்போயிட்டுங்க...

நான் கேட்டேன்.. அப்படி என்னடா அது பாட்டு..

அவங்க சொன்னாங்க.. நீங்க கேட்டுப்பாருகளேன்..அப்பறம் பொழுதைன்னிக்கும்
பாடிகிட்டே இருப்பீக..

இப்ப கேட்டு பாருக..


The composer of this song is kaattaaru. All Credit goes to her and her alone.
May be one day the author of the blog http://kaattaaru.blogspot.com
will be known as the WORDSORTH of Tamil Nadu.



The same song with a tabla, the ACCOMPANIMENT in a village surrounding ! IT IS YOUR CHOICE TO LISTEN TO THIS ALSO.

Wednesday, March 12, 2008

யாரும் அவக கிட்ட சொல்லிப்போடாதீக..


என்னோட பதிவுக்கு வந்து பாருங்க..அப்படின்னு
எனக்கு அழைப்பு வந்தது.

அங்கே பாத்தா இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சுகள்.
அவுக‌ள‌ அப்ப‌டியே
விட்டுட்டு வர மனசில்ல.
அத‌னால‌ அவ‌ங்க‌ பாக்காத‌போது
அந்த்‌ போட்டோக்க‌ள‌ ம‌ட்டும்
கூடவே கூட்டிகினு வந்துட்டேன்.

யாரும் அவக கிட்ட சொல்லிப்போடாதீக..
காப்பி அடிச்சேன்னு கேசு போட்டுடப் போறாக..

Sunday, March 9, 2008

இந்த வாரம் மலர் க்ரீடம் யாருக்கு ?


Who gets this Golden Crown This week ?

இந்த வாரம் மலர் க்ரீடம் யாருக்கு ?

சென்ற வாரங்களைப் போல் அல்லாது, இந்த வாரம் அதிக பதிவுகளைப்
படிக்க இயலவில்லை. ஒரு காரணம் எனது உடல் அயற்சி. இன்னொரு
முக்கிய காரணம் : படிக்க துவங்கியபோதே சில பதிவுகள் கண்களையும்
கருத்தையும் கவர்வதாக இருந்தன என்றால் மிகையாகாது.
அதில் சிலவற்றினை உங்களோடு முதற்கண் பகிர்ந்துகொள்வேன்.

முதலாக ஒரு ஆங்கிலப்பதிவு.
http://aaartzmuses.blogspot.com

சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் அதை ஃபோட்டோ எடுத்து போட்டவர்
பதிவுகள் ஏராளம். ஆயினும் அந்த சூரியனின் கிரணங்களுக்குப் பின்னே எவை
இருக்கும் என மனக்கணக்கு போட்டவர் வெகு சிலரே. சூரியன்
இவ்வளவு அபார சக்திதனை வெளிப்படுத்தவேண்டுமானால், இந்தக் கிரணங்களுக்குப்
பின்னே உள்ள கண்டறியாவற்றினைக் கண்டிட விழைகிறார் இந்த கவிஞர்.

//and wondered what was behind
the shimmering sun's rays

over the horizon
i knew new opportunities
unexplored ventures//
*************************************************************

அடுத்துப் படித்தது ஒரு நகைச்சுவை கடல்.
திரளாக இளைஞர்களிடையே எழுச்சியையும் வேகத்தையும் ஊக்கத்தையும்
எப்படி ஒரு தலைவர் தனது பேச்சினால் ஏற்படுத்துகிறார் என்று நான் சொன்னால்
புரியாது. நீங்களே சென்று படியுங்கள்.
சிரிப்பை அடக்க முடியாமல், உங்களுக்கு வயிற்று வலி வந்தால் நான் பொறுப்பல்ல.
http://sumasen.blogspot.com/2008/02/dynamite-speech-by-desi-
school-master.html

"மின்னல்" எனும் பெயர் கொண்ட இப்பதிவின் ஆசிரியர் ( ஆசிரியை ) தனனை எப்படி விமரிசித்துக்கொள்கிறார் பாருங்கள்.
"Sumathi.
சொல்லிக்கற அளவுக்கு பெரிய ஆளும் இல்ல, அதுக்காக ஏமாறவளும்

இல்ல.."
இவர் ஈ மைல் வந்ததை வாசிக்கும் விதமே தனி. நீங்களும் சென்று பாருங்கள்.
***********************************************************************
இந்த வாரம் ஒரு மின்னலாய் தோன்றியது.
http://photomathibama.blogspot.com/ஒளிக் கவிதை
தன் விவரங்களைத் தரும்போது பட்டிவீரன் பட்டி- பிறந்த ஊர் தற்போது -சிவகாசியில் “
சிவகாசி என்று சொன்னதால், பட்டாசு போல்
வெடிப்பாரோ என நினைத்து படிக்கத்துவங்கினேன்.
இவர் மார்ச் மாத ஃபோட்டோ போட்டிக்கு என 2 பதிவுகள் போட்டிருக்கிறார். ஒன்றின் தலைப்பு காட்டுப் பூக்கள்.
அதைப்பார்த்த நான் எழுதினேன்:
காட்டுப் பூக்களா ?
இல்லவே இல்லை.
இவை
கண்ணன் குழலூதிய
நந்தவனத்தில்
முதல் மலர்ந்த
மொட்டுக்களல்லவா !
**************************************
இரண்டாவதாக ஒரு குளம். நடுவில் ஒரு மண்டபம்.
அதைப் பார்த்தேன் என்று சொல்வதை விட பிரமித்தேன் எனச்சொல்வது தான்
பொருத்தம்.
அதைப் பார்த்த மதிப்புக்குரிய
துளசி கோபால் said...
கோயில் மண்டபம் மனசைக் கொள்ளையடிக்குது.
படங்கள் அருமை
மற்றவர்கள் எழுதியவை இவை:
1.இது வெறும் நிழல் உருவல்ல.
கற்தூண்களில் நிறவி நிற்கும்
ஓர் காவியம்.
2. நேற்று வந்த நான்
இன்றும் வந்தேன்
நில ஒளியில் இதைக் காண வந்தேன்.
என்ன ஆச்சரியம் ?
என்னைப் போல் ஆதவனும்
பிரமித்துப் போயினனோ !
அங்கேயே நிற்கிறான்.
அந்தி வேளை வந்தபின்னும்
ஆதவா ! ஏன் தங்கி விட்டாய்?
நகர்ந்து போ.
நிலாவே ! வா !
*****************************************************************

அடுத்துப் பார்த்த பதிவு. ரெளத்திரம் பழகு என சொன்னது இவருக்காகத்தானோ எனத்
தெரியவில்லை. ரொம்பவே கோபமாக இருக்கிறார்.
http://jataayu.blogspot.com/2008/03/blog-post_07.html.
அவர் எழுதியதை விட அவர் தன்னை விவரிக்கும் விதம் எனக்குப் பிடித்திருந்தது.
"கதிரவனைத் தொட விரியும் சிறகுகள். அரக்கத் தனத்தை எதிர்த்துப்
போரிடும் சிறகுகள். தருமத்தின் துணை நிற்கும் சாமானியனின்
சிறகுகள். அவையே என் ஆதர்சம்."
********************************************************************************
கடோசியாக நான் வருவது
http://manggai.blogspot.com/
இவர் எழுதிய இரண்டு பதிவுகளில் எது சிறந்தது என எனக்குத் தீர்ப்பளிக்க இயலவில்லை.
தன்னை "மங்கை " எனவும் தன்னியல்பை "......வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு " வர்ணித்திருப்பதுமே இயற்கையாக இருந்தது.
1. வலிகளை பகிர்தலின் அவசியம்
2. குழந்தைகள் குழந்தைகள்தானே
இதில் இரண்டாவது ஒரு பயணத்தைப் பற்றியது.
let us also travel along with the author to find out what happened during her journey of ...... (WAIT TILL THE LAST LINE.)
"போக நினைத்துக் கொண்டிருந்த பயணம் அது.
இந்த முறை காப்பகத்தை நடத்தி வரும் ஃபாதர் கேரமல் போவதாக சொல்லவே நானும் தொற்றிக் கொண்டேன். கேரளாவில் இருக்கும் Missioneries of
St.Thomas the Apostle ஆல் நடத்தப் பட்டு வருகிறது.
அழகான,அமைதியான இயற்கை சூழலில் அமைந்திருந்தது அந்த
காப்பகம். 5 டிகிரி குளிரை பொருட்படுத்தாமல் கிடைத்த பூவை
கையில் வைத்து கொண்டு களங்கமில்லா சிரிப்புடன் அன்பாய்
வரவேற்றார்கள்.
காப்பகம், சுத்தமாகவும், பணிபுரிபவர்கள் உண்மையான
அக்கறையுடனும், அன்புடன் இருந்தது திருப்தி அளிப்பதாக இருந்தது
எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம்.
அந்த குழந்தை என்ன தவறு செய்தது, ஏன் இவர்கள் மட்டும் இங்கே
இப்படி காப்பகத்தில், இந்த அவல நிலைக்கும்,பழிச்சொல்லுக்கும் அந்த
குழந்தைகள் எந்தவிதத்தில் காரணமாவார்கள்.உதவிகள் என்ற பெயரில்
ஏதோ என்னாலானவற்றை செய்யமுடியும். ஆனால்,
அன்புக்கும்,அரவனைப்புக்கும் ஏங்கும் அந்த பிஞ்சுகளுக்கு சக
மனுஷியாய், ஒரு தாயாய் ஏதும் செய்யமுடியாமல் வெறும்
பார்வையாளனாய் இருக்க முடிவது எத்தனை கொடுமை. ?"இயலாமை என்னை பிடுங்கித்தின்ன கனத்த மனதுடன், மௌனத்துக்குள் ....
என்னை புதைத்துக் கொண்டு ......."
மங்கை அவர்கள் அனுபவித்து எழுதிய சொற்கள் படிப்போர் மனதை உருகச்செய்கிறது.
எழுதியது தாயுள்ளமல்லவா ?
வேதனைதனை அனுபவித்து தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என
ஏக்கப்படுவது, சொற்களால் சித்தரிக்க இயலாத ஒரு உணர்வு.
உலக மகளிர் தினத்தன்று, ஒரு இந்திய மண்ணில், குறிப்பாக தமிழ் மண்ணில்
பிறந்த நங்கையின் மன உணர்வுகள் ஒரு ஆதர்ச பெண்ணின், தாயின் மன நிலையை பிரதிபலிக்கின்றன். இது போன்ற பெண்ணினத்தைதான் பாரதி புதுமைப்பெண் என வர்ணித்தானோ ?
பாரதி எழுதுகிறான்:
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்.
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கவலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்"


ஆகவே பாரதி கண்ட பெண்மணியான மங்கை அவர்களுக்கு இந்த வார மகுடத்தை அணிவித்து பெண்குலத்தினைப் போற்றிடுவோம்.
Come on ! Let us all stand to give a big ovation to Mrs.Mangai.
Madam! This Crown is yours this Week.
Congratulations.Madam! you have embarked upon a journey of DIVINE LOVE. We equally share your emotions as u see these little children.
So let us sing
CLICK BELOW: (transfer of MONEY is worldly. Transfer of LOVE is GODLY. WAIT FOR A FEW MOMENTS TILL U GET THE SONG "anbe sivam "
http://www.raaga.com/playerV31/index.asp?pick=8698&mode=0&rand=0.7795892895807275&bhcp=1